பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

நடுவரே... நம்ம ஆட்கள் வெளி நாடு போயிட்டு வந்தா பாருங்களேன்... குட்டியாவோ அல்லது பெருசாவோ ஒரு தொப்பை இருக்கும். ;) எல்லாம் கொழுப்பு... இதுவா நல்ல உணவு???

பீட்ஸா, பர்கர், ப்ரெட், கேக், சீஸ், சாஸ், கெட்சப், பட்டர், அரை வேக்காட்டு மாமிசம், சமைக்காத உணவு.... என்ன இருக்கு அந்த உணவில்??? சைவத்தை சமைச்சா கூட வைனும், ரம்மும் சேர்த்து சமைக்குற மக்கள்.... உப்பு காரம் எதுவும் தேடினாலும் கிடைக்காது சில நாட்டு உணவில்... வாய்லையே வைக்க முடியாது சில நாட்டு உணவில்!!!

நம்ம ஊர் வெய்யிலில் வயலில் வேலை பார்க்குறவங்க குடிக்கும் பழைய கஞ்சி, கூழ்.... அவங்களூக்கு தேவையான சத்தும் பலமும் கொடுக்கும், கூடவே உடலை குளிர்ச்சியாவும் வைக்கும்.

குளிரும் இடங்களில் நம்ம ஆட்கள் சாப்பிடும் சப்பாத்தி உடலில் உஷ்னத்தை உண்டாக்கி ஆரோகியமா வைக்கும்.

நம்ம ஆட்கள் குடிக்கும் இளநீரில் உள்ள சுவையும் சத்தும் ஆரோகியமும் அவங்க குடிக்கும் பெப்ஸி, கோக்கில் கிடைக்குமா சொல்லுங்க...

இது எல்லாத்துக்கும் மேல் நம்ம நாட்டு உணவே சிறந்ததுன்னு சொல்ல ஒரு உதாரணம்...

ஆரோக்கியம்... வெளி நாடுகளில் எல்லாம் அங்கேயே கிடைப்பவை அல்ல... பல நாடுகளில் காய்கள், பழங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வர வைக்கபடுபவை. அவை ஃப்ரெஷான ஆரோகியமானவை அல்ல... பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுபவை. வெளினாடுகளில் தான் அசைவத்தையும் பதப்படுத்தி அதிகமா பயன்படுத்தறாங்க. நம்ம ஊர் போல கண் முன் வெட்டி சிக்கன், மட்டன் வாங்குவது அங்கு ரொம்ப ரொம்ப ரொம்ப குறைவு. நம்ம ஊரில் தான் காய், பழம், கறி என எல்லாமே நம்ம ஊருது, ஃப்ரெஷ்ஷா வாங்குறோம், ஆரோக்கியமா சாப்பிடுறோம். முக்கியமா முழுசா வேக வெச்சு சாப்பிடுறோம். இதுவே நம்ம உணவை ஆரோகியமானதுன்னு முதல்ல நிக்க வைக்கும்.

சுவை... எப்பவுமே ஃப்ரோஜன் ஃபுட் விட ஃப்ரெஷ் ஃபுட் தானே சுவையானது??? அப்போ அந்த லிஸ்டையும் நம்ம நாட்டு உணவே முதல் இடத்தில் இருக்கு.

வகைகள்... கோடி கணக்கில் வகை வகையான சமையல்!!! ஊருக்கு ஊர், ஸ்டேட்டுக்கு ஸ்டேட் வித்தியாசமான உணவுகள் நம்ம ஊரில் தாங்க உண்டு!!! எத்தனை வகைன்னு பார்த்தாலும் நம்ம ஊர் தான் முதலிடம்!!!

