பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

முதலில் நடுவருக்கு வணக்கத்தை சொல்லி ஆரம்பிக்கிறேன். சுவை அதிகமான, ஆரோக்கியம் நிறைந்த, எளிதில் செய்யக்கூடிய, நம்ம நாட்டு உணவே சிறந்தது என்று வாதாட வந்திருக்கிறேன். மேல் நாட்டு உணவு தான் சிறந்ததுனு பேசுறாங்களே எத்தனை நாட்கள் தான் அயல்நாட்டு உணவையே சாப்பிட்டு கொண்டிருப்பீர்கள்? அதுலாம் சும்மா நம் நாட்டு ஊறுகாவை போல தான் குறைவாக தான் சாப்பிட முடியும் அதுவே உணவாக நாம் சாப்பிட முடியாது அயல்நாட்டில் சாப்பிடராங்கனா அவங்க வாழ்க்கை முறை வேறு. வாழும் சூழ்நிலை வேறு. வித விதமான கேக்கையும், பீட்சாவையும், பப்ஸையும் நாம அன்றாட உணவாக சாப்பிட்டுகிட்டு இருந்தோம்னா ஹாஸ்பிட்டல்லயே குடியிருக்க வேண்டியது தான்.
எதிர் அணியினர் அயல்நாட்டு உணவயே சாப்பிட்டுகிட்டு இருந்தா சொந்த செலவுலேயே சூன்யம் வச்சுகிற மாதிரிதான் அர்த்தம்.
///அவசர காலத்துக்கு ஏற்றது/// அவங்களே சொல்லிடாங்க அவசர காலத்துக்கு மட்டுமே ஏற்றதுனு ஆமாங்க புரிஞ்சிகிட்டா சரி அன்றாட வாழ்வுக்கு இது ஒத்து வராது.

வாங்க யாழ் உங்க வாதம் நம்நாட்டு உணவுக்கா.........சுவையுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.....
///எதிர் அணியினர் அயல்நாட்டு உணவயே சாப்பிட்டுகிட்டு இருந்தா சொந்த செலவுலேயே சூன்யம் வச்சுகிற மாதிரிதான் அர்த்தம்.///
என்னப்பா சொல்றீங்க எதிரணி???சீக்கிரம் வாங்க

ஈசன் வரும்போதே இப்படி அடுக்கினால்...!! அதா அனைவரும் சாப்பிட்டு வர போயிட்டாங்கபோல.....:))

///இட்லி-சாம்பார்
பொங்கல்-வடை,
பூரி-குர்மா,
பாயாசம்-வடை என்றவாறு எழுதும் போதே எல்லாவற்றையும் செய்து சாப்பிட்டு வந்து எழுதணும் போலுள்ளது. அந்தளவு சுவை
மிகுந்தது. உடலுக்கு நன்மை அளிப்பது.///நம் நாட்டு உணவை
உண்பவர்களை விட வெளி நாட்டு உணவு உண்பவர்களின் உடல் மிகவும்
பெரிதாக பருமனாக இருப்பதை நாம் காணலாம்.////

என்னப்பா அயல்நாட்டு உணவே அணி..!! உங்க உணவை சாப்பிடுபவர்களே பருமனா இருக்காங்களாம் உண்மையாவா.....????

அட பீஸாவில் இவ்வளவு வெரைட்டி இருக்கா???(நாளை வாங்கி சாப்பிட்டு பாக்கனும்.....:))

