குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இந்த இழையில் உரையாடலாம்.ஒவ்வொரு நாளும் நாம் கேட்கும் குழந்தைகளின் சின்ன சின்ன மனசு,உடல் சம்மந்தப்பட்ட விஷயம் முதல் கடத்தல்,பாலியல் பலாத்காரம் தொடங்கிய சம்பவங்களுக்கு பெற்றோர் நம்மால் எனென்ன முயற்சிகள் எடுக்க முடியும் குழந்தைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுவது எப்படி என்பது பற்றி அவரவரது ஆலோசனைகளை வழங்கலாம்

முதலில் பள்ளி ஆசிரியரை பற்றி சொல்கிறேன்..என் மகளுக்கு கிடைத்ததெல்லாம் பொன்போன்ற ஆசிரியர்கள் எனக்கு ஓபென் ஹவுஸ் என்ராலே ஒரே குஷி அந்தளவுக்கு நல்ல நல்ல ஆசிரியர்களாக இருக்கிறார்கள்..இருந்தாலும் சில சமயம் அப்படி அமைவதில்லை.உதாரணத்திற்கு எனது உறவுக்கார பிள்ளையை சிறு வயதில் பேசினான் என தலையை பிடித்து பென்ச்சில் இடித்ததில் முன் பல் இரண்டும் இளகி ரத்தம் கசியத் தொடங்கியது..அன்று பெற்றோர் பள்ளி சென்று தட்டிக் கேட்டார்கள் அவர் சாரி சொன்னதும் விட்டுவிட்டார்கள்..இன்றோ அந்த இரண்டு பல்லும் 11 வயதிலேயே ரூட் கனால் செய்து நிறுத்தும் அளவுக்கு கெட்டு நிறம் மாறி கீழ் இறங்கிட்டது..இன்று வருத்தப்படுகிறார்கள் அன்று அதிகம் பொருட்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று..இது போன்ற ப்ரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை பெற்றோராகிய நாம் எடுக்க வேண்டும்..அடுத்த ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்படி ஸ்கூளில் இருந்து சஸ்பென்ட் பண்ண கூட சொல்லலாம்.அதுவுமில்லையா வகுப்பை மாற்றி உட்கார வைக்க சொல்லலாம்.கண்டுகொள்ளாமல் விடுவதால் பின்னாளில் குழந்தைக்கு உடலில் சேதமும் நமக்கும் எதுவாவது பிடிக்கலையென்றால் அடுத்தவர்களை நல்ல போட்டு சாத்தலாம் என்ற ஒரு பாடம் கிடைக்கிறது..ஆசிரியர்களுக்கும் கூடினால் என்ன திட்டுவார்கள் என்ற ஒரு போக்கில் போவார்கள்.
குழந்தைகளிடம் ஒருபோதும் உன் டீச்சர் சொல்லி அடி வாங்கி தறேன் என்றோ டாக்டரிடம் சொல்லி ஊசி போடுவேன் என்றோ பைத்தியக்காரத்தனமாக மிரட்டக் கூடாது.இதனால் அடி வாங்கினாலும் சில குழந்தைகள் வீட்டில் சொல்லாது..குழந்தைகள் வீட்டில் சொன்னால் நீ எதாவது செஞ்சிருப்பே அதான் அடிச்சாங்க என்று அலட்ச்சியப் படுத்தக் கூடாது..குழந்தைகளை அடிக்க பெற்றோராகிய நமக்கு கூட உரிமை இல்லாத போது எப்படி அடுத்தவர்கள் அடிக்கலாம்..என் மகளது டீச்சர் சொன்னார் நிறைய பெற்றோர் நல்ல அடி போடுங்க டீச்சர் என்று கொண்டு வந்து விடுவார்களாம்..டீச்சரோ பரம சாது வருத்தமாக சொன்னார்"எனக்கு அடிக்க மனசும் வராது பிள்ளைகளையோ டிசிப்லின் இல்லாமல் வளர்த்தி வைத்திருக்கிறார்கள் என்னையே அடிக்கிறார்கள் "என்றார்.
இன்னுமொரு நண்பர் சொன்னார் மகளது பள்ளியை மாற்றி விட்டோம் என்று..ஏன் பாதியில் திடீரென்று மாற்றிநீர்கள் என்றேன்.வருத்தமாக சொன்னார் ஆசிரியை குழந்தையிடம் அதை வங்கி வா இதை வாங்கி வா என்று கேட்கிறாராம்..இவர்களும் நல்ல கவனிப்பாங்க என்று லஞ்சமாக ஒவ்வொன்றாக வாங்கி அனுப்ப கடைசியாக சுடிதார் துணியை வாங்கி வர சொன்னாராம் இவர்கள் முடியாது என்று போய் சொல்லு என்று சொல்ல குழந்தை அதே போல் சொல்லி விட்டது..அன்றே எதுவோ ஒரு காரணம் சொல்லி குழந்தையின் முடியை பிடித்து ஆட்டி விட்டாராம்..குழந்தை மிரண்டு அழுது வீட்டுக்கு வந்து இனி போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டது..இவர்களும் பள்ளியையே மாற்றி விட்டார்கள்..கம்ப்லெஇன்ட் பண்ண வில்லையா என்று கேட்டோம் பள்ளியே மாற்றியாச்சு இனி என்ன ஆகபோகிறது கம்ப்லெயின்ட் செய்து என்றார்..எனக்கு கோவம் வந்து விட்டது.
இது போன்ற ஓசி பிழைப்புகள் எல்லா இடத்திலும் உண்டு அடுத்தவர்களிடம் எப்படி ஓசியாக எதையாவது வாங்கலாம் என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள்..அதுவே ஆசிரியையாக இருக்கும் பொழுது நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் பொருப்பும் இவர்கள் கைய்யில் இருந்தால் எப்படியிருக்கும்?போய் கம்ப்லெயின்ட் கொடுத்து பள்ளியில் இருந்து நீக்கி விட வேண்டும் இனி ஒரு வேளை நம் பிள்ளை அங்கு இல்லை என்றாலும் கூட..மட்டுமல்ல இப்படி கேட்கிறவர்கள் நல்லவர்களே கிடையாது நாமும் வாங்கி கொடுத்து அனுப்பி பழக்க கூடாது..நம்ப ஊரில் கூட நிறைய நானும் கேள்வி பட்டு விட்டேன்..

