"குழந்தை பராமரிப்பு - 1 முதல் 4 வரை"

தோழிகளே,

பிறந்த குழந்தைகளை தனியாக வைத்துக்கொண்டு இருக்கும் இளம் அம்மாக்களுக்கும்,இனி தாயாகவிருக்கும் பெண்களுக்கும் இந்த இழை உதவுமென நம்புகிறேன். குழந்தைக்கு என்ன செய்யலாம்? எதை தவிர்க்கலாம்? குழந்தை நலமுடன் இருக்க என்ன தேவை? குழந்தையிடம் நீங்கள் காணும் வித்யாசம் என்ன? அதனால் ஏதாவது பிழையா? ஊட்டசத்து, எப்படி பராமரிப்பது? சளி,காய்ச்சல்,தொற்றுகள் வராமல் தடுக்க எப்படி கையாள வேண்டும்? இதுபோன்ற நம் சந்தேகளை இந்த இழையில் முன் வையுங்கள்.......

நமது தோழி "தளிகாவின் குழந்தை வளர்ப்பு பகுதி"
"""http://www.arusuvai.com/tamil/node/14968"""

இந்த இழையில் உள்ளது,காப்பி பேஸ்ட் பண்ணி படித்து பாருங்கள்...மேலும் தனிக்கேள்விகள் இருந்தால் இங்கு கேளுங்கள்.......பதில் கிடைக்கும் உடனே....

தெரிந்த தோழிகள் கண்டிப்பாக வந்து பதில் கூறி உதவுவார்கள்......கேள்விகள் வரும் முன்னரே கூட தனக்கு தெரிந்த பழக்கங்களை ஆண்,பெண் குழந்தைகளுக்கு என பதிவிட்டு அனுப்புங்கள் தோழிகளே,

சில பதிவுகளுக்காக புதிய இழைகள் ஆரம்பிக்காமல் குழந்தைகள் பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு அனைவரும் இங்கு வந்தே கேளுங்கள் ,கண்டிப்பாக பதில் கிடைக்கும்......

மேலும் கேள்விகளும்,பதிகளும் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்......
உங்களின் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் "தமிழ் எழுத்துதவி" இருக்கு அதை உபயோகித்து தமிழில் எழுதவும்.........

நீங்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள்,ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் குடியுங்கள்,மதர் ஹார்லிக்ஸ் கிடைத்தால் வாங்கி கலந்து பருகலாம்.
மேலும் பீர்க்கங்காய்,புடலங்காய்,சுரைக்காய் கிடைத்தால் செய்து சாப்பிடுங்கள் ,இது தாய்ப்பால் ஊற உதவி செய்யும்.......
மேலும் ஒரு நாளைக்கு ஒரு வெத்தலை போடலாம்(மாலையில்) வெறும் வெற்றிலையாக கூட சாப்பிடலாம்.இது உங்களுக்கும் குழந்தைக்கும் சளியில்லாமலும்,வரட்டு இருமல் இருந்தாலும் சரிசெய்யும்.
குழம்பில் இஞ்சி,பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள் இது உங்கள் இருவரின் ஜீரண சக்தியை பெருக்கும்.

தொப்புள்கொடிக்கு மருத்துவர் கிளிப் போட்டிருப்பாரே,,!! குளிக்க வைக்க உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் சொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் துண்ணை நனைத்து உடல் முழுக்க துடைத்துவிடுங்கள்......தனியக இருப்பவர்களுக்கு இது சரியான முறை.....:))
குழந்தைக்கு கசகசன்னு இருப்பதால் கூட அழுகலாம். பவுடர் போட்டுவிடுங்கள், இன்னும் தெரிந்தால் வருகிறேன் சரியா......:)

டியர் ரேணு
மிக நல்ல தலைப்பை ஆரம்பிச்சிருக்கீங்க,என்னை போன்ற புது அம்மாகளுக்கு உதவும்,எனக்கு 2 மாத குழந்தை உள்ளது,நான் தனியாகதான் என் குழந்தையை கவனித்துகொள்ளுகிறேன்,அனுபவசாலிகளின் அனுபவங்களை எதிர்பார்க்கிறேன்.

என் குழந்தைக்கு 1 மாதம் முன்பு உடம்பில் கைமுட்டி,கால் முட்டி,முகம் போன்ற இடங்களில்,பொரிபொரியாக வேர்குரு போன்று அதிகமாக வந்தது,டாக்டரிடம் காட்டிய போது,அவளுக்கு வறண்ட சருமத்தினால் இப்படி உள்ளது,பேபி கிரீம் தேய்த்தால் சரியாகிவிடும் என்று கூறினார்,கிரீம் தேய்த்ததில் வியர்குரு சரியாகிவிட்டது,ஆனால் அந்த இடங்களில் இன்னும் சொரசொரப்பாக உள்ளது,முகம் மிகவும் சொரசொரப்பாக உள்ளது,தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தேய்த்துதான் குளிப்பாட்டுகிறேன்,சரியாக மாட்டேங்குது,கைவைத்தியம் இருந்தால் யாராவது கூறுங்கள் தோழிகளே

