யாருகேனும் இப்படி குழந்தை உண்டா?

என் மகனுக்கு 1 வயது 7 மாதம்.அவன் எல்லாமே தாமதமாய்தான் செய்தான்.குப்புற விழ 7 மாதம்.தவழ 1 வயது 3 மாதம்.இப்ப ஒரு மாதமாய் நடக்கிறான்.நடக்க தொடங்கிய பின் அப்பப்பா வார்த்தையால் சொல்லவே முடியமாடிக்கிறது.ஒரு நிமிடம் ஒரு இடத்தில் இருக்க மாட்டிருக்கிறான்.பால் கொடுக்க முடிவதில்லை.சாப்பாட் கொடுக்க முடிவதில்லை.நான் தனியதான் வெளிநாட்டில் வசிக்கிறேன்.ஒவ்வொரு வாய்க்கும் லோ லோண்டு அலயனும்.உள்ளதே ஒரு ரூமும் ஒரு ஹோலும்.2க்கும் மாறி மாறி நடந்தே அவன் நேரம் போகுது.ஒரு ஷொப்பிங் மோல் போக ஏலாது.என் கணவர் இரவு 10 மணிக்குதான் வருவார்.இருவரு ஒன்றாய் போய்தான் சாமான் எடுக்கனும்.கையில் இருந்து பாய்ந்து ஓடுகிறான்.இருவருக்கும் கொண்ட்ரோல் பண்ண முடிவதில்லை.லிப்டுக்கு ஓடுறான்.சாமான் எல்லாம் இழுத்து போட்றான்.ட்ரொல்லில இருந்து பாய்றான்.மீறி தூக்கினால் ஒப்பாரி வைத்து ஊரை கூட்டுறான்.என்ன செய்வதுண்டே புரிய் மாடிக்கிரது.அவனுக்கு சொல்வது இன்னும் புரியவில்லை.காது மிகவும் கூர்மை.ஆனால் எந்த சாமானின் பெயரும் தெரியாது.அதை எடு இதை எடு என்று சொன்னாலும் ஒன்ரும் விளங்காது எதைஉம் கவனித்தில் கொள்ள மாட்டான்.அப்பா.தாத்தா மட்டும் சொல்வான்.ஆனால் அப்பாவை பார்த்து அல்ல.இன்னும் அம்மா சொல்லவில்லை.சொல்லி கொடுப்பதுக்கும் முகத்தை பார்க்கவே மாட்டான்.அவனும் அவனின் பாடும் என்று ஓடி திரிவான்.அம்மா,அப்பாதான் வேனும் என்றில்லை.யாரு கூப்பிட்டாலும் போய்விடுவான்.ஆனால் 2 நிமிடங்களுக்கு மேல் தூக்கி வைத்து கொள்ள் முடியாது.கொமட்டில் கூட 1 செக்கணுக்கு மேல் இருக்க மாட்டான்.டயபரில் அல்லது வீட்டுக்குள்தான் கக்கா போவான்.எப்படியப்பா பாத்ரூமுக்கு பழக்குவது?அதுவும் ஓடிக்கொண்டு நடந்து கொண்டுதான்.அவனை மயக்கி ஒரு இடத்தில் வைக்க 3 விடயம் இருக்கு.பூப்பி கார்ட்டூன்.சிறுவர் பாடல்.அதை போட்டு சாப்பாடு கொடுப்பேன்.அடுத்தது பாங்கு(அதான்),கிறாத்.அதுக்கு சாப்பிட மாட்டான்.கேட்டு கொண்டு ஒரு இடத்தில் இருப்பான்.என் கேள்வி

1)எப்படி டாய்லட் பழக்குவது?
2)எப்படி போகும் இடத்தில் கொண்ட்ரோல் பண்ணுவது?
3)எப்படி கதைக்க பழக்குவது?
4)மற்றது வாயில் எப்போதும் எச்சில் ஒழுகி நெஞ்சை நனைத்து கொண்டிருக்கும்.அதை நிறுத்துவது எப்படி?

இதை பார்த்த்விட்டு தயவு செய்து பதில் தராமல் போய் விடாதீர்கள் தோழிகளே.6 வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை.

