உடனே உதவி செய்ங்க please, 3 வயது மகளுக்கு toilet போக கஷ்டப்படுறா

என் பொண்ணுக்கு pampers இல்லாம toilet போக பழக்கிற்று இருக்கேன் . அவ toilet இல இருந்திற்ரு இருக்ககூட தெரியும் . but அவ toilet வருதென்று சொல்லிற்று அங்குமிங்குமா ஓடிற்று இருக்கா கொண்டுபோய் இருத்தினாலும் இருக்கிறாள் இல்லை. 2 ,3 நாள் கழித்து toilet வந்தாலும் ரொம்ப இறுக்கமா கஷ்டப்பட்டு பெரிய toilet ஆக வருது நல்ல ஈசியா toilet வர என்ன செய்யலாம் சீக்கிரமா பதில் சொலுங்க please .

ஹாய் அன்பு தோழி உங்க வீட்டில் நடக்கும் கதைதான் என் வீட்டிலும் நடக்குது உங்க வீட்டில் பொண்ணு என் வீட்டில் பயன் ஒரே ஒரு மாற்றம் உங்க பொண்ணு பெம்பர்சில்தான் கக்கா இருப்பான்னு சொல்ரீங்க என் பயன் 10 மாதத்தில் இருந்து நேர பாத்ரூமே போய்ருவான் சரி நம்ம கதைக்கு வருவோம்
என்மகனுக்கு ஆரம்பத்தி இருந்து இதே பிரச்சைதான் 5 வாட்டி டாக்டருட்ட காட்டிட்டேன் வயித்தாலை போரதுக்கும் மருந்து தந்து வயித்து போக்கை நிப்பாட்டவும் மருந்து தருவாங்க எங்க............ ம்கூம்
ஒரு டக்கர் சொன்னார் புரீன் ஜூஸ்prune juice குடுங்க பெரிய சூப்பர் மார்க்கேட்லதான் கிடைக்கும் என்று அதையும் வாங்கி குடுக்குரான் அதுக்கும் அசைவனாங்குது
அப்பறம் அத்திபழம் பேருச்சம் பழம் போல் இருக்கும் அதை இருச்சு கஞ்சி வைக்கயில் குடுங்கன்னு அதையும் குடுத்தேன் அது கொஞ்சம் கை குடுத்துச்சு ஆனா.....இப்ப சலி ரெம்ப ஆகவும் திரும்பவும் கக்காவே இருக்கீருச்சு
10 நாளாச்சு கக்கா போயி 5 நாளேக்கு முத்லில் இனுமா வாங்கி பின் துவாரத்தில் அதை ஏத்தி கக்கா இருக்க வச்சேன் பெரிய சயிசா கல்லா இருக்கு
இன்னைக்கோட ஆராவது நாள் இன்னம் பாத்ரூம் போகலை கத்வுக்கு பின்னாடி அலமாரிக்கு பின்னால் ஒளிந்து ஒளிந்து முக்குரான் வார மாதிரி இல்லை
நேத்து ஒருத்தங்க சொன்னாங்க தாய் பாலில் விளக்கென்னை கலந்து குடுன்னு தாய் பால் கிடைக்கலைன்னா ................எப்போதும் குடுக்கும் பாலில் திக்கா எடுத்து விளக்கன்னை கலந்து குடுங்கன்னு குடுத்தேன் இன்னம் கக்கா வரலை இப்ப காலையில் ஒருத்தங்க சொன்னாங்க ஆகர்கா அதாவது கடல்பாசி அதை கருப்பட்டி போட்டு காய்ச்சி உரய உடாம தண்ணியாவே குடுங்க வயித்தில் போய் இலைக்கிரும்ன்னு இப்பதான் குடுத்து 10 நிமிடம் இருக்கும் முக்குரான் ஒழிந்து கொண்ணு இன்னம் ரிசல்ட் தெரியலை
என் 3 வயது மகன் சொன்னாங்க வசம்பை நெருப்பில் காட்டி ஒரசி வயித்த சுத்தி தடவுங்க வந்துரும்ன்னு அது இன்னம் நான் செய்யலை

இன்னைக்கு பாத்துகிட்டு பாமசியில் இனுமா வாங்கிதான் குடுத்து இருக்க வைக்கனும் இனுமா குடுத்தா ரெம்ப துடிக்கிரான் பாக்கவே கஷ்டமா இருக்கு இதில் ஏதாவது உங்களுக்கு பயன் படுதான்னு பாருங்க
சலி இருந்தாலை சலி கட்டிக்கிட்டி இப்படிதான் செய்மாம் உங்க பொண்ணுக்கு சலியா இருக்கு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எனிமா குழாயின் மூலம் தண்ணீர் மட்டும் செலுத்தி தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மூனு நாள் செய்ங்க அப்புரம் தொடர்ந்து வந்துரும்
இரவு படுக்க போகும் போது 10 துளி விளக்கெண்ணை சாப்பிட்டு படுக்க சொல்லுங்கள் இது இரண்டும் போதும்
இரண்டையும் தொடர்ந்து ஒரு 3 to 5 நாள் செய்ங்க என் உறவுக்காரப்பெண்ணுக்கு இருந்து இப்படித்தான் மாற்றினோம் அவளுக்கு வருடக்கணக்காக வைத்தியம் பாத்தும்சரிவரலை
இனிமா குழாயும் விளக்கெண்ணையும் தான் சரிவந்தது முதல் நாள் இனிமாக்கு அப்படித்தான் பயப்படுவார்கள் கல் பாறை போல வந்து விழும் பிறகு மாறிரும்

http://arusuvai.com/tamil/node/12724
http://www.arusuvai.com/tamil/node/16261

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பியர் ஜூஸ் கொடுத்து பாருங்க...ஆப்பில் ஜூஸ் போல பியர் பழத்தை ஜூஸ் அடித்து தினமும் ஒரே நேரத்துக்கு சில நாள் கொடுத்து பாருங்க..அதாவது இன்று காலை 11 மணிக்கு என்றால் நாளையும் காலை 11 மணிக்கு.வித்யாசம் தெரியும்

ஹாய் பா ,
உங்க பிள்ளைக்கு உச்சா பிரச்சனைய இல்ல கக்கா பிரச்சனையா ?

