முட்டை ஓடு பெயிண்டிங் - 3

தேதி: October 12, 2011

5
Average: 4.5 (17 votes)

 

முட்டை ஓடு
அக்ரிலிக் கலர்ஸ்
ப்ரஷ்
பென்சில்
க்லிட்டர்ஸ்
மார்க்கர்

 

முட்டை ஓட்டின் நடுப்பகுதியை படத்தில் உள்ளது போல் பென்சில் கொண்டு வரைந்து பிரிக்கவும்.
இரண்டாக பிரித்த பகுதியில் உள்ள கீழ் பக்கத்தில் பெண் உருவத்தை பென்சில் கொண்டு வரையவும்.
அதன் மேல் பக்கத்தில் விரும்பிய நிறத்தில் தொப்பி போல் பெயிண்ட் செய்யவும். கீழ் பகுதியில் முடியை கருப்பு நிறம் கொண்டு தீட்டவும்.
இப்போது கண், மூக்கு, வாய் என எல்லாம் நிறம் தீட்டவும்.
கடைசியாக க்லிட்டர்ஸ் கொண்டு தொப்பியில் சிறு புள்ளிகள் வைத்து முடிக்கவும்.
இதே போல் பெண் உருவத்தை பென்சில் கொண்டு வரைந்து கொள்ளவும்.
கண், மூக்கு போன்ற சிறு பாகங்களை மார்க்கர் கொண்டு வண்ண தீட்டவும்.
முடிக்கு அக்ரிலிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டி முடிக்கவும். இது போல் உருவங்கள் மிக சுலபமாக வரையக்கூடியவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை! ஸ்டைலா இருக்காங்க. ;)

‍- இமா க்றிஸ்

நல்ல ஒரு கற்பனை. அழகா இருக்கு. வனிதாக்கா எல்லா பக்கமும் அசத்துறீங்க வாழ்த்துக்கள். திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க.

Vow excellent super i have no more words to say about this. Very nice.

முட்டை பெண்கள் அழகோ அழகு...... முட்டை ஆண்கள் எங்கெ?

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இமா... முதல் ஆளாக வந்துட்டீங்க இம்முறை மிஸ் பண்னாம ;) மிக்க நன்றி.

நசீம்... மிக்க நன்றி. திருஷ்டி எனக்கா???!!! ;)

கௌதமி... மிக்க நன்றி. ட்ரை பண்ணிபாருங்க. :)

பிரியா... மிக்க நன்றி. ஆண்கள் செய்ய நேரம் இன்னும் கிடைக்கல. அதை வேறு விதமா முயற்சி செய்துட்டு இருந்தேன்... அதனால் நேரம் போதாம இருக்கு. விரைவில் வருவார்கள். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருஷ்டி உங்களுக்கே ,எல்லா பக்கமும் அசத்துறீங்கள்ள அதான் சொன்னேன். கண்ணு பட்ரும். சீக்கிரம் சுத்தி போட்ருங்க.சரியா?

நீங்க சொன்னா வேறு பேச்சு உண்டா?? நாளைக்கு சுற்றி போட்டுடுறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
முட்டை பெண்கள் ரொம்ப,ரொம்ப அழகு.வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன்.முக்காடு அணிந்த வட நாட்டு பெண்,மாடர்ன் பெண்.இவ்வளவு அழகா உங்களால்தான் செய்ய முடியும்.நல்லா யோசிச்சு,அழகா செய்து இருக்கீங்க.சூப்பர்,வனிதா.பாராட்டுக்கள்.

