"பனிப் போர்வைக்குள் குன்னூர்...உதகை... -- போகலாமா டூர்"

தோழிகளே,

சிம்லா குலு மணாலியில் நமது உல்லாச பயணம் "இனிதே துவங்கி.....நடுக்கத்துடன் வந்து சேர்ந்தோமல்லவா....?"
இன்று முதல் சில்லிடும் பனிக்குவியல் நடுவில் குன்னூர்,உதகையில் நமது உல்லாச பயணத்தை ஆரம்பிக்கலாம்...... சரியா...?வருகிறீர்களா...?

பனிப்பயணம் வருவோர் அனைவரும் ஒரு ஸ்வெட்டரும்,ஸ்கார்ப்பும் கொண்டுவந்திடுங்க.......இல்லைன்னாலும் இங்கே சால் வாங்கித் தருகிறேன்.....போலாமா.........விடு ரெடி,......,ஜூட்............

இது இரண்டுமாதம் முன்பு நான் சென்ற உல்லாச பயணம், இதில் நம் தோழிகளையும் அழைத்து செல்லலாமா என ஒரு ஆசை......

அதனால் இந்த பயணக்கட்டுரையில் என் குடும்பத்தினருடன் நம் அறுசுவை குடும்பத்தினரும் வருகிறார்கள்.......யாரும் கோவப்படக்கூடாது சரியா......?
இது என் ஆசையும்,இப்படி நாம் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற கற்பனையும்தான் சரியா........
தோழிகள் கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறேன்.........:))

ஒரு நிமிஷம்பா என் நாத்தனாரை காணோம் பாவம் சின்ன பொண்ணு விட்டுட்டு போனா அழுவா...

இப்படிக்கு ராணிநிக்சன்

யாருப்பா பட்டாசெல்லாம் வெடிப்பது.....???

அட நம்ம பாபு அண்ணாவா......வாங்க வாங்க.......தலையும் வந்தாச்சு......என் மாமா வீடு வண்டியேறி ரொம்ப நேரமாச்சுப்பா.......வனி.....
என்ன ரேணூ...??

வனி, பாபு அண்ணாவும்,சுகியும் வந்தாச்சுப்பா.......நாம கிளம்பலாமா.......?

வனி: ஓ...கிளம்பலாம் ரேணு........

பிரவின்: ஆண்டி எனக்கு பால்வேணும் அம்மா எங்க?

வனி: ரேணு குட்டிக்கு பால்வேணுமாம்.........

ரேணு: குட்டி பிஸ்கட்,பழம்லா இருக்கு பால்வேணாம்ப்பா.......வா போயிட்டே சாப்பிடலாம்......

விடு ஜூட்........சமைத்த சாப்பாடு எல்லாம் டிக்கீல இருக்கு பத்திரமா.....வெஜ்,நான்வெஜ் தனியா...... எல்லாருக்கும் சர்ப்ரைசா இருக்கும் வனி...
ஆமா ரேணு சாப்பாடு கடைலன்னு நினைப்பாங்க........:))

பிரவின்: ஆண்டி,சுகி இதுதா என் ஸ்கூல் இங்கதா பிரேயர்,இங்க சறுக்கி விளையாடுவோம்....

பாபு அண்ணா: இங சாப்பிடுவீங்லாடா கண்ணா?இங்க தூரி விளையாடுவீங்களா?

பிரவின்:ஆமா அங்கிள்.......:))

சுகி: ஹி,,,ஹி....

வனி:சும்மா வாங்க அண்ணா அவனபோயி கிண்டல் பண்ணிட்டு.....

அண்ணா: யாரு கிண்டல் பண்றது..... ரேணு டிரைவின்ங்கு சொல்லிருந்தா நான் ஆட்டு வண்டிலயே வந்திருப்பேன்.........:(

ரேணு:வேணாம் நான் லைசென்ஸ் ஹோல்டராக்கும்,,,,,,,தனியா எத்தனை முறை வண்டியெடுத்திருக்கேன் தெரியுமா?

அண்ணா:தனியாதான,இப்ப நானும்ல்ல இருக்கேன்......

சுகி: சும்மா வாங்க அண்ணா...நான் ஏதாவது சொல்றனா??

ரேணு: உர்........

வனி: ஹி...ஹி....(சத்தமில்லாமல்......)

