பாலக் பனீர்

தேதி: June 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசலைக்கீரை - 2 கட்டு (ஆய்ந்தது)
பனீர் - 400 கிராம் (சதுரங்களாக நறுக்கியது)
வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு - 7 பல்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
துருவிய சீஸ் - ஒரு மேசைக்கரண்டி
கடைந்த பாலேடு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பச்சைமிளகாய், பசலைக்கீரை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அதை வேறு தட்டுக்கு மாற்றி அதே வாணலியில் வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
நன்றாக ஆறிய பின் வதக்கியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
பின் வறுத்த பனீர், உப்பு, சர்க்கரை போட்டு கிளறவும். கடைசியில் துருவிய சீஸ், கடைந்த பாலேடு, நெய் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்