உங்களின் முதல் சமையல் அனுபவங்கள்

இல்லத்தரசிகள் எல்லாருமே இப்பொ சமையல்ல கலக்கிட்டு இருந்தாலும் கல்யாணதுகு முன்னாடியோ இல்ல பிறஹோ நடந்த நம்முடய முதல் சமையல் அனுபவம் எப்பவுமே மறக்காது.. அதில் பாராட்டை பெற்றவங்களும் இருப்பாங்க சொதப்பி திட்டு வாங்னவங்களும் இருப்பாங்க அவங்க எல்லாருமே இங்க வந்து ஒண்ணு விடாம எல்லா கதைய்யயும் சொல்லுங்க நாங்களும் ரசிசு சிரிகிரோம்... இதில் ஆண்களும் பங்கேற்கலாம்க சீகிரம் வாங்க படிக்க ஆவலா இருக்கோம் ம்ம்ம்ம்

என் முதல் சமையல் அனுபவம்.......

நான் தான் முதல்ல , எனக்கு திருமணம் வரை அம்மாவீட்டில் சமைத்தது இல்லை....அவர்கள் எங்காவது ஊருக்கு போனால்மட்டுமே (சில நாட்கள்தான்) செய்துள்ளேன்.......

ஆனால் திருமணம் முடித்து முதல் விஷேசம் "கார்த்திகை தீபம்"(3day's) அன்று என் மாமி என்னை சமைக்க சொன்னார்......காலையில் அம்மாவிற்கு போன் பண்ணி பாசிப்பருப்பு,ரசம்,பொறியல், எப்படி செய்வதுன்னு 15,20நிமிஷம் கிளாஸ் அட்டன் பண்ணி ஒருவழியா அன்னைக்கு சமைத்தேன்.......

அடுத்து தி.முடிந்து ஒருவாரத்தில் இங்கு வந்துட்டோம்........பிறகென்ன தினமும் மூணு வேலையும் என் அம்மாவிற்கு போன் பண்ணிதான் சமைத்தேன்....ஸ்வீட் பழகினேன், ஆனால் ஒன்னுப்பா தினமும் போனில் பேசி சமைத்துப்பழகியது நானாத்தான் இருப்பேன்..... தினமும் பலகாரம் வேறு செய்துகொடுப்பேன்ப்பா என்னவருக்கு.....(சிரிக்காதீங்க,நிஜம்தான்,,,)இப்ப நானே கத்துட்டேன்.....

அம்மாவிற்கு சின்னசின்ன சஜசன் கூட சொல்கிறேன் சமையலில்.....நம் அறுசுவை தோழிகளின் ரெஸிபிஸை பிரின்டவுட் எடுத்து கொடுத்து செய்ய சொல்கிறேன் தெரியுமா....?அம்மா சொல்லிகொடுத்தது பாதின்னா,கடந்த ஒருவருடமா சமையலில் புதுமையை கற்றுக்கொடுத்திருப்பது நம் "அறூசுவை தோழிகள்ப்பா"......:))மிக்க நன்றி........இந்த சுவையான தளத்தை துவங்கிய பாபு அண்ணாவிற்கு......:))

முதலா வந்ததுக்கு நன்றி.என் பெயர் சிம்ரா. எனக்கும் சமையல் அவ்வளவா தெரியாது.ஆன இந்த அருசுவைல நம்ம தோழிகழோட குறிப்ப பாத்துத நானும் நல்ல சமையல் பண்ண கத்துகிட்டேன்.இப்பொ எங்க வீட்ல நான் தா எல்லா சமையலும் பண்றது.எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆஹுது. அதுக்குள்ளே எல்லாம் படிசுடியானு என்ன எல்லாரும் பாராட்டுறாங்க.அதுக்கு காரனம் இந்த அருசுவை தாங்க.

நான் 10-வது படிக்கும் போதே என் அம்மா இறந்துவிட்டார்கள்.எனக்கு ஒரு அக்கா, அவளும் அம்மா இறந்து 10 மாதத்தில் கல்யாணம் செய்து கொண்டு சென்று விட்டாள்.பின்னர் நானும் என் அப்பாவும் தான்.முதல் முறையாக காபிக்கு டிகாஷன் போட போனேன்.ஒரு துணி போட்டு அதில் காபி பொடி போட்டு சுடு தண்ணீர் ஊற்ற வேண்டும்.எனக்கு அப்போ தெரியாது.நான் என்ன செய்தேன் தெரியுமா காபி பொடி போட்டு சுடு தண்ணீர் ஊற்றி விட்டேன்.என் அப்பா காபி கேட்ட போது நான் போய் பார்த்தால் காபி தூள் தண்ணீரில் மிதக்கிறது.வேறு என்ன செய்ய என்ன தவறு என்று கண்டுப்பிடித்து சரியாக டிகாஷன் போட்டு காபி போட்டு கொடுத்தேன்.