குழந்தைகளிடம் பொய் சொல்லி பழகாதீர்கள் பின்னாளில் நிறைய பாதிப்பு இது சம்மந்தமாக வரும்..இதை செய் பார்குக்கு போகலாம் அதை செய் அதை வாங்கி தருகிறேன் என்று சும்மாவே பொஇய்யை சொல்லி விட்டு அதை செய்யாமல் விடுவது..இதனால் குழந்திகள் நம்மிடமே கற்கிறது சும்மா வெறும் வாக்கு அதை செய்ய வேண்டிய அவசியமே இல்லையென்று.என் மகளுக்கு பொய் என்றால் என்னவென்றே தெரியாது.
ஒருமுறை உறவினர் ஒருவர் நீ சீக்கிரம் சாப்பிடு பார்க் போகலாம் என்றார்..பாவம் அடிச்சு புடிச்சு சாப்பிட்டு விட்டு பார்க் பார்க் என்றாள்..அவரோ சிரித்துக் கொண்டு சும்மா சொன்னேன் என்று சொல்லவும் ஓஹ் என்று அழுகை..எதனால் அவர் அப்படி சொன்னார் என்று என்னிடம் பல முறை கேட்டு அழுதாள்..சின்ன விஷயமாக இருந்தாலும் செய்வேன் என்றால் செய்வேன் இல்லை என்றால் இல்லை..குழந்தைகளுக்கு நம் மேல் அளவில்லாத மரியாதையும் நம்பிக்கையும் வைக்கும்...அதுவே அவர்களுக்கு ஒரு வித பாதுகாப்பான உணர்வை கொடுக்கும்

இந்த இழை தொடங்கிய தளிகா க்கு மிக்க நன்றி. :-)

கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் அனைவரும் தெரிந்து, புரிந்து கொள்ளவேண்டிய விஷியம். குழந்தைக ஸ்பெஷலிஸ்ட் எல்லாரும் வாங்க, வந்து உங்க அனுபவம்,அட்வைஸ் சொல்லுங்க. எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி..ரொம்ப நன்றி உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் இருந்தால் சொல்லலாம்.
இப்போ ரொம்ப ரொம்ப பயப்பட வேண்டிய விஷயம் முன்னை போல கன்னிப்பெண் தான் தனியா நடமாட முடியாது என்றேல்லாம் இல்லை.அஞ்சு மாச குழந்தையை கூட விட்டு வைப்பதில்லை..ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்றும் இல்லை யாரையாவது இறையாக கிடைப்பது மட்டுமே இந்த கொடூறர்களின் தேவை..இதில் குழந்தைகள் பலவாறு பாதிக்கப்படுகிறார்கள்..கடத்தல் பிஅச்சை எடுக்க விடுவது,விபச்சாரம் தொடங்கி பாலியல் பலாத்காரம் என பல பல செய்திகள் தினசரி நம் காதில் விழுகிறது.இதனை குறித்து குழந்தைகளை எப்படி சொல்லி புரியவைக்கலாம்..அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதெப்படி என்று பெற்றோர்கள் அவரவர் கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும்.
மகளில் பள்ளி மகளிர் கல்லூரியில் விட்டு விட்டு நிம்மதி பெருமூச்சு விடும் தாய்மார்களே அங்கும் சில கசப்பான சம்பவங்கள் நடக்கத் தான் செய்கிறது...இன்று ஓரீனச் சேர்க்கையாளர்களும் பெருகி வருகிறார்கள்..பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு இம்சைகள் தொடங்கி விடுகிறது..அதனால் குழந்தைகளின் தோழிகள்/நணபர்கள் யார் யார் என்று நாசூக்காக பேசி விசாரிப்பதும் தெரிந்து வைப்பதும் நல்லது...எந்த நMபர் வீட்டுக்கு போனாலும் அங்கு யார் யார் இருக்க்கிறார்கள் என்று தெரிந்து வைப்பதும் அவர்களுடைய பெற்றோரிடம் நாம் ஒரு தோழமை உண்டுபண்ணுவதும் அவசியம்..அதனால் எப்பொழுதும் குழந்தைகள் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்...சமைத்து வீட்டு வேலை பார்த்து டிவி பார்த்து தூங்கி விடாமல் தினமும் குழந்தைகளோடு பேச வென்றே நேரம் காண வேண்டும்.தினசரி நடக்கும் விஷயங்களை நல்லதோ கெட்டதோ பரிமாறிக் கொள்ளலாம்.

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் தளிகா இப்ப கூட சென்னைல ஒரு பையன் பாலத்துல இருக்குற உடைசல்ல விழுந்து கீழே இருக்குற கூவத்துல மாட்டி உயிர்விட்டுடான்... சோ குழந்தைங்கள நாம பாதுகாப்பான வழில தான் எங்கயும் கூட்டிடு போகணும், ஏனா அந்த பாலம் நடமாடுற பாலம் இல்ல தண்ணீர் குழாய் போற வழி அதுல பெரியவங்க போக பழக்க போய் தான இந்த பிஞ்சுகளும் போகுதுங்க. எப்டி லாம் தவமிருந்து பெத்துருப்பாங்க