மாமாவீடு: ஒன்னும் புரியாமல் வருகிறார்கள்.......

ரேணு: ஆ..மாமா இவர்தான் பாபு அண்ணா,இணையதளத்தில் "அறுசுவையின்" நிர்வாகி, பாபு அண்ணா இவர் என்னோட மாமா(தாய்மாமா) ஹெல்த்தின்ஸ்பெக்டரா இருக்கார்.....
வனி, இது அத்தை.
சுகி இது மாமா பொண்ணு இந்து,இது பையன் நவீன்......

நான் இருந்தது குன்னூரில்...என் கணவர் வங்கியில் வேலை செய்ததால் இருந்த ஊர்களில் இதுவும் ஒன்று....அரவங்காடு நான் சென்றதில்லை...கேள்விப் பட்டிருக்கேன்...குன்னூரில் நிறய்ய ஆங்கிலேயர் பங்களாக்களை பார்த்திருக்கேன்...நீ சொல்லியுள்ள அட்மாஸ்ஃபியரை கேட்டாலே சூப்பரா இருக்கு ரேணு...அவசியம் வரத்தான் போறேன்... இப்போ சூடா ஒரு 4 ஃப்ளாஸ்க் நிறய்ய (போறுமா?) ஏலக்காய், இஞ்சி போட்ட டீ போட்டுத் தரேன்...என்னை நினைச்சிக்கிட்டே எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க பொண்ணுகளா...ஓகேயா!!!

சூப்பர் ரேணு....பயணம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...நீ ட்ரைவ் பண்ணற கார்ல "ஓரம் போ...ஓரம் போ...ரேணுகா வண்டி வருது"னு யாரோ பாடறாப்பல கேக்குதே? பாபுதான் பாட்றாரா?!

சூப்பர் ரேணு. இந்து, நவீன் ஏறியாச்சு. இதோ நவீனா பாப்பா, செண்பகா அண்ணி கூட வந்துட்டாங்க. கொஞ்சம் தள்ளி உட்காந்து அவங்களுக்கு இடம் தரலாம். கார் நிரந்சுடுச்சு... அடுத்த வேன் க்கு ஆள் சேரட்டும்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அறுவங்காடு கேட்:

செக்கியூரிட்டி நிறுத்தி கேட்கிறார்.....இல்லை சார் நைட் ரிட்டந்தான்.ஆமா இன்னும் 2 வண்டிக்கு நைட் இங்க ஸ்டே பண்ண பர்மிசன் வாங்கியிருக்கு.

ஓகே மேடம்.....நீங்க போங்க,....

ரேணு: சார் ஒன்மினிட்.மிஸ்டர்.ராஜசேகரிடம் இந்த சாவியை கொடுத்திடுங்க நன் போனில் இன்பாம் பண்ணிடரேன்.....தேங்ஸ்.....

போனில்: ஹலோ,மிஸ்டர்.ராஜசேகரை கூப்பிடுங்க நான் அவரோட மிஸ்ஸஸ்.

ராஜு:ஹலோ.

ரேணு: நாந்தாங்க பேசரேன்.நாங்க கிளம்பிட்டோம்,சாவியை கேட்டில் கொடுத்திருக்கென்,சாப்பாடு ரெடியா இருக்கு தயிர் மட்டும் வாங்கிக்கங்க......

ராஜு:சரிம்மா,எல்லாரும் வந்தாச்சா?நைட்டு சீக்கிரம் வந்துடுங்க, கெஸ்ட் ஹவுஸ் புக்பண்ணிருக்கு.....பாத்து டிரைவ் பண்ணு சரியா?

ரேணு:சரிங்க......பாய்,வச்சுடறேன்........

சுகியின் முறைப்பை கவனியாததுபோல வந்து வண்டியெடுக்கறேன்...இந்து மாட்டிவிட்டுட்டா.........

இந்து: என்னக்கா ரொம்ப ரொமான்ஸ்,அண்ணா இங்கதான இருக்கார்,நைட்டு வந்திடுவம்ல அதுக்குள்ளயா.........?

சுகி:ஆமா இந்து,பாரேன்........

வனி:விடுங்கப்பா சின்னப்புள்ளைய,

அண்ணா: வண்டிய பாத்து ஓட்டுமா.....உன்னவரிடம்தான் பேசிட்டையே.......
போன் அடிக்கிறது.........

