சேலை பராமரிப்பு

சேலை பராமரிப்பு

வணக்கம் தோழிகளே நான் அருசுவைக்கு புதுசு என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்ளுங்கள்

நீண்ட நாட்களாக நான் அருசுவையை பார்த்து வருகிரேன்
பங்குபற்றுவது இதுதான் முதல் தடவை
என் கேள்விக்கு பதில் தாருங்கள் தோழிகளே
கொட்டின் சாறிக்கு கஞ்சி போடுவது எப்படி

எனக்கு திருமண்மாகி இன்று 40 நாட்கள் எனக்கு சாறிகட்ட சரியாக வருதில்லை ரொம்ப கஸ்ரமாக இருக்கு உதவி செய்யுங்கள் தோழிகளே
ப்ரியமுடன்
மித்ரா

முதல்ல புதுமண தம்பதிகளான உங்களுக்கு வாழ்த்துகள் பா காட்டன் புடவைக்கு கஞ்சி போடுவது எப்படினா சாதம் வடித்த கஞ்சியை எடுத்துட்டு தேவையான அளவு நீர் விட்டு கலந்துட்டு புடவையை அதில் முக்கி அலசவும் அப்றம் லைட்டா பிழியவும் பிழியலனாலும் பரவால(கஞ்சில தண்ணி அதிகம்னா பிழிய வேணாம்) உலர்த்திடுங்கபா அப்றம் உலர்ந்ததும் அயன் பண்ண போதும் பா எனக்கும் முதல்ல சாரிகட்ட தெரியாது 2 நாள்ல பழகிட்டேன் ஈஸிதா பா அது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ஈஸியா கட்டறது எப்டினா பர்ஸ்ட் உள் முந்தானையை சொருகி ஒரு சுத்து சுத்திட்டு ப்ளீட்ஸ்க்கு புடவைய விட்டுட்டு அப்றம் இரண்டாவது சுத்துல வெளி முந்தானையில் தேவையான மடிப்பு வெச்சி பின் பண்ணிக்கங்க அப்றமா ப்ளீட்ஸ் பிடிச்சி பின் பண்ணி சொருகுங்க சைடுல முதமீருக்கிற புடவைய டைட்டா இடுப்புல சொருகி விடுங்க இல்லனா பின் போடுங்க இப்டி ட்ரை பண்ணி பாருங்க அப்றம் உங்களுக்கு ஏத்த மாறி மாத்திக்கோங்க பா வேணுனா பர்ஸ்ட் சின்ன பசங்களுக்கு ட்ரை பண்ணுங்க உங்களுக்கு புரியும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப நன்றி ரேணுகா நீங்க சொன்ன மாதிரி நான் செய்து பார்க்றேன்

ப்ரியமுடன்
மித்ரா

நன்றிலாம் வேணாம் பா நட்பே போதும் வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்