பாம்பே அல்வா

தேதி: October 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (18 votes)

 

கார்ன் ஃப்ளார் மாவு - 50 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
நீர் - 125 மில்லி
விரும்பிய ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை


 

சர்க்கரையில் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு வைக்கவும்.
கார்ன் ஃப்ளார் மாவில் சிறிது நீர் விட்டு கட்டி ஆகாமல் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு கார்ன் ஃப்ளார் மாவை ஊற்றி கலந்து விடவும். பின் அடுப்பில் வைத்து சிறுதீயில் கலக்கவும்.
சிறிது கட்டியாக ஆரம்பிக்கும் போது அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
இதில் சர்க்கரை நீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
முழுவதும் கலந்ததும் அடுப்பில் வைத்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கொண்டே கிளறவும்.
இத்துடன் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நெய் வெளியே வரும் வரை கலந்து கொண்டே இருக்கவும். கடைசியாக பொடியாக உடைத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது நேரம் விட்டு பின் துண்டுகளாக வெட்டி எடுக்கவும். சுவையான பாம்பே அல்வா தயார்.

இதே அல்வாவை சுலபமாக செய்ய விரும்பினால் முதலிலேயே மாவுடன் சர்க்கரை நீரை கலந்து அடுப்பில் வைத்து கிளறலாம். ஆனால் அது போல் செய்யும் போது இந்த முறையில் கிடைக்கும் கண்ணாடி போன்ற தன்மை குறைவாக இருக்கும். சுவை மாறுபடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அல்வா சூப்பர் ரொம்ப நாள் செய்யனும்னு ஆசை நாளைக்கு செய்து பார்க்கிறேன். நான் ஸ்டிக்லதான் செய்யனுமாப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

சுலபமா செய்யக்கூடிய முறைல சொல்லிருக்கீங்க. தீபாவளி ஸ்வீட் வீட்லயே செய்யலாம். எளிமையான குறிப்புக்கு நன்றி

KEEP SMILING ALWAYS :-)

வனி சூப்பர்பா பார்க்கும் போதே சாப்பிடணும் தோணுது வாழ்த்துகள் கண்டிப்பா செய்தே தீருவேன் நன்றி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாவ் கலர்புல்லான அல்வா பார்த்தாலே சாப்பிடனும் போலிருக்கு வனி.கொஞ்சம் பார்சல் அனுப்பலாமில்லை.கட்டாயம் தீபாவளிக்கு செய்துபார்த்துவிட்டு சொல்றேன்பா.வாழ்த்துக்கள்

ஹாய் வனிதா சூப்பரா இருக்கு செய்து பார்த்துடுறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வனி அல்வா செம சூப்பர்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்ன வனி அருசுவைக்கே அல்வா கொடுத்திட்டீங்க போலிருக்கு:)
பார்க்கும்போது நாவில் நீர் ஊற வச்சிட்டீங்க.
கார்ன்ஃப்ளாரில் அல்வா செய்வதை எங்கோ யாரோ சொல்ல கேட்டதோடு சரி.
இனிநீங்க செய்து காண்பித்திட்டிங்க இல்லையா?
முடிந்த போது செய்து பார்த்திட வேண்டியதுதான்.
செய்முறையும் சுலபமாகவே இருக்கு.
பாராட்டுக்கள் வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனிதா,
கார்ன் ஃப்ளாரில் அல்வா புதுமையா இருக்கு.கடைசிப் படத்திலுள்ள அல்வா பார்க்கவே சாப்பிட தூண்டுது.சர்க்கரை கரைத்து ஊற்றுவது நல்ல டிப்ஸ்.அசத்தலான அல்வா.வாழ்த்துக்கள்,வனிதா.

