பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

மதிப்பிற்குரிய வனிதா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் இப்பட்டியின் முடிவில்
வழங்கிய கருத்துகளை படித்தேன். அறுசுவையில் ஒரு நீண்டகால உறுப்பினராக
இருந்தாலும் நான் இதுதான் முதல் முறை கலந்து கொண்ட பட்டி மன்றமாகும்.

////... நான் சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது. இங்கே சொல்ல காரணம்... இங்கே நடந்ததை இங்கேயே தான் தெளிவு படுத்த வேண்டும். பட்டியில் பதிவிடும் முன் பட்டிமன்றத்தின் விதிமுறைகளை சற்று நிதானமாக படித்து விடுவது நல்லது. அடுத்தவரை மூக்குடைத்து பதிவிடுவது பட்டிமன்றத்துக்கு அழகல்ல... பிறர் கருத்தை மறுப்பதிலும் ஒரு நாகரீகம் வேண்டும்... நான் யாரையும், எந்த பதிவையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.///

எனது வாதங்களில் எனது மனதுக்கு எட்டியவரை நான் எவர் மனதையும் புண்படுத்தவில்லை. அப்படி
ஏதும் எனது வாதங்களில் தப்பிருந்தால் தயவு செய்து அறியத்தரவும், என்னை பொறுத்த வரை நான் எனது
தவறுகளை அது தவறாக இருந்து சுட்டிக் காட்டப்பட்டால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்.

நீங்கள் சுட்டிக் காட்டிய விடயங்களை நான் பாராட்டுகிறேன். எனது வாதங்களில் எதுவும் பிழையிருந்தால் கூறவும்.
நன்றி.

ஈசன்,
இதுபோன்ற தலைப்புகள் எடுக்கும்போது ஆதங்கம்,ஆவேசம் போன்றவை அதிகமாக வரத்தான் செய்யும்....இந்தப்பட்டி பரவாயில்லை.என் போனபட்டியில் " இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்துவருகிறதா?தேய்ந்துவருகிறதா?" இதில் கடைசிகட்ட வாதங்கள் மற்றூம் தீர்ப்பிற்கு பின்னும் சில விமர்சனங்கள் வந்துள்ளன...
இப்படிப்பட்ட சென்சிட்டிவ் தலைப்புகளில் கொஞ்சம் கவனம் தேவை.....வனி சொன்னது அனைவருக்கும் சேர்த்துதான்......ஏனென்றால் இந்த பட்டியில் நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலர் புதிதாக வாதாட வந்திருந்தனர்......அவர்களின் வாதங்களும்கூட சூடாகவே இருந்தன.....
சொல்லவருவது என்னவென்றால், நாம் பார்க்காமல் பேசு தோணி தெரியாமல் படித்துப்பார்க்கிறோம்.....அப்படி இருக்கச்சே வார்த்தைகள் எனக்கு ஒருமாதிரி தோணியிலும்,மற்றவருக்கு வேறு தோணியிலும் நினைக்கத்தோன்றும்......ஆக எழுதிய பிறகு படித்து பார்த்து அணுப்புவது உத்தமம்.......
ஆனால், யாரையும் புண்படுத்தும் நோக்கில் வனி சொல்லவில்லை.அது எனக்கு தெரியும்.ஏனென்றால் பல பட்டிகள் பாதியில் நின்றுள்ளன....மூத்த அங்கத்தினர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்........ஆக இது உங்களுக்கு மட்டும் சொன்னதல்ல, அனைவருக்கும் சொன்னது.......சரியா...:))
உங்களின் வாதங்களில் கருத்துகள் நன்றாக இருந்தன...என்ன கடைசியில் நெரமின்மையால்(நானாக நினைத்துகொண்டது)வாதாட இயலவில்லைன்னு நினைக்கிறேன்........

ஈசன்... ரேணு சொன்னதே தான்... நமக்கு படிக்கும் போது ஒரு மாதிரி கோவமா பேசின மாதிரியோ அல்லது காயப்படுத்தும் விதமாவோ இருக்கும் பதிவு உண்மையில் போட்டவர் அந்த நோக்கில் போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரில் பேசும்போதே மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் வரும் போது வெறூம் பதிவுகளை இடும் போது ஒரு முறைக்கு 4 முறை திருப்பி படித்து விடுவது நல்லது. நிச்சயம் யாரையும் குறிப்பிட்டு சொல்லல... பொதுவா இந்த பட்டியில் அது அதிகமா இருந்ததுன்னு தான் சொன்னேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. யாரும் காயப்பட கூடாது என்பதே நோக்கம். தவறாக நினைக்காதீங்க, பட்டியில் இவற்றை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.

