என்ன உணவு கொடுப்பது

ஹாய்
என் குழ்ந்தைக்கு 1 வயது 2 மாதம் ஆகிறது, அவன் இரட்டை குழந்தை ஒரு குழந்தை 8 நாள் தான் உயிருடன் இருந்தது, இவனுக்கும் அடிக்கடி உடம்பு முடியாமல் போகிறது சளி காய்ச்சல் வாந்தி மலேரியா என்று ஏதாவது மாத்தி மாத்தி வந்துகிட்டு தான் இருக்கு அவனுக்கு எதிர்ப்பு சக்தி குறைவா இருக்குனு டாக்டர் சொல்லுகிறார் நான் அவனுக்கு என்ன உணவு கொடுக்கனும் எப்படி பார்த்து கொள்வது சளி இருமல் வராமல் இருக்க என்ன செய்வது எதிர்ப்பு சக்திக்கு என்ன உணவு கொடுப்பது உதவி செய்ய முடியுமா தோழிகளே

கறி சூப் எலும்புசூப் அதிகம் சேர்க்கவும் நெய் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து சாதம் கொடுக்கவும் அடிக்கடி ஏதாவது விரும்பியதை சாப்பிட கொடுக்கவும் எதையும் விரும்பி சாப்பிட வைக்கவும்

//சளி இருமல் வராமல் இருக்க என்ன செய்வது// குழந்தைக்கான உணவுப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரை.. என்னைவிட ஏனைய சகோதரிகளிடமிருந்து உங்களுக்கு சிறந்த உதவி கிடைக்கும்.

மனதில் பட்ட வேறு சில விஷயங்கள் - வெளியே எடுத்துச் செல்லும் போது குழந்தைக்குப் பொருத்தமான ஆடை அணிவதில் கவனம் செலுத்தலாம். உடல்நலமில்லாதோரைப் பார்க்கப் போகும் போது குழந்தையை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். குழந்தையை மற்றவர்கள் தூக்கிக் கொஞ்சுவது விரைவில் குழந்தைக்கு தோய்த்தொற்று ஏற்பட சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும். சிலர் பார்க்க ஆரோக்கியமாக இருப்பார்கள்; ஆனால் அவர்கள் மூலம் கூட நோய்கள் கடத்தப்படக் கூடும்.

குழந்தையைப் பராமரிப்பவர்களே தங்களை அறியாமல் எங்கிருந்தாவது தொற்றிக்கொண்டு வந்து குழந்தைக்குக் கொடுத்துவிடலாம். குழந்தை நன்றாகும்வரை நோய்த்தொற்று இருப்பவர்களை நீங்களும் தவிருங்கள். வெளியே போய் வந்தால் முதலில் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். சின்ன பாட்டில் hand sanitiser ஒன்று எப்பொழுதும் கைப்பையில் இருந்தால் நல்லது. மற்றவர்கள் மனம் நோகாமல் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கலாம். குழந்தை விளையாடும் பொருட்கள் சுத்தமாகத் தெரிந்தாலும் அடிக்கடி கழுவி வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி நீங்கள் சொல்வது போல் செய்து பார்கிறேன் , காய்கறி வேக வைத்த தண்ணி குடுக்கிறேன் , பருப்பு சதம் , கேரட், மில்க் தருகிறேன், சளி அடிக்கடி வருவதால் என்ன பழங்கள் கொடுக்கலாம் தேன் பாலில் கலந்து இரவு மட்டும் தருவேன், சொல்லுங்கள்

நீங்கள் சொல்வது போல் தான் சுத்தமாக வைத்து கொள்கிறேன் இருந்தலும் என்னையும் அறியாமல் தவறு செய்கிறேன். தூக்கி முத்தம் கொடுக்க வேண்டாம் என்று உறவுகளிடம் சொன்னால் கோவம் தான் வருது அவர்களுக்கு

நல்ல தூங்க வைய்யுங்க,,நல்ல சத்தான ஆகாரம் கொடுங்க..அருமையான டிப்ஸை மேலே சொல்லிட்டாங்க அது தான் முக்கியம்.தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால் அதுவே சிறந்த மருந்து.ஹோமியோபதி ட்ரை பண்ணி பாருங்க..சளி இருமலுக்கு என்று அடிக்கடி மருந்து கொடுப்பதை தவிர்க்கலாம்..அதாவது லேசாக ஒழுகுவது இருமுவது என்று இருந்தால் வீட்டு வைத்தியத்தால் சரி பண்ண முயற்சிக்கலாம்..அதிகமாகும் என்று தோன்றினால் மட்டும் மருந்து கொடுக்கலாம்..வளர வளர சரியாகிடும்

தூக்கம்னா என்ன விலைனு கேட்குறான் சரியவே தூக்கம் இல்லை புறண்டு புறண்டு தன் படுகிறான் டீப் ஸ்லீப் இல்ல டாக்டர் கிட்ட கெட்ட ஒன்னும் இல்ல னு சொல்றான்ங்க எதிர்ப்பு சக்திக்கு னன் என்ன மதிரி உணவு தரணும் ஹெல்ப் பன்னுன்ங்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்க விட்டமின் C, E உள்ள உணவு அதிகம் வேண்டும். கறி (கோழி, ஆடு) , மீன் (Omega - 3) , கேரட், பழங்கள், பூண்டு, முழு தானியங்கள், சீஸ் போன்றவை இந்த சத்துக்களை கிடைக்க செய்யும்.

கூடவே நிறைய நீர் கொடுங்க. இது உடலில் இருக்கும் தேவையில்லாத அசுத்தத்தை நீக்கி உடலை சுத்தப்படுத்தும்.

நல்ல தூக்கம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பசியை போக்கி தூங்க வைங்க, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். வெளிச்சம் இல்லாத அறையில் தூங்க வைத்து பாருங்க.

கருந்துளசி சாறை தேன் கலந்து கொடுத்தால் எதிர்ப்பு சக்தி கூடும்... ஆனால் அளவுகள் தெரியாது... பெரியவர்களிடம் கேட்டு பாருங்க.

கொடுக்கும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் சேருங்க.

- எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்... பெரியவர்களிடம் ஒரு முறை ஆலோசனை கேட்டு செய்யுங்க. எல்லாத்தைவிட முக்கியமா இமா சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga papa ku mother feed pannuga. aduvea papaku noi edirpu sakthi kudukum. papaku namalalum sali pidika vaipu iruku. neenga thanniromba neram irukadinga. cold items sapdathinga. inda madiri nerya vishayangal iruku. papaku feed pannum bodu nama sapdra food dan papaku edirpu shakthi kudukum.adea samayam papaku udambuku edana varadukum nama eduthukura food dan karanam. so take care of u first

அனு அம்மு, தாய்ப்பால் கொடுக்கும் தாய் குளித்ததும் சிரிது பாலை வெளீயேற்ற வேண்டும்,அதன் பிறகே குழந்தைக்கு பால் கொடுக்கனும்,அப்பதான் சளி பிடிக்காது...
பாப்பாவுக்கு தரும் நீர் கொதிக்கவைத்து பின் ஆர வைத்த நீராக இருக்கனும், அதனுடன் கொஞசம் பிளாஸ்க் சுடு நீர் கலந்து கை பொருக்கும் சூடாக தண்ணிர் தரனும்...
மாவு பால் கொடுப்பதாக இருந்தாலும் கை பொருக்கும் சூடுடன் தருவதே நல்லது...ரொம்ப சூடகவும் தரகூடாது...வயிற்றுபோக்கு ஆகிடும்...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்