///தாவணியும் சேலையும் போய் சுடிதாரும் மிடியும் வந்தாச்சு.....
வேட்டியும் சட்டையும்போய் ஜீன்ஸ் வந்தாச்சு........
குங்குமமும் சாந்து பொட்டும் போய் ஸ்டிக்கர் பொட்டு வந்தாச்சு..........
நாட்டு வைத்தியம் போய் ஆங்கில வைத்தியம் வந்தாச்சு..........
ஆறடி கூந்தல் போய் பாப் கட்டிங் வந்தாச்சு...........
நம் நாட்டு சோடா, கல்ர் பானங்கள் போய் கொக்கோகோலா, பெப்ஸி வந்தாச்சு.......
இவையெல்லாம் மாறலாம் ஆனால் உணவு முறை மட்டும் மாறக் கூடாதா?. மேல்நாட்டு மக்கள் அவர்களின் உணவு முறையினால் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்கள். ////

////பீட்ஸாவை எடுத்துக்கோங்க எத்தனை வகைகள் இருக்கு... விதவிதமா பீட்ஸா செய்யறாங்களே... வெஜ் பீட்ஸா, சிக்கன் பீட்ஸா, மட்டன் பீட்ஸா, மீன் பீட்ஸா... இப்படி ஏராள்மான வகைகள் இருக்கு பீட்ஸாவில்.
பப்ஸை எடுத்துக்கோங்க எத்தனை விதமான பப்ஸ் இருக்கு... ////

அதானே அனைத்திலும் மாற்றனு வந்தப்புறம் உணவுமுறையில் மாற்றம் வராமலா போகும்.......அப்போ அயல்நாட்டு உணவே சிறந்ததுன்னு சொல்றீங்க......நீங்க என்ன சொல்லவறீங்க நம்நாட்டு உணவே அணி...!!!

நடுவரே எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ஏனென்றால் என்க்கு அயல் நாட்ட்டில் இந்தியா உள்ளடங்குகிறது . என்வே அயல் நாடா அல்லது மேலை நாடா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று,
என்னப்பா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க???எங்க இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்த அனைவரும் இந்தியரே....பல காரணங்களுக்காக மற்றநாடுகளில் வசிப்போர் அங்கத்திய கலர் கார்டுகளை வாங்கி உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.....ஆக நாம் இந்திய வம்சாவழி நாம் இந்தியர்,நமது உணவு முறை இந்திய கலாச்சாரத்துடையது......சரியா,எனக்கு தெரிந்தவரை சொல்ல்லியுள்ளேன்.....
தோழிகளே,இந்தத் தோழியின் சந்தேகத்திற்கான விளக்கம் மட்டுமே இது,பட்டியின் வாதங்களுக்கு இந்த பதிலை பயன்படுத்த வேண்டாம்.......:)
(நடுவரா இருப்பது எவ்வளவு கஷ்டம்னு இப்ப ப்ரியுதுடா சாமி.......அதுவும் இப்படி தலைப்பெடுத்தா...அவ்வளவுதான் போல........:())

நடுவர் அவர்களே மீண்டும் வணக்கம்.. எதிர் அணியினர் பட்டியின் தலைப்பையே சரியாக புரிந்து கொள்ளவில்லை போலும். என்ன செய்வது
அதிகளவு வெளி நாட்டு உணவுகளை உண்டுவிட்டார்கள் போலும் அவர்கள்.
உணவில் சுவை மட்டும் இருந்தால் போதும் ஆரோக்கியம் சமச்சீர் எல்லாம்
தேவையே இல்லை என்று எண்ணுகிறார்களா?? பீட்சா பொப்ஸ் கேக் பெப்ஷி
எல்லாம் அடிக்கடி சுவைக்க முடியாது. தினசரி அவற்றை சாப்பிட்டால் சர்க்கரை
வியாதி கொலோஷ்ற்றோல் போன்ற கடும் நோய்கள் தான் வரும். அவற்றால்
உடல் ஆரோக்கியம் கெடும்.
இங்கு வெளி நாட்டு உணவே சிறந்தது என வாதிடும் எதிரணியினரை சேர்ந்த
ஒருவர் தனக்கு பிடித்த உணவுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பிடித்த உணவு வகை: தமிழக உணவு வகைகள்.
பிடித்தமான உணவுகள்: அம்மாவின் கைமணம்
பிடித்த உணவகங்கள்: மனைவியின் சமையல்

