பட்டிமன்றம் 51 **பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா? அவசியமில்லையா?**

வணக்கம் அறுசுவை நேயர்களே நீங்கள் ஆவலோடு எதிரிபார்த்துக்கொண்டிருந்த பட்டி இப்போ ஆரம்பமாயாச்சு;-)

படபடக்கும் பட்டாசு
சடசடக்கும் சரவெடி
இடி இடிக்கும் ..........அணுகுண்டு ரைமிங்கா வரலை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வாத்தியாரே;)

தீபாவளி நெருங்கியாச்சு புதுத் துணி வாங்கனும்....சுவத்துக்கு வெள்ளை அடிக்கனும்...பலகாரம் பண்ணனும்...நகை வாங்கனும்கிற கவலை பெரியவங்களை தொத்திக்கும்...இளசுகளுக்கும் சிறுசுகளுக்குமோ எப்படா பட்டாசு வெடிக்க போறோம்னு காத்துட்டு இருக்கும்..;)

தொலைகக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் பொருட்களுக்கு மட்டும் விளம்பரங்கள் செய்வதில்லை பட்டாசுக்கும் சேர்த்துதான் அப்படியே அந்தப்பட்டாச எப்படி பாதுகாப்பா கையாள்வதுங்கற அறிவுறுத்தலையும் தாங்கி வரும்.;-)

இந்தப் பட்டிக்கான தலைப்பும் இத்தகைய பட்டாசை மையமா வச்சுதான்....

யோகலக்ஷ்மி அவர்கள் அளித்த தலைப்பு

** பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா? அவசியமில்லையா?**

தோழிகள், தோழர்கள் அனைவரும் வந்து பட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன்;-)

பட்டி ஆரம்பமாயாச்சுங்கோ............................
படபடன்னு பட்டாச கொளுத்திப்போடுங்கோ..................;-)

Don't Worry Be Happy.

படபடவென பட்டாசு வெடிக்க, சரசரவென மத்தாப்பு விரிய....., பட்டாசு கிளப்பும் தலைப்போடு வந்துட்டாங்க நம்ம நடுவர் ஜெயா அவர்கள்.........
உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறி முதலில் பட்டிக்கு பதிவிடுகிறேன்.....
என் வாதம் எந்த அணிக்கு என்பதை சிறிது யோசனைக்குப்பிறாகு முடிவு செய்துவிட்டு வாதங்களுடன் வருகிறேன்........

அன்பு நடுவரே, பட்டியை ஜெயத்தோடு தொடங்கி வச்சிருக்கீங்க :) வாழ்த்துக்கள். சீசனுக்கேற்ற தலைப்பை தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என்ன நடுவரே இப்படி கேட்டுட்டீங்க? பண்டிக்கு பட்டாசு வேணுமா? வேணாமான்னு. அவசியம் வேணுங்கறேன். எங்காச்சும் சும்மா கூட பட்டாசு வெடிச்சா உடனே அங்கே ஏதோ ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்திருப்பதாகவே நினைப்போம். அப்படியிருக்க, பட்டாசுகள் பண்டிகையின் சந்தோஷத்தை மேன்மேலும் அதிகரிக்கின்றன.

சின்னவயசுல இந்த தீபாவளி நாளுக்காக காத்திருக்கற சுகமே தனிதான் போங்க. தீபாவளி நாள்ல புது துணி எடுத்தா ஒரு சந்தோஷம்.. விதவித பலகாரம் ஒரு சந்தோஷம். இது எல்லாத்தையும் விட வகை வகையா பட்டாசு வாங்கி கொளுத்தறோம் பாருங்க அது சந்தோஷமோ சந்தோஷம். அந்த பட்டாசு வாங்க 6 மாசம் முன்னாடி இருந்தே ப்ளான் பண்ணுவோம். 100 ப்ளான் பண்ணா அதுல 10 நடந்தாலே பெரிய விஷயம். நான் பாட்டி வீட்ல வளர்ந்ததால சித்தப்பாகிட்ட சண்டை போட்டு பட்டாசை வாங்குவேன். காசு கரியாகுறத பார்த்து வயிறெரிஞ்சுட்டே வாங்கி தருவார் ;) அதுக்கு காரணம் சித்தப்பாவோட சின்ன வயசுல அவரோட அப்பா பட்டாசு வாங்கி தரமாட்டாராம். ஏன்னா அவர் செலவு செய்யா சங்கத்துல மெம்பரா இருந்தவர். பசங்க பட்டாசு வாங்க காசு கேட்ட இப்படி சொல்வாராம், ஒரு பிடி உப்பை எடுத்து அடுப்புல போடு அது பட்டு பட்டுனு வெடிக்கும் பாரு அதை பார்த்து சந்தோஷப்பட்டுக்கோன்னு. இதை என்கிட்ட எங்க சித்தப்பூ சொல்வாரு. ஆனா, சித்தப்பூ மூக்கால அழுதுட்டாவது கொஞ்சம் பட்டாசு வாங்கி தந்துடுவாரு. அன்னைக்கு மதியத்துக்குள்ள ஊர்லருந்து என் அப்பாவும் - அம்மாவும் புது ட்ரெஸ், பட்டாசு,தின்பண்டம்னு 2 பை முழுக்க அனுப்பி வச்சுருவாங்க. அப்புறமென்ன, நம்ம காட்டுல மழை தான்.