ரேணு... மிக்க நன்றி. என் சார்பில் சரியான பதிலை சொன்னதுக்கு... பலர் பட்டியில் இருந்து நடுவே காணாமல் போக இதுவும் ஒரு காரணம். சொல்ல முடியாமல் வருந்துகின்றனர். அவர்களையும் நாம் மதிக்க வேண்டுமே. அதே சமயம் பதிவிடுபவர்கள் அந்த நேரத்தில் மனதில் பட்டதை தட்டுகின்றனர்... ஒரு முறை திருப்பி படித்தால் இது தப்பா போகுமா என்ற சந்தேகம் அவர்களுக்கே வர வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் பலர் புதியவர்கள் எனும் போது அவர்கள் ஆர்வத்தை குறை சொல்ல கூடாது. புதியவர்கள் மட்டும் இப்படி பதிவிடுவதும் இல்லை... பல நாட்களாக பட்டியில் பங்கெடுப்பவர்களும் சில நேரத்தில் இதை செய்வது உண்டு. அதனால் தான் பொதுவாக சொன்னேன். பட்டி எக்காரணத்தை கொண்டும் தடைபட கூடாது என்பதால் தான் கடைசி வரை காத்திருந்தேன். புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

தோழர், தோழிகளே... யாரையும் காயப்படுத்தும் நோக்கில் பதிவிடவில்லை... உங்களுக்கும் அது புரியும் என்றே நம்புகிறேன். புரிந்து கொள்ளும் நட்பு கிடைப்பதே வரம்... நீங்கள் நல்ல நண்பர்கள் என்றே நம்பி இங்கே பதிவிட்டேன். சொல்ல வேண்டிய கடமை இருக்கும்போது சொல்லாமல் விட்டால் சிலரை அது வருத்தப்பட வைக்கும். தவறாக எண்ன வேண்டாம்... மீண்டும் அடுத்த பட்டியில் சூடான நல்ல தலைப்போடு நம அருமை தோழி, மூத்த உறுப்பினர் சீதாலஷ்மியின் தலைமையில் நடக்கும் பட்டியில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன். கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மீண்டும் நன்றிகள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை படித்த போதுதான் அவரின் கருத்துக்கள் எவ்வளவு முக்கியமானது என தோன்றுகிறது. வாதங்களை பதிவிடும் வேகத்தில் எதிர் அணியினரும், பட்டியை படித்து கொண்டிருப்பவர்களும் முகம் சுளிக்காத வகையில் எழுத வேண்டும் என்பதை மறந்து கடினமான வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம். அது நானாக கூட இருக்கலாம். பெயரை குறிப்பிடாமல் சொல்வது வனிதா அவர்களின் உயர்ந்த பண்பை காட்டுகிறது. ஆகவே நம்மையறியாமல் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
நானும் கூட தவறு செய்திருக்க கூடும்... திருத்திக் கொள்கிறேன்... நன்றி.

அன்புடன்
THAVAM

வணக்கம் மீண்டும் ஒருமுறை.
இனி வரக்கூடாது என்றுதான் நேற்றே முடிவெடுத்துவிட்டேன். மழை பெய்து ஓய்ந்தாலும் சாரல்களும்..... மண்வாசனையும்...........காற்றினூடே இழைந்தோடும் ஈர மணமும் போக சற்று நேரமாகும் இல்லையா? அதுபோல நேற்றைய தாக்கம் என்னை இன்னும்விடவில்லை. உடலின் கனத்தை தாங்கும் என்னால் மனசின் கனத்தைத் தாங்கத்தான் முடியவில்லை!!.
இன்னிக்கு யாராவது என்னைத் திட்டி எழுதியிருக்காங்களா என்று பயங்கர பயத்தோடுதான் திறந்தேன்! கடைசியாக வனிதா மதாம் அவர்களின் எழுத்தைப் பார்த்தபோதுதான் கொஞ்சமாவது லேசானமாதிரி இருந்தது. நேற்று அவர்கள் விமர்சித்தது முற்றிலும் உண்மை. நேற்று எனக்கு அது சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது! அதே சமயத்தில் ஏதோ மிகப்பெரிய தப்பு செய்த உணர்வுகூட ஏற்பட்டது. அதைவிட பெரிய அதிர்ச்சி மேற்கோள்களை இணையத்திலிருந்து அப்ப்டியே கையாளக்கூடாது, கண்டிக்கிறோம் என்றது! (நிபந்தனை என்று ஒன்றிருக்குமே எனத் தோன்றாமல் போய்விட்டது)