அப்புறம் சாம்பார் வைக்கிறேன் என்று நல்லா களி பாதிரி கெட்டியாக சாம்பார் என்ற பேரில் ஒன்று வைத்து கொடுத்தேன்.என் அப்பாவும் உப்பு தான் டா பத்தல அதை சரி பண்ணிகோ மேலும் கொஞ்சம் தண்ணியா வை பா என்று சாப்பிட்டு முடித்த பின் சொன்னாங்க.அப்புறம் கொஞ்சம் மொஞ்சமா சரி பண்ணி நானே சமையல் கத்துகிட்டேன்.அதுக்கு அப்புறம் என் அப்பா சொல்ல்லுவாங்க உன் அம்மா சமையல் கை பக்குவம் உனக்கும் உண்டு என்று.என் சமையல் ஒரளவு நல்லா வருது என்றால் அதுக்கு என் அப்பாவின் ஒவ்வொரு பாராட்டுதலே காரணம்.

Expectation lead to Disappointment

மீனாள் எனக்கும் எங்க அம்மா 12 படிக்கும்போது இறந்துட்டாங்க அதனால அப்பா வேலைக்கு ஆள் வச்சிட்டாங்க நான் ஒரு பொண்ணு செல்லம் அதனாலதான் ஆனால் அவங்க லீவு போட்டா சமையல் நான் தான் செய்யனும் முதல் முறை உருளைகிழங்கு,கத்தரிக்காய் போட்டு காரக்குழம்பு செய்தேன் ஆனால் குழம்பு ஃப்ரை மாதிரி வந்துச்சு ஆனால் அப்பா ரொம்ப டேஸ்டா இருக்குன்னு சொன்னாங்க நான் சாப்பிடும் போது ஒரே புளிப்பு பாவம் அப்பா..........

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்க இருவர் முதல் சமியல் அனுபவம் மனசுக்கு வருத்தமா இருக்கு...

பெண்ணுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் தாயே இல்லாமல் நீங்களா சமையல் கத்துகிட்டு சமைச்சு... கஷ்டம்... தாயில்லாமல் தவிப்பது பெரிய கொடுமை. கேட்கவே கஷ்டமா இருக்கு. இறைவன் யாருக்கும் இது போல் கஷ்டத்தை கொடுக்க கூடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மைதான் அம்மா இல்லாம இருக்கறது கொடுமைதான் அதுவும் சின்ன குழந்தைல இறந்திருந்தா கூட தெரிஞ்சிருக்காது ஆனால் எங்க அம்மாவும் நானும் நல்ல ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாலியா இருப்பாங்க எங்க கூட விளையாடுவாங்க முடியல வனி நினைச்சா அழையா வருது அவங்க இறந்த உடனே இந்த வாழ்க்கையே இருண்டு போச்சு

இப்படிக்கு ராணிநிக்சன்

எனது பெயர் லக்ஷ்மி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாக அருசுவை தளத்தில் சைலென்ட் reader திருமணத்திற்கு முன் எனக்கு சமையல் தெரியாது. எனது அத்தை இல்லாத சமயம் chappathi செய்து அது ரொட்டி ஆகி விட்டது பிய்த்து சாப்பிட முடியவில்லை வென்டைக்காய் பச்சடி செய்து காய் எல்லாம் கரைந்து soup aaki vittathu எனது கணவர் உடனே அத்தைக்கு phone செய்து இந்த கொடுமையை தாங்க முடியலை உடனே வாஙகனு சொல்லிட்டர் அருசுவையை பார்த்து தான் சமைக்க ஆரம்பித்தென் எல்லார் கிட்டயும் good certificate கிடைத்து விட்டது/ அருசுவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