நடுவரே,பட்டாசு தலைப்பை வச்சு ஒரு ஆட்டோகிராபையே ஓபின் பண்ணிட்டீங்க போங்க...;) ரெம்ப டேங்க்ஸ் நடுவரே. முக்கியமா தலைதீபாவளி கொண்டாடுற புதுஜோடிங்க கொளுத்துற பட்டாசே ஒரு தனி அழகு தான் போங்க... எங்க வீட்ல என் அத்தையோட மருமகன் ஒருத்தர் இப்படித்தான் தலைதீபாவளி கொண்டாடினார். அவருக்கு பட்டாசுன்னாலே அலர்ஜி. இருந்தாலும் மச்சினிங்க,மாமனார்,மாமியார் முன்னாடி அலர்ஜின்னு சொன்னா நல்லாவா இருக்கும். வீம்பா என்ன பண்ணார் 1000வாலா சரம் ஒண்ணை கொளுத்தி போட்டார் பாருங்க சூப்பரா வெடிச்சது. திடீர்னு திரும்பி பார்த்தா அவரோட நடுமண்டைல சூடம் கொளுத்தின மாதிரி எரிஞ்சுட்டு இருக்கு. அவர் தலை லைட்டா சொட்டை இருக்கும், வெடிச்ச பட்டாசுல ஒண்ணு அழகா நடுமண்டைல போய் விழுந்து எரிஞ்சுட்டு இருக்கு. அந்த சமயத்துலயும் கலைவாணர் காமெடி ஞாபத்துல வந்து வச்சு சிரிப்பா சிரிப்பு வந்துருச்சி. என்ன பண்ண அடக்கிட்டு ஓடிட்டேன்....

நடுவரே, இப்ப அதை நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது. நான் போய்...ஹா..ஹா...ஹோஓஓஒ....... முடியல நடுவரே.... இதோ வரேன்...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம்... வாழ்த்துக்கள்...!!! இது ரைமிங்கா இருக்கா??? ;)

நம்ம எப்பவுமே இது போல் விஷயத்தில் மாற்றி தான் யோசிப்போம்!!!

“பட்டாசு அவசியமே இல்லை”னு தான் வாதாட போறேன்... அனுபவங்களோடும், கற்றவைகளோடும் விரைவில் வருகிறேன் :)

சிந்திக்க வைக்கும் நல்ல ஒரு தலைப்பை தந்த யோகலக்‌ஷ்மிக்கு நன்றி.

அதை சரியான நேரத்தில் தேர்வு செய்த நடுவருக்கு கைத்தட்டல். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க ரேணுகா வாங்க..வாழ்த்துக்களுக்கு என் முதற்கண் வந்தனம்;)

//படபடவென பட்டாசு வெடிக்க, சரசரவென மத்தாப்பு விரிய....., பட்டாசு கிளப்பும் தலைப்போடு வந்துட்டாங்க // செம தூளு மச்சி...;) இதே உற்சாகத்தோட சீக்கிரம் அணிய முடிவு செஞ்சு
வாங்க...;-)

Don't Worry Be Happy.

பட்டாசு அவசியம்.....

