பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

//மிகச் சரியாக உன்மையை ஒத்துக் கொண்டுள்ளார் சகோதரி... நம் நாட்டு உணவுகளின் மேல் மக்களுக்கு நாட்டம் குறைந்ததனால்தானே வெளிநாட்டு உணவுக் கூடங்கள் இந்தியாவில் அதிகம் திறக்கப்பட்டு வருகின்றன...// - ஆமாம்... இப்படி எல்லாரும் நம்ம பாரம்பரிய உணவை விட்டு வெளிநாட்டு உணவின் மேல் உள்ள மோகத்தில் போனதால் தான் இன்னைக்கு “எடை குறைப்பது எப்படி”னு புலம்பறோம்!!! முன்பை விட இன்று பெயர் தெரியாத வியாதிகள் அதிகமா போனதுக்கு இது முதல் காரணம்!!!

நடுவரே... பேச்சுக்கு சொல்ல விரும்பல... உண்மையில் இன்னைக்கு நம்ம உணவு முறை ரொம்ப மாறி வருது... சுவை என்ற காரணத்துக்காக நமக்கு சம்பந்தமே இல்லாத பல விஷயங்களை உணவில் சேர்த்து சமைக்கிறோம். ரெடி மேட் ஃபுட், ரெடி மேட் மசாலா என இந்த பட்டியல் அடுக்கிட்டே போலாம்... இது எல்லாமே வெளிநாடுகளில் இருந்துவந்த பழக்கம். ஜெல்லி, ஜெலடின், சிட்டிரிக் ஆசிட், பேக்கிங் பவுடர், கொகோ பவுடர் என எல்லாம் நம்ம ஊரில் முன்பு இல்ல... இன்னைக்கு வெளினாட்டு காரர் மாதிரி நாமும் கேக், அது இதுன்னு சமைக்க துவங்கிட்டோம்... அதனால் தான் இன்னைக்கு கண்ணுக்கு தெரியாம நாம அழிவை நோக்கி போறோம். நம்ம ஆரோக்கியம் போனதுக்கு இது தான் முதல் காரணம். அந்த காலத்தில் தலைவலி காய்ச்சல்ன்னு படுத்ததே இல்லைன்னு சொல்லி 100 வயசு வரை ஓடி உழைச்சு வாழ்ந்தவங்க இருந்தாங்க... இன்னைக்கு 30 வயசுல ஹார்ட் அட்டாக், 40 வயதில் சுகர்!!! 60 வயசு வரை வாழ்ந்தாலே பெரிய விஷயமா போச்சு. காரணம் வெளிநாட்டு உணவுகளை உள்ள கொண்டுவந்தது தான்.

அந்த கால நம்ம நாட்டு உணவு முறையில் கீரைகள், கசப்பான வேப்பம்பூ, முருங்கை பூ,ஆரோக்கியமான காய்கள், பழங்கள் என பல இருந்தன. இன்னைக்கு நமக்கு பாட்டி வைத்தியம் கூட யாராவது சொன்னா தானே தெரியுது... பிள்ளை உண்டானா பத்தியம், பிள்ளை பெற்றால் பத்தியம் என உணவில் மருந்தை கொண்டு வாழ்ந்தாங்க நம்ம தாத்தா, பாட்டி காலத்தில்... பிரந்த குழந்தைக்கு உணவு கூட வீட்டில் செய்தவை தான்!!! அவங்கலாம் ஆரோக்கியமா இருந்தாங்க... இன்னைக்கு வெளினாட்டு காரங்க மாதிரி பிள்ளைக்கு வீட்டில் என்ன செய்து கொடுப்பதுன்னு தெரியாம cerelac, farex, nan, lactogen என போய் நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாம் தேடி கொடுப்பது ஆரோக்கிய குறைவு.