நான் ஏழாவது படிக்கும் போது என் அப்பா அம்மா என்னையும் அண்ணாவையும் தனியாகவிட்டுவிட்டு ஒரு deathக்கு ஊருக்கு போய்டாங்க.அப்போ பத்து நாள் நான்தான் சமைத்தேன்.அப்போ எனக்கு சாதம் மட்டும் தான் வைக்க தெரியும்."Daily தயிர் சாதம் சாப்பிட போர் அடிக்குது. இன்னிக்கு lemon rice செய்"இன்னு சொல்லிட்டு 5 lemon வாங்கி கொடுத்துட்டு அண்ணா போய்ட்டாரு. நானும் try பண்ணினேன்.
ஒரு ஆழாக்கு சாதம் பண்ணிட்டு அதை ஒரு பெரிய தட்டுல மொத்தத்தையும் கொட்டி அதுல கடுகு,கடலைபருப்பு தாளிச்சு கொட்டிட்டேன்.கொஞ்சமா உப்பு போட்டு,உடனே அந்த 5 lemon ஐயும் juice எடுத்து அதுல கொட்டிட்டேன்.கொஞ்சமா உப்பு போட்டுட்டேன்.கலரினா yellow கலராவே இல்ல.ஓ ஒருவேளை மஞ்சள் பொடி போடணும்னு தோணிச்சி. உடனே இரண்டு spoon fullலா மஞ்சள் பொடி எடுத்து அதுல அப்படியே போட்டு கலந்துட்டேன்.
Taste பாத்தா ஒரே மஞ்சள் பொடி smell,புளிப்பு,கசப்பு.அண்ணா வேற சாப்பிட வந்துட்டாரு.அண்ணாவை பார்க்க பாவமாக இருந்தது.ஒருவாய் சாப்பிட்டு விட்டு ,"எனக்கு lemon rice செய்ய தெரியாதுனு நீ சொல்லிருக்கலாம்,இப்படி பண்ணிட்டியே?"னு சொல்லிட்டு சாப்பிடாம போய்ட்டாரு.அப்பறம் எனக்கும் அவருக்கும் hotelல இட்லி வாங்கிட்டு வந்தாரு.

ஒரு நாள் என் அம்மா ஒரு விசேஷத்திற்காக கிராமத்துக்கு 2 நாட்கள் சென்று விட்டார்கள். முதல் நாள் எதுவோ சமைத்து வைத்து விட்டார்கள், அடுத்த நாள் அப்பாவிற்கு இட்லி செய்து கொடுத்து ஆபீஸ் அனுப்பியவுடன், லஞ்சுக்கு எனக்கும் தம்பிக்கும் (என்னைவிட 4 வயது சின்னவன்) ஏன் சமைத்து பார்க்க கூடாது என்று தோன்றியது.
ஏதோ கேள்வி அறிவு, மற்றும் அம்மா செய்தபோது பார்த்த அரைகுறை அறிவுடன் கத்திரிக்காய் சாம்பார் செய்யலாம் என்று முடிவு செய்து ஆரம்பிதேன். பருப்பை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து, குக்கரில் பருப்பை வேக வைத்து (சரியாக வேகவில்லை), பின்னர் மசித்து , கத்திரிக்காய் நறுக்கி, எதோ எனக்கு தெரிந்த வரையில் ரெடி பண்ணி, உருளை கிழங்கு வறுத்து (அது சூப்பரா செய்வேன்), என் தம்பிக்கு சாப்பாடு போட்டேன். அவன் சாப்பிட்டு விட்டு ஒன்றுமே சொல்லவில்லை. நானும் சாப்பிட்டுவிட்டு, நன்றாக இருந்ததாக நினைத்து பெருமை பட்டு கொண்டேன். ஏனெனில் உப்பு காரம், புளிப்பு அனைத்தும் சூப்பர். (நானும், தம்பியும் கத்திரிக்காய் சாப்பிட மாட்டோம்).
நைட் அப்பா வந்தவுடன் சாப்பாடு எடுத்து வைத்தேன், அப்பாவும் சாப்பிட்டுவிட்டு கத்திரிக்காய் வேகவில்லை, சாம்பார் ரொம்ப தண்ணியாக இருக்கிறது என்று சொல்லி விட்டார்.
அடுத்த நாள் அம்மா வந்தவுடன் சாம்பாரை காமித்து (ஒரே தற்பெருமை), பீற்றி கொண்டேன். உடனே என் தம்பி "உக்கும், அவள் சாம்பார் வைத்து கிழித்தாள், கடலை பருப்பு போட்டு சாம்பார் வைத்து இருக்கிறாள்", என்று சொன்னானே பார்க்கணும். ரொம்ப கேவலமாக போய் விட்டது. அதை இப்போ நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

இதுவும் கடந்து போகும் !

கல்யாணம் ஆஹி ஒரு வாரம் ஆச்சு................ கிட்சென் ல போய் இன்னைக்கு நான் தா பொடடொ கறி வைப்பேனு அடம் பிடிச்சேன்...................யாரொட ஹெல்ப் உம் இல்லாம தனியா பண்ணேன்................. அது தான் முதலா பண்றேன்....... ஒரு வழியா செய்து முடின்சு எல்லாரும் சாப்ட ஆரம்பிசாசு யாரும் ஒண்ணுமே சொல்லல சாப்டுடு போய்டாங்க....... கடய்சியா தா நா சாப்டேன் தாங்க முடியல காரம்.இது வரைக்கும் என்னொட சமையல யாரும் குறை சொன்னதே இல்ல.இப்பவும் அப்டி இல்லேங நல்ல சமையல் பன்ரென்

மேலும் சில பதிவுகள்