நல்லா ஒரு இரவு முழுக்க யோசிச்சாச்சு(தூக்கத்துலதான்ப்பா..) பண்டிகைக்கு பட்டாசு அவசியம்தான்ப்பா.......

இரவுன்னா நிலவு...!
பகல்னா சூரியன்...!
ஸ்டார்னா ரஜினி...!
இனிப்புன்னா பாயாசம்.!
"பண்டிகைன்னா பட்டாசுதான்....."

இப்படி பண்டைய காலம்தொட்டு அடையாளமாக இருப்பதை நாம் மறக்கலாமா?இல்லை மறுக்கத்தான் செய்யலாமா......?

தீபாவளின்னா பட்டாசுங்கறதாலதான் நாம லீவ் இல்லன்னாக்கூட ஓடிப்போயி வாங்கிவந்து குழந்தைகள் வெடிப்பதை கூடயிருந்து பார்த்து ரசிக்கிறோம்......

பட்டாசு இல்லாத தீபாவளியை எண்ணிப்பாருங்கள் நடுவரே,,...
ஹே.......அலுவலுக்கு ஒருநாள் விடுப்பு, ஒரு செட் புதுதுணி, தொ.காட்சியில் விதவிதமான பாடல்கள் அவ்வளவுதான் மதிய தூக்கம்.....இப்படிதான் போகும் நமது பண்டிகை........இது நல்லாவா இருக்கும்???

4பிரண்ஸ் அவனவன் பாக்கெட் மணியில் வாங்கிய பட்டாசு அனைத்தையும் ஒன்னா கலந்து சமமா பிரிச்சு ஒரு கிரவுண்டில் வெடிப்பாங்க பாருங்க....அதிலுள்ள ஒற்றுமை,சந்தோஷெம் சொல்லிமாலாதுங்க,

என்அனித்தோழி தலைதீபாவளி பற்றி சொல்லியிருந்தார் எனக்குள் ஒரு கொசுவத்தி சுருள்(அதாங்க பிளாஸ்பேக்)என் தலை தீபாவளிக்கு என் மகன் 20நாள் குழந்தை,இரவு தூங்கிட்டு இருந்தான்........

என் தங்கை என்னவரை பட்டாசு வெடிக்க அழைத்தாள் நானும் அவனை தூங்க வைத்துட்டு போனோம்,புதுபுடவை......என் மாமா என்னவருக்காக ஸ்பெஷலா ஒரு வெடி வாங்கியிருந்தான் அனுகுண்டுபோல பல திரி சுற்றியிருந்தது.என்னவர் பார்த்ததும் பயந்துட்டார்..நான் இதெல்லாம் வெடித்தது இல்லைன்னு எஸ் ஆகாப்பார்த்தார். நான் ஒன்று வாங்கி என் தங்கையுடன் சென்று வைத்தேன்,,,அவள் ஓடிவந்துட்டாள்.......நானுந்தான்.......பட்டாசு சத்தமே காணம்......நான் பக்கத்தில் போனால் என்னவர் தடுத்தார்.பிந்தான் தெரிந்தது பற்றாவைக்கும் முன்னரே ஓடிவந்தது.....பின் என்னவரும் நானும் சென்று வைத்தோம் பின்னாலிருந்து பட்டாசு வெடித்தது இன்னைக்கு முடுஞ்சம்னு நினைத்தேன்.பார்த்தால் எந்தங்கை சின்னவெடி வைத்திருந்தால் ...ஒருவழியா அனுகுண்டு வெடிக்க அரமணி ஆகிவிட்டது.........ஹீஇ...

நம் கோவில் திருவிழாவாகட்டும்,புதுவருட கோலாகலங்கள் ஆகட்டும்,நமக்கு பிடித்த நடிகர் படம் வெளிவரதாகட்டும் பட்டாசு பட்டையைக் கிளப்பும்ல......

இங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், வருடம் முழுதும் நாட்டுக்காக உழக்கும் வீரர்களுக்கு தீபாவளி மட்டும்தான் பண்டிகை.அன்றூ இரவு சுமார் 1மணிநேரம் வானவேடிக்கை செய்வார்கள்.........அனைத்து வெடிகளும் வானில் வெடித்து கண்ணுக்கும் மனதிற்கும் சந்தோஷம் கொடுக்கும்........அதை அவர்களை இழக்க சொல்லலாமா????

