"பனிப் போர்வைக்குள் குன்னூர்...உதகை... -- போகலாமா டூர்"

தோழிகளே,

சிம்லா குலு மணாலியில் நமது உல்லாச பயணம் "இனிதே துவங்கி.....நடுக்கத்துடன் வந்து சேர்ந்தோமல்லவா....?"
இன்று முதல் சில்லிடும் பனிக்குவியல் நடுவில் குன்னூர்,உதகையில் நமது உல்லாச பயணத்தை ஆரம்பிக்கலாம்...... சரியா...?வருகிறீர்களா...?

பனிப்பயணம் வருவோர் அனைவரும் ஒரு ஸ்வெட்டரும்,ஸ்கார்ப்பும் கொண்டுவந்திடுங்க.......இல்லைன்னாலும் இங்கே சால் வாங்கித் தருகிறேன்.....போலாமா.........விடு ரெடி,......,ஜூட்............

இது இரண்டுமாதம் முன்பு நான் சென்ற உல்லாச பயணம், இதில் நம் தோழிகளையும் அழைத்து செல்லலாமா என ஒரு ஆசை......

அதனால் இந்த பயணக்கட்டுரையில் என் குடும்பத்தினருடன் நம் அறுசுவை குடும்பத்தினரும் வருகிறார்கள்.......யாரும் கோவப்படக்கூடாது சரியா......?
இது என் ஆசையும்,இப்படி நாம் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற கற்பனையும்தான் சரியா........
தோழிகள் கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறேன்.........:))

அப்பாடி ஒருவழியா ஊட்டி வந்து சேர்ந்துட்டேன்..... உஸ்ஸ்...... இந்த ட்ரிப் விஷயம் கேள்வி பட்டு நா கிளம்பறதுக்குள்ள உங்க வண்டி புல் ஆகிடுச்சு.... அதான் நானே ஸ்ட்ரையிட்டா ஊட்டிக்கே வந்துட்டேன்.....
இனி நானும் உங்களுடன் சேர்ந்துக்கறேன்.... கொஞ்சம் அட்ஜஸ் செய்து என்னையும் வண்டியில ஏத்திகங்க.......

இதுவரை யார் எழுதின கெட் டூ கெதர்லையும் வனி மாட்டல... இதில் முதல்லயே மாட்டிட்டாளா??? கலக்குங்க... படிச்சுட்டே வரேன்... வனி சுபாவம் இன்னும் ரேணுக்கு தெரியலன்னு மட்டும் புரியுது ;) பாபு அண்ணா பாவம்... எங்கையோ தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தார்... இழுத்தாச்சா??? நடத்துங்க... வரேன், படிக்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிரிப் பாதிலே இருக்கு சீக்கிரமா வாங்க வந்து மீதியை தொடருங்கள் இன்னும் என்னலாம் இருக்குனு எங்களுக்கு சுத்தி காட்டீங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாரும் சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியாக சொல்லி ரேணுராஜ் ஆர்ட்ர் அப்பதான் நிரய நேரம் சுத்தி பார்க்க முடியும்

இப்படிக்கு ராணிநிக்சன்

/////இதுவரை யார் எழுதின கெட் டூ கெதர்லையும் வனி மாட்டல... இதில் முதல்லயே மாட்டிட்டாளா??? கலக்குங்க... படிச்சுட்டே வரேன்... வனி சுபாவம் இன்னும் ரேணுக்கு தெரியலன்னு மட்டும் புரியுது ;) ////////

வனி வரலைன்னா விட்டுடுவமா? பிடுச்சு தூக்கிட்டு போயிடுவம்ல்ல......:)
வனி கண்டிப்பா நல்ல சுபாவம்தானே....என்னை கலாய்ங்க பரவாயில்லை ஆனா திட்டாதீங்க அப்புறம்,..,சின்னப்பிள்ளை அழுதுடுவென்.......அடிக்கடி கமெண்ட் குடுங்க........

தீப்ஸ்: வாங்க வாங்க என்ன லேடாகிடுத்தா?சரி பரவாயில்ல நேரா ஊட்டியே வந்துட்டீங்களே.........

கிளம்பலாமா........?

வாங்க வாங்க கிளம்பலாம்.......லேட்டாகிடும்......

வனி: ரேணூஊஊ.......என்ன மழை தூறுது? எப்படி சுத்திபாக்கறது? இதுதான் உங்க ஊரா?