இப்போ சொல்லுங்க நடுவரே... நம்ம நாட்டு உணவை விட நல்ல உணவு இருக்கா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசனின் சூடான வாதங்கள்,
ஆரம்பத்தில் இருந்த அனல்பறக்க்கும் வாதங்கள் உங்களிடம் அப்படியே இருக்கிறது.....வாழ்க,,,சரி அதென்ன கெடுதல்கள் பின்னால் சேர்ந்து கொள்கின்றன பப்ஸிலும்,கேக்கிலும்......???எனக்கு தெரியவில்லையே.....!!
நான் வாங்கி சாப்பிடலாம்னு இருந்தேன்,நல்லவேளை கண்திறந்தீர்கள்......பின் அந்த பாப்கான் சிக்கன் அதுமேலேயும் ஒருகண் இருக்கு நடுவருக்கு......எப்ப சாப்பிடப்போறேன்னு தெரியலை.........:)
தொடரட்டும் உங்களின் அணி வாதங்கள் சூடான நெய்ரோஸ்ட்டைப்போல.........

வனியின் வாதம்,
வாருங்கள் வனி, முதல்நாள் வந்தது.நடுவருக்கும் கொஞ்சம் வருத்தம்.....என்னடா 3நாள் ஆகியும் பட்டி இன்னும் சூடுபிடிக்கவில்லையேன்னு.....:( வந்துட்டீங்கள்ள இனி கலைகட்டிடும்,......

////எல்லாம் கொழுப்பு... இதுவா நல்ல உணவு???

பீட்ஸா, பர்கர், ப்ரெட், கேக், சீஸ், சாஸ், கெட்சப், பட்டர், அரை வேக்காட்டு மாமிசம், சமைக்காத உணவு.... என்ன இருக்கு அந்த உணவில்??? சைவத்தை சமைச்சா கூட வைனும், ரம்மும் சேர்த்து சமைக்குற மக்கள்.... உப்பு காரம் எதுவும் தேடினாலும் கிடைக்காது சில நாட்டு உணவில்... ////

ஓ.........இதெல்லாம்தான் அந்த தொப்பைக்கு காரணமா???

/////நம்ம ஊர் வெய்யிலில் வயலில் வேலை பார்க்குறவங்க குடிக்கும் பழைய கஞ்சி, கூழ்.... அவங்களூக்கு தேவையான சத்தும் பலமும் கொடுக்கும், கூடவே உடலை குளிர்ச்சியாவும் வைக்கும்.

குளிரும் இடங்களில் நம்ம ஆட்கள் சாப்பிடும் சப்பாத்தி உடலில் உஷ்னத்தை உண்டாக்கி ஆரோகியமா வைக்கும்.

நம்ம ஆட்கள் குடிக்கும் இளநீரில் உள்ள சுவையும் சத்தும் ஆரோகியமும் அவங்க குடிக்கும் பெப்ஸி, கோக்கில் கிடைக்குமா சொல்லுங்க...////

ஏம்ப்பா அயல்நாட்டு உணவே அணி வாங்கப்பா இங்க......,கேக்கறாங்களே கேள்வி,பலமும்,சுவையும்,வெயிலை தணிக்க குளிர்ச்சியும் கூடிய உணவுகளை அடுக்கிட்டாங்க நம்நாட்டு உணவே அணிக்காரங்க.....

இப்படி ஏதாவது அயல்நாட்டு உணவில் இருக்கான்னும் கேக்கறாங்க???பதில் என்ன??உண்டா???

////நம்ம ஊர் போல கண் முன் வெட்டி சிக்கன், மட்டன் வாங்குவது அங்கு ரொம்ப ரொம்ப ரொம்ப குறைவு. நம்ம ஊரில் தான் காய், பழம், கறி என எல்லாமே நம்ம ஊருது, ஃப்ரெஷ்ஷா வாங்குறோம், ஆரோக்கியமா சாப்பிடுறோம். முக்கியமா முழுசா வேக வெச்சு சாப்பிடுறோம். இதுவே நம்ம உணவை ஆரோகியமானதுன்னு முதல்ல நிக்க வைக்கும்.