எதையுமே மறுவாசிப்பு செய்யாமல் அனுப்பும் பழக்கமே இல்லாத எனக்கு நேற்று காலவித்தியாசம் ரொம்பவே இடித்துக்கொண்டே இருந்தது. கூடவே என் 2 வயது குழந்தை என்மடிமீது... ஒரே கையால் தமிழ் எழுத்துக்கக்ளைத் தேடித் தேடி...இடையே மதிய உணவு தயார் செய்ய மறந்து... குழந்தைகள் வந்துவிட (பள்ளி எதிரிலேயேதான்)இடையில் மருத்துவர் கொடுத்த அப்பாய்ன்மென்ட் மறக்க...உண்மையில் சொல்லவொணாத நெருக்கடிகள். முடிவை பார்க்க முடியாமல் முக்கிய வேலைகள்! பின்ன்ர் பார்த்தபோது இம்மாதிரியான அதிர்ச்சி! வெளிப்படையாக சொல்கிறேன், சற்றே தூக்கம்கெட்டதுதான் பாக்கி! இனி வேண்டாம் என்றுதான் இருந்திருப்பேன் - இன்னிக்கு வாசிக்காதிருந்தால்!

தவறைத்திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்து, உணர்வுகளைக் குறைத்துக்கொள்ளும்; மறைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் தான் இன்னும் வரவில்லை!!
ஏதோ நீண்ட நாள் பழகிய நண்பர்களிடம் நம் வாதத்தை மெய்ப்பிக்க விவாதம் செய்கிற உரிமை வந்துவிட்டது போன்றும், நேரில் உள்ள நண்பர்களிடம் பதிலுக்கு பதில் பேசுவதுபோலும் நான் மிகவும் ஒன்றிவிட்டடதாகவே அனுமானித்துவிட்டேன், ஏனெனில், என் தாய்த்தமிழில் நீ...ண்ட காலத்திற்க்குப் பின் உரையாடியதால்!
முகம் தெரியா நண்பர்களிடம் முரண்பாடு என்றுமே நெஞ்சின் முள் என்பதால்...
(முள் இப்போது இல்லை, நன்றி வாசிப்போருக்கும், மன்னிபோருக்கும்)

நட்புடன்,
ஹேமா!

Awake, arise and stop not till the goal is reached

தவமணி, ஹேமா... புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :) கோவிக்காமல் எல்லோரும் ஒத்துழைப்பது மகிழ்ச்சியை தருகிறது.

//இனி வரக்கூடாது என்றுதான் நேற்றே முடிவெடுத்துவிட்டேன்.//

//சற்றே தூக்கம்கெட்டதுதான் பாக்கி! இனி வேண்டாம் என்றுதான் இருந்திருப்பேன் //

- வருந்துகிறேன்... காரணம் என் பதிவாக இருந்ததால் மன்னிக்க வேண்டுகிறேன். என் சூழ்நிலை... சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கு.

//இன்னிக்கு யாராவது என்னைத் திட்டி எழுதியிருக்காங்களா என்று பயங்கர பயத்தோடுதான் திறந்தேன்!// - அறுசுவையில் என்றும் இது போல் நடக்காது. அப்படி நடந்தால் செய்தவர் அறுசுவை நட்பை பற்றி தெரியாதவராக இருக்கலாம்.

ஹேமா... இனி கவலை இல்லையே??? அடுத்த பட்டியில் மட்டுமில்ல இனி அறுசுவையில் எல்லா பக்கங்களிலுமே உங்களை காண முடியும் என்று நம்புகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//உங்க தமிழ்மொழியில் மட்டும்தான் மொழியை முன்வைத்து பெயர் வைக்கமுடியும்.அதாவது,தமிழரசன்,தமிழழகன்,தமிழரசி,இப்படி மொழியையே பெயராக கொடுக்க கூடிய மொழி உங்களோடதுன்னு சொன்னார்........"இதுபோல சிறப்பு வேறு மொழிக்கு இல்லை...ஒரு வெளிநாட்டவருக்கு தெரிந்த நம்மொழி சிறப்பு நமக்கு தெரியவில்லை.//......