ஷேக: அதானே, எங்கடா இன்னும் காணமேன்னு பத்தேன்....எனக்கு 18 டிகிரில பச்சதண்ணிய கொடுத்தீங்கள்ள குளிக்க,எப்படி நீங்க சுத்தலாம்.?

ரேணு: அட வாங்கப்பா இது ஒண்ணும் பெரிய மழையில்ல.....பூத்தூறால் இதில் மெதுவா நடந்து போனாத்தெரியும் சுகம்....

அண்ணா: ஆமா தெரியும்,ஊட்டி ஆஸ்பத்ரில படுத்துக்கனும்.......

ராதா: அட இல்ல பாபு,ரேணு சொல்றது சரிதான்,இது உடம்புக்கு ஒன்னும் பண்ணாது......வாங்க போலாம்..........

அனைவரும் கிளம்பியாச்சு,ஜர்கின்,குடை,சால் உடன்......

சுகி: இதுக்குதான் நம்ம குடும்பத்துக்கு ராதா ஆண்டிபோல ஒரு பெரியவங்க வேணும்கிறது......

ராதா: உர்......சுகீ........துறத்த,வண்டி கிளம்பிடுச்சு.......

லைஃப்ல எல்லாத்தையும் அனுபவிக்கணும் சுகி....பயப்படாதே...ஒண்ணும் ஆகாது....ஊட்டிக்குளிர் தாங்காதவங்க 2 ஸ்வெட்டர் போட்டு, காதை மூடி மஃப்ளர் கட்டுங்க...அட என்ன ரேணு....இவங்கள்ளாம் சென்னை வெய்யிலுக்குதான் லாயக்குப்பா...

"மெழுகு உலகம்"
****************
வாங்க எல்லாரும், இதுதான் மெழுகு உலகம்........இங்கே நம்ம தலைவர்கள் முதல் சிலரது உருவங்கள் மெழுகினால் தரூபமாக செய்யப்பட்டிருக்கு....இதை முதலில் சுத்தி பார்க்கலாம்,

பவி,இளை: ஹேய்.... இருங்கப்பா அந்த மிக்கி பொம்மையோட விளையாடிட்டு வரேன்..........

ஷேக்: நானும் கொஞ்சம் வரேன்........

அண்ணா: இரு ஷேக் இந்தா நவீனாவையும்,பிரவினையும் சேர்த்துக்க........

ஷேக்:இதுக்கு நான் போகாமலே இருந்திடுவேணே.........

130 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ஏ. பி. ஜே அப்துல்கலாம், டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவச் சிலைகள் உட்படச் சுமார் 20 உருவச்சிலைகள் உள்ளன.

மனொ: அட ரொம்ப அழகா இருக்கே.......எத்தனை வருஷமாச்சு?

ரேணு: உருவங்கள் எத்தனை வருடம்னு தெரிஉஆது.ஆனால் இந்த கட்டிடம் 130 வருடம் பழமையானது.

சுகி: இதை யாருப்பா செய்யரது?

ரேணு: எனக்கு தெரிந்தவரை இதை தன் விருப்பத்திற்காக ஒருவர் ஆரம்பித்துள்ளார்...பின் இதை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.......

ஷேக்: அட என்னப்பா இது? அங்க அங்க உண்டியல்......!! வருவோருக்கு கொடுக்கவா?

தவண்ணா: அதில் நாம போடனும் தம்பி.......:)

ரேணு:ஆமாம்,இதில் சேமிக்கும் பணத்திஅக் கொண்டு இந்த அருங்காட்சியகம் பராமறிக்கப்படுகின்றது.......

மீனு: ரேணுதெவ்,இளை,ராணி இங்க வாங்க இங்க எத்தனை அழகா மெழுகுவர்த்திகள் இருக்குபாருங்க?...

ரேணுதேவ்: ரொம்ப அழகா இருக்குப்பா.....இந்த கொக்கு வடிவம் எனக்கு வேணும் கொடுப்பாங்களா?

ரேணு: இன்கு விற்பனையும் நடக்கிறாது......கண்டிப்பா கொடுப்பாங்க.........

செம்பாக்கா: ஏங்க இங்க பாருங்க எவ்வளவு ரம்மியமா இருக்குன்னுன்......மலைக்கு நடுவில் பனி மேகங்கள்........ :)

வனி:அண்ணீ ஆரம்பிச்சாச்சா....ஏ...,வாங்கப்பா ஒரு ரொமாண்டிக் படம் பார்க்கலாம்.......:))

இந்து:அப்பா எனக்கு இந்த பூ மெழுகுவர்த்தி வேணும்.........