சுவை... எப்பவுமே ஃப்ரோஜன் ஃபுட் விட ஃப்ரெஷ் ஃபுட் தானே சுவையானது??? அப்போ அந்த லிஸ்டையும் நம்ம நாட்டு உணவே முதல் இடத்தில் இருக்கு.

வகைகள்... கோடி கணக்கில் வகை வகையான சமையல்!!! ஊருக்கு ஊர், ஸ்டேட்டுக்கு ஸ்டேட் வித்தியாசமான உணவுகள் நம்ம ஊரில் தாங்க உண்டு!!! எத்தனை வகைன்னு பார்த்தாலும் நம்ம ஊர் தான் முதலிடம்!!!////

என்னங்கப்பா அயல்நாட்டு உணவே அணி,என்னபண்ரீங்க? உங்க எதிரணி பிச்சு உதற்றாங்கப்பா.......

லிஸ்ட்போட்டு,வகைவகையா சாப்பாட்டோட விருந்து படைப்பதுபோல வாதங்களை பதிவிடுராங்கப்பா......உங்கள் பதில் வாதம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார் நடுவர்.....சீக்கிரம் வாங்க வந்து பதில் கொடுங்க உங்க எதிரணிக்கு.......

kfc சிக்கனில் கூட்டம் அலை மோதுகிறதே... அதென்ன இந்திய உணவுக் கூடமா
//இப்போது நம் நாடுகளில் உள்ள நம்நாட்டு உணவகங்கள்
யாவும் மூடப்பட்டு வெளி நாட்டு உணவகங்களான மக் டொனால்ட்ஸ் KFC
subway pizza hut அதிகளவில் திறக்கிறார்கள் போலும்.// மிகச் சரியாக உன்மையை ஒத்துக் கொண்டுள்ளார் சகோதரி... நம் நாட்டு உணவுகளின் மேல் மக்களுக்கு நாட்டம் குறைந்ததனால்தானே வெளிநாட்டு உணவுக் கூடங்கள் இந்தியாவில் அதிகம் திறக்கப்பட்டு வருகின்றன... இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட வெளிநாட்டு உணவகங்கள் அதிகம் திறக்கப்படுகின்றன என்பதையும் மறக்காமல் மறைக்காமல் சொல்லுங்கள்.
//உப்பு காரம் எதுவும் தேடினாலும் கிடைக்காது சில நாட்டு உணவில்...// நம்ம நாட்டுல உப்பையும் காரத்தையும் அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு கிட்னி பாதித்தும் வயறு அல்சர் வந்தும் அவதி படுவது நல்லதா நடுவரே...
//கடலுணவுகள் என்று அசைவ உணவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்,// நடுவரே கடல் உணவில் நன்மை அதிகமா... தீமை அதிகமா? இதற்க்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்க்கு இன்னொரு பட்டி வைத்து வாதிட்டாலும் சரி... நியாயமான தீர்ப்பை வழங்குங்கள்.
//நம்ம ஊர் போல கண் முன் வெட்டி சிக்கன், மட்டன் வாங்குவது அங்கு ரொம்ப ரொம்ப ரொம்ப குறைவு. நம்ம ஊரில் தான் காய், பழம், கறி என எல்லாமே நம்ம ஊருது, ஃப்ரெஷ்ஷா வாங்குறோம்,// சிக்கன் மட்டன் வெட்டும் இடங்கள் சுகாதாரமாகவா இருக்கிறது... மனசாட்சியோடு பேச வேண்டும் எதிர் அணியினர்... ஈக்கள் மொய்த்தும் சுற்றிலும் துர்வாடை அடித்து கொண்டும் இருக்கிறது நம்ம ஊரு கசாப்பு கடை. வெளிநாட்டில் சுத்தமாக சுகாதாரமாக கறியை வெட்டி பதப்படுத்தி டின்னில் அடைத்து வைத்து கெடாமல் பாதுகாத்து உபயோகப் படுத்துகிறார்கள். பழங்கள்... அப்படியே ப்ரெஷா இருக்காமாம்!!! கார்பன் கல் வைத்து பழுக்க வைத்து மக்கள் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்களே... இதுவா சுகாதாரம்...???
இதையெல்லாம் பார்க்கும் பொழுது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுவையாகவும் தயாராகும் வெளிநாட்டு உணவுகளே அருமையானவை...
நடுவர் அவர்களே... லாலிபாப் சிக்கன் சாப்பிட்டு இருக்கீங்களா... ரொம்ப சூப்பரா இருக்குமாம்... எங்க பொண்ணுக்கு அதுதான் அதிகம் பிடிக்கும்... பாப்கார்ன் சிக்கனை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்ன்று...

