வயிற்று போக்கு- வீட்டு வைத்தியம்

வணக்கம் தோழிகளே,

எனக்கு 2 நாட்களாக அதிகமான வயிற்றுப் போக்கு உள்ளது,உடல் மிகவும் சோர்ந்து விட்டது, பாட்டி வைத்தியம் தெரிந்தவர்கள் உதவுங்களேன்.

நன்றி

தயிர் சாதம்,பிரட் சாப்பிடுங்கள்.தண்ணீர் கொதிக்க வைத்து அதில் டீ தூள் போட்டு நல்லா கொதித்தும் இறக்கி கொஞ்சம் லெமன் ஜீஸ் பிழிந்து குடியுங்கள்.ஒரு நாளைக்கு 2 தடவை குடியுங்கள்.காரம் சேர்க்க வேண்டாம்.மோர் குடியுங்கள்.மேரி பிஸ்கட் சாப்பிடுங்கள்.ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கும் அப்படி தான் இருந்தது.நான் செய்ததை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.

Expectation lead to Disappointment

கொதிக்க வைத்த நீரில் டீ தூள் போட்டு வடிகட்டி அதில் ஒரு மூடி லெமன் சாறூ கலந்து குடிக்கவும்.ஆடை இல்லாத தயிர்,தேன் குடிக்கவும்.good result kidaikkum.

இதுவும் கடந்து போகும்.

ஓமத்தை அரைத்து நீரில் கலந்து குடிக்க வயிற்றுபோக்கு உடனே சரியாகும்.

மிக்க நன்றி தோழிகளே

எனக்கு அடிகடி வயிரு இரைகிரது . அடர்கென்ன காரனம்

வாயு, அஜீரணம் கோளாறாக இருக்கலாம். வாயு பிரச்சினையாக இருந்தால் உணவில் பூண்டு, பெருங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். அஜீரணத்துக்கு சீரக தண்ணீர் குடிக்கலாம். உப்பு, சீரகம் சிறிதளவு எடுத்து வாயில் மென்று அதன் சாறை விழுங்கவும்.

மேலும் சில பதிவுகள்