நமக்காக உழைப்பவர்கள் தன் குடும்பம் அருகில் இல்லைன்னாலும் பட்டாசால் சிறு குழந்தைபோல சந்தொஷப்படுவதை அநாவசியம் என்று சொல்லலாமா????நீங்களே சொல்லுங்கள் நடுவரே.......

மீண்டும் வருகிறேன் வாதங்களுடன்.....

ஆஹா வாங்க வாங்க கல்ப்ஸ் ........வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி;)
வந்ததுமே பட்டிக்கான பதிவோட வந்திருக்கீங்களே ..........நடுவர் மெத்த மகிழ்ச்சி;-)

//எங்காச்சும் சும்மா கூட பட்டாசு வெடிச்சா உடனே அங்கே ஏதோ ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்திருப்பதாகவே நினைப்போம்.// ........... அட ஆமாங்கறேன்;)

// சித்தப்பாவோட சின்ன வயசுல அவரோட அப்பா பட்டாசு வாங்கி தரமாட்டாராம். ஏன்னா அவர் செலவு செய்யா சங்கத்துல மெம்பரா இருந்தவர்.// ..........கொஞ்சம் மெதுவா காதுல வந்து சொல்லுங்க இப்படி சத்தமா சொல்லி யாராவது அப்பாங்க கேட்டு திரும்பவும் அந்த சங்கத்த ஆரம்பிச்சிடற போறாங்க..;)

//பசங்க பட்டாசு வாங்க காசு கேட்ட இப்படி சொல்வாராம், ஒரு பிடி உப்பை எடுத்து அடுப்புல போடு அது பட்டு பட்டுனு வெடிக்கும் பாரு அதை பார்த்து சந்தோஷப்பட்டுக்கோன்னு.// ....... ஓ இப்படி ஒரு மேட்டர் இருக்கோ !!! இனி ஓலப் பட்டாசு மாதிரி உப்பு பட்டாசுன்னு ஒன்னு வந்தாலும் வந்திடும்....

//நடுவரே,பட்டாசு தலைப்பை வச்சு ஒரு ஆட்டோகிராபையே ஓபின் பண்ணிட்டீங்க போங்க...;)//.............இதுதானேங்க நமக்கு வேணும் ஹி ஹி ஹி....ரொம்ப ரொம்ப டேங்க்ஸுங்க கல்ப்ஸ்;)

//திடீர்னு திரும்பி பார்த்தா அவரோட நடுமண்டைல சூடம் கொளுத்தின மாதிரி எரிஞ்சுட்டு இருக்கு.//...........ஹா ஹா ஹா ஊ ஊஹு ஹு ஏ ஏஹ ஏ ஓ ஹோ ஹோ அம்மாடி .......அப்பாடி கற்பனை பண்ணிப்பாத்த என்னாலயே சிரிப்ப அடக்க முடியலையே அய்யோ கல்ப்ஸ் நீங்க எப்படி அத மறப்பீங்க ஹா ஹா ஹி ஹி...அடுத்த பதிவுல அந்தக் கலைவாணர் காமெடி என்னென்னு சொல்லுங்கோ எனக்கு தெரியாதுங்கோ.............;-)

கல்ப்ஸ் அழகா தீபாவளி அன்னிக்கு விடியக்காத்தால கொளுத்திப்போடற மத்தாப்பூ மாதிரி பட்டியிலும் சிரிப்பு பூக்களை விரிய வச்சி அமர்க்களமா ஆரம்பிச்சு வச்சிட்டீங்க நன்றி நன்றி நன்றி...........

அப்போ பட்டாசு வேணுங்கிறீங்க.........நானும் அதேதான் சொல்றேன் பட்டாசு வேணும் வேணும் எதிர் அணி வந்து அடிக்கறதுக்குள்ள வனிகிட்டயே
ஓடிடறேன்;-)

Don't Worry Be Happy.

வாங்க வனி வாங்க வாங்க வணக்கத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் வந்தனங்களு...ங்கோ ஆஹா ரைமிங்க் ரைமிங்க்;-)

//நம்ம எப்பவுமே இது போல் விஷய்த்தில் மாற்றி தான் யோசிப்போம்!!!//.........அதுதானே எனக்கும் வேணும் .........மாத்தி யோசி ம்ம் மாத்தி யோசி ....ஹோ ஹோ ஓ ஓ ஒ - நடுவரே இது சூப்பர் சிங்கர் இல்லை பட்டி பட்டி ..