அன்புடன்
THAVAM

அதானே....., எங்கடா இன்னும் காணமேன்னு காத்திருந்தேன்.....சரியான பதில்தான்.......

///ஈக்கள் மொய்த்தும் சுற்றிலும் துர்வாடை அடித்து கொண்டும் இருக்கிறது நம்ம ஊரு கசாப்பு கடை.///

நம்ம கறிக்கடையை பார்த்தால் ஆம்லெட் வந்திடும்....:(இதற்கு டின்னில் பாதுகாப்பாக இருக்க்கும் உணவே பரவால்லைப்பா....அதில் மொய்க்கின்ற ஈக்களை மட்டுமே கிராம்கணக்கில் வரும்போல.....!!!
அடடே ஆமாங்க,நம்ம நாட்டில் மட்டும் எங்கங்க ஆரோக்யமா இருக்கு?எல்லாம் கார்பன் வைத்து பழுக்கவைத்தது....பூச்சி மருந்து தெளித்து வளர்க்கப்பட்டது......இன்னும் பல சொல்றாங்கப்பா அயல்நாட்டு உணவே அணி........பதில் சொல்ல வரீங்களா நம்நாட்டு உணவே அணி.....???

///நம்ம நாட்டுல உப்பையும் காரத்தையும் அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு கிட்னி பாதித்தும் வயறு அல்சர் வந்தும் அவதி படுவது நல்லதா நடுவரே...///

என்னப்பா இப்படி கேக்கறாங்க? உப்பையும்,காரத்தையும் அள்ளி கொட்டீங்களாமே நம்நாட்டு உணவில்....அப்புறம் ஏன் வயிறு வலிக்காதுங்கறேன்......கேட்டுட்டேன் அயல்நாட்டு அணியினரே,பதில் வந்திடும்..........(என்னால முடிஞ்சது.....பத்த வைத்தாச்சு.....:)

வணக்கம். நான் வெளி நாட்டு உணவுமுறையே சிறன்தது என்ற தலைப்பில் பதிவு செய்கிறேன்.உணவு முறை, சமச்சீர் உணவு,ருசிக்காக உண்ணாமை, அளவு என்ற ஒரு திட்டமிட்ட உணவு முறை வெளினாட்டு உணவு முறையில் இன்றும் கட்டாயமாக கைபிடிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்கமுடியாது
இன்திய உணவுமுறையை இன்றைய காலக்கட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர அன்றைய காலக்கட்ட உணவுமுறையை பார்க்கக்கூடாது. ஹானஸ்ட்டாக இதை அணுக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வெளினாட்டு உண்வு முறை என்றாலே பலரும் நினைக்கும் ஒரு தப்பான கருத்து என்னவெனில், அதில் டின்டு புட் மட்டும்தான் என்பதுதான் அது. அது மிகத்தவறு

Awake, arise and stop not till the goal is reached

நடுவரே!