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அப்புறம் நாம் பார்க்குற டிவி சேனல்லயும் ரொம்ப கவனம் தேவை.. ஏன்னா ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி காஞ்சனா... நு ஒரு படம் அத திரும்ப திரும்ப பார்த்து யாரோ என்ன ஃபலோ பண்ற மாதிரி இருக்குன்னு ஒரு 15 வயசு பையன் சொல்லிட்டே இருந்துருக்கான். அவங்க பேரண்ட்ஸ் கோவில்குலாம் கூப்டு போய் மந்திரம் பண்ணி கொஞ்ச நாள் சரி ஆகிருக்கான். அப்புறம் 2 நாள் கழிச்சு, தீ வைச்சு கொழுத்திக்கிட்டான்.. அப்ப தான் அவங்க புரிஞ்சுகிட்டாங்களாம் அவன் அந்த படத்துல இருந்து இன்னும் மீண்டு வரல அப்டினு தவமா தவமிருந்து தீ க்கு இரையாக்கிட்டான் அந்த பையன்.. நான் ரொம்ப நொந்து போய்ட்டேன். இந்த நியூஸ்லாம் படிச்சுட்டு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க மீனு.கவனக்குறைவு என்பது நிறைய வீட்டில் நடக்கிறது.வெளிநாடுகளிலோ பரவலாக கேகப்படுவது ஜன்னல் வழியே குழந்தைகள் குதித்து விடுவது.நம்மால் முடிந்தவரை நாம தான் கவனமா இருக்கணும்..சின்ன குழந்தைகளுக்கு பார்க்கும் மாதிரி படங்களை தான் காண் விட வேண்டும்..அசிங்கமான பாடல்களையும் நடனத்தையும் கூட இன்று பெற்றோரே என் பைய்யனுக்கு இது ரொம்ப பிடிக்குமென்று கூட இருந்து ரசிக்கிறார்கள்..இவர்கள் காலப்போக்கிற்கு நாமும் போக வேண்டும் என்பதை காரணமாக சொல்வார்கள்..கண்ட கண்ட ரீல் பேய் கதைகளை குழந்தைகளுக்கு காட்ட கூடாது பேய் புடிச்சிடும் என்று தேவையில்லாமல் பயமுருத்தக் கூடாது.ஹாரர் மூவீஸ் எல்லாம் காட்ட கூடாது.சில குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.
தினசரி என் மகளை பள்ளி விட்டு பஸ் வரும்போது நான் அழைக்க போவேன் அப்பொழுதெல்லம் சுமார் 6௭ வயதுடைய சிறுமி பஸ் இறங்கி தனியாக லிஃப்ட் ஏறி வீட்டுக்கு போகும்..எனக்கே பயமாக இருக்கும்..எத்தனை பேர் இடையிடையே லிஃப்டில் ஏறுவார்கள்..இவ்வளவு சின்ன குழந்தைகளை இப்படி தனியாக யார் விட்டார்களோ என்று பதறுவேன்...
இன்று லிஃப்டில் கிடைக்கும் அந்த சின்ன கேப்பில் கூட பல சம்பவங்களும் நடக்கிறது..எங்காவது வெளியே அக்கம் பக்கம் போன குழந்தைகள் தனியாக வரும்பொழுது யாராவது பின் தொடர்கிறார்கள் என்று தோன்றினால் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது என்று பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும்..உடனே அங்கேயே நின்று பக்கத்தில் தெரிகிற கடைகள் அல்லது பெரியவர்களிடம் இன்னவர் பின் தொடர்கிறார் என்று சொல்ல சொல்லலாம்..குழந்தைகள் அப்பொழுதைக்கு பயந்து லிஃப்டில் ஏறி வீடு வந்து சேரலாம் என்று நினைப்பார்கள்.அப்படி செய்யாமல் யாரிடமாவது சொல்லி ஃபொனில் அழைத்து அப்பா அம்மாவை அந்த இடத்துக்கு வர சொல்லலாம்..இங்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது ப்ரெட் வாங்க போன சிறுமியை யாரோ பின் தொடர்வதாக தோன்றியதும் பயந்து விட்டு வேகமாக நடந்து பில்டிங்கில் ஏறி லிஃடில் ஏற பிந்தொடர்ந்தவனும் உள்ளே ஏறிக் கொண்டு சில்மிஷம் செய்து விட்டான்..
பக்கத்து வீட்டில் கூட விடுவதென்றால் அந்த வீட்டில் யார் யார் எப்படி என்று நல்ல தெரிந்து வைத்து விட்டு அனுப்பலாம்..நமது சொந்தபந்தங்களானாலும் சரி சிலரிடம் குறிப்பிட்ட காரணமில்லாமல் குழந்தை வெறுப்பை காண்பிக்கிறது என்றால் குழந்தையிடம் பேசி விசாரிக்க வேண்டும்...நிறைய வீடுகளில் உறவினராலேயே தான் குழந்தைகள் கஷ்டத்திற்காளாகிறது..ஆனால் இவர்கள் இப்படி செய்வார்களா என்று நம்பக் கூட முடியாத படி நல்ல ஆட்களாக பொறுப்பாக தெரிவார்கள்..
என்ன இருந்தாலும் அம்மா அப்பாவிடம் மனம் திறந்து பேசும்படியாக பழக்க வேண்டும்

பெற்றோர்கள் அனைவருக்கும் ரொம்ப அவசியமான நல்லதொரு த்ரெட் தளிகா!