இது எல்லா பிறந்த குழந்தைக்கும் வரும்... அதை பற்றி அதிக கவலை வேண்டாம். குழந்தை வளர வளர தானே சரி ஆகிடும். என் பிள்ளைகளுக்கு நான் ஏதும் தேய்த்ததில்லை, டாக்டர வேண்டாம் என்று சொல்லிட்டார்... தானாகவே சரி ஆயிடுச்சு. தினமும் எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைங்க... போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெனு நல்ல இருக்கு tamil type panrathu than kastama iruku

சுமதி,
பப்பாவுக்கு பல் முளைக்கிறதல்லவா.அதனால் அப்படிதான் இருக்கும்......வயிற்றுப்போக்கு பரவாயில்லையா,இப்படி கண்டதை வாயில் வைப்பதாலும் வ.போக்கு வரும்.....
ஆப்பிளை தோல் சீவிட்டு கொஞ்சம் பெரிய சைஸ்(அவள் கையில் பிடிப்பதுபோல) கொடுங்கள்.....நீங்கள் பக்கத்திலேயே இருங்கள்.அவள் மென்று பார்ப்பால் சுவை தெரிந்ததும் வேறு கடித்துபார்த்ததும் விட்டுடுவாள்.
கவனம் வேண்டும் சுமி,பாப்பா பெரிதாக கடித்துவிட்டால் உடனே எடுத்திடனும்,இல்லைன்னா தொண்டையில் மாட்ட வாய்ப்புண்டு. இதே முறையை காரட்டிலும் உபயொகப்படுத்தலாம்........சரியா?

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது இரவில் தூங்கவே மாட்டான் அவன் தூங்க 1 மணி ஆகிறது 5 மணிக்கே எலும்பிருவான் இடையில் 5, 6 தடவை எலும்பி அலுவான் பால் கொடுத்தால் கொஞ்சம் குடித்து விட்டு தூங்குவான் மறுபடியும் 1/2 மணி நேரத்தில் எலும்பி அலுவான் அவன் பிறந்ததில் இருந்து எனக்கு தூக்கமே இல்லை இதற்க்கு என்ன செய்வது?என்ன செய்தால் நல்லா தூங்குவான்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரொம்பவும் உதவியாக இருக்கிறது இந்த இழை நன்றி முதலில் சொல்லிகொல்லுகிறேன்.
6 மாத குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் என்று யோசனை தாருங்கள். சோறு,கிழங்குs, காரட் முன்றையும் ஒன்றாக கொதிக்க வைத்து mixyil blend பண்ணி கஞ்சியாக கொடுத்து பார்த்தேன். அனால்முதலில் சாப்பிட்டால் போக போக சாப்பிட மாட்டேன்கிறாள்.மீன் மஞ்சள்கரு பொடியான நெத்திலி கருவாடு கொடுத்து பார்த்தேன். சைடு டிஷ் மட்டும் சாப்பிடுகிறாள் அனல் கஞ்சி சாப்பிட மாட்டேன்கிறாள். ருசியாக குழந்தைகளுக்கு என மாதிரி கொடுக்கலாம்.
என்ன மாதிரி வகை வகையாகresepies
6matha குழந்தைக்கு கொடுக்கலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும். plz help thanks a lot

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது இரவில் தூங்கவே மாட்டான் அவன் தூங்க 1 மணி ஆகிறது 5 மணிக்கே எலும்பிருவான் இடையில் 5, 6 தடவை எலும்பி அலுவான் பால் கொடுத்தால் கொஞ்சம் குடித்து விட்டு தூங்குவான் மறுபடியும் 1/2 மணி நேரத்தில் எலும்பி அலுவான் அவன் பிறந்ததில் இருந்து எனக்கு தூக்கமே இல்லை இதற்க்கு என்ன செய்வது?என்ன செய்தால் நல்லா தூங்குவான்
யாராவது வந்து பதில் சொல்லுங்கப்பா

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

குழந்தைக்கு இன்னும் இரவில் தாய் பால் கொடுக்கறீங்களா?? அப்படி கொடுத்தா அதை நிறுத்திட்டு சாதாரண பசும்பால், அல்லது ஃபார்முலா மில்க் ஆரம்பிங்க... இரவில் வயிறு நிறைய உணவு, பால் கொடுத்து தூங்க வைங்க, அப்போ தான் நடுவில் எழுந்து உங்களிடம் பால் கேட்டு அழ மட்டாங்க. தாய் பால் வயிறு நிறையும் முன் குழந்தைகள் தூங்கிடும்... அதான் இரவில் அழ முக்கிய காரணம். கூடவே நாம் உண்ணும் உணவின் தாக்கமும் இருக்கும். தாய் பால் கொடுப்பவர்கள் காபி, டீ அதிகம் குடிக்காம இருந்தாலே குழந்தைகள் தூக்கம் கெடாது. இரவில் தாய் பால் நிறுத்தி வேற கொடுங்க, முழிப்பது குறையும். ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குழந்தைக்கு 1 1/4 வயது ஆகிறது அவனுக்கு வீஸிங் சளி இருமல் வருது. அவனுக்கு என்ன மாதிரி பழங்கள் காய்கள் கொடுக்கலாம், மேலும் இரவு சரியாகவே தூங்குவது இல்லை புறண்டு புறண்டு படுத்து எங்களையும் படுத்துறான் நல்ல தூக்கம் வருவதற்கு ஹெல்ப் பன்னுங்க தோழீஸ்

மேலும் சில பதிவுகள்