//நடுவரா இருப்பது எவ்வளவு கஷ்டம்னு இப்ப ப்ரியுதுடா சாமி.......அதுவும் இப்படி தலைப்பெடுத்தா...அவ்வளவுதான் போல........:())//
இப்படியொரு தலைப்பை தந்து உங்களை சிரமப்படுத்தியதற்கு வருந்துகிறேன். :-( இப்படியொரு சிரமத்தை நானும் எதிர்ப்பார்க்கவில்லை.ஆனால்,தமிழர்களாகிய நம் உணவில்
பெரிதும் வித்தியாசமில்லை என்று நினைக்கிறேன்.

எங்களணிக்காக விடாது வாதாடும் எங்களணித்தோழருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எதிரணியினர் நாங்கள் நம் உணவை மறந்துவிட்டு(நன்றி மறந்து) அயல் நாட்டு உணவுக்காக வாதாடுவதாக கூறினர்.

நடுவரே,நம் வசதிக்காக அணியும் சுடிதாரும்,ஜீன்ஸும் அயல் நாட்டு உடைதானே.ஒரு டூ வீலர் ஓட்டுவதற்குகூட சேலையைவிட சுடிதாரும்,ஜீன்ஸும் தானே வசதியா இருக்கு.சுடி,ஜீன்ஸ் போடுவதில் கம்ஃபர்டபிளா இருப்பதால்தான் அந்த உடைகளை அணிகிறோம்.அதற்காக சேலையை மறந்துவிட்டோம்னு அர்த்தம் இல்லை...நடுவரே!எதில் நன்மை அதிகம் இருக்கோ அதை தேர்ந்தெடுப்பதுதானே சிறந்தது!

அவசர காலத்துக்கு ஏற்றது - என என் அணித்தோழி குறிப்பிட்டதில் உண்மை உள்ளது நடுவரே.காலையில் அரக்க,பறக்க அலுவலகத்துக்கோ,பள்ளிக்கோ செல்பவர்கள் ப்ரெட் டோஸ்ட்,சீரியல்பார்,சாண்ட்விட்ச் இப்படி கொண்டு போனால் போகும்வழியில் கூட கையில் பிடித்த படியே சாப்பிட்டு கொள்ளலாம்.இட்லியோ,தோசையோ இப்படி சாப்பிட முடியுமா?சொல்லுங்க...

நம் நாட்டில் தான் இப்போது ஒபேசிட்டி எனும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது நடுவரே!அதற்கு நம் அறுசுவையில் வரும் ”உடல் எடையை குறைக்க வழி” போன்ற இழைகளே உதாரணம். நாம் உடல் எடையை கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைக்கவும் நாள்தோறும் சாப்பிடும் ஒட்ஸ் ஒரு அயல் நாட்டு உணவு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், நடுவரே.

எதிரணித்தோழி கூறியபடி நம் மக்கள் வெளி நாடுகளில் நம் உணவை தேடுவது,எதிர்ப்பார்ப்பது உண்மைதான்.அதே போல் நம்மவர்களும் வெளி நாட்டிலிருந்து வருபவர்களிடம் அங்கே கிடைக்கும் கேக் மிக்ஸ்,குக்கீ மிக்ஸ்,டிண்ட் ட்யூனா,கேண்ட் லெண்டில்ஸ் இப்படி பல பொருட்களை வாங்கி வர சொல்வதும் நடக்கிறது அல்லவா?

வெளி நாட்டவர்கள் ஃப்ரோசன் உணவை,காய்கறிகளை உபயோகிக்கிறார்கள் என்று எதிரணித்தோழி கூறினார். நடுவரே அங்கு கிடைக்காத உணவு மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்து ஃப்ரீஸ் செய்து வைப்பதால்தான் எங்களை போன்ற வெளி நாட்டு வாழ்மக்களுக்கு நம் நாட்டு வெண்டையும்,முருங்கையும் வருடம் முழுதும் கிடைக்கிறது.இது நல்ல விஷயம் தானே.

அதனால் அயல் நாட்டு உணவே சிறந்தது எனக் கூறி முதல் கட்ட வாதத்தை நிறைவு செய்கிறேன் நடுவரே.

