கிராமத்து சொந்த பந்தங்கள் இன்றய சூழ்நிலையில் தேவையா

எங்கள் முன்னோர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.முந்தய காலத்தில் வறுமை காரணமாக கேரளா மாவட்டம் இடுக்கி என்ற இடத்திற்க்கு பிழைப்பிற்காக ஊரில் உள்ள சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து போய்விட்டார்கள்...அங்கு என் பெற்றோர்கள் பிறந்து வளர்ந்து திருமணம் செய்து என்னையும் என் சகோதரியும் அழைத்து கொண்டு மீண்டும் எங்கள் பூர்விக கிராமத்திற்க்கு வந்து விட்டார்கள்...நாங்கள் வந்த புதிதில் எங்களை எங்கள் கிராமத்தினர் ஒரு புதியவர்களாகவே பார்த்தனர்.. எங்களுக்கும் இந்த ஊர் தான் என்பது ஒரு சில வயதான பாட்டி,தாத்தா விற்கு மட்டும் தான் தெரிந்து இருந்த்து...நானும் என் சகோதரியும் பள்ளி,கல்லூரி படிப்பை எங்கள் ஊரில் தான் முடித்தோம்.என் சகோதரிக்கு திருமணம் முடிந்து திருவாரூர் போய் விட்டாள்..எனக்கு வேலை கிடைத்து சென்னை வந்து விட்டேன்... 10 ஆண்டுகள் கழித்து என் பெற்றோர்களையும்,கிராமத்தில் இருந்து அழைத்து வந்து விட்டேன்..இந்த சூழ்நிலையில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது..எங்கள் கிராமத்தில் வைத்து திருமணமும்,சென்னையில் வரவேற்பும் நடத்தினோம்...எங்கள் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒரு திருவிழா போன்று என் கிராமத்து உறவினர்களால் நடந்தேறியது... அதே வேளை சென்னையில் நடந்த வரவேற்ப்பு நிகழ்ச்சி ஒரு ஜீவன் இல்லாத வெறும் சடங்காகவே நடந்தது..நாங்கள் இப்போது சென்னை யில் தான் வசிக்கிறோம்..ஆனால் எப்போதும் பிரிந்து வந்த என் கிராமத்து உறவையை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.. இதை வாசிக்கின்ற அன்பு தமிழ் சொந்தங்களே.....நீங்கள் எங்கு வசிப்பவர்களாக இருந்தாலும் நம் கிராமத்தையும், உறவுகளையும் மறந்து விடாதீர்கள்...ஏன் என்றால் நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது போன்ற நிகழ்ச்சியில் தான் அதன் அன்பை புரிந்து கொள்ள முடியும்...கிராமம், நகரம் என பொருளாதார ஏற்ற இறக்கம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்கிற ஒவ்வொரு பேரும் மனதில் இருக்கின்ற ஏக்கமாக இருக்கும்..அந்த நிலையும் நாம் அடையும் தூரம் வெகு தொலைவில் இல்லை...நம் பிள்ளைகளுக்கு உணவோடு உறவையும் ஊட்டி வளர்ப்போம்....அப்போது தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்..

