அன்புள்ளவர்களே
யாருகாவது carpal tunnel syndrome வந்ததா? எனக்கு இப்போ எட்டு மாசம். ஏழாவது மாதமே பின் தொடங்கி விட்டது. தாங்க முடியலை. இரவில வலி ரொம்பவே அதிகமாக உண்டு. door திறந்து பாத்ரூம் கூட போக முடியலை. delivary பின் சரியாகி விடும் என்று டாக்டர் சொன்னார்கள்.
யாருகசும் இப்படி ஆகி இருக்கா? வீட்டு வைத்தியம் எதுவும் இதற்கு உண்டா? wrist splint use பண்ணினேன் , நோ use :)
வலியுடன் விகாஷி
விகாஷி
எனக்கு கைல வேற பிரச்சினை இருக்கு. அதனால உங்க வலியைப் புரிஞ்சுக்க முடியுது. முதல்ல தலைப்பை மாற்றி 'carpal tunnel syndrome' என்று போடுங்கம்மா. இல்லைன்னா உதவக் கூடியவங்க கண்ல படாது.
நீங்க ப்ரெக்னன்ட்டா இருக்கிறதால வீட்டு வைத்தியம்... பூச்சு மருந்து ஓகே. எட்டு மாசம்ங்கிறீங்க. மருத்துவ ஆலோசனை இல்லாம கைமருந்து எதுவும் சாப்பிடுறது நல்லதில்லை என்பது என் அனுபவம்.
'ஸ்ப்லின்ட்' ஓரளவுக்கு ஹெல்ப் பண்ணும். கட்டாயம் யூஸ் பண்ணுங்க. உங்க டாக்டர்ட்ட கேட்டீங்கன்னா மருந்துன்னு இல்லாம என்ன பண்ணலாம், என்ன பண்ண வேணாம்ங்கிறது போல ஏதாச்சும் சொல்லுவாங்க. சின்னதா ஏதாச்சும் எக்சர்சைஸ் சொல்லக் கூடும்; எனக்குத் தெரியல.
இப்ப தூங்கப் போறப்ப கையை (& விரல்களை) எப்பிடி வச்சு தூங்குறீங்க? நீட்டியா? மடிச்சா? அந்த பொசிஷனை மாற்றி வச்சு தூங்கிப் பாருங்க. முற்றாக போகாது, கொஞ்சமாச்சும் பெட்டரா இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிரும். ;) அப்ப இந்த வலி எல்லாம் மறந்துருவீங்க. அழகா, ஆரோக்கியமாக ஒரு குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.
இங்க வரும் கருத்துகளைப் படிங்க. அவசியமானால் தவிர டைப் பண்ணாதீங்க. நீங்க நன்றி சொல்லல என்று யாரும் கோச்சுக்க மாட்டாங்க.
அன்புடன்
- இமா க்றிஸ்
Thank u Imma Akka
இமா அக்கா ..ரொம்ப நன்றி. splint தவிர வேற எதையும் use பண்ண இப்போதைக்கு முடியாதம் அக்கா. kai neeti madichu ellam try panniden
பிள்ளை பூமிக்கு வந்ததும் எல்லா கஷ்டமும் போய் விடும். அப்போ இந்த வலி இருக்கவே கூடாது. என் பிள்ளையை தூக்கி கொஞ்ச வேண்டு அல்லவா
உங்களுக்கு என்ன கைல ப்ரோப்லேம்?
Carpal tunnel syndrome
Carpal tunnel syndrome - இது கர்பகாலத்தில வரலாம், இதுக்கு சில முக்கிய காரணங்களும் இருக்கு, கைகளுக்கு அதிக வேலை கொடுப்போருக்கு கணினி வேலை செய்வோருக்கும் வர வாய்ப்புகள் இருக்குன்னு சொல்லுவாங்க. அது மாதிரி ஏதாவது நீங்க வேலை செய்திருகிரீங்களா? மேலும் வயது, மெனோபாஸ் period என்று பார்க்கும் பொழுது அது உங்களுக்கு தொடர்பு இல்லை என்று தோன்றுகிறது. கைகளை தலைக்கு வைத்து தூங்கவும் கூடாது. இதற்கு தற்போது சரியான நிவாரணி splint தான். கர்ப்ப காலம் முடிந்ததும் வலி போய்விட வாய்ப்பு இருக்கு. ஆனால் கைகளுக்கு நல்ல ரெஸ்ட் கொடுத்து மருத்துவர் ஆலோசனைபடி splint-ஐ இரவு மட்டுமோ அல்லது பகலிலும் கூட போட சொன்னால் போடுங்கள். அதுவே நல்லது.