நம்ம ஊர் உணவு மட்டுமே உணவே மருந்தா அமையும்!!! பித்தம் தனிய ஒரு உணவு, பசிக்க ஒரு உணவு, பேதியை நிறுத்த ஒரு உணவு, வயிறை சுத்தம் பண்ண ஒரு உணவு, சளிக்கு ஒரு உணவு, காய்ச்சலுக்கு ஒரு உணவு, சூடை தனிக்க ஒரு உணவு, உடல் உஷ்னத்தை அதிகமாக்க ஒரு உணவு, இரும்புசத்து தர ஒரு உணவு, இருமலுக்கு ஒரு கஷாயம், பிள்ளை பெற்றால் பால் கிடைக்க ஒரு உணவு, பிள்ளை சுகபிரசவம் ஆக ஒரு உணவு, பிள்ளை பெற்றவருக்கு ஜன்னி வராமல் தடுக்க ஒரு உணவு, பெண் பிள்ளை வயதுக்கு வந்தால் ஒரு உணவு, வயதானால் ஒரு உணவு, சிறு பிள்ளைகளுக்கு ஒரு உணவு... இப்படி அவரவருக்கு ஏற்றபடி, உடல் நலத்துக்கு ஏற்றபடி உணவிலேயே மருந்தை கண்டுபிடிச்சவங்க நம்ம ஆட்கள் தான். வேறு எந்த நாட்டிலும் இதெல்லாம் கிடையாது நடுவரே. எல்லாம் மாத்திரை மருந்துலையே வாழுறவங்க.

இதெல்லாம் மறந்து KFC, mcdonalds, pizza hut'னு போக ஆரம்பிச்சு தான் இன்னைக்கு ஆரோக்கியம் போயிடுச்சு.

நம்ம உணவை விட சிறந்த மருந்தும், ஆரோக்யமான உணவும் வேறு இல்லை இல்லை இல்லை!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே!
சில வெளி நாட்டினரின் உணவுகள் நம் சுவைக்கு ஒத்து வராததாக தான் உள்ளது.ஆனால் பல வெளி நாட்டு உணவுகள் நம் நாட்டிலும்,மக்கள் தட்டுகளிலும் இடம் பிடித்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா?

பீட்சா,பர்கர் மட்டுமே வெளி நாட்டு உணவு அல்ல நடுவரே!

அரேபியர்களின் முக்கிய உணவான நாண்,ரோட்டி மற்றும் சப்பாத்திகளை தானே நாம் அதிகம் சாப்பிடுகிறோம்.

ஈரானியர்களின் உணவான பிரியாணிதான் இன்று நம் நாட்டின் பல உணவகங்களிலும் சக்கை போடு போடுகிறது என்பதை மறுக்க முடியுமா?அந்த பிரியாணியின் சில வகைகள் தான் வெஜிடபிள் பிரியாணி மற்றும் புலாவ் வகைகள்.இந்த உணவுகள் பிடிக்காதவரும் உண்டோ?

ஃபல்லூடா - அரேபியர்களின் கண்டுபிடிப்புதான்.

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ஐஸ் க்ரீம் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் கண்டுபிடிப்பான கேக் இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளதா?இன்று திருமணங்களிலும் கேக் வெட்டி கொண்டாட ஆரம்பித்துள்ளனர் நம் மக்கள்.

காய்ச்சலா ப்ரெட் சாப்பிடுங்க என்று மருத்துவர்களே பரிந்துரை செய்கிறார்களே,

அமெரிக்கா மற்றும் ப்ரான்ஸின் சூப் வகைகள்...முன்பு உணவகங்களில் மட்டும் விரும்பி குடிக்கும் சூப் வகைகளை இப்போதெல்லாம் வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்து விட்டோம்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்(நூடுல்ஸ்)ஸ்பெகட்டி,பாஸ்தா மற்றும் மெக்ரோனி எல்லாம் இத்தாலியர்களின் உணவுதானே.