நீங்க சொல்லி இருப்பது “development delay and hyper active" உள்ள குழந்தை பற்றி. ஆனா நீங்க மருத்துவரை பார்த்தீங்களா என்று சொல்லவில்லை. சில குழந்தைகளுக்கு மூலைக்கு போகும் ரத்தம் தடை பட்டால் இது போல் ஆகலாம். குழந்தை பிறந்ததும் அழுததா? எப்போது முகம் பார்த்து சிரித்தது? எப்போது கழுத்து நின்றது? இதெல்லாம் டாகட்ரிடம் பேசுங்க... hyper active'ஆக இருக்கும் பிள்ளைகள் ஒரு இடத்தில் நிக்காது... ஓடும்... இதுக்கு “Occupational therapy" தர வேண்டும். அவங்க பிஹேவியர் சேஞ் ஆனா ஒரு இடமா நிப்பாங்க, நாம பேசுவதை கவனிப்பாங்க, அப்போ தானா பேச்சு வரும், ஒழுங்க டாய்லட் போகலாம் பழகுவாங்க. நான் சொல்றது புரியுதா??? மருத்துவரிடம் பேசி நல்ல ஆக்குபேஷனல் தெரபி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெரிய ப்ரச்சனை இல்லை என தோன்றுகிறது..நீங்கள் மனசை குழப்பிக்காமல் நல்ல டாக்டரை பாருங்க சில குழந்தைக எல்லாத்திலும் கெட்டிகாரங்களா இருப்பாங்க ஆனால் அதுக்கெல்லாம் வேட்டுவெக்கிற மாதிரி கவனத்தை ஒருபக்கம் கொண்டு வர அவர்களால் முடியாது..அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்றே ட்ரீட்மென்ட் கொடுத்து அடுத்தவர்களை கவனிக்க செய்ய பழக்குவார்கள் ரிலாக்ஸ் பண்ண பழக்குவார்கள் சரியாகிடும்..மருத்துவரை பாருங்கள்

என்னப்பா ஏதேதோ சொல்றிங்க.11ம் மாதத்தில் சிரித்தான்.ஆனால் இன்னும் வாய் விட்டு பெரிதாய் சிரிக்க மாட்டான்.டாக்டரிடம் காட்டவில்லை.என் அத்தை சொல்றங்க.அவங்க அப்பாவும் சின்ன வயதில் இப்படிதானாம்.ஸ்கூல் கூட 5 மாறிட்டாங்க.பயங்கற வாலாம்.ஆனால் எதுவும் லேட் இல்லை.இப்ப சரியான சாது.டாக்டர் என்ன செய்வாங்க?எனக்கு பதில் தந்தமைக்கு நன்றி வனி.ஆனால் என் கணவர் என் அப்பாவின் தங்கை மகன்.அது காரணமோ.மேல் தாடை மஞ்சளாய் இருக்கு.

என்னப்பா என் பெயரா ADHD?நான் இந்த மாதம் ஊருக்கு போகிரேன்.நான் இலங்கை.எங்க ஊரில் அப்படி டாக்டராம் இல்லை.கொழும்பிலும் தமிழ் பேசும் டாக்டர் குறைவாக இருப்பார்கள்.பேபி டாக்டரிடம் காட்டினால் சரியா?

என் குழந்தை பிறந்தவுடன் அழுதது.ஆனால் டாக்டர் நர்ச் நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் கடைசிவரை பால் குடிக்கவே இல்லை.கொஞ்ச காலம் எடுத்து கொடுத்தேன்.பின் புட்டி பால்தான்.

உங்க பேர் இல்லை இப்படி இருக்கும் குழந்தைகளுக்கு ADHD என்பார்கள்.நான் சொல்றேனேன்னு முடிவு செஞ்சுடாதீங்க..அடிக்கடி பேபரில் வரும் சில குணாதிசயங்களை பற்றி அப்ப இப்படி தான் சொல்வாங்க.குழந்தைகள் டாக்டரிடம் போய் நீங்க காமிங்க விவரம் சொல்வாங்க உதவுவாங்க.இல்ல சும்மாவே அது குணமாக இருக்கலாம்.நல்ல ஆண்டவனிடம் பிள்ளைக்கு பொறுமை தர சொல்லி வேண்டிக்கிங்க

பயம் வேண்டாம்... பால் குடிக்கல, சிரிச்சது ரொம்ப லேட், மற்றதும் தாமதம்... அப்படின்னா ஆரம்பத்தில் இருந்தே குழந்தைக்கு வளர்ச்சியில் தாமதம் இருந்திருக்கு. நீங்க கவனிக்காம விட்டிருக்கீங்க. சரி பரவாயில்லை... occupational therapy கொடுக்க சொல்வாங்க... மருத்துவரை பார்த்து பேசுங்க. இதில் குழந்தைகளை ஒரு இடத்தில் அசையாம இருக்க பயிற்சி கொடுப்பாங்க, அடம் பண்ணும் குழந்தை கூட இந்த தெரபி கொடுத்தா மாறும். கவலை வேண்டாம்... முதல்ல மருத்துவரை பாருங்க. இறைவன் மேல் நம்பிக்கை வைத்து மருத்தவத்தை செய்யுங்க. கவலை வேண்டாம். சீக்கிரம் சரி ஆகி, பேச, மற்ற எல்லாம் சரியா செய்ய ஆரம்பிச்சுடுவான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வச்சுக்கொண்டு இருக்க வேணாம். நீங்களும் களைச்சுப் போயிருவீங்கள்.

