குழந்தை பற்றிய சந்தேகத்திற்கு பதிலளியுங்கள்

ஹாய் தோழிகளே எனக்கு 2 மாத குழந்தை உள்ளது.
எனக்கு பல சந்தேகங்கள் உள்ளது.எல்லாவற்றிர்கும் பதிலளியுங்கள்.

கேள்வி 1:
எனது குழந்தை தினமும் இரவு 12 மணிக்கு தான் தூங்க தொடங்குவாள் காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவாள் இடையில் 3 மணிக்கு எழுந்து 1 முறை பால் குடிப்பாள்.குழந்தை எந்த மாதம் முதல் இரவு நேரத்தோடு தூங்குவார்கள்?

கேள்வி 2:
அவள் பகலில் எல்லாம் தூக்கம் வந்தால் சிறிது கண்ணை மூடிக்கொண்டே அழுவாள்,கைய்யிலோ, அல்லது தொட்டிலில் போட்டு ஆட்டினால் உடனே தூங்கிவிடுவாள்,ஆனால் மாலையிலிருந்து தூங்குவதற்கு பிரச்சனை பண்ணுகிறாள்,மாலையில் தூக்கம் வந்தால் அழுது கொண்டே இருக்கிறாள்,கையில் வைத்து இருந்தாலும்,மடியில் போட்டு ஆட்டினாலும்,அழுவாள், தொட்டிலில் போட்டால் கேட்கவே வேண்டாம் பயங்கரமாக கத்துவாள்,அரைமணி நேரமாவது பயங்கரமாக கத்திவிட்டு,பின்னர் சோர்ந்து போய் தூங்குவாள்.
அந்த நேரத்தில் பால் குடித்தாலும் குடிக்க மாட்டாள்.1 மணி நேரம் அல்லது அரை மணி நேரம் தூங்குவாள்,பின்னர் முழித்து கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கிறாள் அதிக பட்சம் 1 மணி நேரம், மீண்டும் தூக்கத்துக்காக அழ தொடங்கிவிடுவாள்,தினமும் இப்படி இரவு 12 மணி வரை செய்கிறாள்,இதற்கு என்ன செய்வது.

கேள்வி 3:
எனது குழந்தைக்கு 60 நாட்கள் ஆக போகிறது,3 வது மாதத்தில் என்ன என்ன நிகழும் குழந்தைகளுக்கு?அதாவது எப்பொழுது தலை நிற்கும்?எப்பொழுது குப்புற விழுவார்கள்?

சில குழந்தைகள் பகலில் தூங்கும், சில் இரவில் தூங்கும். உங்கள் பிள்ளை பகலில் நன்றாக தூங்குகிறது.. அதனால் தான் இரவில் அழுகை அடம் எல்லாம். ஒரு வயதை நெருங்கும் போது எல்லாம் சரியாகிவிடும். இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். பகலில் விளையாட்டு அதிகமாயிடும் இல்லையா.

3வது மாதம் கழுத்து நிக்கும், முகம் பார்த்து சிரிக்கும். கவுத்துக்க 4 மாதம் ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்