அனைவருக்கும் பிடித்தமான சைனீஸ் நூடுல்ஸ் மற்றும் ஃப்ரைட் ரைஸ் சீனர்களின் உணவு அல்லவா?

காய்கறிகளே எடுத்துக் கொள்ளுங்கள்...கேரட்,பீன்ஸ்,முட்டை கோஸ்,காலிஃப்ளவர்,பீட்ரூட் எல்லாமே இங்கிலீஷ் காய்கறிகள் தானே.இவையெல்லாம் வெளி நாடுகளில் இருந்து கொண்டு
வரப்பட்டவை.இவைகளின் சுவை குறைவாக இருக்கலாம்.ஆனால் சத்துக்கள் நிறைந்தவை.

பீட்சா,பர்கர் எல்லாம் ஜன்க் ஃபுட்.அதனால் நம் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் கேலரிகள் கூடுகிறது என்கிறார்கள் எதிரணியினர்.உண்மைதான்.
நம் உணவுகளான வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா,பூரி எல்லாம் எண்ணெய் இல்லாமல் செய்கிறோமா?இவற்றால் கொலஸ்ட்ரால் கூடாதா?

எல்லாவற்றையும் விட பெரிய மாற்றம் வெளி நாட்டவர் போல நாமும் ஸ்பூனால் எடுத்து சாப்பிடுவது.இதனால் கை கழுவும் வேலையில்லை.:-)கைகளில் உள்ள அழுக்கு வயிற்றுக்கு போகாது.

நம் நாட்டு உணவகங்கள் வெளி நாடுகளில் இருப்பதை பெருமையாக கூறுகிறார் எதிரணித் தோழி.அப்படியிருக்க வெளி நாட்டு உணவகங்கள் நம் நாட்டில் இருப்பதில் என்ன தவறு உள்ளது?

நடுவரே! எதிரணித்தோழி சொல்வதுபோல் இப்போ எல்லாம் சிறு வயதிலேயே சர்க்கரை நோய்,இதய நோய்கள் வருவது அதிகமாயிடுச்சுதான்.அதற்கு காரணம் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது,உடற்பயிற்சியின்மை,பக்கத்தில் உள்ள இடத்துக்கும் வாகனத்தில் செல்லும் அளவு வசதி,தொலைக்காட்சிப்பெட்டி,கணினி பெட்டி முன் பல மணி
நேரங்கள் அசையாமல் உட்கார்ந்திருப்பது...இவைதான்.

முன் காலத்தில் அதிகம் நடந்தோம்.எந்திரங்களை சார்ந்திராமல் வீட்டு வேலைகளை நாமே செய்தோம்.விவசாயம்,தோட்டம் என்று உடலை வருத்தி வேலை செய்தோம்.இப்போது அதெல்லாம் இல்லை.அதே அளவு உணவு.ஆனால் உடலுழைப்பு குறைந்து விட்டது.இதுதான் நம் உடல் பருமனுக்கு காரணமே தவிர பீட்ஸாவும்,பர்கரும் அல்ல.பீட்ஸா,பர்கர் உண்ணாதவர்களும்(பிடிக்காதவர்களும்) பருமனாக இருக்கிறார்களே.இதே நிலை நீடித்தால் மருந்தையே உணவாக உண்ணும் நிலைதான் வரும்.

பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன்......நீங்களும் அயல்நாட்டு அணிப்பக்கமா???
நல்ல கருத்துகளை பதிவிட்டு உள்ளீர்கள்..ஒரு நாளைக்கு 7சத்து சாப்பிடனும்னு நீங்க சொல்லிதான் தெரியும்......

