தண்டை

தேதி: October 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

பால் - 1/2 லிட்டர்
பாதாம் - 1/2 கப்(ஊற வைத்து தோலுரித்தது)
முந்திரிப் பருப்பு - 1/4 கப்(ஊறவைத்து தோலுரித்தது)
பிஸ்தா - 1/4 கப்(ஊறவைத்து தோலுரித்தது)
கசகச - 2 ஸ்பூன் ஊறவைத்தது
சோம்பு - 8
மிளகு - 8
குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - 1 பின்ச்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்


 

முதலில் பாதாம்,பிஸ்தா மற்றும் முந்திரிப் பருப்புடன் சோம்பு,மிளகு ,கசகசா சேர்த்து சிறிது பால் விட்டு மைய்யாக அரைக்கவும்
பிறகு பாலை கொதிக்க வைத்து சர்க்கரையும்,உப்பும்,குங்குமப் பூவும் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் விடவும்...இடையே கிளறிக் கொடுக்கவும்.கடைசியாக ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்
பின்பு தீயை அணைத்து விட்டு குளிர வைத்து பரிமாறவும்


வட நாட்டினர் மஹாஷிவராத்திரி மற்றும் ஹோலி பண்டிகைக்கு விசேஷமாக செய்வதாக சொல்லப்படுகிறது.அவர்களுடைய விசேஷங்களுக்கும் பரிமாறப்படுகிறது.வட இந்திய உணவகங்களுக்கு சென்றால் இதனை வாங்காமல். விட மாட்டேன்.ஆனால் வீட்டில் செய்வது தான் சுவையாக இருக்கும்

ரோஸ் வாட்டருக்கு பதில் ரோஜா இதழ்களையும் பருப்புடன் சேர்த்து அரைக்கலாம் அல்லது குல்கந்த் 1 ஸ்பூன் சேர்த்து கடைசியாக கிளறினாலும் சுவை அலாதியாக இருக்கும்.விரும்பினால் 1 ஏலக்காயும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு தளிகா.. விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன் :-) நல்ல குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி...

KEEP SMILING ALWAYS :-)

நல்ல குறிப்பு... :) இவருக்கு சொந்த ஊர் ராஜஸ்தான். சுவையான மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய பானம். கண்டிப்பா ட்ரை பண்றேன். கேட்டது உண்டு, குறிப்பு இன்றே கிடைத்திருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நாகா ராம்/வனி

புது தகவலும் தந்துட்டீங்க ..இது ரொம்ப வருஷம் முன்னே மல்லிகா பத்ரினாத் அவங்க டிவில செஞ்சு காட்டினாங்க அப்ப இருந்து இப்ப வரை பலரும் செய்து காட்டிய ரெசிபி எல்லாமா சேத்து கடைசியா செய்தபொழுது இது தான் எனக்கு பிடிச்சிருக்கு.ரொம்ப தேன்க்ஸ்