இவ்வாறு விபரங்களில் தெரிவித்து விட்டு இங்கு வந்து வெளி நாட்டு உணவே சிறந்தது
என வாதிடுகிறார். ரொம்பவே சிரிப்பாக உள்ளது.
நம் நாட்டு உணவில் ரசம் ஒரு முக்கிய உணவாகும். திடீரென வரும்
ஜலதோஷம் ஜுரம் வரட்டு இருமல் மற்றும் உடல் நல குறைவுகளுக்கு
ரசமும் சாதமும் நல்லதொரு உணவாகும். இப்படி ஏதும் வெளி நாட்டு
உணவு வகைகளில் இருக்கிறதா?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் " east or west home is the best "
என்று. அது போல நமக்கு நம் நாட்டு உணவே என்றும் சிறந்தது சிறந்தது.
அதற்கு ஈடு இணை ஒரு போதும் கிடையாது. நடுவர் அவர்களே.
நன்றி வணக்கம்

//பிடித்த உணவு வகை: தமிழக உணவு வகைகள்.
பிடித்தமான உணவுகள்: அம்மாவின் கைமணம்
பிடித்த உணவகங்கள்: மனைவியின் சமையல்// நடுவர் அவர்களே... என்னை பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க, என் பக்கத்துக்குள்ளே நுழைந்து உணவை பற்றி என்ன எழுதி இருக்கிறேன் என கிண்டி கிளறி உளவுத்துறை வேலை பார்த்திருக்கும் சகோதரிக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

திருவருட்பா எழுதிய இராமலிங்க வள்ளலாரை பற்றி கேள்வி பட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவரோட ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு கடவுளின் பெயரிலும் பாடல்கள் இயற்றி வந்தார். முருகனை பற்றி எழுதினார். சிவனை பற்றி எழுதினார். இப்படி ஐந்து திருமுறைகளை எழுதிய அவர் கடைசியாக ஆறாம் திருமுறையை எழுத ஆரம்பிக்கும் பொழுது அவர் எழுதிய வார்த்தைகள் நான் எழுதிய ஐந்து திருமுறைகளும் இப்பொழுது தேவையில்லை... ஆறாம் திருமுறையான அருட்பெருஞ்ஜோதிதான் நிலையானது. அப்படி ஒரு வருடத்திற்க்கு முன் உணவை பற்றி நான் எழுதிய வாசகங்கள் இப்போது தேவையில்லாமலும் போகலாம்.
//நம் நாட்டு உணவில் ரசம் ஒரு முக்கிய உணவாகும். திடீரென வரும்
ஜலதோஷம் ஜுரம் வரட்டு இருமல் மற்றும் உடல் நல குறைவுகளுக்கு
ரசமும் சாதமும் நல்லதொரு உணவாகும். இப்படி ஏதும் வெளி நாட்டு
உணவு வகைகளில் இருக்கிறதா?// வெளி நாட்டு உணவு வகைல காலையில் பிரட் மட்டும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறார்கள். மதியமும் கூட கொழுப்பு குறைவான உணவையே உண்கின்றனர். அவர்களின் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்கிறார்கள். அசைவத்தை கூட அளவாகவே உபயோகப்படுத்துகிறார்கள். இதயநோய்கள் அதிகமாக தாக்குவது உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் இந்தியாவில்தான் அதிகம் என்பதை மறைத்து பேசக் கூடாது. சர்க்கரை நோயாளிகள்கூட இந்தியாவில்தான் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உணவே மருந்து என சொல்லிக் கொண்டு தினமும் கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டு மருத்துவமனைக்குள்ளேயே வாழ்நாளை கழிக்கின்றனர் இந்தியர்கள்.