////முதன்மை உணவு, செறிமான் உணவு என 3 வகைப்படுத்தியும் குறைன்தது 5 பழங்கள், 5 காய்கறிகள் என ஏதாவது பட்டியல் உண்டா இன்திய உணவுமுறையில்?////
///நாம் நினைக்கிறாப் போல இல்லை வெளினாட்டு உணவுகள். நம் உடலுக்கு ஒரு நாளைக்கு குறைன்தது 7 சத்துகள் தேவை, அவை கண்டிப்பாக உணவில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நடைமுறைப்படுத்திவருகிறாகள். வெறும் விவாதத்திற்காக இதை கூறவில்லை. (பால்)புரதம், நார், கொழுப்பு, மாவு, விட்டமின்,மின்ரல், நீர். இம்மாதிரி நாம் ஒருனாள் சாப்பிடமுடியுமா? யாரும் பதில் கூற முடியாது, ஏன்னா அதுதான் உண்மை.///

என்னப்பா நம்நாட்டு உணவே அணி,நம்ம உணவில் இப்படி 7சத்துகளையும் கொண்ட ஒருநாளைய உணவுமுறை தெரியுமா???கேக்கறாங்க உங்க எதிரணி.....
இன்னும் பல கருத்துகளுடன் வாதத்தைக் கொடுங்கள் ஹேமா........:)

ஹர்ஷா உங்கள் வாதங்களை அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள்....இவற்றை மறுக்க முடியாதுதான்..இருந்தாலும் உங்கள் எதிரணியினர் என்ன பதில்வாதம் கொடுக்கின்றனர் என்று பார்ப்போம்........காத்திருங்கள் ......

///அவசர காலத்துக்கு ஏற்றது - என என் அணித்தோழி குறிப்பிட்டதில் உண்மை உள்ளது நடுவரே.காலையில் அரக்க,பறக்க அலுவலகத்துக்கோ,பள்ளிக்கோ செல்பவர்கள் ப்ரெட் டோஸ்ட்,சீரியல்பார்,சாண்ட்விட்ச் இப்படி கொண்டு போனால் போகும்வழியில் கூட கையில் பிடித்த படியே சாப்பிட்டு கொள்ளலாம்.இட்லியோ,தோசையோ இப்படி சாப்பிட முடியுமா?சொல்லுங்க.../////

அதானே நம்ம தோசையை சாம்பார்ல நனச்சு பஸ் பிரேக் போடும்போது சர்ட்டெல்லாம் சிந்தி சாப்பிடனும்..:( முடியுமா.???

///நம் நாட்டில் தான் இப்போது ஒபேசிட்டி எனும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது நடுவரே!அதற்கு நம் அறுசுவையில் வரும் ”உடல் எடையை குறைக்க வழி” போன்ற இழைகளே உதாரணம். நாம் உடல் எடையை கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைக்கவும் நாள்தோறும் சாப்பிடும் ஒட்ஸ் ஒரு அயல் நாட்டு உணவு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், நடுவரே.///

நம்நாட்டு உணவில் இப்படி உடலிலைக்க மருத்துவ உணவு இல்லையா என்ன பதில் கேக்கராங்கப்பா......(பத்திப்போட்டாச்சு வெடிச்சா சரி.ஹி...ஹி...)

/// நம்மவர்களும் வெளி நாட்டிலிருந்து வருபவர்களிடம் அங்கே கிடைக்கும் கேக் மிக்ஸ்,குக்கீ மிக்ஸ்,டிண்ட் ட்யூனா,கேண்ட் லெண்டில்ஸ் இப்படி பல பொருட்களை வாங்கி வர சொல்வதும் நடக்கிறது அல்லவா?///

நம் உணவை சாப்பிடுவோர் எதுக்குப்பா அங்க இருந்து வாங்கிவர சொல்றீங்க???போச்சா,......

///வெளி நாட்டவர்கள் ஃப்ரோசன் உணவை,காய்கறிகளை உபயோகிக்கிறார்கள் என்று எதிரணித்தோழி கூறினார். நடுவரே அங்கு கிடைக்காத உணவு மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்து ஃப்ரீஸ் செய்து வைப்பதால்தான் எங்களை போன்ற வெளி நாட்டு வாழ்மக்களுக்கு நம் நாட்டு வெண்டையும்,முருங்கையும் வருடம் முழுதும் கிடைக்கிறது.இது நல்ல விஷயம் தானே./////

கண்டிப்பா இது நல்ல விஷயம்தானே....சொல்லுங்க நம்நாட்டு உணவே அணி....