வாவ்.. கலர்ஃபுல் அல்வா சூப்பர் ;)
ரொம்ப நாளா செய்யனும்னு நினைத்திட்டே இருந்த ஸ்வீட்..
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.. நல்ல பதமா வந்திருக்கு.
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வீட் சாப்பிடாம இருக்கப் பாக்குறேன், ஆசை காட்டறீங்க வனி. ;)
ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

வனி செய்து பார்க்கிறேன் ரொம்ப ஈசியா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க? பசங்க எப்படி இருக்காங்க? தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ணலாம் என்று நினைச்சிட்டு இருந்தேன். இப்ப எனக்கு 7 மாதம் முடிய போகுது. அதிக வேலை செய்ய முடியல. நீங்க ரொம்ப ஈஸியா ஒரு ஸ்வீட் செய்து காட்டியிருக்கீங்க.ரியலி சூப்பர்.செய்து பார்த்துட வேண்டியது தான்.என் பையனுக்கு ஸ்விட் என்றால் ரொம்ப பிடிக்கும்.தேங்க்ஸ் பா.

Expectation lead to Disappointment

ஆஹா சூப்பர் வனி இந்த அல்வா ஒன்ன வைச்சே தீபாவளிக்கு எல்லாரையும் மயக்கிடலாம்போல இருக்கே ;-) சூப்பர் குறிப்புக்கு தேங்ஸ்மா;-)

Don't Worry Be Happy.

கலர்ஃபுல் பாம்பே அல்வா பாக்கும்போதே சூப்பரா இருக்கு,கண்டிப்பா செய்து பார்க்கிறேன்,நல்ல குறிப்புக்கு நன்றி வனிதா.

Eat healthy

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

தோழிகளே... பார்க்க சுலபமா இருக்கும் இக்குறிப்பு செய்வது அத்தனை சுலபமில்லை... நான் இதை கற்றுகொள்ளும் முன் ஏறக்குறைய 2 முறை செய்து வீனாக்கி இருக்கேன். அதனால் கொஞ்சமா ட்ரையல் பார்த்து நல்லா கத்துகிட்டு செய்யுங்க. அதுக்காக தான் சுலபமான முறையும் கீழே குறிப்பில் கொடுத்திருக்கேன்.

ராணி... மிக்க நன்றி. அடி கனமான பாத்திரத்திலும் செய்யலாம். அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

நாகா... மிக்க நன்றி. செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. :)

ரேணு தேவா... மிக்க நன்றி. மறக்காம எப்படி வந்ததுன்னும் சொல்லுங்க ;)

சுந்தரி... மிக்க நன்றி. பார்சல் அனுப்பிடுறேன், நீங்களும் சுவைத்து பார்த்து கருத்தை சொல்லுங்க. :)

பூங்காற்று... அவசியம் செய்துட்டு சொல்லுங்க :) மிக்க நன்றி.

சுவர்ணா... மிக்க நன்றி. நீங்க சொன்னா சரி தான் :)

அப்சரா... அல்வா நாமலாம் கொடுக்க முடியுமா?? ஏதோ நம்மால் ஆனது, அல்வா படமாவது கொடுக்கலாம்னு தான் ;) கண்டிப்பா ட்ரை பண்ணுங்க, எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. மிக்க நன்றி.

ஹர்ஷா... புதுமை இல்லை, பாம்பே அல்வா எப்பவுமே கார்ன்ஃப்ளார் தான்... கண்டிப்பா ட்ரை பண்ணிட்டுச் ஒல்லுங்க, படமும் அனுப்புங்க :) மிக்க நன்றி.

ரம்யா... ரொம்ப நன்றி... அவசியம் செய்து பார்த்து கருத்தும் சொல்லனும். :)

இமா... ஸ்வீட்லாம் நாம விடக்கூடாது இமா, எனக்காக ஒருவாட்டி செய்து சாப்பிடுங்கோ ;) மிக்க நன்றி.

குமாரி... பார்க்க தான் ஈஸி... அத்தனை சுலபமில்லை :) மிக்க நன்றி.

மீனாள்... மிக்க நன்றி. நாங்க தான் உங்க நலனை விசாரிக்கனும்.. வயிற்றில் குட்டி என்ன சொல்றார்? இப்போ அதிகமா வேலை செய்ய வேண்டாம்.. மூச்சு வாங்கும். நானே உங்களூக்கு ஸ்வீட் பார்சல் அனுப்பிடுறேன்... நல்லா இனிப்போட பண்டிகை கொண்டாடுங்க. மிக்க நன்றி.