வெளினாட்டு உண்வு முறை என்றாலே பலரும் நினைக்கும் ஒரு தப்பான கருத்து என்னவெனில், அதில் டின்டு புட் மட்டும்தான் என்பதுதான் அது. அது மிகத்தவறு சாப்பாட்டுக்கு முன் சாப்பாடு, முதன்மை உணவு, செறிமான் உணவு என 3 வகைப்படுத்தியும் குறைன்தது 5 பழங்கள், 5 காய்கறிகள் என ஏதாவது பட்டியல் உண்டா இன்திய உணவுமுறையில்?

Awake, arise and stop not till the goal is reached

இன்திய உணவு முறை இன்று சொல்லிக்கொள்ளும்வகையில் இல்லை. சத்து குறைவான, நோய் எதிர்ப்பு குறைவான, ருசியை மையமிட்ட சாப்பாடு என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உலகிலேயே மிக அதிகமான நீரிழிவு நோயாளிகள் மிகுன்த நாடு என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வெளினாட்டில் உள்
ளவர்களைப் பார்த்ததில்லை போலும் இவர்கள்? கொடியிடை மோகம் எங்கிருன்து வன்தது? நம்
ஊர் ஆளுக்கு வெள்ளை பெண்கள் மீது கண்கள்?
இவையெல்லாம் அவர்கள் உணவுமுறையால்தான்.

நாம் நினைக்கிறாப் போல இல்லை வெளினாட்டு உணவுகள். நம் உடலுக்கு ஒரு நாளைக்கு குறைன்தது 7 சத்துகள் தேவை, அவை கண்டிப்பாக உணவில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நடைமுறைப்படுத்திவருகிறாகள். வெறும் விவாதத்திற்காக இதை கூறவில்லை. (பால்)புரதம், நார், கொழுப்பு, மாவு, விட்டமின்,மின்ரல், நீர். இம்மாதிரி நாம் ஒருனாள் சாப்பிடமுடியுமா? யாரும் பதில் கூற முடியாது, ஏன்னா அதுதான் உண்மை.

Awake, arise and stop not till the goal is reached

நடுவரே!
நம் நாட்டு உணவு சுவையானதுதான்.ஆனால் அதை அளவோடு,சமச்சீராக உண்ணுகிறோமா என்பதுதான் என் கேள்வி.

காய்கறிகளை பச்சையாக உண்டால் அதன் சத்துக்கள் குறையாமல் நமக்கு கிடைக்கும். நாம் என்றைக்காவது காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுகிறோமா?இல்லை.

ஆனால் வெளி நாட்டவர்கள் சாப்பிடும் சாலட்டில் லெட்டஸ்,ஸ்பினாச்,கேரட்,டோஃபு,ஸ்ப்ரௌட்ஸ்,ப்ரோக்கலி இப்படி எல்லாம் சேர்த்து பச்சையாக சாப்பிடுகின்றனர்.

காலையில் உண்ணும் சிற்றுண்டி தான் ஒரு நாளின் மிக முக்கியமான உணவு.அதை சத்தாக சாப்பிட வேண்டும்,இல்லையா? ஆனால் பெரும்பாலும் நம் நாட்டில் பெரும்பாலானோர் நேரமின்மை,வறுமை,வேலைப்பளு,காலையில் சமைத்து சாப்பிட சோம்பேறித்தனம் என்று ஏதோ காரணத்தால் இந்த காலை உணவை சாப்பிடுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் வெளி நாட்டில் இந்த பிரச்சனை இல்லை.ப்ரெட்,ஜாம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் அல்லது சீரியல்,பால் மற்றும் வாழைப்பழம்.அவ்வளவுதான்.சுலபமாக,சத்தான காலை சிற்றுண்டி தயார்.