/////காய்கறிகளை பச்சையாக உண்டால் அதன் சத்துக்கள் குறையாமல் நமக்கு கிடைக்கும். நாம் என்றைக்காவது காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுகிறோமா?இல்லை.

ஆனால் வெளி நாட்டவர்கள் சாப்பிடும் சாலட்டில் லெட்டஸ்,ஸ்பினாச்,கேரட்,டோஃபு,ஸ்ப்ரௌட்ஸ்,ப்ரோக்கலி இப்படி எல்லாம் சேர்த்து பச்சையாக சாப்பிடுகின்றனர்./////

பச்சையா சாப்பிட நாமென்ன ஆடா,மாடான்னு கேக்கராங்க நம்ம பசங்க......:(

////நடுவரே அவர்கள் பொதுவாக மாமிசத்தை க்ரில் செய்தோ,பார்பிக்யூ செய்தோ சுட்டுதான் சாப்பிடுவார்கள்.ஆனால் நம்மவர்களோ அவற்றை பெரும்பாலும் அதிகம் எண்ணெய் சேர்த்தோ அல்லது எண்ணெயில் பொரித்தோ சாப்பிடுகின்றனர்.இதனால் உணவால் கிடைக்கும் நன்மையைவிட
சமைக்கும் மற்றும் சாப்பிடும் முறையால் வரும் நோய்களே அதிகம்./////

என்னப்பா அப்படியா?நீங்க செய்முறையை மாற்றிட்டு உணவை குறைசொன்னால் எப்படி..???நான் கேக்கலை உங்க எதிரணி கேக்கராங்க....

////பீட்சா,பர்கர் மட்டுமே வெளி நாட்டு உணவு அல்ல நடுவரே!

அரேபியர்களின் முக்கிய உணவான நாண்,ரோட்டி மற்றும் சப்பாத்திகளை தானே நாம் அதிகம் சாப்பிடுகிறோம்.

ஈரானியர்களின் உணவான பிரியாணிதான் இன்று நம் நாட்டின் பல உணவகங்களிலும் சக்கை போடு போடுகிறது என்பதை மறுக்க முடியுமா?அந்த பிரியாணியின் சில வகைகள் தான் வெஜிடபிள் பிரியாணி மற்றும் புலாவ் வகைகள்.இந்த உணவுகள் பிடிக்காதவரும் உண்டோ?

ஃபல்லூடா - அரேபியர்களின் கண்டுபிடிப்புதான்.

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ஐஸ் க்ரீம் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் கண்டுபிடிப்பான கேக் இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளதா?இன்று திருமணங்களிலும் கேக் வெட்டி கொண்டாட ஆரம்பித்துள்ளனர் நம் மக்கள்.

காய்ச்சலா ப்ரெட் சாப்பிடுங்க என்று மருத்துவர்களே பரிந்துரை செய்கிறார்களே,

அமெரிக்கா மற்றும் ப்ரான்ஸின் சூப் வகைகள்...முன்பு உணவகங்களில் மட்டும் விரும்பி குடிக்கும் சூப் வகைகளை இப்போதெல்லாம் வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்து விட்டோம்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்(நூடுல்ஸ்)ஸ்பெகட்டி,பாஸ்தா மற்றும் மெக்ரோனி எல்லாம் இத்தாலியர்களின் உணவுதானே.

அனைவருக்கும் பிடித்தமான சைனீஸ் நூடுல்ஸ் மற்றும் ஃப்ரைட் ரைஸ் சீனர்களின் உணவு அல்லவா?////

"அயல்நாட்டு உணவுன்னா பீஸா பர்கர்தானா....??அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ இருக்கு பாருங்க..."

