Hai sisters en babyku 2months aguthu aval suck panna arambithavudan en nipple il severe pain and burning aguthu. ointment pottum 2monthsa painala remba kastama iruku. ana baby growth nalla iruku. Pls help me ethavathu home remedies iruntha sollunga. Pain irupathal nt alugaiae varuthu. Pls help me dear sisters.
வெடிச்ச எண்ணெய்
தேங்காய் எண்ணெய்ல தேங்காய் பால் எடுத்து ஊற்றுங்க. அது பட படனு வெடிக்கும்.அந்த எண்ணெய 2, 3 சொட்டு வைங்க. பால் கொடுக்கும்போது வாஷ்பண்ணிட்டு கொடுங்க. ஒரே நாள்ல சரியாகிடும்.
KEEP SMILING ALWAYS :-)
டியர் கோகிலா
ஹாய் கோகிலா,
எனக்கு இப்பொழுது 2 மாத குழந்தை உள்ளது,எனக்கும்,குழந்தை பிறந்த 1 வாரத்தில்,நிப்பில் புண்ணாகி,ரத்தம் வந்து காயம் ஏற்பட்டது என்ன வீட்டு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை,டாக்டரிடம் போனேன்,டாக்டர் 1 கிரீம் எழுதி குடுத்தார்,அந்த கிரீமை, பஞ்சில் தொட்டு நிப்பிலில் வைத்து உள்ளாடைக்குள் பிட்டாக(fit) வைத்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக குழந்தை தூங்கும்போது வைத்து கொண்டால் நல்லது,அப்பொழுது தான் நிறைய நேரம் வைத்து கொள்ள முடியும்,குழந்தைக்கு பால் குடுப்பதற்கு முன்பு நன்றாக கழுவி விட்டு கொடுக்க வேண்டும்,எனக்கு 2 நாட்களில் சரியாகிவிட்டது.நீங்கள் டாக்டரிடம் போவது நல்லது,ஏனெனில்,காயத்தில் கிருமிகள் அதிகமாக இருப்பதால் குழந்தைக்கு தொற்று ஏற்படும்.டாக்டரிடம் போங்கள்,வீட்டு வைத்தியம் வேண்டாம்
Hai naga Thank you very
Hai naga
Thank you very much inaku night try pannraen
ALL IS WELL
GOKILA PREM
Dear manju doctor kitta poi
Dear manju
doctor kitta poi ointment vangi try pannitaen but pain ennum iruku, doctor enaku sore nipple onnum panna mudiyathu ointment mattum podunga nu sollitanga. ungaluku doctor kudutha cream name enna? sonna try panni pakuraen and thank you for comment.
ALL IS WELL
GOKILA PREM
கோகிலா
தேங்காய் எண்ணையை விட சிறந்த மருந்து எதுவுமே கிடையாது தான். அதனால் நீங்கள் (சுத்தமான) தேங்காய் எண்ணெய் தீய்த்து விடுங்கள். குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் துடைத்து விட்டு கொடுங்கள். அல்லது கடைகளில் நிப்பிள் கிரீம் விற்கிறது...அதை பால் கொடுத்து முடித்த பின்னர் போட வேண்டும். பால் கொடுக்கும் போது சுடு நீரால் நன்கு கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும். அல்லது சிறிதளவு தாய்பால் தேய்த்து விட்டு காற்றாரவிடுங்கள். முடிந்தால் சூரிய ஒளி படுமாறு உட்க்காரவும்.
இவையெல்லாம் செய்யும் முன்னர் முதலில் உங்களின் மார்பகத்தை தொட்டு பாருங்கள். எங்கேனும் கல் போன்று இருக்கிறதா இல்லை நிப்பிளை தவிர வேறு எங்காவது வலி இருக்கிறதா, எங்கையாவது அழுத்தினால் வலி இருக்கிறதா என்றும் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Hai lavanya sister
தேய்காய் எண்ணெய் போடுவது கொஞ்சம் better அ இருக்கு
pain குறைஞ்சு இருக்கு. Thank u Lavanya.
வேற எந்த problem ம் இல்ல doctor கிட்ட செக் பண்ணிடேன்
ALL IS WELL
GOKILA PREM
ஹாய் மஞ்சு dr
ஹாய் மஞ்சு
dr குடுத்த ointment என்னனு சொல்ல முடியுமா ப்ளீஸ்