குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி

அன்புள்ள தோழிகளே
என் குழந்தைக்கு முஹம்மது ஆதிப் என்று பெயர் வைத்து இருக்கிறோம்.....வாழ்த்து சொன்ன அனைத்து தோழிகளுக்கும் எங்களது மனார்ந்த நன்றிகள் .......எனக்கு ஒரு பிரச்சனை தோழிகளே இது எனக்கு முதல் குழந்தை ,இன்று வரை பத்து நாள் ஆகிறது என்னவென்றால் மார்பிலிருந்து பால் வடிந்து கொண்டே உள்ளது ......குழந்தை குடிக்கும் போது பால் வருவது இல்லை .......மிகவும் அவசரம் பதில் தாருங்கள் .......

சும்மா வடியுது குழந்தைக்கு மட்டும் கிடைக்கலை என்பது உங்கள் மனபிரம்மை என்றே தோன்றுகிறது ..குழந்தைக்கு பால் கிடைப்பதில்லை என்று எப்படி சொல்றீங்க??முதல் கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் பிறகு சரியாகிடும்..அதிகப்படியானதை ஸ்டோர் பண்ணி ஸ்பூனால் கொடுங்க.அல்லது ப்ரெஸ்ட் பேட் வாங்கி வச்சுகுங்க.மத்தபடி குழந்தைக்கு கிடைக்காமல் இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை

இதே விஷயத்திற்காக நீங்க ஏற்க்கனவே கேட்ட கேள்வியும் அதன் பதில்களும் கீழே உள்ள லின்க்கில் இருக்கிறது. அந்த பதில்கள் உங்களுக்கு உபயோகமாக இல்லையா? இல்லை நீங்கள் அதை படித்தீர்களா என்று கூட தெரியவில்லை. படிக்கவில்லை என்றால் இப்பொழுது பாருங்கள்.

http://arusuvai.com/tamil/node/20643

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Cöngratulations pa. I have 5 months baby. Like u i am also felt that there is no milk. But this is natural feeling. Milk neraiya surapathinal than milk veli erukirathu athai purinthu kolla vendum because for 1 month baby intake is very very small only. Ungaluku pal niraivaghavae irukum athanal than surakirathu pal illai endru ninaithu bottle pal kodukathirkal kuzhanthai urinja urinja than pal nandragha suraka arambikkum. Kavalai vendam. For 1 month only you wil have this problem

hi
me too had the same problem. i have a 7 months baby now. the problem is he didnt suck properly and i started to express my milk and give... using breast pump. after 2 months only he started to drink from me directly.. u try to make her suck she will learn in a few days... i know how frustrating the condition is... but u have to wait... hope ur child will learn quickly.

தோழி தளிக்கா ,லாவண்யா ,கோமதி,ராபியத்துல் பசரியா ,சத்யா ......உங்களுடைய பதில்களுக்கு மிக்க நன்றி .....தோழிகளே எனக்கு நீங்கள் கூறுவது புரிகிறது .......நீங்கள் கூறியது போல் பால் கொடுக்கிறீன்,,,ஆனால் அவன் மீண்டும் அழுகிறான் என்ன செய்வது என்று புரியவில்லை ?பால் நன்றாக ஊற என்ன செய்வது?அவன் பிறந்து இன்று வரை 22 நாட்கள் ஆகி விட்டது ...தொப்பில் கொடி இன்னும் விழவில்லை என்ன செய்வது என்று புரியவில்லை ...... நானும் என் கணவரும் soudiel வசிக்கிறோம் ....வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை ....என் கணவர் சமையல் செய்கிறார் ...நான் குழந்தயை கவனிகேறேன் .....எனக்கு அவனுக்கு தாய்பால் நன்றாக கொடுக்க வழி சொல்லுங்கள் .....தொப்பிள் கொடி விழாமல் குளிப்பாட்டலாமா ?இன்னும் ஒருஉ தவியை அனைத்து தோழிகளிடமும் கே ட்கிறேன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய ஒரு இழை ஆரமித்தால் என்னை போன்று இருப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... உதவுங்கள் என் தோழிகளே ?

மேலும் சில பதிவுகள்