////பீட்சா,பர்கர் எல்லாம் ஜன்க் ஃபுட்.அதனால் நம் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் கேலரிகள் கூடுகிறது என்கிறார்கள் எதிரணியினர்.உண்மைதான்.
நம் உணவுகளான வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா,பூரி எல்லாம் எண்ணெய் இல்லாமல் செய்கிறோமா?இவற்றால் கொலஸ்ட்ரால் கூடாதா?

எல்லாவற்றையும் விட பெரிய மாற்றம் வெளி நாட்டவர் போல நாமும் ஸ்பூனால் எடுத்து சாப்பிடுவது.இதனால் கை கழுவும் வேலையில்லை.:-)கைகளில் உள்ள அழுக்கு வயிற்றுக்கு போகாது./////

ஒருநாள் ஆசைக்காக பஜ்ஜி சாப்பிட்டால் இரண்டுநாள் வாயுத்தொல்லை....மறுக்கமுடியவில்லையே....:((
அட ஆமாப்பா ஸ்பூன்ல சாப்பிடுவது.....என்பையன்கூட,ஹோட்டல்ல ஸ்பூனும் ஃபோக்கும் ,கூடவே டிஸ்யூ பேப்பரும் கேக்கரான்.....சந்தோஷமாதான் இருக்கு,,(ஆனா,ஸ்பூன் நல்லா கழுவியிருபாங்கள்ளா........:())

//// இப்படி எல்லாரும் நம்ம பாரம்பரிய உணவை விட்டு வெளிநாட்டு உணவின் மேல் உள்ள மோகத்தில் போனதால் தான் இன்னைக்கு “எடை குறைப்பது எப்படி”னு புலம்பறோம்!!! முன்பை விட இன்று பெயர் தெரியாத வியாதிகள் அதிகமா போனதுக்கு இது முதல் காரணம்!!!

நடுவரே... பேச்சுக்கு சொல்ல விரும்பல... உண்மையில் இன்னைக்கு நம்ம உணவு முறை ரொம்ப மாறி வருது... சுவை என்ற காரணத்துக்காக நமக்கு சம்பந்தமே இல்லாத பல விஷயங்களை உணவில் சேர்த்து சமைக்கிறோம். ரெடி மேட் ஃபுட், ரெடி மேட் மசாலா என இந்த பட்டியல் அடுக்கிட்டே போலாம்... இது எல்லாமே வெளிநாடுகளில் இருந்துவந்த பழக்கம். ஜெல்லி, ஜெலடின், சிட்டிரிக் ஆசிட், பேக்கிங் பவுடர், கொகோ பவுடர் என எல்லாம் நம்ம ஊரில் முன்பு இல்ல... இன்னைக்கு வெளினாட்டு காரர் மாதிரி நாமும் கேக், அது இதுன்னு சமைக்க துவங்கிட்டோம்... அதனால் தான் இன்னைக்கு கண்ணுக்கு தெரியாம நாம அழிவை நோக்கி போறோம். நம்ம ஆரோக்கியம் போனதுக்கு இது தான் முதல் காரணம். ////

உங்க உணவுன்னா நீங்களே சாப்பிட வேண்டியதுதானே...!!ஏன்ப்பா இங்ககூட பழ்க்கபடுத்தறீங்க? இந்த டின் பவுடர்ஸ்,ரெடிமேட் பவுடர்ஸால எவ்வளவு கெடுதல் தெரியுமா.....???
நல்லா கேட்டுட்டேன் வனி, அவங்க பதில் என்னன்னு பார்ப்போம்...

