பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

பட்டி துவங்கியாச்சு.......
இதனால் அனைவருக்க்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டி - 52, இன்று துவங்கிவிட்டது. ஆதலால் அனைவரும் வந்து அவரவர் கருத்துகளை அணியைக் குறிப்பிட்டு வாதங்களாக தமிழில் பதிவிடும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.......:))

பரபரப்பான பட்டி மன்றத்தை தொடங்கியுள்ள நடுவர் அவர்களுக்கு முதற்கண்
எனது தாழ்மையான வணக்கங்கள், சபாஷ். ரொம்பவும் முக்கியமான தலைப்பு
எந்த அணிக்கு வாதிடுவது என்று தீர்மானித்து விட்டு கூடிய விரைவில் வாதங்களுடன்
வருகிறேன். நன்றி வணக்கம்

வாருங்கள் ஈசன், விரைவாக அணியை தேர்வுசெய்து வாருங்கள்.........உங்களின் வாதங்களைக்கான நடுவர் ஆவலோடு உள்ளார்......

நல்ல தலைப்பை தந்த ஹர்ஷாக்கும், அதை தேர்வு செய்த நடுவருக்கும் வாழ்த்துக்கள்... நேரம் கிடைக்கும் போது வருகிறேன். நேரத்தோடு துவங்கியமைக்கு மிக்க நன்றி ரேணு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாருங்கள் வனி,
அணியை சொல்லாமல் செல்வது நியாயமா???அவ்வப்போது வாருங்கள்,வாதங்கள் தாருங்கள்.......இப்போது அணியை தேர்வு செய்து சொல்லுங்கள்.......:)

நம்நாட்டினர் உணவு முறையே சிறந்தது என்பதன் கீழ் வாதாட எனது வாதங்களை தயார் செய்து கொண்டு வருகிறேன் மதிப்பிற்குரிய நடுவர்
அவர்களே. வாதங்களை தயார் செய்து கொண்டு இருக்கிறேன். அது வரை
கொஞ்சம் பொருத்தருள வேண்டுகிறேன். தயவுடன் மன்னிக்கவும். நன்றி

பட்டிமன்ற நடுவருக்கு வணக்கம்....நல்ல தலைப்பு தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.... நேரம் கிடைத்தால் கலந்து கொள்கிறேன்...

சந்தேகம் என்ன... நம்ம எப்பவும் நம்ம நாட்டு பக்கம் தான்... “சிறந்தது நம் நாட்டு உணவே”.

அப்படியே தலைப்பை கொஞ்சம் மாற்றுங்க...

“பட்டிமன்றம் - 52: சிறந்தது எது? நம்நாட்டு உணவா? வெளிநாட்டு உணவா?”னு.

ரொம்ப பெருசா இருக்கு, படிக்க ஒரு மாதிரி இருக்கு. விளக்கமான தலைப்பு உள்ளே கொடுத்தால் போதும், தலைப்பில் வேண்டாம். கோவிச்சுக்காம கொஞ்சம் மாற்றிடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடே அணி தேர்வாகிவிட்டதா....?
ஈசன்,வனி இருவரும் நம்நாட்டு உணவே சிறந்தது...! என்ற அணிக்காக வாதங்களை சமர்பிக்க உள்ளார்கள்......
எங்கப்பா எதிரணியைக் காணோம்???வருவீங்களா???வராம எங்க போவீங்க,ஆனா சீக்கிரம் வாங்க....சரியா.........?

ராதா வாங்க வாங்க, வாழ்த்து சொன்னா போதுமா?சீக்கிரம் வந்து எந்த அணிக்குன்னு வாதாடுங்க.........(என்ன இரு உணவுகளையும் சாப்பிட்டு பார்க்க போயிட்ருக்கீங்களா......?:))

அன்பு நடுவருக்கு வணக்கம்.பட்டியில் நான் கொடுத்த தலைப்பை விவாதிக்க தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி.பட்டியில் கலக்கப் போகும் தோழிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

"அயல்நாட்டு உணவே சிறந்தது" என்ற அணியில் வாதிட விரும்புகிறேன்,நடுவரே.விரைவில் வாதங்களுடன் வருகிறேன்.

மேலும் சில பதிவுகள்