வெளிநாட்டவர் தமிழ் கற்கிறார். மகிழ்ச்சியாக உள்ளது. .ஆனால் இங்குள்ள எனக்கு தெரிந்த தமிழர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு தமிழ் தெரியாமல் வளர்ப்பதை மிகவும் பெருமையுடன் சொல்கிறார்கள்.
போனில் அக்குழந்தைகள் பாட்டி ,தாத்தா உடன் பேச முடியாம கஷ்டபடுகிறார்கள் .நேரில் தான் பார்க்க முடியாது. அட்லீஸ்ட் போனில் பேரகுழந்தைகளோடு பேசும் மகிழ்ச்சியையாவது தங்கள் பெற்றோருக்கு கொடுக்கலாம் இல்லையா?
என் வாதங்களில் ஏதானும் தவறு இருப்பின் மன்னிக்கவும் (ஒரு நாளில் அரைமணி நேரம் தான் கிடைப்பதால் அதிக பதிவு போட முடியவில்லை .)
அனைவரின் வாதங்களும் நன்றாக இருந்தன

//நம்ம கை சுத்தமா இருக்கான்னு நம்ப மாட்டங்கறோம்... யார் யாரோ சாப்பிட்டு வெச்சுட்டு போற ஸ்பூன் அவங்க ஒழுங்க கழுவி சுத்தமா கொடுப்பாங்கன்னு நம்பறோம் ;( என்ன கொடுமை நடுவரே!!!//
//இஞ்சி பூண்டு வெங்காயம் என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை... இவ்வளவுக்கும் சொன்னா பக்கம் போதாது நடுவரே. இவ்வளவு இருக்க நம்ம உணவை கேலி செய்யும் தகுதி எந்த நாட்டு உணவுக்கு இருக்கு???//

வனிதாவின் இந்த வாதங்கள் அருமை, என்னை மிகவும் ஈர்த்து பட்டியில் பதிவிட வைத்து விட்டன .ரேணு அவர்கள் அனைவரையும் தட்டி கொடுத்து பதிவிட தூண்டினார்கள் .''பட்டி தீர்புக்கு முன் சில''அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்கள் .

அன்பு ரேணு,
நல்ல தீர்ப்பு.தெள்ள தெளிவான விளக்கங்கள்.கொஞ்சம் வேலைகள் இருந்ததால் நேற்றே பதிவு போட முடியல.உங்களுடைய ’பட்டி தீர்ப்புக்கு முன் சில’- அருமை.பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.அவ்வளவையும் டைப் பண்ணி முடிக்க எத்தனை நாளாச்சு?பட்டியை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள்.உடல் நலக் குறைவிலும் எடுத்து கொண்ட பணியை சிறப்பாய் முடிச்சுட்டீங்க.வாழ்த்துக்கள்.

அன்பு வனிதா,
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.என்னுடைய பதிவும் கூட சில சமயங்களில் மற்றவரை காயப்படுத்தியிருக்கலாம்.ஆனால் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் போடவில்லை.இனி இவ்வாறு தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.சரியான நேரத்தில் பதிவு போட்டு தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி.

சுபத்ரா.....
நேரம் இல்லாமல், வாதடனும்ன்னு ஒரு உத்வேகத்துடன் வந்து பதிவிட்டதற்கு முதல் நன்றிகள்ப்பா....

////(ஒரு நாளில் அரைமணி நேரம் தான் கிடைப்பதால் அதிக பதிவு போட முடியவில்லை .)///////

உண்மைதான்....தாத்தா,பாட்டிபாசம் காணத்தான் முடியலை பேசவாவது செய்யலாம்னா, லேங்வேஜ் பிராப்ளம்வேற....வெளிநாடுவாழ் தமிழர்கள் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்.......:)

ஹர்ஷா,
பாராட்டுக்கு நன்றிகள், மீண்டும் நன்றிகள் இந்த தலைப்பை முன்வைத்ததற்கு....
உங்கள் வாதங்களும் நன்றாக இருந்தன.....மேலும் நல்ல தலைப்புகள் கொடுங்கள்.....பல பட்டிகளில் கலந்துகொள்ளுங்கள்.......:)

மேலும் சில பதிவுகள்