////அந்த கால நம்ம நாட்டு உணவு முறையில் கீரைகள், கசப்பான வேப்பம்பூ, முருங்கை பூ,ஆரோக்கியமான காய்கள், பழங்கள் என பல இருந்தன. இன்னைக்கு நமக்கு பாட்டி வைத்தியம் கூட யாராவது சொன்னா தானே தெரியுது... பிள்ளை உண்டானா பத்தியம், பிள்ளை பெற்றால் பத்தியம் என உணவில் மருந்தை கொண்டு வாழ்ந்தாங்க நம்ம தாத்தா, பாட்டி காலத்தில்... பிரந்த குழந்தைக்கு உணவு கூட வீட்டில் செய்தவை தான்!!! அவங்கலாம் ஆரோக்கியமா இருந்தாங்க... இன்னைக்கு வெளினாட்டு காரங்க மாதிரி பிள்ளைக்கு வீட்டில் என்ன செய்து கொடுப்பதுன்னு தெரியாம cerelac, farex, nan, lactogen என போய் நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாம் தேடி கொடுப்பது ஆரோக்கிய குறைவு.////

அதானே ஒவ்வொரு உணவுப்பொருளும் வெறும் சுவைக்கு சேர்ப்பதில்லை....மருத்துவமும் அடங்கியுள்ளது......உங்களுதில் அப்படி இருக்கான்னு கேக்கராங்க நம்நாட்டு உணவே அணி.....நாம பழகியதுமட்டுமில்லாம குழந்தைகளின் உடலையும் இப்பிருந்தே மற்றதற்ற்கு பழக்கனுமா......:(??

////நம்ம ஊர் உணவு மட்டுமே உணவே மருந்தா அமையும்!!! பித்தம் தனிய ஒரு உணவு, பசிக்க ஒரு உணவு, பேதியை நிறுத்த ஒரு உணவு, வயிறை சுத்தம் பண்ண ஒரு உணவு, சளிக்கு ஒரு உணவு, காய்ச்சலுக்கு ஒரு உணவு, சூடை தனிக்க ஒரு உணவு, உடல் உஷ்னத்தை அதிகமாக்க ஒரு உணவு, இரும்புசத்து தர ஒரு உணவு, இருமலுக்கு ஒரு கஷாயம், பிள்ளை பெற்றால் பால் கிடைக்க ஒரு உணவு, பிள்ளை சுகபிரசவம் ஆக ஒரு உணவு, பிள்ளை பெற்றவருக்கு ஜன்னி வராமல் தடுக்க ஒரு உணவு, பெண் பிள்ளை வயதுக்கு வந்தால் ஒரு உணவு, வயதானால் ஒரு உணவு, சிறு பிள்ளைகளுக்கு ஒரு உணவு... இப்படி அவரவருக்கு ஏற்றபடி, உடல் நலத்துக்கு ஏற்றபடி உணவிலேயே மருந்தை கண்டுபிடிச்சவங்க நம்ம ஆட்கள் தான். வேறு எந்த நாட்டிலும் இதெல்லாம் கிடையாது நடுவரே. எல்லாம் மாத்திரை மருந்துலையே வாழுறவங்க.//////

சொல்லுங்கப்பா இப்படி சீஸனுக்கு தக்க உணவும்,உடல்நிலைக்கு தகுந்த உணவும் வேறு எங்கு கிடைக்கும்??இல்லை இப்படி சமைத்து பக்குவமா கொடுக்க பழக்கும் உணவுமுறை வேற எந்த நாட்டில் இருக்கும்??? இப்படில்லாம் உங்களை மடக்குறாங்க நம்நாட்டு உணவே அணி...
வாங்க வந்து தக்க பதில் கொடுங்க......

//அட ஆமாப்பா ஸ்பூன்ல சாப்பிடுவது.....என்பையன்கூட,ஹோட்டல்ல ஸ்பூனும் ஃபோக்கும் ,கூடவே டிஸ்யூ பேப்பரும் கேக்கரான்.....சந்தோஷமாதான் இருக்கு,,(ஆனா,ஸ்பூன் நல்லா கழுவியிருபாங்கள்ளா........:())// - நம்ம கை சுத்தமா இருக்கான்னு நம்ப மாட்டங்கறோம்... யார் யாரோ சாப்பிட்டு வெச்சுட்டு போற ஸ்பூன் அவங்க ஒழுங்க கழுவி சுத்தமா கொடுப்பாங்கன்னு நம்பறோம் ;( என்ன கொடுமை நடுவரே!!!

