அமுளி துமுளி அரட்டை

வாருங்கள் தோழிகளே தோழர்களே வாங்க வந்து சந்தோஷமா பேசுங்க, பழகுங்க, கொண்டாடுங்க, பகிர்ந்துக்கோங்க. பகிர்ந்துக்கிறது மூலம் சந்தோஷத்தை இரட்டிப்பு ஆக்குங்க கவலையை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஒரு பக்கம் தான் நம்ம அமுளி துமுளி அரட்டை. எப்படி இருக்கு நம்ம தலைப்பு. சும்மா அதிருதுல.
ஆனால் தயவு செய்து நமது பகிர்ந்தலை தமிழில் சொன்னால் ரொம்ப நல்லா இருக்கும் அதற்கு உதவியா கீழே எழுத்துதவியும் இருக்கு அங்க போய் அதை பயன்படுத்து அட்டகாசமா தமிழில் உரையாடலாம்.

ஹே யாழினி நான் தான் ஃப்ர்ஸ்ட்... தலைப்பு சூப்பர்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க மீனு முதலாவதாக வந்து அசத்தல பதிவு போட்ட உங்களுக்கு ஒரு மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இந்தாங்க எடுத்துகோங்க சும்மா சூப்பரா ஆரம்பிங்க இந்த இனிய மாலை பொழுத.

எல்லோருக்கும் என் இனிய மாலை வணக்கம்...யார் இருக்கா அரட்டைல?எல்லோரும் ஓடி வாங்க...ஓடி வாங்க..உங்கள் தளபதி அழைக்கிறான்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தளபதி அவர்களுக்கு வணக்கம், டக் டக் யார் அங்கே நம் தளபதியாருக்கு குளிர்ச்சியான ஒரு பலூடாவும் ப்ரூட் சாலட்டும் கொண்டு வாருங்கள். அமருங்க தளபதியாரே.

யாழினி எப்படி இருக்கிங்க?தளபதின்னு சும்மா ரீல் விட்டேன் பா..கோபபடாதிங்க..நான் உங்க தம்பி போல..தப்பு செஇதால் உடனே மன்னிக்க வேண்டும்..சரியா ?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்னது தம்பியா என்ன ஷேக் அண்ணா இது உங்களுக்கே அடுக்குமா? நீங்க என்னோட தம்பியா எனக்கு இருக்கற தம்பியே போதும் இன்னொரு தம்பிலாம் வேண்டாம். நான வரல இந்த விளையாட்டுக்கு

நீங்க அரட்டை ஆரம்பிச்சு நான் வராமா இருப்பேனா இதோ வந்திட்டேன்.....
அப்புரம் ஒரு சின்ன ஆசை நீங்க என்னை அண்ணின்னு கூப்டுங்களே..........

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ஜெஸி அண்ணி, அண்ணி அண்ணி போதுமா இனிமேல் உங்களை இப்படியே கூப்பிடுறேன் ஓகேவா, நீங்க சொல்லி கேட்காமல் இருக்க முடியுமா? அண்ணிணிணிணி

அட முடியல நாத்தனாரே போதும், போதும், போதும்..................... மிக்க நன்றி

இப்படிக்கு ராணிநிக்சன்

ஆஹா நாத்தனாரே இது கூட நல்லா இருக்கே கேட்க. அது சரி எதுக்கு இப்ப நன்றிலாம் சொல்லிட்டு இருக்கீங்க? அண்ணினு வேற உரிமையா கூப்பிட ஆரம்பிச்சுட்டேன் நமக்குள்ள என்ன நன்றிலாம் சொல்லிகிட்டு. நன்றிய வாபஸ் வாங்கிட்டு சீக்கிரம் நாத்தனாருக்கு தீபாவளி சீர் அனுப்பி வைக்க பாருங்க.

மேலும் சில பதிவுகள்