"பனிப் போர்வைக்குள் குன்னூர்...உதகை... -- போகலாமா டூர்"

தோழிகளே,

சிம்லா குலு மணாலியில் நமது உல்லாச பயணம் "இனிதே துவங்கி.....நடுக்கத்துடன் வந்து சேர்ந்தோமல்லவா....?"
இன்று முதல் சில்லிடும் பனிக்குவியல் நடுவில் குன்னூர்,உதகையில் நமது உல்லாச பயணத்தை ஆரம்பிக்கலாம்...... சரியா...?வருகிறீர்களா...?

பனிப்பயணம் வருவோர் அனைவரும் ஒரு ஸ்வெட்டரும்,ஸ்கார்ப்பும் கொண்டுவந்திடுங்க.......இல்லைன்னாலும் இங்கே சால் வாங்கித் தருகிறேன்.....போலாமா.........விடு ரெடி,......,ஜூட்............

இது இரண்டுமாதம் முன்பு நான் சென்ற உல்லாச பயணம், இதில் நம் தோழிகளையும் அழைத்து செல்லலாமா என ஒரு ஆசை......

அதனால் இந்த பயணக்கட்டுரையில் என் குடும்பத்தினருடன் நம் அறுசுவை குடும்பத்தினரும் வருகிறார்கள்.......யாரும் கோவப்படக்கூடாது சரியா......?
இது என் ஆசையும்,இப்படி நாம் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற கற்பனையும்தான் சரியா........
தோழிகள் கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறேன்.........:))

யாரெல்லாம் வரீங்க, என்ன ஒரு பஸ் போதாதா....?? சரி வாங்க முதலில் பின் வேணும்ன்னா இன்னுமொரு பஸ் எடுத்துக்கலாம்.......

நான் வந்துட்டேன் ரேணு. எனக்கு தான் முதல் சீட். பஸ் எங்க இருந்து கிளம்புது? நான் மேட்டுபாளையத்துள்ள ஏறிக்கறேன். ஸ்டார்ட் பண்ணலாம்,ஜூட்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகீ.....வந்துட்டையா.........
சுகி வந்துட்டையாம்மா, நீ இல்லாம என்னையாரும் கண்டுக்கலைப்பா, இந்த இளையா கூட இப்பதா சண்டைபோட்டேன்...... சரி உன் புது மண தம்பதிகளுக்கு அரேஞ் பண்ணிய ஹனிமூன் டிரிப் எந்த அளவில் உள்ளது?
சுகி முதலில் வந்ததால் நீ என்னோட கார்ல வரப்போற சரியா? பயணம் நம்ம வீட்டிலிருந்துதான் கண்ணு டிரவிங் நாந்தான் கவலைப்படாத.......

ஹாய் ரேணுகா....எப்படி இருக்க? குட்டி எப்படி இருக்கான்? உள்ள இருக்கிற குட்டி என்ன சொல்லறா? ஊட்டிக்குதானே கூப்பிடற? இதோ நான் ரெடி...ஆனா டிக்கட்தான் இப்போ கிடைக்காது...ஆனாலும் ஊட்டின்னவுடனே நான் அங்க இருந்த பழய நினைவெல்லாம் வருது ரேணுகா....மறக்க முடியாத நாட்கள்...16 நீண்ட வருஷத்துக்கு அப்பறமா இப்போதான் தமிழ்நாடுக்கு வந்திருக்கோம்....விரைவில் ஊட்டிக்கு ஒருமுறை போகணும்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டிருக்கேன்....கண்டிப்பா வரேன்...உன் வீட்டில் தங்கலாமா?!

புது மணதம்பதி பிஸி ஹா இருக்காங்க. பொண்ணுக்கு இன்னும் பாஸ்போர்ட் எடுக்கலையாம, அதனால் இந்தியா குள்ளயே போய்க்கரோம்ன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.இவர்களுக்கு நவம்பர் கல்யாணம், டிசம்பர் அனுப்பலாம்ன்னு இருக்கோம்.

இதை பிளான் பண்றதுக்குள்ள அடுத்த பிரண்ட் க்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. இந்த கல்யாணம் மார்ச் தான், அதனால் இப்பத்திக்கு பயம் இல்லை :-)

உங்க கூட கார் லையா, ஐ...ஐ ஜாலி....
//டிரவிங் நாந்தான் கவலைப்படாத//// -இது தான் கொஞ்சம் (நிறையா) இடிக்குது. பாத்து பதனமா ஓட்டனும்.... என் மடில குட்டி பிரவின்ராஜா இருக்கான் இல்ல!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னையும் கூட்டிட்டு போங்கப்பா நானும் வரவா கூட்டிட்டு போவீங்களா இல்ல விட்டுட்டு போய்டுவீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராதாம்மா இல்லாமலா?
கண்டிப்பா வாங்க ராதாம்மா....ஆனா நீங்கள் வீட்டை மெயின்டன் பண்ணியதுபோல இருக்காது......இது கொஞ்சம் ஓல்டு வீடு(சுமார் 150 வருட ஆங்கிலேயர் கட்டிடம்) குவாட்ரஸ்தான்.....பங்லா டைப். மேலே புறா,எலி,குரங்குன்னு ஒரு குடித்தனம்.கீழே நாங்கள்,இன்னு கீழே ஒரு பேமிலி.
எவ்வளவு சுத்தம் செய்தாலும் மேலிருந்து விழும் குப்பை பாதியும்,என் குட்டி போடும் பாதியும்,உள்ளிருக்கும் குட்டி தொந்தரவால் அடிக்கடி சுத்தம் செய்யமுடியா நிலை.....ஆனால் நீங்கள் வந்தால் கண்டிப்பா நல்லபடி கவனிப்பேன்......இன்முகத்துடன்,மன மகிழ்வுடன்.......:)
நான் இருப்பது அறுவங்காட்டில், நீங்கள் ஊட்டியில் எங்கு இருந்தீர்கள்?

நானும் வருவேன்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கூட்டிட்டு போங்கககககககககக...........

இப்படிக்கு ராணிநிக்சன்

ரெடியா கிளம்பலாமா....
என்ன இன்னும் இளையா,மனோ,தீப்ஸ்,மீனு,ஜெயா,தவம்ஸ்,ஷேக்,ரம்ஸ் வரலையா........இல்லையில சுகி வனி நேத்தே வந்தாச்சு,ஆமா நீ கொஞ்சம் சீக்கிரம் வாப்பா,,,
அவங்கெல்லாம் கோவை ஏர்போட்டிலிருந்து குந்தா வழியா ஊட்டி வந்திடுவாங்க.....நான் நீ, நம்ம மாமா வீடு,வனி நாங சமைத்த சாப்பாட்டுடன் நம்ம வண்டில போகனும்.....இன்னும் 10நிமிடத்துல வந்திடுவியா.....ஓ,எஸ் ராதா,ரேணு,ராணி,ரேவா இவங்க முன்னரே கிளம்பிட்டாங்கப்பா..........

ஹே ஹே ரேணுராஜ் நானும் வந்துடுறேன் பா என் வீட்டுக்காரங்களையும் கூப்டு நிஜமா எல்லாரும் டூர் போனா சூப்பர்... நான் ஊட்டி பார்த்தது இல்ல.... இந்த டைம் தான் பிளான் பண்றோம்.. இதோ வந்துறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்