வணக்கம் டென்னிசன்,
பெயர் சரியா? நீங்கள் சொல்வது மிகமிக சரியானதுப்பா....நாங்களும் வேலை நிமித்தமாக ஊட்டியில்தான் உள்ளோம். இருப்பதென்னவோ நம்நாட்டவ்ர் மட்டுமல்லாது வெளிநட்டவரும் புகழும் ஊட்டி... ஆனால் இங்கு இருப்பவர்களுக்குதான்(அதுவும் பூர்வீகம் வேறாகவும் வேலைக்கு இருப்பவர்களுக்குதான்) இங்கு இருப்பதன் கடினம் தெரியும்.
மழி மழி ஓயாமல் மழி, இந்த சீசனில் 3,4மாதங்கள் தொடர்ந்து கேப்பில்லாமல் (சிறு பூத்தூறாலாகவாவது) மழை இருக்கும்.
மழை அதிகமானால் அவளவுதான் நிலசரிவு,மரம் விழுதல், மணரிப்பு ,பாதைகள் அடைப்புன்னு பல பிரச்சனைகள்....
அடுத்து வர்ரது குளிர்,குளிர்,கடும்குளிர்..... புதியவர்கள் கிளவுஸ் இல்லாமல் தண்ணீல கைவக்க முடியாது(என்ன கொடுமைங்க, தண்ணியக்கூட தொடமுடியாம),துணி காயாது,வெளிய போகமுடியாது,மூடுபனி பக்கத்தில் வந்தாதான் தெரியும், பின் வெயில் அது நல்லாயிருக்கும் ஆனால் எங்கும் போகமுடியாது ஒரே கூட்டம்.அனைவரும் இங்கு வந்து குவிந்திடுவர்.....இதனிடையில் நம் ஊரை நினைத்து பார்த்தால் ஏக்கம் மட்டுமே மிச்சம். வேலைவிட்டு மாலை வந்தால் ஷாப்பிங்,பார்க்,கோவில்னு எங்காவது போலாம்,குழந்தைகளுடன் கிரவுண்டில் விளையாடலாம்.ஆனால் இங்கு மழைக்கும்,குளிருக்க்கும் பயந்து குழந்தைகள் கிடப்பதென்னவோ,டீ,வி பெட்டிமுன் தான்......

கரெக்டா சொன்னிங்க எங்க சொந்த ஊர் தமிழ்நாடு ஆனா வசிக்குறது பெங்களூர்ல அங்க நாம ஒர் தெருவே ஃபிரண்ட்ஸ் எங்களுக்கு.. இங்க பக்கத்து வீட்ல இருக்குறவங்களுக்கு வீடு பால் காய்ச்சுரப்ப பால் கொண்டு கொடுத்தேன் அதோட சரி ஒன்றரை வருஷம் ஆச்சு அவங்க முகத்த பார்த்து. நல்ல வேளை அந்த பக்கத்து வீட்டு காரங்களாவது பால வாங்கிக்கிட்டாங்க. அதுக்கு அடுத்த வீட்டுகாரங்க அத வேண்டாம்னு சொல்டு கதவ சாத்திட்டாங்கன்னா பார்த்துக்கோங்க. காலைல பேப்பர் படிக்க வெளில வந்து என் வீட்டுக்காரங்க உக்காந்துருப்பாங்க. அப்ப மட்டும்தான் கதவு திறப்போம். அப்ப யாராவது பக்கத்து வீட்ல வேலைக்கு எங்கவாது கிளம்புனா சிரிக்க கூட மாட்டாங்க பார்த்து... பாவம் ஏதோ ரெண்டு ஜந்துக்கள் உக்காந்துருக்குற மாதிரி தான் பார்த்துட்டு போவாங்க. ஆனா ஊர்ல காலேஜ் போறப்ப சைக்கிள் ஏறுனா போதும், என்ன காலேஜுக்கு கிளம்பிட்டியா சாப்டாளா உன் மக.. சரி சரி பார்த்து போடி... ஊர்ல நிறையா பேருக்கு வண்டி ஓட்ட தெரியாது... என்னத்த சொல்ல சீக்கிரம் திரும்பி வாங்க அக்கா... இன்னைக்கு நாம் அந்த பொருட்காட்சி போலாம்... ஏய் பராக்கு பார்க்காம போய் ஒழுங்கா வீடு வந்து சேரு... ஏய் சுந்தரி காலேஜ்கு டைம் ஆச்சுடி.... என்ன தான் பண்ற கண்ணாடி முன்னாடி... அத கேளு நல்லா என்ன தான் பண்றான்னே தெரில குளுச்சு 1 மணி நேரம் ஆச்சு... கிளம்புறா கிளம்புறா.. இன்னும் சாப்டல... அங்க எல்லாரும் பக்கத்து வீட்டுக்காரங்களா சொந்தமா தான் பார்ப்பாங்க... அத்தை மாமா சித்தி பாட்டி தாத்தா... இதுலாம் டெய்லி மார்னிங் பேச்சு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... முடில நினைச்சாலே கண்ல தண்ணி... அந்த சொந்தங்கள் உறவுகள்... அக்கம பக்கம் சே இங்கலாம் அப்டி எதிர் பார்க்க முடியாது. அதுனால கண்டிப்பா நமக்கு அடுத்து வரவங்களுக்கு கத்துக்கொடுக்கணும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்