இது அரட்டை நேரம்

அரட்டை இழை துவங்கி (நான் துவங்கி) ரொம்ப நாள் ஆச்சா... அதான் துவங்கிட்டேன். வாங்க... ஈ ஓட்டாம அரட்டை ஒழுங்கா போகனும்... இல்லைன்னா எல்லாரையும் பென்ச் மேல நிக்க வெச்சுடுவேன். :)

பென்ச் வேண்டாம்னு நினைச்சா வந்து அட்டண்டன்ஸ் கொடுங்க... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உள்ளேன் அம்மா...

வந்துட்டேன் டீச்சர்

இப்படிக்கு ராணிநிக்சன்

டீச்சர் டீச்சர் நானும் வரலாமா
ஹாய் வனிக்கா உமாக்கா ராணி நலமா பா எல்லாரும் தீபாவளி நெருங்க நெருங்க தினமும் ரொம்ப ஜோரா போகுதா டைம் தோழீஸ் அதான் இங்க வர டைம் கிடைக்கலயா தீபாவளிக்கு பட்டாசு இல்லையா வனி வீட்ல வனி உங்க ப்யூட்டி பார்லர் கதையெல்லாம் படிச்சேன் பா சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு என்னவர் என்ன பார்த்த என்னாச்சு உனக்க என் பொண்டாட்டிக்கு என்னவோ ஆய்டுச்சுனு புலம்ப ஆரம்பிச்சுட்டார் அப்றம் அவரும் இதை படிச்சிட்டு இப்டி கூட நடக்குதானு கேட்டு சிரிச்சிட்டுருந்தார் இதுவரைக்கும் நான் ப்யூட்டி பார்லர் போனதில்லை நா தப்பிச்சேன் உங்க கதையெல்லாம் கேட்டு பயமா இருக்குபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வனிதா, நானும் இருக்கேன்.ப்ரெசன்ட் போட்டுக்கோங்க.

ரேணு எதுல இருக்கு அந்த பியூட்டிபார்லர் கதை சொல்லுப்பா நானும் படிக்கரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

Hai sisters

Hai sisters

சத்யா உங்களை அனைவரின் சார்பா வரேவற்கிறேன் பா கீழே தமிழ் எழுத்துதவி உபயோகிச்சு தமிழ்ல பதிவு போடுங்க பேசுலாம் தோழியே ராணி அரட்டைல தூங்கமா தெளிவா பேசுங்க இழைல பாருங்க பா காமெடியா இருக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு, உமா, ஹர்ஷா, ராணி... ஹாய் ஹாய் ஹாய். எல்லாரும் அட்டண்டன்ஸ் கொடுத்து பென்சில் உட்கார்ந்துட்டீங்க... குட் குட்.

நம்ம வீட்டில் ரொம்ப வருஷமாவே பட்டாசு கிடையாதுங்க. யாராவது கொடுத்தாலும் திருப்பி கொடுத்துடுவோம், இல்லைன்னா கேட்பவர்கள் யாருக்காவது கொடுத்துடுவோம்... வீட்டில் வைத்திருப்பதே இல்லை. இம்முறை புது துணியும் எடுக்கல. பிள்ளைகளோடவே சரியா போகுது நேரம், இதை பற்றிலாம் யோசிக்க கூட முடியல.

பியூட்டி பார்லர் பற்றி எந்த இழையில் இருந்ததுன்னு எனக்கு நினைவில்லையே... ரேணு இருந்தா கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்