வனி:ஹலோ,என்ன தவம்ஸ் அண்ணா இளநெல்லியா நாங்க இப்பதான் கிளம்பறோம்.....

ரேணு: இன்னும் 10நிமிடத்தில் அங்க இருப்போம்னு சொல்லு வனி........

வனி:ஆமாம்னா நீங்க அங்கையே இருங்க நாங்க வந்திடறோம்........

மாமா:இளநெல்லில என் பிரண்டு இருக்கான்மா.

ரேணு:தெரியும் மாமா,அவர் தம்பிதான் எனக்கு டிரைவிங் சொல்லி கொடுத்தார்........

அத்தை: ஏங்க ரொம்ப குளிருதுங்க........சால்வையக்குடுங்க.

நவீன்:என்னம்மா இன்fகையே ஆரம்பிச்சுட்ட இன்னும் 10கிளோமீட்டர் போகனும்......நீ தூங்குமா நன் எழுப்பறேன்.........

மாமா:ஹி....ஹீஇ........:)))

"இளநெல்லி ஆஞ்சநேயர் கோவில்"

ரேணு: இதுதான் இளநெல்லி எங்கப்பா நம்ம கோவை பஸ்?

சுகி: அதோ,நம்ம இளையாவும்,பவியும் புட்போடு அடிக்கராங்க பாருங்க.

அண்ணா: இவங்கள பக்கத்துல போயி கவனிச்சுக்கறேன்.இவங்க வீட்டுக்கு யார் பதில் சொல்றது இப்படி ஆடினா?

செம்பா: அட விடுங்க,வந்திருக்கறாது ஊட்டி,அவங்க சின்ன பசங்க அப்படிதான் இருப்பாங்க.

இந்து: அக்கா கொஞ்சம் மெதுவா ஓட்டு நானும் புட்போடு அடிக்கறேன்.......

ரேணு:அடி கழுத,உள்ள உக்காருடி,

அண்ணா:ஏம்மா நீவேற நான் ஏற்கனவே ரொம்ப பயத்துல இருக்கேன்.....

வனி:ரேணு பெட்ரோல் இருக்கா?பிடிக்கனுமா?

ரேணு: இருக்கு வனி,இப்ப கேஸ்ல போறொம் ,சோ இப்ப வேண்டியில்ல........இன்னும் 6கி.மீ தான் ஊட்டி வந்திடும்.........

சுகி:ரேணு நாம முன்ன பொலாம்ப்பா.........ஓவர்டெக் பண்ணேன்.......

ரேணு:அப்படிங்கற........இதோ வந்திட்டேன்......கீங்கீங்......... கொஞ்சம் வெளியில் வந்தால் வண்டி வருது.......திரும்ப கீங்கீங்............இப்ப வரலை........ஆனா சிக்னல் கிடைக்கலை.சோ,பின்னாலயே பொகனும்........கீங்கீங்............இப்ப சிக்னும் கிடைச்சிடுச்சு..........விடு ஜூட்............பாதியில் எதிரில் ஒரு கார்..........உடனே பிளாஸ் லைட் போட்டு வேகம் போயி, இன்டிகேட்டர் போட்டு லெப்ட் வந்தா..........பாபு அண்ணா கண்ணுல தண்ணி..........

வணி: என்ன அண்ணா அழறீங்களா???????

நவீனா: அப்பா.அப்பா....???என்ன......

அண்ணா: யாரு,நானா அழுதேன்....?இல்ல இல்லையே.......வேகத்துல பனிக்காத்து கண்ணுல பட்டுடுச்சுப்பா.........::((பாவிப்புள்ளைங்க இதுகலோட வந்ததே ரொம்ப தப்புப்பா....)

"இளநெல்லி ஆஞ்சநேயர் கோவில்":
*********************************
ரேணு: எல்லாரும் கேட்டுக்கங்க இங்க வண்டிய நிறுத்தப்போறேன்......பின் வந்த ப்ஸ்ஸும் நிற்கிறது.......அனைவரும் நலம் விசாரித்து முடிக்க......