நீங்க சொன்ன எல்லா டாபிக்கையுமே நான் ஏற்கிறேன். மீனு நீங்க சொன்ன விஷயங்களும் சரி. இப்பெல்லாம் வரும் திரைப்படங்களுமாகட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகட்டும், ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஆன்னா, ஊன்னா... ஒருவரை ஒருவர் அடிப்பதும், வெட்டுவதுமாகத்தான் இருக்கிறது. பயங்கர வன்முறை. இல்லையென்றால், இருக்கவே இருக்கு, தற்கொலை காட்சிகள், கையை வெட்டிக்கொள்வது, இல்லை ஃபேனில் புடவையை போடுவது... இப்படி, ஒரே எரிச்சலா இருக்கு. என்ன சொல்லிக்கொடுக்கிறது இந்த மீடியாக்கள்?!! நாளைய சமுதாயத்தை சீரழிக்கும் விஷயங்களல்லவா? ஏதாவது ரேர்ராகத்தான் நல்ல படங்கள் வருகிறது. என்னைக்கேட்டால், இவையெல்லாம், பிள்ளைகளின் பிஞ்சு மனதில் ரொம்ப பாதிப்பை விளைவிப்பவை. இந்த மாதிரியான சினிமா, இதுபோன்ற டிவி ப்ரோக்கிராம் எதுவானாலும், பிள்ளைகள் பார்க்க நேரிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.

அப்புற‌ம் நீங்க‌ சொன்ன‌மாதிரி, ஸ்கூல் விட்டு வ‌ரும் பிள்ளைக‌ள் விஷ‌ய‌ம். ஆமாம், த‌ளிகா. இங்க‌ ஒருமுறை செய்திக‌ளில் காட்டினாங்க‌. ஒரு 12 வ‌ய‌து பெண் த‌னியா எப்போதும்போல‌ ஸ்கூல் ப‌ஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டுக்கு வ‌ர‌ ந‌டந்திருக்கா. தீடிரென்று பார்த்தால், அவளுக்கு ரொம்ப பக்கத்தில் ஒரு பிக் அப் ட்ரக் வந்து நிக்க‌, அதில் இருந்த‌‌ ஒருத்த‌ன், அப்ப‌டியே அந்த‌‌ பெண்ணை தூக்கி, வ‌ண்டியில் போட்டுட்டு, முன்சீட்டுக்கு வர, நல்லவேளை அந்தபெண் சுதாரித்துக்கொண்டு, டக்கென்று வண்டியில் இருந்து குதித்து, தப்பித்து வந்திருக்கிறது. எனக்கு செய்தியை பார்க்குபோதே பக்பக்கென்று இருந்திச்சி. சோ, பிள்ளைக‌ளுக்கு, எப்ப‌வும் ந‌ல்லா அல‌ர்ட்டா இருக்க‌னும்னு சொல்லிக்கொடுக்க‌னும். யாரேனும் ஒருவ‌ர் பின் வருவதுபோல, அல்ல‌து எதாவ‌து ஒரு வாக‌ன‌ம், தேவையில்லாம‌ திடீர்னு ரொம்ப‌ நெருக்கமா வந்து நின்றாலோ, ரொம்ப சுதாரிப்பா நாம ஒதுங்கி வேகமா விலகி நடக்கனும் என்றும் சொல்லித்தரனும். முடிந்த‌‌ம‌ட்டும், பசங்க த‌னியா போய் வ‌ர‌வேண்டியது தவிர்ப்பது நல்லதே, அதற்குண்டான‌ க‌ட்டாய‌ம் இருந்தால் தவிர.