ரேணூ: யாருக்கு எந்த வகை மெழுகு வேணும்னாலும் வாங்கிக்குங்க......இது என் அன்பு பரிசா இருக்கட்டும்........))

ஷேக்: அப்ப எனக்கு ஒன்னு,ரேணு சகோதரியை நினைவிருக்க........

வனி:தவண்ணா ஷேக்கை பாருங்களேன்....சும்மான்னௌடனே டைலாக்கெல்லாம் விடரதை.....:))ஹி........

அத்தை: கெளசி,(ரேணுதான்ப்பா வீட்டில்) எங்கம்மா இந்த ராதாக்காவைக் காணோம்......!!!

மாமா: அவங்க முன்னாடியே நின்னாங்களே.......

ரேணு: ஒரு அழகான சுவாமி மெழுகு சிலையுடன் போயி, ராதாம்மா இது உங்களுக்கு பிடிச்சிருக்கா.......>?என்ன இந்த பால முருகண் மெழுகு சிலை மனதை உருக்குதோ.........??

ராதா:ஆமாம் ரேணு.ரொம்ப சந்தோஷமா இருக்கு மீண்டும் பார்த்தது,தேங்ஸ் இந்த சிலைக்கும் டூர் கூட்டி வந்ததுக்கும்........

அண்ணா: அட போதும்ப்பா பாசக்கண்ணீர்.......கிளம்பலாம்.......

ரேணு:கிளம்பும் முன் ஒரு கேள்வி.இங்கே யாருக்கு ரெந்த சிலை பிடிச்சிருக்கு???

சுகி:நாந்தான் முதலில்,எனக்கு அப்துல்கலாம் சிலை பிடிச்சிருக்கு.......

வனி:எனக்க் போஸின் சிலை பிடித்திருக்கு......

தவண்ணா: எனக்கு ஆட்டு குட்டிகளுடன் இருந்த இயேசு சிலை பிடிச்சிருக்கு.......:)

ஷேக்: எனக்கு அம்பேத்கார் சிலைப்பா......

அண்ணா: எனக்கு குடிபோதையில் விழுந்துகிடக்கும் சிலைப்பா./.....(நங்க வித்யாசமானவங தெரியுமா........)

இளை: எனக்கு வீரப்பன் சிலைப்பா........(அதிலும் அந்த கோழி சுடரமாதிரி இருக்கே.....எனக்கு கொடுத்துடுங்களேன்....கோழியை.......)

பிரவின்: அம்மா என்ன கேக்கலையே, எனக்கு காந்திதாத்தா பிடிச்சிருக்கு......

இந்து:எனக்கு அந்த மகராஜா சிலை பிடிச்சிருக்கு........

ராதா:எனக்கு அன்னை தெரசா பிடிச்சிருக்கு..............

ரேணு:எனக்கு முன்ன இருக்க முருகன் பிடிச்சிருக்குப்பா..........சரி இனி அனைவரும் கிளம்பலாமா.........இந்த பேக்ல சப்பாத்தி,உருளைக்கரி ரோல் இருக்கு,அனைவரும் எடுத்து சாப்பிட்டுட்டே அடுத்த இடத்துக்கு போகலாமா..........:))

அறுசுவை குடும்பத்தின் இன்ப சுற்றுலா இனிதாக அமைய வாழ்த்துக்கள். வரும்போது எனக்கு கேரட், ஊட்டி வருக்கி, ஹோம் மேட் சாக்லேட் வாங்கிட்டு வரணும். என்னை விட்டுட்டு போனதுக்கு தண்டனை.(பஸ் பின்னாடியே ஓடி வந்தேன். யாருமே என்னை பார்க்கலையா? பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்திட்டிங்களா? அடுத்த தடவை நானும் வருவேன்.) மறந்திட்டேன் எனக்கு ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் வாங்கிட்டு வாங்க.(இதல்லாம் வாங்கிட்டு வரதுக்கு பிரியாவை அழைச்சிட்டே வந்திருக்கலாம் இப்படில்லாம் நீங்க புலம்புவது எனக்கு கேட்குது)

ரேணு ரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவுக்காக காத்திட்டு இருக்கோம். தொடர்ந்துக்கிட்டே... இருங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்