கொழும்பில நல்ல ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டிட்ட காட்டுங்க. தமிழ் டொக்டர் வேணும் எண்டு இல்லை. யாராக இருந்தாலும் பரவாயில்லை. சில விஷயங்கள் எவ்வளவு ஆரம்பத்தில காட்டுறீங்களோ அவ்வளவு லேசாக முடியும். நாள் பிந்திப் போனால் பழக்கி எடுக்க கனகாலம் எடுக்கலாம்.

இலங்கைக்குப் போகேக்க இதை முதல் வேலையாக செய்யுங்க. இப்பவே அங்க இருக்கிற ஆட்கள்ட்ட ஒரு நல்ல டொக்டராக தேடி நேரம் குறிச்சு வச்சுக் கொள்ளுங்கோ. பயப்பிட வேணாம், நாங்கள் சொல்லுறதை விட ஒரு டொக்டர் நேரில பார்த்தால் நல்லது.

‍- இமா க்றிஸ்

உங்கள் மகனைப் போலவே தான் என் மகனும்.
ஆனால் உங்கள் மகனை விட ஒரு 10௦% கம்மி சேட்டை செய்வான் என் மகன்.
அதனால் அவனை 20௦ மாதத்தில் playgroup அனுப்பினோம்.
playgroup போய் நான்கு மாதம் கழித்து இப்போ கொஞ்சம் மாறி இருக்கிறான்.
இப்போது தான் ஒரே இடத்தில 15min உட்கார்ந்து இருக்கான் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்

அதனால் நீங்கள் முடிந்தவரை அவரை playgroup அனுப்பி பாருங்கள். மாற்றம் தெரியலாம்.

இதைப் பற்றி நான் முன்பு மருத்துவரிடம் கேட்ட போது, அவர் இது போக போக சரி ஆகிவிடும் என்று சமாதானம் சொன்னார்.

சென்ற வாரம் எனக்கு தெரிந்த மருத்துவர்(எனது தங்கையின் தோழி) இதை பற்றி சொன்னார்..

* இது குழந்தையின் personality or nature..இதை குறையாக பார்க்க வேண்டாம்.

* ஆனால் முடிந்தவரை இப்போதே அவனை மாற்ற பாருங்கள் என்று சொன்னார்.

* இந்த மாதிரி குழந்தையிடம் இன்னும் அதிக நேரம் செலவிட வேண்டும், குழந்தையிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார்.

* கண்டிப்பாக எல்லா குழந்தையிடம் ஏதாவுது பிடித்த விஷயம் ஒன்று இருக்கும்.. அதை வைத்தே அவர்களை நம்ம வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்.

எனது மகனுக்கு rhymes ரொம்ப பிடிக்கும். ஷாப்பிங் செல்லும் போது கொஞ்ச நேரம் அவன் இஷ்டத்துக்கு அவனை விளையாட(ஓட) விடுவோம். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து மொபைல் rhymes போட்டு உக்கார வச்சுட்டு நாங்க ஷாப்பிங் பண்ணுவோம்.

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.ஊருக்கு போனவுடன் டாக்டரிடம் காட்டுறேன்.என் பையனுக்கு சளி பிடிக்கவும் டாக்டரிடம் போனேன்.அப்ப அவங்க சொன்னாங்க்.வளர வளர சரியாகிவிடும்.இங்க தனியே வீட்டுக்குள் அடைபட்டு வளருவதால் அப்படி இருக்கும் என்று.நேற்று என் பையனை ஒரு ஷாப்பிங் மாலில் விளையாடும் பந்துக்குள் விட்டேன்.அதே வயது பையன் ஒருவன் இருந்தான்.அவனை கண்டவுடன் சந்தோஷம்.அவன் செய்வது போலவே செய்கிறான்.ஊருக்கு போய் அவரின் சூழலில் சின்ன பிள்ளைகளுடன் பழக விட்டால் சரியாகும் என்று ந்னைக்கிறேன்.என் கணவர் 10 மணிக்கு பின் வருவதால் எந்த குடும்ப நண்பர்கள் தொடர்பும் இல்லை.தனியேதான் காலம் போகின்றது.வெள்ளிக் கிழமையில் பார்க் கூட்டிபோவோம்.

மேலும் சில பதிவுகள்