வெஜிடபிள் சாண்ட்விச்

தேதி: October 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

பிரட் - 1பாக்கெட்
பட்டர் - 4 டேபிள்ஸ்பூன்
மெயோனைஸ் - டேபிள் ஸ்பூன்
புதினா - 1கப்
பச்சை மிளகாய் - 6
நறுக்கிய முட்டை கோஸ் -1கப்
கேரட் துருவல் - 1/2கப்
நறுக்கிய பீன்ஸ் - 1/2கப்
பட்டாணி - 1/2கப்
நறுக்கிய குடை மிளகாய் - 1/4கப்
உப்பு - சுவைக்கு
மிளகு - சிறிது
எண்ணெய் - 1டீஸ்பூன்


 

காய்களை எண்ணெயில் வதக்கி அரை அவியலாக வேக வைத்து உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.

புதினா பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து கெட்டி சட்னியாக அரைத்துக்கொள்ளவும்.

பிரட்டின் மீது பட்டர் தடவி,அதற்கு மேல் புதினா சட்னி தடவி காய்கலவையை சிறிது வைக்கவும்.

இன்னொரு பிரட்டின் மீது மெயோனைஸ் தடவி இரண்டு பிரட் துண்டுகளையும் அடுக்கி,மேலாக சிறிது பட்டர் தடவி சாண்ட்விச் மேக்கரில் வைத்து பொன்னிறத்தில் சுட்டெடுக்கவும்.


பிரட்டின் மேல் சிறிது பட்டர் தடவுவதால் பார்க்க பளபளப்பாககும்வும்,சுவையாகவும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்