ரேணு:எல்லாரையும் வரவெற்கிறேன்ப்பா.........எப்படி இருக்கு குளிர்?ராதாம்மா சால் நல்லாயிருக்கு எங்க வாங்கினீங்க? தவமணி அண்ணா தலைல என்ன வேத்துடுச்சா?இல்லை பனி பொழிவா.........:)?மீனு,ரேணு,அனைவருக்கும் பிடிச்சிருக்கா கிளைமெட்?

அண்ணா: பவி,இளையா என்ன பண்ரீங்க? பஸ்ல புட்போடெல்லாம் அடிக்கக்கூடாதும்மா.........
அவர்கள் அப்படியே நழுவ....நாமும் நழுவலாம்....

ரேணு: இதுதான் இளநெல்லி ஆஞ்சநேயர் கோவில். இங்கே நிறைய ஆஞ்சநேரர் சிலைகள் உண்டு.இதை இங்க வச்சது யார் தெரியுமா?

இந்து: நம்ம கொள்ளுதாத்தாவாக்கா?

ரேணு:உதை படுவ,ஒருநாள் முதல்வரா வந்த நம்ம அர்ஜுன்
வைத்தது....சூட்டிங்கிற்காக.பின் இதை கலைக்காமல் அப்படியே விட்டுட்டு போயிட்டார்ப்பா...........

அனைவரும்:அட அப்படியா,?வாங்க போயி பாக்கலாம்.........

ஷேக் : இங்க என்ன கொடுப்பாங்க?

ரேணு:அண்ணா இங்க வடை கொடுப்பாங்க,வாங்க போயி வாங்கி சாப்பிடலாம் அதிகமிருந்த நிஜமான ஆஞ்சநேயர்களுக்கு போடலாம் போகிறவழியில்.......:)

என்கிட்ட யாருமே பேசல

இப்படிக்கு ராணிநிக்சன்

அட ராணி,
வாங்கப்பா நீங்க பயணம் ஒத்துக்காம ஆம்லெட் போட்டு(அதாம்ப்பா வாந்தி பண்ணி)டயர்டா படுத்திருக்கறதா இந்த கல்ப்பு சொன்னாரே,,,,!! சரி சரி வாங்க இன்றாஇய ஸ்பெஷல் பாம்பே அல்வாவை அனைவரும் சாப்பிடுராங்க உங்களுக்கும் தருகிறேன்.......அனைவரும் ஆப்பிட்டு முடித்ததும் கோவிலிலிருந்து கிளம்பலாம்.........:))

ஷேக்: எடுத்தவுடனே அல்வாவா.....?சரிதா....

ராதாபாலு: என்ன ஷேக் சூடா இஞ்சி காப்பி குடிக்கரீங்களா?

தவண்ணா: இஞ்சி காப்பியா.......:)) கொடுங்ககொடுங்க இங்க நிறையபேர் ஆம்லெட் போட்டு டயர்டு ஆயிட்டாங்க....இத குடுச்சாவது சரியாகட்டும்......

ஜெயா: கிண்டல் பண்ணாதீங்க தவண்ணா, அந்த 6வது வளைவில்தான் வயித்த குமட்டிடுத்து.........

ரம்ஸ்: அட வனி உங்க பாம்பே அல்வா சூப்பரா இருக்குப்பா.........

வனி: ரொம்ப தேங்க்ஸ் ரம்ஸ்...:))

இளையா,பவி,மீனு:எனக்கு இன்னொரு ஸ்பூன் கிடைக்க்குமா?

இந்து:அத்தனையும் எங்க அப்பா எப்பவோ காளி பண்ணிட்டர்....:))

நவீன்:நானுந்தான்......ஏன்டி என்ன விட்ட.......

பிரவின்:அம்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க,ஏன் சுமதி அம்மா வரலை?(என் அம்மாதாங்க)

சரி அனைவரும் ஸ்வீட் சாப்பிட்டு சாமி கும்பிட்டாச்சா?வாங்க பயணம் தொடருவோம்........

இப்போதான் எல்லாத்தையும் படிச்சு முடிச்சேன் கிடைச்ச கேப் ல ரொம்ப ஜாலி அக்கா நா பூட்போர்ட் ல லாம் நின்னதே இல்ல அவளோ பயம் பட் சூப்பர் நம்ம ட்ரிப் இன்னும் தொடருங்க by Elaya.G

மேலும் சில பதிவுகள்