உச்சா தா பிரச்சனைனா நல்ல நீர் உணவுகள குடுங்க . குறிபிட்ட நேரம் அப்பறோம் பாத்ரூம் குட்டிட்டு பொய் தண்ணீர் tap துறந்து விடுங்க . தண்ணீர் கொட்டுவதை பார்த்தல் அவர்கள் தானாகவே உச்சா போவர்கள் ...

கக்கா பிரச்சனைனா காய்ந்த திராட்சை தண்ணீரில் உறவாச்சி குடுங்க .. இரவு இரண்டு banana குடுங்க .. குடிக்க வெது வெது தண்ணீர் மட்டும் குடுங்க .. கக்கா கட்டும் உணவுகளான பால் சாதம் பிஸ்கட் பிரட்லம் தவிருங்க

இந்த பிரெச்சனைக்கு எனிமா’லாம் வேண்டாம்... ஒரே காரணம் தான்... எனிமா எப்போதும் மருத்துவர் ஆலோசனைபடி தான் பயன்படுத்தனும்... நாமாக வீட்டில் செய்வது முறை அல்ல. குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் வேண்டாம்.

சுல்பமான வழி... நம்ம பாட்டி காலத்து வழி... இரவில் விளக்கெண்ணெய் 1/4 அல்லது 1/2 தேக்கரண்டி (வயதுக்கு ஏற்றபடி வீட்டில் பெரியவர்களை கேட்டு சுத்தமான எண்ணெயான்னு கேட்டு வாங்குங்க. சில எண்ணெய் உள்ளுக்கு கொடுக்க கூடாதுன்னு போட்டிருக்கும், சில குழந்தைகள் படம் போட்டு இதுக்குன்னே கிடைக்கும்.) கொடுங்க. ரெகுலரா 5 நாள் கொடுங்க, காலையில் எழுந்ததும் வெது வெதுப்பா நீர் குடிக்க வைங்க. 1 தேக்கரண்டி சர்க்கரை கலந்து வெது வெதுப்பான நீர் ஒரு பாலாடை குடிக்க வைங்க. தானா மோஷன் போயிடும். தினமும் ஒரே நேரத்தில் போய் பழகிட்டா அதே நேரத்துக்கு போவாங்க ரெகுலரா. அதன் பின் இதெல்லாம் நிறுத்திடுங்க. என் மகளுக்கு இதை தான் செய்தேன்... அனுபவத்தில் நல்ல பலன் கண்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sorry pa thanglishla type pandrathukku en system sari illa so mobile type pandra so sorry athan ivlo nal arusuvai pakkam varamudila but silet readera irunda.ippo elena pathiva parthathum enakkum ithe problemthan irukku enna pandrathunu theriyama thavichittu irunda pls help pannunga pa.en ponnum school poi 4 days aguthu 3 vayasu aga pothu ithuvarai pamper pottu irunda ippothan pamper illama padukka pazhakka panna ana school misskitta pazhakkam varavarai papmper pottu anuppura veetla pamper podama irukka ana munnadi pamper fulla urine poi iruppa ana ippo adakki vechikkira huchu poga matra pogumbothu chuchu pora idathula ki vechittu azhuvura toilet pogumbothu romba titea pora kashtapadraru.pls nanum juice thanni kuduthuttuthan irukka ana school pora idathula eppadi irukkanu therila romba kozhappama irukku kaSHtama irukku pls reply me.

குழந்தைகள் ஆரம்பத்தில் இது போல் மக்கர் பண்ணுவாங்க... வீட்டில் டயப்பர் இல்லாம விட்டு நிறைய நீர் ஆகாரம் கொடுத்து அடிக்கடி சுசு போக சொல்லி நினைவுபடுத்துங்க. கொஞ்ச நாளில் போக ஆரம்பிச்சுடுவாங்க. இல்லன்னா சுலபமான வழி துணி டயப்பர் அல்லது ஜட்டி போட்டு விடுங்க. நிச்சயம் டயப்பர் போட்டா போவது போல் போவாங்க. சில பிள்ளைகள் காலில் ஆகும் என பயந்து போகாம இருப்பாங்க. அவங்களை காலில் படாம போக சொல்லி கொடுங்க, அப்படி ஆனால் உடனே சுத்தம் செய்து விடுங்க... பழகிடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

odane pathil sonnathukku romba thanks.ava school pora ana nama ulla poi pakka mudiyathu inga india mathiri illa avanga enna pandranga pakka mudiyathu ava school pamper pottuthan pora anga nany pamper change panni viduvanga enakku enna bayamna avanga nammala madhiri porumaia iruppangala pamper mathi viduvangala illa adippangalonu bayama irukku daily avala school anupittu azhuthutte irukkan ava sandoshamathan pora enakkuthan kashtama irukku kozhandai miss adippangalo adampudicha appadi ippadinu kavalaiya irukku ippola saria sapidamatra munnadi nalla sapiduva ithe kavalaiya irukku akka

vanitha akka neenga tambarama nanum pallavaramthan nan tambaram quide millethlathan padichan ippo bahrainla irukkan.tambaram bats hotel enga favourite

மேலும் சில பதிவுகள்