//பட்டாசு அவசியமே இல்லை// சபாஷ்;)

ஆஹா வந்தமா நின்னமா வெடிச்சமாங்கற மாதிரி சும்மா லக்ஷ்மி வெடி மாதிரி எந்த அணின்னு நச்சுன்னு நடு மண்டையில அடிச்சு சொன்னீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க;-) விரைவில் அனல் பறக்கும் வாதங்களோடு வாங்க;-)

அட என்ன இது கைதட்டல் கூட பட்டாசு சத்தமாதான் கேக்குது சூ சூ அச்சூ ஆ ஒன்னுமில்லை வனி நீங்க வாங்க யாரோ பக்கத்தில பட்டாசக் கொளுத்திப்போட்டாங்க போல இருக்கு யாருன்னு பாத்துட்டு வரேன் அட நம்ம ரேணுதன் ஐ ஜாலி பட்டா.........சு;-)

Don't Worry Be Happy.

//இரவுன்னா நிலவு...!
பகல்னா சூரியன்...!
ஸ்டார்னா ரஜினி...!
இனிப்புன்னா பாயாசம்.!
"பண்டிகைன்னா பட்டாசுதான்....."// வாரே வா!

மஹால்னா தாஜ்மஹால்
விநாயகர்னா கொலுக்கட்டை
பிரமாண்டம்னா சங்கர் ....ஹி ஹி நானும் ட்ரை பண்ணினேன்;-)

//இப்படி பண்டைய காலம்தொட்டு அடையாளமாக இருப்பதை நாம் மறக்கலாமா?இல்லை மறுக்கத்தான் செய்யலாமா......?// .........கூடவே கூடாது யாருங்க இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தது ....

//பட்டாசு இல்லாத தீபாவளியை எண்ணிப்பாருங்கள் நடுவரே,,...
ஹே.......அலுவலுக்கு ஒருநாள் விடுப்பு, ஒரு செட் புதுதுணி, தொ.காட்சியில் விதவிதமான பாடல்கள் அவ்வளவுதான் // .......அய்யய்யோ நினைச்சாலே நிசத்தமா பயங்கரமா இருக்கு;((

அடடா நீங்களும் கொசுவத்தி சுருள் கொழுத்தறீங்களா பேஷ் பேஷ்;-)@@@@@@@@

//என்னவர் பார்த்ததும் பயந்துட்டார்..நான் இதெல்லாம் வெடித்தது இல்லைன்னு எஸ் ஆகாப்பார்த்தார்.// ....அப்படி எஸ்ஸாகத்தான் நாம விடுவோமா என்ன;) ரேணு அண்ணா மிலிட்ரிதானே?? ஹி ஹி சும்மா கேட்டேன்;)

//பற்றாவைக்கும் முன்னரே ஓடிவந்தது.....பின் என்னவரும் நானும் சென்று வைத்தோம் பின்னாலிருந்து பட்டாசு வெடித்தது இன்னைக்கு முடுஞ்சம்னு நினைத்தேன்.பார்த்தால் எந்தங்கை சின்னவெடி வைத்திருந்தால் ...ஒருவழியா அனுகுண்டு வெடிக்க அரமணி ஆகிவிட்டது.........ஹீஇ...// .....அச்சச்சோ உங்க பின்னாடி பட்டாசு வைச்சிட்டாங்களா உங்க தங்கை ..ம்ம் இப்படி எல்லாம் நடந்தாதானே அது தீபாவளி நினைச்சுப்பாக்க இந்த மாதிரி ஒரு நிகழ்வு போதுமே ஆயுசுக்கும் பேசிட்டே இருப்போமே;-)

//நம் கோவில் திருவிழாவாகட்டும்,புதுவருட கோலாகலங்கள் ஆகட்டும்,நமக்கு பிடித்த நடிகர் படம் வெளிவரதாகட்டும் பட்டாசு பட்டையைக் கிளப்பும்ல......//............ஆமா ஆமா கிளப்பனுமிள்ல .......அட பிடிச்ச நடகர் படம் வந்தாலுமே வெடிக்க் வெடி வேணும்ல அப்புறம் எப்படி கெத்த காமிக்கறது;-)

