பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

வாங்க ஹர்ஷா,
நல்ல தலைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

எப்படியோ எதிர் அணியில் வாதாட அணிஉறுப்பினர்கள் தயாராகின்றனர்........

அனைவரும் இன்று அணியையும் வாதங்களையும் தேர்வுசெய்து தயாரா வந்துட்டீங்கதானே.......பிறகென்ன வாதங்கள் ஆரம்பமாகட்டும்.........யாரங்கே முரசைக் கொட்டுங்கள்.......பட்டி துவங்கியாச்சுன்னு........

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, எமது அணிக்காக வாதாட வந்துள்ள இனிய
நண்பர்களே, நமது நாட்டு உணவையே சாப்பிட்டு வளர்ந்து, இன்று நன்றி மறந்து
வெளிநாட்டு உணவே சிறந்தது என வாதிட வந்திருக்கும் எதிர் அணி நண்பர்களே
மற்றும் பட்டி மன்றத்தை படித்து ரசித்து சுவைக்க வந்திருக்கும் அனைவருக்கும்
முதற்கண் எனது இனிய வணக்கங்கள்.

நம்நாட்டு உணவு வெளி நாட்டு உணவுகளை விட அறுசுவை இணையதளத்தை
போல் அறு வகையான சுவைகளையும் கொண்டது. எல்லா வகையான சத்துகளையும் சமச்சீராக கொண்டுள்ளது. இதற்கு ஈடு இணையேது. இட்லி-சாம்பார்
பொங்கல்-வடை, பூரி-குர்மா, பாயாசம்-வடை என்றவாறு எழுதும் போதே எல்லாவ
ற்றையும் செய்து சாப்பிட்டு வந்து எழுதணும் போலுள்ளது. அந்தளவு சுவை
மிகுந்தது. உடலுக்கு நன்மை அளிப்பது. ஆனால் வெளிநாட்டு உணவுகள் அதிகளவு
கொழுப்பு, கொலோஷ்ற்றோல் மற்றும் இரசாயன சேர்க்கைகள் நிறைந்தவை.
அதை உண்ணும் மக்கள் விரைவாகவே நோயாளிகள் ஆவர். நம் நாட்டு உணவை
உண்பவர்களை விட வெளி நாட்டு உணவு உண்பவர்களின் உடல் மிகவும்
பெரிதாக பருமனாக இருப்பதை நாம் காணலாம்.

நமக்கு எங்கள் தாய், தந்தை, எமது தாய்மொழி, தாய்நாடு எந்தளவு
சிறப்பானதோ அதே போலவே நம் நாட்டு உணவும் இனிமையானது நடுவர் அவர்களே. இங்கு எதிர் அணியினர் நம் நாட்டு உணவையே சாப்பிட்டு விட்டு
பேர்ப் விட்டுக்கொண்டு வெளி நாட்டு உணவே சிறந்தது என வக்காலத்து
வாங்குவது அவர்களின் மனச்சாட்சிக்கே முரணானது.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி, மீண்டும் வாதங்களுடன் வருவேன் எனக்
கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.

அயல் நாட்டு உணவு தான் சிறந்தது... அவசர காலத்துக்கு ஏற்றது...
திரும்ப வரேன்...

அவசர உலகத்தில் எதிர் அணியினர் சாப்பாட்டுக்கு கூட அவசரப்படுகிறார்கள்
fast food கொண்டு வரும் fast டிசீஸ். இது எதிர் அணியினருக்கு தெரிய வராது.
அவர்கள் கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.
வாதங்கள் தொடரும். நம் நாட்டு உணவே சிறந்தது. நடுவர் அவர்களே.
நன்றி வணக்கம்

நடுவருக்கும், நடுவரின் தமிழுக்கும் வணக்கம்.
எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் இருக்கும் பொழுது உணவு வகையிலும் மாற்றம் இருக்க கூடாதா நடுவர் அவர்களே...
தாவணியும் சேலையும் போய் சுடிதாரும் மிடியும் வந்தாச்சு.
வேட்டியும் சட்டையும்போய் ஜீன்ஸ் வந்தாச்சு.
குங்குமமும் சாந்து பொட்டும் போய் ஸ்டிக்கர் பொட்டு வந்தாச்சு.
நாட்டு வைத்தியம் போய் ஆங்கில வைத்தியம் வந்தாச்சு.
ஆறடி கூந்தல் போய் பாப் கட்டிங் வந்தாச்சு.
நம் நாட்டு சோடா, கல்ர் பானங்கள் போய் கொக்கோகோலா, பெப்ஸி வந்தாச்சு.
இவையெல்லாம் மாறலாம் ஆனால் உணவு முறை மட்டும் மாறக் கூடாதா?. மேல்நாட்டு மக்கள் அவர்களின் உணவு முறையினால் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்கள். அருமையான சத்தான உணவுகள் மேல் நாட்டு உணவு முறையில்தான் சுலபமாக கிடைக்கிறது நடுவர் அவர்களே.
ஆகவே மேல்நாட்டு உணவு முறையே மிகவும் சிறந்தது.

