ஹாய் தோழிஸ்.... ஒர் ஹெல்ப் வேண்டும்...
என் சிஸ்டர் 2வருஷம் முன்னாடி washing கு ரின் சோப் use பன்னா அபத்லேர்ந்து அவளுக்கு உள்ளங்கை அரிப்பு, வெடித்து ரத்தம் வருதுபா நாங்க 2,3 ஸ்கின் டாக்டர் கிட்ட போயும் சரியாகல ஆ டாக்டர் ஸ்கின் அலர்ஜி சொன்னாங்கபா உங்களுக்கு இதப்பற்றி தெரிஞ்சா சொல்லுங்கபா பிளீஸ்
-ரஸினா
answer me pls answer me
answer me pls answer me
razeena
தோழி உங்கள் சகோதரியை ஸ்கின் டாக்டரை பார்க்கசொல்லுங்கள்.ஏன்னா 2 வருடம் முன் உபயோகித்து அதைத்தொடர்ந்து இன்னும் சரியாகலைன்னா ஒருமுறை டாக்டரை அனுகுவதுதான் சரி.
உள்ளங்கையில் ஈரப்பதம் குறைவதால்கூட இப்படி ஆகலாம்.தேங்காய் எண்ணேய் தினமும் தேய்க்க சொல்லுங்கள். வாசலின்கூட போடலாம். முடிந்தவரை துவைக்க வேப்ப எண்ணை சோப்பை உபயோகித்தால் இப்படி ஆவதில்லை.அதன் வேம்பு ஆயில் படுவதால் சீக்கிரம் குணமாகவும் வாய்ப்புண்டு..... ஆனால் முதலில் மருத்துவரை அனுகச்சொல்லுங்கள்......
ஸ்கின் அலர்ஜி
டாக்டரைப் பாக்குறதை விட முக்கியம் ட்ரீட்மன்ட விடாம தொடருறது. சில விஷயங்கள் சட்டென்று சரியாகிருறது இல்லை. தொடர்ந்து மூன்று மாதம், சிலருக்கு ஆறேழு மாதங்கள் கூட தொடர வேண்டி வரலாம். மனம் தளராம தொடரணும். அவங்க ட்ரீட்மண்ட்ல மாய்ஸ்சரைசரும் இருக்கும். கொடுக்கிற இன்ஸ்ட்ரக்க்ஷன் படி விடாம போடுங்க.
அடுத்து முக்கியம் க்ளவ். சமைக்கிறது, பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, வீடு க்ளீன் பண்றது, தோட்டவேலை என்று எதுவானாலும் க்ளவ் இல்லாம பண்ண வேணாம். ஒரு ப்ராண்ட் க்ளவ் ஒத்துவராதது போல இருந்தால் ப்ராண்ட் மாத்திப் பாருங்க.
டெய்லி சாப்பிடுறது எல்லாம் நோட் பண்ணி வைங்க. பிரச்சினை ஆரம்பிச்சதுக்குக் காரணம் ரின்சோப் ஆனாலும் சிலருக்கு ஆரம்பிச்ச பிறகு சாப்பிடுற சில பொருட்கள் அரிப்பு, நீர்வடியுறது என்று சிரமத்தைக் கூட்டி வைக்கும். கவனிச்சு குறிப்பிட்ட அந்த உணவுகளை கை சரியாகிற வரைக்கும் தவிர்க்கிறது நல்லது.
அடிக்கடி கையைக் கழுவாதீங்க. கைக்கு சோப் போட வேண்டாம். கட்டாயம் போட வேண்டுமானால் ஏதாவது மென்மையான ஹான்ட்வாஷ் நல்லது. இதுகூட சிலருக்கு ஆகாது.
காயத்தைக் க்ளீன் பண்ண டாக்டர் சொல்லாத எதையும் பயன்படுத்தாதீங்க.
- இமா க்றிஸ்
நன்றி ரேணு, இமா
நன்றி ரேணு, இமா நா இப்பத்தான் கருத்துக்களை பார்த்தேன் ரொம்ப நன்றிபா....
-ரஸினா
en kulanthaikum skin alarji
en makalukku kai kal koppalam varuthu doctor athu kosu alarji nu solranga maruwthu poodda nalayirum apuram mindum varuthu ennea seyvathu pls solunga
kowsalya
என் மகளுக்கும் அது போல் வந்தது . எனக்கு மருத்துவர் சொன்ன அறிவுரை , full sleeve dress போட்டு விடுங்க . குறிப்பா மாலை 4 மணிக்கு மேல் காலை குளிப்பதற்கு முன் வரை . அது எனக்கு அவர் சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது . ஆனால் அது தான் உண்மை . இப்பொழுது என் மகளுக்கு அந்த புண் குறைந்து விட்டது . வாரத்திற்கு இரண்டு முறை நகம் கட் செய்து விடுங்கள் . உங்கள் மகளின் வயது என்ன ? வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்
அரிப்பு போக
கடந்த 3 வருடமா என் அன்னீக்கு உடல் முழுதும் அரிப்பு ஏர்பட்டுள்ளது.டாக்டர் கிட்ட போஇ பார்த்தங்க. ப்ளட் டெஸ்ட் பார்ததுல ஏதோ அலர்ஜி ஆகி இருக்குனு சொல்ராங்க. எந்த மாத்திரை எடுத்துக் கொன்டாலும் அரிப்பு ஏர்பட்டுவிடுகிரது.தல வலிக்கு கூட மாத்திரை எடுத்து கொல்லவில்லை.இதனால் அவர்கலுக்கு இரன்டாவது குழந்தைக்கு கூட டிரீட்மன்ட் எடுத்து கொள்ள முடியவில்லை.யாரவது இந்த அரிப்பு போக என்ன செய்ய வேன்டும் என்று தெரிந்தால் கூரவும்.
அலர்ஜி
//அரிப்பு போக என்ன செய்ய வேன்டும்// எனக்குத் தெரிந்து எது ஒவ்வாமையைத் தோறுவிக்கிறதோ அதைப் பயன்படுத்தாமல் விடுவதுதான் நல்லது நித்யா. இப்படியான பிரச்சினை உள்ள ஒருவர் நிச்சயம் இணையத்தளங்களிலோ விடயம் தெரியாத இன்னொருவரிடமோ அறிவுரை கேட்டு எதையும் செய்யக் கூடாது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். மருத்துவ ஆலோசனையில்லாமல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரே டாக்டர் வைத்துக்கொள்ள முடிந்தால் நல்லது. அரிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விசாரித்து வைத்து எப்பொழுதும் தயாராக இருக்கச் சொல்லுங்கள்.
//இரன்டாவது குழந்தைக்கு கூட டிரீட்மன்ட் எடுத்து கொள்ள முடியவில்லை.// அவரது மனவருத்தம் புரிகிறது. அவசரப்பட வேண்டாம் என்று சொல்லுங்க. சிலகாலம் போக தானாகவே சரியாகிவிடவும் கூடும். அதுவரை கவனமாக இருக்கட்டும்.
- இமா க்றிஸ்