பசலைக்கீரை ஆம்லெட்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தி பசலை - ஒரு பிடி
முட்டை - 2
பச்சை மிளகாய் - 3
நாட்டு வெங்காயம் - 5 அல்லது 6
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
(இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் - ஒரு ஸ்பூன்
நெய், எண்ணெய் கலந்தது - 2 ஸ்பூன்


 

முட்டையுடன் மிளகுத்தூள், உப்பு, (இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் போட்டு நன்றாக கலக்கி அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், பசலைக்கீரை அனைத்தையும் பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக சூடானவுடன் இதை ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்முறுகலானவுடன் எடுத்து சூடாக பரிமாறலாம்.
இது மாலைநேர டிபனாக சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.


கடலூர் அருகேயுள்ள முட்லூர் என்ற ஊரின் ஒரு சிறிய ஹோட்டலில், டீயுடன் சேர்த்து அனைவரும் விரும்பி கேட்கக்கூடிய ஒரு டிபன் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

பசலை கீரைக்கு பதில் வேறு என்ன கீரை போடலாம்... வெஜிடபுள் இன்ஸ்டன்ட் பவுடர் என்பது மேகி வெஜிடபிள் கியூபா??

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அஸ்மா எப்படி இருக்கீங்க? இந்த சத்தான ஆம்லட்டை காலை ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு பிள்ளைகளுக்கு செய்து குடுத்தேன். விரும்பி சாப்பிட்டார்கள் வெஜிடபுள் பவுடர் இல்லை என்பதால் சேர்க்கவில்லை.நன்றி உங்களுக்கு.