பழமொழியை கூட வெளிநாட்டில் இருந்துதான் கடன் வாங்க வேண்டுமா நடுவர் அவர்களே... ஆங்கில பழமொழியெல்லாம் சொல்லலாம்.ஆனால் வெளிநாட்டு உணவு மட்டும் ஆகாதாம். மருமகள் உடைத்தால் பொன்குடம், மாமியார் உடைத்தால் மட்டும் மண்குடமா...?. இதற்க்கு ஒரு நல்ல தீர்ப்பை நீங்கள்தான் சொல்லவேண்டும் நடுவர் அவர்களே...

அன்புடன்
THAVAM

ஈசன் மற்றும் தவமணி உங்களின் வாதங்கள் தொடர்ந்து வருவதற்கு முதலில் எனது பாராட்டுகள்........
இருவரும் அவரவர் வாதங்களில் அவரவர் அணியை விட்டு கொடுக்காமல் வாதாடியுள்ளீர்கள்.///சளிக்கு ரசசாதம் நல்லதுன்னு தெரியும்......ஆனால் பிரட் எதற்கு நல்லதுன்னு புரியலியெ.........!!!///
ஆனாலும் ஈசனே பப்ஸும்,பெப்ஸியும் நன்றாகத்தானே இருக்கிறது........???
உணவே மருந்தெனக்கூறிவிட்டு வாழ்நாளில் பாதியை மருத்துவமனையில் கழிக்கின்றனராம்..??? நம்நாட்டு உணவே அணியினரின் பதில் என்னப்பா இதற்கு.......!!?பழமொழிகூட அங்கிருந்துஇதான் வாங்கனுமா......???இதை கண்டுபிடுச்சீங்க பாருங்க தவம்ஸ் அண்ணா அங்க நிக்கரீங்க நீங்க....:)

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே வணக்கம். எதிர் அணியினர்
இங்கு வாய்க்குள்ளும், வயிற்ருக்குள்ளும் நம் நாட்டு உணவையே வைத்துக்
கொண்டு என்னவோ வெளி நாட்டு உணவுகளையே எந்நேரமும் எந்நாளும்
உண்பது போல விவாதிக்கிறார்கள். என்னே அவர்களின் தேசியப் பற்று!!!
இவர்களால்தான் இப்போது நம் நாடுகளில் உள்ள நம்நாட்டு உணவகங்கள்
யாவும் மூடப்பட்டு வெளி நாட்டு உணவகங்களான மக் டொனால்ட்ஸ் KFC
subway pizza hut அதிகளவில் திறக்கிறார்கள் போலும்.
// என்னை பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க, என் பக்கத்துக்குள்ளே நுழைந்து உணவை பற்றி என்ன எழுதி இருக்கிறேன் என கிண்டி கிளறி உளவுத்துறை வேலை பார்த்திருக்கும் சகோதரிக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.//.

நடுவர் அவர்களே... இது உளவு வேலையல்ல, வெளிநாட்டு உணவே சிறந்த்தது என்று சொல்பவர்கள்
முதலில் தாங்கள் என்ன உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை
விட்டு " ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி பெண்ணே " என்பது போல எழுதக் கூடாது. புகை பிடிப்பவர்
மற்றவர்களை பார்த்து "புகைத்தல்" உடல் நலத்திற்கு கூடாது என சொல்ல கூடாது.

//கடைசியாக ஆறாம் திருமுறையை எழுத ஆரம்பிக்கும் பொழுது அவர் எழுதிய வார்த்தைகள் நான் எழுதிய ஐந்து திருமுறைகளும் இப்பொழுது தேவையில்லை... ஆறாம் திருமுறையான அருட்பெருஞ்ஜோதிதான் நிலையானது. அப்படி ஒரு வருடத்திற்க்கு முன் உணவை பற்றி நான் எழுதிய வாசகங்கள் இப்போது தேவையில்லாமலும் போகலாம்.//

சில வேலை அடுத்த வருடம் எதிர ணியனர் மீண்டும் நம் நாட்டு உணவுக்கே திரும்பி வரலாம். ஏன் சில வேளை
இப்பட்டி முடிந்ததும் கூட நம் நாட்டு உணவுக்கு வரலாம். நாம் இங்கு பட்டியில் விவாதிப்பது உணவு முறையை
பற்றி இராமலிங்க வள்ளலாரின் திரு வருட்பா பற்றி அல்ல நடுவர் அவர்களே.