//இங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், வருடம் முழுதும் நாட்டுக்காக உழக்கும் வீரர்களுக்கு தீபாவளி மட்டும்தான் பண்டிகை.அன்றூ இரவு சுமார் 1மணிநேரம் வானவேடிக்கை செய்வார்கள்.........அனைத்து வெடிகளும் வானில் வெடித்து கண்ணுக்கும் மனதிற்கும் சந்தோஷம் கொடுக்கும்........அதை அவர்களை இழக்க சொல்லலாமா????// .....கூடவே கூடாதுங்க நாம சந்தோஷமா இருக்க அவங்க சந்தோஷத்தையே தியாகம் செய்தவர்கள் அந்த ஒரு நாள் சந்தோஷத்தையும் இழக்க சொல்லலாமா??

ரேணு தீபாவளி அன்னிக்கு வாசல்ல வக்கிற சரவெடிமாதிரி ஒரே சீரா வெடிச்சு தள்ளிட்டீங்க சபாஷ்;) இப்படி சந்தோஷத்துக்கு காரணமான பட்டாசு ஏன் அநாவசியம்னு சொல்லனும் அது அவசியமேன்னு அழகா அவர் தரப்பு வாதங்களின் மூலம் சொல்லிட்டாங்க.

ஆமாமாம் நானும் எதிரணியப் பாத்து கேக்கறேன் இது எப்படி அநாவசியம்னு சொல்றீங்க...வாங்க வந்து சொல்லுங்கோ.....

Don't Worry Be Happy.

நடுவரே...

வெடி வெடி வெடி... ஒரு காலத்தில் ஓல வெடி அது இதுன்னு சின்ன சின்ன வெடிகள் தீபாவளிக்கு மட்டும் 1, 2 சக்திக்கு ஏற்ற மாதிரி வாங்கி தந்தாங்க... அது சந்தோஷத்தை தந்தது.

இன்னைக்கு அப்படி இல்லையே...

சாமி வந்தா வெடி... ஆசாமி போனா வெடி!!!

வருஷம் பிறந்தா வெடி... நரகாசுரம் செத்தாலும் வெடி!!!

கல்யாணத்துக்கும் வெடி... கருமாதிக்கும் வெடி!!!

அரசியல்வாதி வந்தா வெடி... எலக்‌ஷன் வந்தா வெடி!!!

இந்தியா ஜெயிச்சா வெடி... பாகிஸ்தான் தோற்றால் வெடி!!!

எங்கையாவது வெடி வைக்குறதுக்கு லாஜிக் இருக்கான்னு யோசிச்சு பாருங்க... சந்தோஷம், துக்கம், கொண்டாட்டம், கோவில் திருவிழா, பண்டிகை என எல்லாமே வெடியில் துவங்கி வெடியில் தான் முடியுது.

குழந்தைகளுக்கு சந்தோஷம் என்று மட்டும் யோசிக்கும் நாம இன்னும் சில விசயத்தை யோசிப்போமா???

1. வெடி தயாரிக்கும் இடங்களில் வருடா வருடம் ஏற்படும் விபத்தும், உயிரிழப்பும்.

2. விற்பனை கூடத்தில் ஏற்படும் விபத்தும் உயிரிழப்பும்.

3. வீட்டிலேயே வைக்க தெரியாம வெச்சு அக்கம் பக்கம் ஏற்படும் விபத்துகள்.

4. சிறு குழந்தைகள் (வெடியை ரசிக்க தெரியாத வயதில்) அந்த சத்தம் கேட்டு அலரி அழுவதை பார்க்க மனம் துடிக்காதா???

5. வயதானவர்கள் தூக்கம் இன்றி தவிப்பதை பார்த்தால் மனமிறங்காதா???

6. சத்தம் இல்லாத வகையால் ஏற்படும் புகை... அதனால் ஏற்படும் கேடுகள்???

இப்போலாம் சத்தம் அதிகமா வந்தா தான் விலையும் அதிகம், சேல்ஸ்ம் அதிகம். இது சரியா??? செவுடா தான் அலையனும் பாதிபேர் நாட்டில்.

இப்படி கஷ்டத்தையும், காயத்தையும், இழப்பையும் தரும் வெடி தேவையா???
இது முதல்கட்ட வாதம் தான்... வரேன் மீண்டும் நேரம் கிடைக்கும்போது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்