அப்புற‌ம் நீங்க‌ சொன்ன‌மாதிரி, பிள்ளைக‌ள் யாரோடு ந‌ட்பு வைத்திருக்கிறார்க‌ள்? அவ‌ங்க‌ வீட்டில‌ யாரெல்லாம் இருக்கா என்று தெரிந்து வைத்துக்கொள்வ‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம். கூட‌வே, சின்ன‌ வ‌ய‌திலேயே, குழந்தைக‌ளுக்கு, எது 'குட் டச்', எது 'பேட் டச்' என்று சொல்லிவைப்ப‌து ந‌ல்ல‌து. இங்கே ப‌ச‌ங்க‌ளுக்கு, ஸ்கூலிலே, இந்த‌‌ மாதிரி விஷ‌ய‌ங்க‌ளை, கார்ட்டூன் நிழ‌ச்சிக‌ளை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

மருந்து மாத்திரைகளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவேண்டும். அடுப்படியில் குழந்தைகளை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது நாம அவங்களை வைத்துக்கொண்டு எதாவது செய்யப்போக, அவர்கள் நாம சமையல் அறையில் இல்லாதப்ப, அதே மாதிரி, எதாவது கேஸ் அடுப்பில் திருகி விளையாட, அதுவே பெரிய ஆபத்தாக‌ வாய்ப்பிருக்கு. இதெல்லாம்கூட சின்ன வயதில் இருந்தே, ஸ்ட்ரிக்ட் பண்ணிட்டா நல்லது.

அப்புற‌ம், இன்னொரு விஷ‌ய‌ம். நாம‌ எங்காவ‌து வெளியில் போகும்போதோ, இல்லை க‌டைத்தெருவிலோ, பிள்ளைகளை நம் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம். இங்கே (வேற ஒரு ஸ்டேட்டில்)ஒருமுறை இப்படிதான், தீடிரென்று கூடவே வந்து கொண்டிடுந்த சின்ன குழந்தையை காணவில்லை. பெற்றோர்கள் ஒரே கூச்சலாக கத்தி, அங்கும் இங்கும் ஓடித்தேட (அது ஒரு பெரிய கடை), எதேச்சையாக கொஞ்சம் தள்ளி இருக்கும், வாட்டர், பாத்ரூம் இருக்கும் ஏரியாவுக்குபோன ஒருவர், பார்த்த விஷயம், ரொம்ப அதிர்ச்சியாக இருந்ததாம். யாரோ ஒரு நபர், அந்த குழந்தைக்கு, அதற்குள்ளாக வேறு உடை அணிவித்து, அவசரம் அவசரமாக எலக்ட்ரிக் ஷேவரால், மொட்டை அடித்துக்கொண்டிருந்தானாம். இன்னும் கொஞ்சம் நேரம் கடந்திருந்தாலும், சுத்தமாக அடையாளத்தை மாற்றி, அந்த குழந்தையை ஏதோ தன்னுடையதுப்போல கடத்தி சென்றிருப்பான். ஆக, ரொம்ப கவனமா இருக்கனும்.

அதேப்போல , குழந்தைங்க கிட்ட, 'உங்க‌ அம்மா/அப்பா, அங்க‌ இருக்காங்க', 'ம‌ய‌ங்கி விழுந்திட்டாங்க', 'உன்னை கூப்பிட்டு வர சொன்னாங்க, வா , நான் கூட்டிட்டு போறேன்' என்றெல்லாம் யாராவ‌து சொன்னா, ந‌ம்ப‌வே ந‌ம்ப‌க்கூடாது என்று சொல்லி வைக்க‌னும்.

இப்பெல்லாம், ஆப‌த்து ப‌ல‌ ரூப‌த்தில‌ வ‌ருது. நாம‌தான் குழந்தைக‌ளுக்கு சிறு வ‌ய‌து முத‌லே எல்லா பாதுகாப்பு விஷயங்களையும் சொல்லித்தந்து வ‌ள‌ர்க்க‌ வேண்டும். சரி, ரொம்ப எழுதிட்டேன். இன்னும் எதாவது தோணினால் மீண்டும் வருகிறேன். நல்ல பயனுள்ள த்ரெட் ஆரம்பிச்சதுக்கு நன்றி தளிகா!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்