அன்புடன்
THAVAM

நடுவர் அவர்களே . இதென்ன நாகரீகமும் உணவும் ஒன்றா? சேலை போகலாம் வேட்டி போகலாம் . சுடிதார் வரலாம், ஜீன்ஸ் வரலாம். ஆனால்
தரமற்ற வெளிநாட்டு உணவுகளால் நோய் வரலாமா? அது ஆபத்தல்லவா
வெளி நாட்டினர் வெள்ளை தோல் உடையவர்கள் என்பதற்காக நாமும் நமது
தோலுக்கு வெள்ளை அடிக்க முடியுமா?

நடுவரே... இந்த தலைப்பே தப்பு!!! சந்தேகமே இல்லாம நம்ம ஊர் உணவு தான் சிறந்தது!!! ;)

சரி... வாதத்துக்கு போகும் முன் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்...

வெளிநாட்டுக்கு போகும் நம்ம ஊர் மக்கள் மளிகை வாங்காம போறாங்களா?? அப்படியே போனாலும் அங்க நம்ம ஊர் மளிகை, காய், உணவு எல்லாம் கிடைக்குமா? எங்க கிடைக்கும்னு ஆராய்ட்சி பண்ணாம போறாங்களா??? ஏன்???

காரணம் இருக்கு நடுவரே... சொர்க்கமே ஆனாலும் அது நம்ம ஊர் போல ஆகுமா??? கம கமக்கு கருவாடும், அரைச்சு வெச்ச கறி குழம்பும், நேற்று வெச்ச மீன் குழம்பும் நம்ம ஊருக்கு உறியதாச்சே. நம்ம ஊர் சாப்பாடு இல்லாம இருக்கவங்களை கேளுங்க... “நாக்கு செத்து போச்சு”னுவாங்க.

வெளி நாடுகளில் நம்ம ஊர் ரெஸ்டாரண்ட்ஸ் அதிகம்... ஒத்துக்குறீங்களா?? ஆனா நம்ம ஊரில் வெளிநாட்டு உணவகங்கள் எத்தனை இருக்கு??? சொல்லுங்க பார்ப்போம்... எதனால் நம்ம ஊர் உணவகத்துக்கு இத்தனை மவுசு???!!!

எல்லாத்துக்கும் ஒரே பதில் தான் நடுவரே... நம்ம ஊர் ஊணவுக்கு முன்னாடி வேறு எந்த நாட்டு உணவும் நிக்காது!!! நிக்க முடியாது!!!

நம்ம ஊர் உணவின் ருசியும், மனமும், ஆரோக்கியமும் எந்த நாட்டு உணவிலும் வராது!!!

இன்னும் நிறைய வாதத்தோட வரேன்... நல்ல மழையில் நம்ம ஊர் மசாலா டீயை ரசிச்சு குடிச்சுகிட்டே காத்திருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கம கமக்கு கருவாடும், அரைச்சு வெச்ச கறி குழம்பும், நேற்று வெச்ச மீன் குழம்பும் நம்ம ஊருக்கு உறியதாச்சே. நம்ம ஊர் சாப்பாடு இல்லாம இருக்கவங்களை கேளுங்க... “நாக்கு செத்து போச்சு”னுவாங்க.// இந்த கருவாடும் மீனும் மேல் நாட்டு உணவு வகைலயும் இருக்குங்க... பீட்ஸாவை எடுத்துக்கோங்க எத்தனை வகைகள் இருக்கு... விதவிதமா பீட்ஸா செய்யறாங்களே... வெஜ் பீட்ஸா, சிக்கன் பீட்ஸா, மட்டன் பீட்ஸா, மீன் பீட்ஸா... இப்படி ஏராள்மான வகைகள் இருக்கு பீட்ஸாவில்.
பப்ஸை எடுத்துக்கோங்க எத்தனை விதமான பப்ஸ் இருக்கு... இந்திய உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் வெளி நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டதே இல்லையா... நாக்கில் தண்ணீர் ஊற ஊற வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு இப்படி நாக்கூசாம பொய் சொல்றாங்களே...
கேக்கில் எத்தனை விதங்கள்... இவங்கள்ளாம் கேக் சாப்பிடதே இல்லையா...? மேல்நாட்டு உணவு வகைகளை ருசியா சாப்பிட்டு விட்டு இப்படி மனசாட்சி இல்லாமல் பேசறாங்களே...

அன்புடன்
THAVAM

வாருங்கள் ஈசன்,
உங்களின் முதல்கட்ட வாதமே சுடசுட இருக்கிறதே......இனிதுஇன்னும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்........:)

தவமணி,பாப்ஸின் அயல்நாட்டு உணவு,
பாப்ஸ் அணியை சொல்லிட்டீங்க,சீக்கிரம் வாதங்களோட வாங்க,
தவம்ஸ் அண்ணா:
இப்பதானே பட்டி கலைகட்டுது.....:) எங்கடா வருவீங்களோ மாட்டீங்களோன்னு நினைத்தேன் .வந்துட்டீங்க,

மேலும் சில பதிவுகள்