//.. வெளி நாட்டு உணவு வகைல காலையில் பிரட் மட்டும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறார்கள். மதியமும் கூட கொழுப்பு குறைவான உணவையே உண்கின்றனர். ///

வெளிநாட்டினர் ஒன்றும் வெறும் பிரட் சாப்பிடுவதில்லை நடுவர் அவர்களே. ஒருவர் காலையில் சாப்பிடும்
பிரட்டின் நிறையே ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும். பிரடினுள் காய் கறி அசைவ உணவுகளை வைத்துதான்
உண்பர். அதன் கலோறியே 1000 க்கு மேல் வரும். மதியம் கூட செம பிடி பிடிப்பார்கள். சிக்கென் beef போர்க்
கடலுணவுகள் என்று அசைவ உணவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள், உணவகங்களுக்கு சாப்பிட போனால்
மூன்று முதல் நான்கு மணித்தியாலம் இருந்து சாப்பிட்டு உணவகத்தினையே காலி பண்ணி விட்டு தான் வெளியே
வருவார்கள். அசைவம் தான் அவர்களின் பிரியமான உணவு.

// இதயநோய்கள் அதிகமாக தாக்குவது உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் இந்தியாவில்தான் அதிகம் என்பதை மறைத்து பேசக் கூடாது. சர்க்கரை நோயாளிகள்கூட இந்தியாவில்தான் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//

வெளிநாட்டில் உள்ளவர்களும் அதிகளவில் இதய நோய் கொலோஷ்ற்றோல் சர்க்கரை வியாதி என்று பல்வேறு
நோய்களுக்கு உள்ளாகிறார்கள். தினசரி மருந்தகங்களிலும் மருத்துவ மனை களிலும் தவம் கிடக்கிறார்கள்.

//பழமொழியை கூட வெளிநாட்டில் இருந்துதான் கடன் வாங்க வேண்டுமா நடுவர் அவர்களே... ஆங்கில பழமொழியெல்லாம் சொல்லலாம்//

நடுவர் அவர்களே..
இங்கு பட்டியின் தலைப்பு உணவைப்பற்றியதே அன்றி மொழியை பற்றியதல்ல என்பதனை மதிப்பிற்குரிய
எதிர் அணியினர் புரிந்து கொள்ள வேண்டும். சில விடயங்களை தெளிவாக புரிய வைப்பதற்காகவே
ஆங்கில மொழி இங்கு உபயோக படுத்தப்பட்டு உள்ளது. ' உண்மையாக தூங்குபவர்களை எழுப்புவது இலகு
ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது'

//ஆனாலும் ஈசனே பப்ஸும்,பெப்ஸியும் நன்றாகத்தானே இருக்கிறது........???//

நடுவர் அவர்களே , பிந்திய ஆராய்ச்சியின்படி பப்ஸ் பெப்ஷியில் அதிகளவு சர்க்கரை மற்றும் இரசாயன
சேர்க்கைகள் இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் அவை உடலுக்கு தீங்குதான் எனவும்
சொல்லப்படுகிறது.

தமிழ் நாட்டு விருந்து உணவுகளையே விரும்பி உண்ணும் நீங்கள் "நம் நாட்டு உணவே சிறந்தது"
என மிக அருமையான தீர்ப்பை வழங்குவீர்கள் என்பது எம் அணியினரின்
நம்பிக்கை வாழ்த்துகள்

மேலும் சில பதிவுகள்