ஜெய்... மயக்கிடலாம்... நான் ரெட் கலர் பயன்படுத்தினேன்... நீங்க நல்ல மஞ்சள் நிறம் பயன்படுத்துங்க... அசத்தலா இருக்கும். மிக்க நன்றி. :)

ரசியா... பார்க்க மட்டுமில்லை, சுவையும் சூப்பரா இருக்கும். கட் பண்ணும்போது அப்படியே ஜெல்லி போல இருக்கும். செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சம சூப்பரா இருக்கு பாம்பே அல்வா. கார்ன் ப்ளார்ல செய்யக்கூடிய அல்வா இப்பதான் கேள்விப்படுறேன்.

ஹாய் விவி நலமா?முகப்பில் அல்வாவை பார்த்து அப்படியே மயங்கிட்டேன்.அல்வான்னா எனக்கு உயிர்.கலர் மனசுக்கும்,கண்ணுக்கும் இதமா இருக்கு. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். அருமையான குறிப்பு நன்றி விவி.

idhuvum kadandhu pogum.

முகப்பில் படம் பார்த்ததுமே நீங்களாதான் இருக்குமுன்னு தோணித்து, பார்த்தா நீங்களேதான்! :) பாம்பே அல்வா கலக்கலா இருக்கு! செய்முறையும் தெளிவா, படங்களும் அழகா, பளிச்சுனு இருக்கு! அதிலயும் அந்த கடைசிப்படம், அப்படியே ஒரு அல்வாத்துண்டு எடுத்து சாப்பிட சொல்லுது! :) சூப்பரோ சூப்பர் போங்க! முடியும்போது, க‌ட்டாயம் செய்து பார்க்கிறேன். பாராட்டுக்கள் வனி!!

அன்புடன்
சுஸ்ரீ

வினோ... மிக்க நன்றி. செய்து பாருங்க, அப்பறம் அடிக்கடி செய்வீங்க :)

வனிதா... நாங்க நலம். நீங்க நலமா? ரொம்ப நாளா உங்களையும் உங்க பின்னூட்டமும் காணோமே!!! பிசியாயிட்டீங்களா?? இனி அடிக்கடி பார்க்கலாமா? அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

சுஸ்ரீ... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துதுன்னும் சொல்லுங்க. காத்திருக்கேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிறு வயதில் பாட்டி ஊரில் பட்டாணி கடையில் பார்த்து எப்பொழுதுமே ஜொள்ளு விட்டுக் கொண்டே இருப்பேன். இப்பொழுது உங்க தயவால் செய்யவும் தெரிந்து விட்டது. உங்களுக்கே இரண்டு முறை வீணாகி விட்டதா? கண்டிப்பாக செய்து பார்த்து பின்னூட்டம் தருகிறேன். அருமை. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

vanitha madam
can u please tell the measurement of grams into cups and how much cup of water has to take.please reply for my message.waiting for urreply.Becoz i already tried this recipie.it doesnt came like jelly type.Ithink i did a mistake of measurements
thank u
abinaya

can u tellthe masurements into cups.its easy for me to try this one.i already tried this.butit doesnt came like ajelly type.waitingfor ur reply vanitha

லாவண்யா... மிக்க நன்றி. ஆமாம் லாவண்யா, வீணாச்சு, பதம் சரியா வரணும்னா அளவு சரியா இருக்கனும். செய்து பார்த்து சொல்லுங்க. :)

அபினயா... இதில் அளவு தான் மிக முக்கியம். என்னிடம் இங்கு மெஷரிங்க்கு ஏதும் இல்லாமல் நான் பக்கத்தில் தெரிந்தவரிடம் கொடுத்து சரியாக அளந்து வாங்கினேன். அப்படி அளவு மாறுபட்டால் பதம் வராது. கப்பில் அளப்பது இதுக்கு சரி வராது. கிராம் கணக்கில் அளந்தே வாங்குங்கள். நீர் அளவு கப்பில் இருக்கும், அளந்து கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்... எனக்கும் இரு முறை மிஸ் ஆனது, இப்போது தான் சரியாக வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அல்வா சூப்பரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சமையலில் நான் உங்கள் ரசிகை ஆகிட்டேன் எப்படிப்பா இப்படியெல்லாம் தோனுது இந்த திபாவளிக்கு உங்க அல்வா தான் எங்க வீட்ல வனி எனக்கு பால் பாயாசம் பண்ண தெரியாது அதையும் சொன்னா எனக்கு HELPFULLA இருக்கும்.

