பனீர்

hai! friends, பனீர் செய்யும் முறையை விளக்க பட குறிப்புடன் யாரேனும் சொல்லுங்களேன்? pls

முதலில் பாலை காய்ச்சவும். அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் சிறிது கொதிக்க ஆரம்பிக்கும் போது எலுமிச்சை சாறில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து பாலில் ஊற்றவும்.

உடனே பால் திரிந்து வரும். கிளறிக் கொண்டே இருந்தால் தண்ணீர் தனியாகவும் பால் தனியாவும் வந்து விடும். உடனே அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

இப்பொழுது ஒரு வடிகட்டியில் மெல்லிய துணியை போட்டு வடிக்கட்டவும். பிறகு குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவவும். கழுவினால் எலுமிச்சை சுவை முற்றிலும் நீக்க படும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்னர் துணியை எடுத்து பிழிந்து ஒரு மூட்டை போல கட்டி அழுத்தமான பாத்திரம் அல்லது ஏதாவது வெயிட்டை அதன் மேல் வைக்கவும். ஒரு மணி நேரமாவது வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியேறி பனீர் நன்றாக வரும். கையில் சிறிதளவு எடுத்து உருட்டினால் ஒட்டாமல் உருண்டையாக வரும். இது தான் பதம். இது தான் பனீர் செய்யும் முறை

ரசமலாய் செய்முறை பாருங்கள்..... அதில் படத்துடன் உள்ளது.......
http://www.arusuvai.com/tamil/node/20198

மேலும் சில பதிவுகள்