ஐய்ய்ய்.... செம க்யூட்டா இருக்காங்க! :)

உங்க கற்பனைத்திறனை என்னவென்று சொல்ல வனி?!! ரொம்ப அழகா இருக்கு! (ஈவினிங் என் பொண்ணுகிட்ட காட்டனும், ரொம்ப ரசிப்பா! :))
பாராட்டுக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா மேடம்,
அழகிய பெண்கள்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி என்னனு சொல்ல.....நீங்கள் வரைந்திருக்கும் பொம்மைகள் அவ்வளவு அழகு. அதன் கண்கள் பேசுகின்றது. அதுவும் இந்த ஸ்டைல் மாடப்புறா தெனாவெட்டா போஸ் கொடுக்குது. ரசனை உள்ள கலைஞன் நீங்கள். வாழ்த்துக்கள் மற்றும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முட்டை அவ்வளவு அழகு.. ரொம்ப நேர்த்தியா இருக்கு ;)
முதல் பெண் ட்ரெடிஷனலாவும், அடுத்தது மாடர்னாவும் இருக்கு.. வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக மிக அழகு.

வாவ், முதல் பெண் உருவம், ரொம்ப தத்ருவமா இருக்கு, எனக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு :-) பாத்துகிட்டே இருக்க சொல்லும் அழகு.கண், மூக்கு, லிப்ஸ் சோ கியூட் வனி.

கலர் காம்பினேஷன் பத்தி சொல்ல வார்த்தை தேடிட்டு இருக்கேன்.....
முட்டைக்கு உயிர் தந்த மாதிரி இருக்கு வனி, அருமை அருமை அருமையிலும் அருமை........

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆஹா என்னை அழகு வனிக்கா. கலக்கிட்டீங்க. வரே வா. முகப்பில் பார்த்ததும் நீங்களா தான் இருப்பீங்கனு தான் உள்ளேயே வந்தேன் அதுப்போலவே நீங்க தான். எப்படிக்கா 2 குட்டீஸயும் வச்சுகிட்டு இப்படி அடுத்தடுத்து செம குறிப்புகள் சூப்பர் அசத்தல் கைவினைகள் தர்றீங்க. என்னுடைய மனம்நிறைந்த பாராட்டுக்கள் வனிக்கா.

வனி சூப்பர் மச்சி;)
இரண்டுமே கலக்கல்தான் ஆனால் எனக்கு மாடர்ன் பெயிண்டிங்தான் ரொம்ப ரொம்ப பிடிச்சுது.

இனி எப்போ பாரதியார், தர்பார் அமைச்சர் பெயிண்டிங் எல்லாம் கண்ணுல காட்டப்போறீங்க.......ஜஸ்ட் கெஸ்தான்;-)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்கள் வனிக்கா...எல்லாமே சூப்பரா இருக்கு...

முதல் பெண் perfecta இருக்கு.. இரண்டாவது பெண் அழழழழகு (Eyes, Lips).... :-)

KEEP SMILING ALWAYS :-)

இரண்டு பெண் உருவமும் அழகா இருக்கு. முதல் பெண் உருவம் ரொம்ப அழகா க்யூட்டா இருக்கு வனி. வாழ்த்துக்கள்

ஹர்ஷா... மிக்க நன்றி. நீங்கலாம் அழகா இருக்குன்னு சொன்னா சரி தான்.. :) எங்க அம்மா இரண்டாவது பெயிண்டிங் பார்த்துட்டு என்னடி பேய் குட்டி வரைஞ்சிருக்கன்னு கேட்டாங்க ;) ஹிஹிஹீ.

சுஸ்ரீ... மிக்க நன்றி. உங்க வீட்டு குட்டி பார்த்தாங்களா? என்ன சொன்னாங்க?

கவிதா.. மிக்க நன்றி :)

லாவண்யா... //இந்த ஸ்டைல் மாடப்புறா தெனாவெட்டா போஸ் கொடுக்குது// - உங்க ஸ்டைலில் இருக்கு பதிவு... படிச்சு சிரிச்சுட்டே இருந்தேன். மிக்க நன்றி லாவண்யா.

ரம்யா... பாருங்க முதல்ல பண்ண பெயிண்டிங் கடைசியா வருது ;) முட்டைக்கு காரணமே நீங்க தானே... மிக்க நன்றி.

