"பனிப் போர்வைக்குள் குன்னூர்...உதகை... -- போகலாமா டூர்"

தோழிகளே,

சிம்லா குலு மணாலியில் நமது உல்லாச பயணம் "இனிதே துவங்கி.....நடுக்கத்துடன் வந்து சேர்ந்தோமல்லவா....?"
இன்று முதல் சில்லிடும் பனிக்குவியல் நடுவில் குன்னூர்,உதகையில் நமது உல்லாச பயணத்தை ஆரம்பிக்கலாம்...... சரியா...?வருகிறீர்களா...?

பனிப்பயணம் வருவோர் அனைவரும் ஒரு ஸ்வெட்டரும்,ஸ்கார்ப்பும் கொண்டுவந்திடுங்க.......இல்லைன்னாலும் இங்கே சால் வாங்கித் தருகிறேன்.....போலாமா.........விடு ரெடி,......,ஜூட்............

இது இரண்டுமாதம் முன்பு நான் சென்ற உல்லாச பயணம், இதில் நம் தோழிகளையும் அழைத்து செல்லலாமா என ஒரு ஆசை......

அதனால் இந்த பயணக்கட்டுரையில் என் குடும்பத்தினருடன் நம் அறுசுவை குடும்பத்தினரும் வருகிறார்கள்.......யாரும் கோவப்படக்கூடாது சரியா......?
இது என் ஆசையும்,இப்படி நாம் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற கற்பனையும்தான் சரியா........
தோழிகள் கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறேன்.........:))

தனியா உக்காந்து சிரிச்சுட்டே இருக்கேன் நம்ம டூர் ரொம்ப ஜாலியா போகுது போகட்டும் போகட்டும் ரைட் by Elaya.G

ரேணு எனக்கு இப்போ என்னை சுற்றி அருசுவைத் தோழிகள் இருக்கிறமாதிரியே இருக்கு ரொம்ப நல்லா இருக்கு,,,,

இப்படிக்கு ராணிநிக்சன்

"ரோஜா தோட்டம் போலாமா.....?"

விமானம் தாமதமாக வந்ததால் நமது கல்பனாவும்,ரம்யாவும்......மெழுகு உலகிற்கு வந்துட்டாங்க.....

ஷேக்: வாங்க சகோதரிகளே.......வாங்க, நீங்க தப்பிச்சீங்கண்ணு நினைத்தேன்........வந்து மாட்டிட்டீங்களா.......???

கல்ப்ஸ்: என்ன தனியா சந்தோஷப்படலாம்னு நினைத்தீங்களா?? வந்து அமானுஷ்ய அனுபவம் ஒன்று சொல்லவா????

அண்ணா: அதா இத்தனை கூட வருதே.......இதைவிட அமானுஷ்யமா...???!!!

அனைவரும்: அண்ணா........உங்களுக்கு மதிய சாப்பாடு கட்டு........,

ரம்ஸ்: அவரவேற்பு இருக்கட்டு எங்களுக்காக வாங்கிய வர்த்தி எங்க ரேணு? சாப்டாச்சா?எங்களுக்கு இல்லையா?

தவண்ணா: உங்களுக்கு இல்லாமலா? கார்த்தி அடிச்சுடுவார்........இந்தாம்மா கல்ப்ஸ்,ரம்ஸ் உங்களின் பங்கு "சப்பாத்தி உருளைக்கறீ ரோல்" சாப்பிட்டு வாங்க போலாம்.........

அண்ணா: பொட்டானிகல் காடர்ன் போலாம்.......

ரேணு: அங்க 7மணிவரை அனுமதி உண்டு,ரோஸ்காடர்ன் முடிச்சிடலாம்........

வனி: சரிசரி வாங்க எல்லாரும் எங்க வண்டிய பாலோ பண்ணுங்க, டைம் வேஸ்ட் பண்ணாதீங்கப்பா........டிரைவரண்ணா வண்டி யெடுங்க.......

ரேணு: பாலோ மீ.........

இந்து: இது ரொம்ப.......ஓவராக்கும்.......

பவி,இளை, பஸ்ஸில்: போகும்போகும் வேகம் வேகம் மேஜிக் ஜர்ணி...................

சுகி,வனி காரில்: உல்லாசப் பயணம் எனக்கே சொந்தம் சையட சையட சையடா........

போலாமா ரோஜா தோட்டம்....!?

எங்களுடைய ஹனிமூன் ஊட்டியில் தான் கொண்டாடினோம்.....
நீங்க எந்த இடத்த பத்தி சொன்னாலும்... என் ஞாபகங்கள் மூன்று வருடம்
பின்னோக்கி செல்கிறது.... :)
அதுவும் இந்த மெழுகு உலகில் என்னவர் என்னை வைத்து வித விதமா போட்டோ எடுத்தார்.... :)
ம்ம்ம்.... அடுத்து ரோஜா தோட்டமா.... போகலாம்.. போகலாம்... இதோ வந்துட்டேன்...... :)

என்ன தீப்ஸ் ஒரே ரொமான்ஸா கனவு கண்டுட்டு எங்கள மறந்துடாதீங்க சரியா

இப்படிக்கு ராணிநிக்சன்

ரொமான்ஸ் கனவா? அட நீ வேற.... நானே என்னவரை பார்த்து ஒரு வாரம் ஆகுது.... வேலை விஷயமாய் ஊருக்கு போய்
இருக்கார்.... அதான் நானும் உங்க கூட டூர் வந்துட்டேன்..... :)

காதல் ரோஜாவே.......எங்கே நீயெங்கே.........

என்ன தோழிகளே.....இப்படி காதலுக்கு முதல் அடையாளமாக இருக்கும் ரோஜா கூட்டத்திற்கு அட, ரோஜா தோட்டத்திற்கு போலாமா.........?

ரேணு நான் ரெடி நீங்க ரெடியா?

இப்படிக்கு ராணிநிக்சன்

நானும் ரெடி போலமா ரோஜா தோட்டத்திற்கு ம் என்னப்பா எவ்ளோ நேரமா வெய்ட் பண்றோம் எப்ப கூட்டிட்டு போவீங்கபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுராஜ்... சொல்லுங்கப்பா அடுத்து என்ன இடம் போக போறோம் ரோஜா தோட்டம் எல்லாரும் நல்ல்ல்ல்லா சுத்தி பார்க்குறாங்கன்னு நினைகுறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்