ஐந்து மாத குழந்தைக்கு

5 மாத குழந்தைக்கு சத்து மாவு எப்படி கொடுக்க வேண்டும்? கொதிக்கும் தண்ணீரில் கலந்து உப்பு சேர்த்துக் கொடுக்கலாமா? அல்லது உப்பு சேர்க்காமலேயே கொடுக்கலாமா?
நன்றி...

ஐந்து மாத குழந்தைக்கு சத்து மாவுக்கூழ் கொடுக்கும் முறை:
ஒரு டம்ளர் தண்ணீர்,அரை டம்ளர் பால்,ஒரு ஸ்பூன் சத்து மாவு,ஒரு ஸ்பூன் சர்க்கரை,ஒரு சிட்டிகை உப்பு,ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் எல்லாம் சேர்த்து சுத்தமான துணி அல்லது தண்ணீர் வடிகட்டி(double filter) மூலம் வடிகட்டி (சத்து மாவில் உள்ள தானியங்களின் உமி(தோல்)நீங்க) பாலின் திடம் வரும் வரை காய்ச்சி ஆற வைத்து கொடுக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் சளி பிடிக்காது. காய்ச்சும்போது கரண்டியால் கிளறி வந்தால் அடி பிடிக்காது.

உதவி செய்பவர் ஏமாந்து போகலாம்,தாழ்ந்து போவதில்லை

நான் என் பெரிய பையனுக்கு 4 மாதத்தி, இருந்து ராகி தான் கொடுத்தேன்
என் குறிப்பில் எல்லாமே இருக்கு, இங்கு ராகி காய்ச்சும் முறையும் யாரும் சமைக்கலாமில் கொடுத்து இருக்கேன் பாருங்கள்.http://arusuvai.com/tamil/node/12472
ராகி மாவு வீட்டில் திரித்தாலும் வெளியில் வாங்கினாலும் நல்ல ஜலிச்சிக்கோங்க.அப்படி இல்லை படத்தில் காட்டியுள்ளபடி வடிக்கட்டி கொண்டு இபபடி உம்மியை நீக்கிக்கலாம்

Jaleelakamal

நன்றி நிலா, ஜலீலா.

வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம். நான் இன்னும் ஏதும் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. ஒரு நாளைக்கு எத்தனை முறைக் கொடுக்கலாம்? மற்ற இழைகளைப் படித்தேன். ஆனாலும் குழப்பமாக உள்ளது. மன்னா ஹெல்த் மிக்ஸ் 2 நாள் கொடுத்துப் பார்த்தேன். என்னால் சத்து மாவு தயாரிக்க முடியாது. ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன். அதோடு வீட்டிலிருந்தே பணி புரிகிறேன். வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டும். Nestum, Ceralac போன்ற artificial foods கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. பதில் தாருங்கள்...

யாரேனும் பதில் தாருங்கள்

http://www.arusuvai.com/tamil/node/14968..இதை படிச்சு பாருங்க உதவலாம்..னெஸ்டம் செரெலேக் எல்லாம் ஆர்டிஃபிஷியல் ஃபுட் கிடையாது இன்ஸ்டன்ட் ஃபுட்.அதில் கெடுதல் எதுவும் இல்லை அவசரத்துக்கு உதவும் எனினும் நாமே தயாரித்த உணவு நல்லது ஏன்னா அதில் இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும் நல்ல நாக்கு ருசி பார்த்து விடும்.

மேலும் சில பதிவுகள்