என் குழந்தையை நல் வழிபடுத்துவது எப்படி

வணக்கம் தோழிகளே
நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிரோம். கடந்த ஜூன் மாதம் தான் புதிய வீட்டிற்கு குடிவந்தோம். நாங்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரும் அதே வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.என் மகளுக்கு 4வயதாகிரது. எல்.கே.ஜி படிக்கிறாள். இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு காலையில் 6 மணியானால் யாரும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை அவளே எழுந்து தண்ணீர் குடித்து உடற்பயிற்ச்சி செய்வாள்.ஏதாவது புதிதாக கற்றுகொல்ல வேண்டும் என்ற ஆசை அவளிடம் இருந்தது. எங்கேயும் விளயாட செல்ல்மாட்டாள்.வீட்டில் எங்களுடன் தான் விளையாடுவாள்.காலையும், மாலையும் அவளாகவே புத்தகம் எடுத்து படிக்க கூப்பிடுவாள். ஆனால் இப்போது பள்ளி செல்லும் நேரம் தவிர மீதி நேரங்களில் அந்த பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே இருக்குறாள்.வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னால் அவர்கள் த்வறாக எடுத்து கொள்வார்கள் என்று பயமாக உள்ளது.எந்த நேரமும் விளையட்டு தான்.என் மகளை எங்கும் செல்ல வேண்டாம் வீட்டில் இரு என்று இருக்க வைத்தால் கூட அந்த பிள்ளைகள் வந்து கூட்டிசெல்கிறார்கள்.இல்லை என்றால் இங்கேயே விளையாடுகிறார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.என் மகள் அன்பாக சொன்னால் கூட எதுவும் கேட்பதில்லை மேலும் கேட்டால் நான் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன்.ஆனால் எனக்கு எப்போதும் விளையாடிக்கொன்டிருப்பது தான் பிடித்திருக்கிரது என்று சொல்லி அழுகிறாள்.சில நேரங்களில் நான் வேலை செய்துகொண்டிருப்பேன் காலை எழுந்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்.please friends i need your help.please reply

இதுக்காகவா கவலை படுரீங்க என்னங்க நீங்க குழந்தைங்கனா அப்படிதான் குழந்தைகள் மத்த குழந்தைகளோட சேர்ந்து விளையாடும்போதுதான் நிரையவிஷயம் கத்துக்கராங்க பா 4வயசு குழந்தைக்குபோய் என்ன தெரியும் முன்னால இருந்த வீட்ல பக்கத்துல பசங்க யாரும் இருந்து இருக்க மாட்டாங்க இப்போ கிடச்சிருக்காங்க அதான் இப்போதான புதுசா விளையாட ஆரம்பிச்சிருக்காங்க அதான் போக போக சரியாப்போய்டும் வீட்லயே இருந்தா அவங்க சுட்டி டீவி பாக்க நேரிடும் அப்படிஆரம்பிச்சிடா அவ்லோதான் அவங்கள மாத்த முடியாது பா நீங்க பாப்பா கிட்ட சொல்லிடுங்க நீ வந்ததும் ஹோம் வொர்க் முடிச்ச பிறகு விளையாட போனு அன்பா சொல்லுங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

ரொம்ப அழகா எடுத்து சொல்லியிருக்கீங்கபா;)

சசி, புவனா சொன்னது ரொம்ப ரொம்ப சரி ...குழந்தைகள்னா அப்படிதான் இருக்கும். விளையாட்டு தவிர அவங்க கெட்ட பழக்கம் எதாவது கத்துகிட்டா மட்டும் எடுத்து சொல்லி புரிய வைங்க ..மத்த படி உங்க குழந்தை நல்ல ஸ்மார்ட்தான்.. நீங்க சொல்ல வரதை புரிஞ்சுக்கிறா இல்லையா;-) படிக்க சரியான நேரத்தை ஒதுக்கி வைச்சுக் குடுங்க... பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும் உங்க வீட்டில விளையாட அனுமதியுங்கள். சிறிய வயதில் மற்ற குழந்தைகளோடு விளையாடும்போதுதான் அவங்களுக்கு செல்ஃப் கான்ஃபிடண்ட்டும், தலைமைப் பண்பும் உருவெடுக்கும்னு சமீபத்தில ஒரு புக் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்;-) உங்க குழந்தையும் அதேபோல் பண்பாளராக
வளர வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

இது விளையாடும் வயசு தானே..இப்ப தான் புதுசாக உலகத்தை பார்க்க தொடங்கும் பருவம் ஆனால் இப்பவே ஒரு லிமிட் வைப்பது நல்லது...பிள்ளைகளுடம் விளையாடும்போது நல்லதும் கெட்டதும் பழகும்..இதுவரை இருந்த குணம் மெல்ல மாறும்.பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்..நீங்க விளையாட ஒரு டைம் சொல்லிடுங்க..னம்பர் உள்ள கடிகாரம் கட்டிவிட்டு இந்த நேரத்துக்கு வந்து விட வேண்டும் என்று சொல்லுங்க..எனக்கும் முன்பு இதே ப்ரச்சனை இருந்தது..சொன்னால் சின்ன விஷயம் ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று இருக்கும் நமக்கு குழந்தைகளிடையே மாற்றமும் நமது ப்ரைவசியும் பாதிக்கப் படுபோதும் நம் மறைவில் குழந்தைகள் விளையாடும் போதும் ஒரு வித டென்ஷனாகவே இருக்கும்..என்னுடைய ஐந்து வயது மகள் இப்போ அப்படி இல்லை...ஒரு டைம் சொன்னால் அப்பவே ஓடி வந்து விடுவாள்..நான் பக்கத்து வீட்டில் பார்த்து சொல்லி விட்டேன்..எனக்கு தூங்க வைக்க படிக்க விளையாட,சாப்பிட எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கிறது அதை மீறுவதில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி விட்டேன் பக்குவமாக...அவர்களுக்கும் கஷ்டமாக தோனாதமாதிரி சொன்னேன்..கொஞ்ச நாள் வர மாட்டேன் என்று அடம் பிடிப்பதுமெல்லாம் இருந்தது தான்..ஓரிருமுறை இனி விடவே மாட்டேன் என்று தண்டித்தேன் வாங்கி தருகிறென் என்று சொன்ன சாக்கலேட் சிப்ஸ் எல்லாம் கட் பண்ணி விட்டேன் பிறகு என் வழிக்கு வந்து விட்டாள்...ரொம்ப மிலிட்டரி மாதிரி இல்லையென்றாலும் ஓரளவு எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலப்படி நடந்து கொள்வதும் குறிப்பா குழந்தைகளை சிறு வயது முதலே பழக்குவதும் நல்லது தான்...மாலை பள்ளி விட்டு வந்ததும் சில மணிநேரம் விளையாட விடுங்க பிறகு கூப்பிட்டா டாண்ணு வந்துடுற மாதிரியும் அந்த பிள்ளைகளிடமும் நல்ல மாதிரி இனி விளையாட்டு போதும் படிக்க போகிறாள் சாப்பிட போகிறாள்னு கன்ட்ரோல் பண்ணிடுங்க
நம்மை போலவே எல்லாரும் யோசிச்சா தேவைலையே பிள்ளைகள் எதை விரும்புதோ அந்த வழி என்று விடுகிறவர்கள் என்றால் சரியான இம்சை தான்
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் ..நாலு வயசு பிள்ளையை காலைல ஆறு மணிக்கு நீங்க என்ன எக்சர்சைஸ் பண்ண விடுவீங்க?

மேலும் சில பதிவுகள்