அதே போல் அவர்கள் சாப்பிடும் மதிய உணவில் எல்லா உணவுவகைகளும் அடங்கியிருக்கும்.வேக வைத்த க்ரீன் பீன்ஸ்,கேரட்,சிறிது லெண்ட்டில்ஸ்,சிறிது சாதம் அல்லது டார்ட்டில்லா மற்றும் சிறிது மாமிசம்.இப்படி எல்லா உணவுவகைகளும் குறைந்த அளவு சாப்பிடுவதால் எல்லா சத்துக்களும் கிடைக்கும்.ஒபேசிட்டியும் வராது.

ஆனால் நாம் சாப்பிடும் உணவில் பெரும்பகுதி அரிசி உணவுதான்.காய்களோ,கொட்டை வகைகளோ மிகவும் குறைவு.

அதேபோல் இரவு உணவை அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவர்.8 அல்லது 9 மணிக்கு தூங்கிவிடுவார்கள்.இதனால் அவர்களால் காலையில் சீக்கிரம் எழ முடியும்.உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும் முடியும்.

நாமோ 10 மணிக்கு பிறகு தான் இரவு உணவை சாப்பிடவே ஆரம்பிப்போம்.இது மிகவும் தவறான பழக்கம்.சாப்பிடுவது செரிக்காது.லேட்டாக தூங்கினால் காலையில் சீக்கிரம் எழ முடியாது.அடித்து,பிடித்து வேலைக்கு கிளம்பவே நேரமிருக்காது.இதில் எங்கே உடற்பயிற்சியை பற்றி சிந்திப்பது?

வெளி நாட்டவர்கள் மாமிசம் சாப்பிடுவது பற்றி எதிரணிதோழி கூறினார். நடுவரே அவர்கள் பொதுவாக மாமிசத்தை க்ரில் செய்தோ,பார்பிக்யூ செய்தோ சுட்டுதான் சாப்பிடுவார்கள்.ஆனால் நம்மவர்களோ அவற்றை பெரும்பாலும் அதிகம் எண்ணெய் சேர்த்தோ அல்லது எண்ணெயில் பொரித்தோ சாப்பிடுகின்றனர்.இதனால் உணவால் கிடைக்கும் நன்மையைவிட
சமைக்கும் மற்றும் சாப்பிடும் முறையால் வரும் நோய்களே அதிகம்.

அடுத்தது டயபட்டீஸ்.இது பற்றி எங்களணியினர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமையில் நார்ச்சத்து அதிகம் தான்.கூடவே கார்போஹைட்ரேட்டும் அதிகம்.மூன்று வேளையும் அதே சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது.

பெரும்பானமையான வெளி நாட்டு மக்கள் சரியான BMIயோடுதான் இருக்கிறார்கள் நடுவரே.சில விதிவிலக்குகள் இருக்கலாம்.அதுவும் உணவினால் தான் என்று சொல்ல முடியாது.உடல் கோளாறு மற்றும் ஹார்மோன் பிரச்சனையாகவும் இருக்கும்.

பெரும்பான்மையான வெளி நாட்டு உணவில் அதிகப்படியான காரம் இருக்காது.பெரும்பாலும் மிளகு தான் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இதனால் அல்சரோ,காரத்தினால் ஏற்படும் வேறு வயிற்று உபாதைகளோ நிச்சயம் வராது.

வெளி நாட்டவர்களைப் போல சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் தராமல் சமச்சீரான உணவை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாய் வாழலாம் என்பது என் கருத்து.

இல்லையெனில் சுவையை மட்டுமே நாடினால் அதுவே டயபட்டீஸ்,ப்ளட் ப்ரஷர்,அல்சர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.பின்னர் சர்க்கரை,உப்பு,காரம் இல்லாமல் சாப்பிட வேண்டியதுதான்.

இத்தகைய காரணங்களால் சமச்சீருடன் இருக்கும் அயல் நாட்டினரின் உணவுமுறையே சிறந்தது என்று கூறி என் இரண்டாம் கட்ட வாதத்தினை நிறைவு செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்