செபா... ஆண்ட்டி நலமா இருக்கீங்களா? எங்கே வெகு நாட்களா காணோம்?? உடம்பை பார்த்துக்கங்க. மிக்க நன்றி. :)

சுகி... உங்களை விடவா அழகு ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி... ரசிச்சு ரசிச்சு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க, படிக்கும் போதே தெரியுது. ரொம்ப நன்றி சுகி.

யாழினி... மிக்க நன்றி. இப்போலாம் நேரம் கிடைப்பதில்லை... இதெல்லாமே முன்பே செய்து வைத்து அனுப்பாமல் இருந்தது. :)

ஜெய்... மிக்க நன்றி... இங்க எல்லாரும் மாடர்ன் குட்டி அழகுன்னு சொல்றீங்க.. எங்க அம்மா அதை தான் பேய் குட்டின்னு சொன்னாங்க ;) உங்க ஐடியாஸ் நல்லா இருக்கே... நேரம் கிடைச்சா பாரதியாரை ஒரு கை பார்த்துடலாம்.

சுமதி... ரொம்ப நன்றி :)

நாகா... மிக்க நன்றி. பிடிச்சா சரி. :)

வினோ... மிக்க நன்றி. அவங்க நம்ம நாட்டு கல்சரோட இருக்காங்க... அதான் பார்க்க நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான பெண்கள் அருமையான கைவண்ணம் வாழ்த்துக்கள் வனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமா வனி, என் பொண்ணுகிட்ட காட்டினேன். பார்த்து ரசிச்சா, வெரி நைஸ்! :) -‍‍ன்னா. அப்புறம் இது செய்தது யாரு?!, உங்க பேர் சொன்னதும், ம்ம்.ம்.... எனக்கு தெரியும், அந்த மெஹந்தி ஆன்டிதானே?! :) -ன்னா! அப்படியே படத்தில் தெரியும், உங்க மருதாணி விரல்களையும் பார்த்திட்டு, கொடுத்த கமெண்ட்... ப்ரிட்டி!! :)

அன்புடன்
சுஸ்ரீ

OMG....what creativity!!! awesome work....keep it up.:))

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

இரண்டு பெண்களுமே அழகோ அழகு வாழ்த்துகள் இந்த மெட்டிரீயல்ஸ் எங்க கிடைக்கும்னு சொல்றீங்களா பா போரூர் இலாஹி சூப்பர் மார்கெட்டில் கிடைக்குமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சுவர்ணா... மிக்க நன்றி :)

சுஸ்ரீ... மகளுடைய ஒவ்வொரு கமெண்ட்டும் கொடுத்து என்னை அப்படியே திக்கு முக்காட வெச்சுட்டீங்க. சோ ச்வீட் குட்டி... :) ரொம்ப ரொம்ப நன்றி சுஸ்ரீ.

மலர்... ரொம்ப ரொம்ப நன்றிங்க. நாம் இப்போ தான் முதன் முறையாக பேசுகிறோமோ? உங்க பெயர் அழகாக இருக்கு. :)

ரேணு... மிக்க நன்றி. நான் பயபடுத்தியிருக்க மெடீரியல்ஸ் எல்லாம் சாதாரண ஸ்டேஷனரி ஷாப்லையே கிடைக்கும் :) இல்லன்னா சூப்பர் மார்க்கெட்ஸ்’ல பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u mam.ya u r right...first time we r talking.i don't know how to type in tamil.if any link is there..pls suggest me mam.

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

இந்த பக்கத்தின் கீழே தமிழ் எழுத்துதவி ல போங்க .. வாசிசு பாருங்க புரியும்

ரொம்ப..ரொம்ப... நன்றி simrah mam...

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

அழகு தமிழில் பதிவிட்டமைக்கு நன்றி மலர்...

உதவியமைக்கு மிக்க நன்றி ஸிம்ரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

its very nice,recently i joined & saw our website it is vvusefull.
espically egg-shell painting was excellent...

msabar

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா