உதவுங்கள் என் தோழிகளே ?

தோழி தளிக்கா ,லாவண்யா
dilshaath - புதன், 19/10/2011 - 04:42

தோழி தளிக்கா ,லாவண்யா ,கோமதி,ராபியத்துல் பசரியா ,சத்யா ......உங்களுடைய பதில்களுக்கு மிக்க நன்றி .....தோழிகளே எனக்கு நீங்கள் கூறுவது புரிகிறது .......நீங்கள் கூறியது போல் பால் கொடுக்கிறீன்,,,ஆனால் அவன் மீண்டும் அழுகிறான் என்ன செய்வது என்று புரியவில்லை ?பால் நன்றாக ஊற என்ன செய்வது?அவன் பிறந்து இன்று வரை 22 நாட்கள் ஆகி விட்டது ...தொப்பில் கொடி இன்னும் விழவில்லை என்ன செய்வது என்று புரியவில்லை ...... நானும் என் கணவரும் soudiel வசிக்கிறோம் ....வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை ....என் கணவர் சமையல் செய்கிறார் ...நான் குழந்தயை கவனிகேறேன் .....எனக்கு அவனுக்கு தாய்பால் நன்றாக கொடுக்க வழி சொல்லுங்கள் .....தொப்பிள் கொடி விழாமல் குளிப்பாட்டலாமா ?இன்னும் ஒருஉ தவியை அனைத்து தோழிகளிடமும் கே ட்கிறேன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய ஒரு இழை ஆரமித்தால் என்னை போன்று இருப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... உதவுங்கள் என் தோழிகளே ?

கண்டிப்பா குளிக்க வைக்கலாம்..அப்ப இத்தன நாளும் குளிக்க வைக்கவே இல்லையா?அட்லீஸ்ட் சுடுநீரில் சுத்தமான துணி நனைத்து துடைக்கவாவது வேணும் .குளிக்க வைத்து தொப்புள் கொடியில் ஒரங்களை மட்டும் ஜாக்கிரதையாக அழுத்தாமல் பருத்தி துணி அல்லது காட்டன் கொண்டு ஈரத்தை எடுத்து விட வேண்டும்..கவலை படாதீங்க சில குழந்தைகளுக்கு 1 மாசம் வரை கூட இருக்குமென்று கேட்டிருக்கிறேன் இருந்தாலும் இதற்கு சரியான பதிலை உங்கள் மருத்துவர் தான் தருவார்..உங்கள் டென்ஷன் புரியுது..இப்படியே ட்ரை பண்ணிட்டே இருங்க சீக்கிரம் பழகிடுவார்

மேலும் சில பதிவுகள்