அன்புள்ள வனிதா, எப்படி இருக்கீங்க? குட்டீஸ் நலமா? சூப்பர் அல்வா...! தீபாவளி ஸ்பெஷலா? கலர்ஃபுல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் பார்த்து எனக்கு மகிழ்ச்சி தாங்கல... ஆனா என்னையும் மதிச்சு பாயாசம் குறிப்பு கேட்டீங்க பாருங்க... ;( மனசு தாங்கல. எனக்கு நல்லா செய்ய தெரியாது, காரணம் தனியா பாயாசம் செய்தது இல்லை. அம்மா நல்லா செய்வாங்க, படத்தோட குறிப்பை விரைவில் அனுப்பறேன்.

இப்போதைக்கு அறுசுவையில் எனக்கு கிடைச்ச குறிப்பு:

http://www.arusuvai.com/tamil/node/7044

ட்ரை பண்ணுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபாவளி ஸ்பெஷல் எல்லாம் இல்லைங்க... எங்க வீட்டில் நான் நினைச்சா இனிப்பு தான் ;) மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி கண்டிப்பா நான் ட்ரை பன்றேன். எனக்காக lingபோட்டதற்கு ரொம்ப thanks சீக்கீரம் உங்க அம்மாட்ட கேட்டு பால் பாயாசம் குறிப்பும் சொல்லுங்க. குறிப்பை எதிர்பார்க்கும் மாயா

Hi Vanitha madam,

I tried this recipe of yours. But measurements were not correct i feel. It tasted good but did not come like jelly form.
125 ml of water includes the water needed to dissolve sugar and corn flour maav? or only for sugar.?

குறிப்பை முயற்சி செய்தமைக்கு மிக்க நன்றி சுபத்ரா... அந்த அளவு நீர் சர்க்கரைக்கு சேர்க்க மட்டும். மாவிற்கு அல்ல... மாவில் கட்டி இல்லாமல் கரைக்கும் அளவு நீர் விட்டால் போதுமானது. நான் ஜெல்லி போல் வரும் என்று சொன்னதால் நீங்க அப்படியே அது போல் டெக்‌ஷர் சுவையை நினைக்காதீங்க... கடைகளில் பாம்பே அல்வா சாப்பிட்டிருப்பீங்க... கொஞ்சம் மாவா அல்வா பதமும், அதே சமயம் பார்க்க ஜெல்லி போலவும் இருக்கும். நான் சொல்லும் பதம் புரிகிறதா?? நாக்கில் ஒட்டாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hellow mam,
na try pandra mam, enakku piducha sweet ithu,na first one time try pannirukka but shariyana tips teriyatha nala correcta varula mam,na itha ippatha partha so nalaiku try pandra.thankyou mam

மிக்க நன்றி. செய்தீங்களா? எப்படி வந்தது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பாம்பே அல்வா செய்து பார்த்தேன் சுமாரா வந்தது.நல்ல குறிப்பு.எங்க வீட்டில் இது அல்வா சிசன்.ரொம்ப நாள் ஆட்சு பதிவுபோட இப்ப தன் நேரம் கிடைத்தது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுமாரா வந்துடுச்சா முதல் முறையே ;) பரவாயில்லையே. எனக்கு இது ஏகப்பட்ட அட்டம்ப்ட். மிக்க நன்றி முசி செய்து பார்த்து பதிவிட்டமைக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
உங்க அல்வாவை செய்தேன்.. ரொம்ப நல்லா வந்தது.. படம் முகநூலில் ....யம் :) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hello mam. How are you? I tried this recipe. taste is good. It looks shining too. The problem is it s very hard like sticking with vessel we can't cut it. may I know mistakes what I did? is there any alteration I can do mam?
Thank you