சொல்ல விரும்பினேன் - 6 !!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

இனி இந்த பகுதியை இந்த இழையில் தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க கணவருக்கு கிடைத்த விருது பற்றி மிகுந்த மகிழ்ச்சி. தாமதமா பார்க்கிறேன்... இருந்தாலும் சீக்கிரம் ஒரு ட்ரீட்டோட பார்க்கலாம் தானே? ;) முதல்ல அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாரட்டுக்களையும் சொல்லிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது பலரால்,பல சமயம்,பல சந்தர்பங்களில்,பல வழிகளிலும் சொலப்பட்ட அதே விசயம்தான்....இருந்தாலும் இது குறையவில்லை வேறு ஒன்றுமில்லை ஆங்கிலத்தில் பதிவிடுவதுதான்...புதியவர்களை விட்டுவிடலாம் ஆனால் ஆங்கிலதில் கேட்பவர்கள் பலரது ப்ரொலை பார்தால் அவர்களது உறுபினர் கால்ம் 36 வாரம் முதல் ஒரு வருடம்மாக இருக்கிறது....நாம் எதாவது சொன்னால் உன் வேலையை பார் என்பது போன்ற கடுமையான சொற்கள்..அடுத்து வறைமுறையற்ற நாகரிகம்ற்ற கேள்விக்கள் இது ஒரு பொது மேடை அதில் இலைமறை காய்மறையாக கூட கேட்கலாம் ஆனால் உள்ளதை உள்ளபடி கேட்பது என்னவென்று சொல்வது ....இதை யாரவது சொன்னால் அவர்களை இரண்டு மூன்று பேர் கண்டிகிறார்கள்.....ஆகையால் சொல்ல விரும்பினேன்னில் சுதந்திரமாக சொல்லாம் என்று சொன்னேன்.....

இங்க நியாயமான விஷயங்களை தாராளமா தைரியமா பேசலாம்... இங்க வந்து யாராவது சண்டை போட்டா என்கிட்ட சொல்லுங்க... ;) நான் கவனிக்கறேன். உண்மை தான்... சில விஷயங்களை சிலர் வேண்டும் என்றே கேட்கிறார்கள்... சிலர் வேண்டுமென்றே பதில் சொல்கிறார்கள்.. சிலர் புரியாமல் போய் உதவுவதாக நினைத்து பதில் சொல்லி மாட்டிக்கிறாங்க. இது போல் கேள்விகளை கேட்பவர்கள் இருக்க தான் செய்வாங்க... பதில் சொல்றவங்க, உதவனும் என்ற எண்னத்தை மட்டும் மனதில் வைக்காம கேட்பவர் நோக்கத்தையும் மனதில் யோசிக்கனும்... கேட்பவர் எல்லாம் பெண்ணாக இருப்பார் என்று பொது தளத்தில் உறுதி இல்லை... அதனால் முடிந்தவரை தேவை இல்லாத நாகரீகமான கேள்விகளுக்கு பதில் பதிவிடாமல் போவது நமக்கு மரியாதை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா....

நல்லா மழை கொட்டுது... மழைன்னாலே மனதுக்கு மகிழ்ச்சி தானே!!!

காலை எழுந்ததும் விடிந்ததா விடியலயான்னு குழப்பம் வரும் அளவுக்கு இருட்டு... லேசான வெளிச்சத்தில் தூரல் சத்தம். கதவை திறந்ததும் சிள்லென நம்மை தொடும் காற்று... சிலிர்க்க வைக்கும். மனதில் இருக்கும் வலியை கூட மறக்க வைக்கும் மண் வாசனை... எல்லாமே இதம் தான்.

இப்படி ஒரு காலை பொழுதில் சற்றே தூரல் நின்று வெளிச்சம் எட்டி பார்த்த நேரம் அது. வழக்கமாக சாப்பாட்டுக்காக வரும் தவிட்டு குருவிகள் கூட்டமாக கொய்யா மரத்தில் வந்து அமர்ந்தன. கையில் டீயோடு மழையை ரசித்தபடி வாசலில் இருந்த என்னை சற்றும் சட்டை பண்ணாமல் வாசலில் தேங்கிய மழை நீரில் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தார்கள்... தலையை நீரில் முக்கி முக்கி எழுந்து குளியலிட்டு, உடலை உதரிக்கொண்டு சிலிர்த்தன... காண கண் கோடி வேண்டும்... இயற்கை எத்தனை அழகு!!! குளித்து முடித்தவரெல்லாம் வாசலில் நின்ற ஸ்கூட்டியின் சீட்டில் அமர்ந்து ஒட்டிய சிறகுகளை சரி செய்து கொண்டு கண்ணாடியில் கொத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தான் செய்வதை திருப்பி செய்து யாரோ கேலி செய்வதாக தோன்றியது போலும்.

சற்று நேரத்தில் தங்களை அழகாக்கிக்கொண்டு உணவு தேடும் வேலையில் கிளம்பினார்கள்... ஏதோ அழகான அன்பான உறவினர்கள் வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டது போல் வருத்தம் எனக்கு. இப்போதெல்லாம் சிறு பிள்ளைகள் விருந்தினருக்காக காத்திருப்பது போல் அந்த சின்னஞ்சிறு உறவுகளுக்காக தினமும் அதிகாலையில் வாசலில் காத்திருக்கிறேன் நான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்...வனிதா...இன்னும் தூங்கலியா? மழையை ரசிச்சிக்கிட்டு இருக்கீங்களா? அழகா கவிதையா எழுதி இருக்கீங்களே...நல்லா இருக்கு....

மழை சுகமா இருக்கும் இரவு நேரத்தில்தான்...நன்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினால் எழவே மனம் வராத காலை நேரம்...இன்னும் கொஞ்சம் தூங்கலாமே என்று சோம்பலான விடிகாலைப் பொழுது....நானும் தூங்கப்போகிறேன்....

தூங்க போயாச்சா?? நான் கொஞ்சம் தையல் வேலை இருந்துதுன்னு போனேன்... மழை எப்பவும் அழகு தான்... உண்மை தான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் போல தான் இருக்கும் மழைக்கு... ;) நல்லா தூங்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
அருமை போங்க.ஒவ்வொரு வார்த்தையும் கவிதை சொல்லுது.வார்த்தைகளில் விளையாட உங்ககிட்ட தான் கத்துக்கணும்.அப்படியே காட்சி கண் முன்னால் ஓடுச்சு.இந்த மாதிரி காட்சியை யார் வேணாலும் பார்க்கலாம்.ஆனால் எழுதுவதற்கு வனிதா தான்.
//சொல்ல விரும்பினேன் // இன்னும் சொல்லுங்க...

மேலும் சில பதிவுகள்