//நாண், பிரியாணி, புலாவ், ஃபல்லூடா, ஐஸ் க்ரீம், கேக், ப்ரெட், நூடுல்ஸ், ஸ்பெகட்டி, பாஸ்தா, மெக்ரோனி, ஃப்ரைட் ரைஸ்// - எதாவது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமே தரும்னு சொல்லுங்க பார்ப்போம்!!! நம்ம கவனத்துக்கு வராம எத்தனை வெளினாட்டு ஜன்க் உணவுகள் நம்ம நாட்டுக்குள் புகுந்து இருக்கு பாருங்க... நம்ம ஆட்கள் எப்பவுமே அப்படி தான் நடுவரே... வெள்ளக்காரன் கையில் நாட்டை கொடுத்துட்டு காப்பாத்த பலரும் உயிரை விட்ட மாதிரி இன்னைக்கு அவன் நாட்டு உணவுகளை கொண்டு வந்துட்டு விட முடியாம உடம்பை கெடுத்துக்குறோம். இது தான் உண்மை.

வெளிநாட்டு உணவுன்னா பீட்ஸா பர்கர் டின் ஃபுட் மட்டும் இல்லைன்னு சொல்றாங்க... உண்மை... அதே போல் நம்ம நாட்டு உணவுன்னா பஜ்ஜி, போண்டா மட்டும் இல்லை. இன்று வெளிநாட்டு உணவின் ஆதிக்கம் அதிகமானதால் தான் நம்ம நாட்டு உணவின் பாரம்பரியம் மாறி போச்சு. அந்த காலத்தில் தக்காளி எல்லாம் சேர்க்காம சமைச்சாங்க... இன்னைக்கு தக்காளி இல்லாத சமையலா??? உருளைக்கிழங்குலாம் பார்த்ததே இல்லையாம் கிராமத்தில்... இன்று உருளை தானே முதல் இடம். நம்ம உணவு கலாச்சாரம் மாறி வருகிறது நடுவரே... அதுவே இன்று நம்ம நாட்டில் நோய் அதிகமாக காரணம். எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம பாட்டி காலத்து ஆரோக்கிய சமையல் ஆரம்பிச்சா எல்லாமே நல்லா இருக்கும்.

அந்த அந்த சீசனில் அந்த அந்த காய், பழம் சாப்பிட்டா தான் உடலுக்கு நல்லதுன்னு சொல்றாங்க நடுவரே... வெளிநாட்டு காரங்க மாதிரி கிடைக்கிறப்போ அதை பதப்படுத்தி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரு அணிகளும் எங்கே.....???
அட எங்கப்பா போனீங்க??(ஒருவேளை உணவுகளை மாற்றி சாப்பிட்டு பார்க்கபோயிட்டீங்களோ.......!!)சீக்கிரம் வந்து வாதங்களைக் கொடுங்கப்பா......நடுவர் குழம்பி காத்திருக்காருல்ல.......

நடுவரே!
அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கள்,பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியம்தான்.அதை நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா?சொல்லுங்க.ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி,பழங்களை மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து,அதன் சத்துக்களை வீணடிக்கிறோம்.நமக்கு கிடைக்கும் பொருட்களை வீணடித்து விட்டு ஃப்ரோசன் காய்கறிகளை உபயோகிக்கும் வெளிநாட்டு உணவை குறை சொல்வது சரியல்ல.

நம் தினசரி உணவை விட வெளி நாட்டு உணவுகளில் பயறு வகைகள்,கொட்டை வகைகள் மற்றும் பச்சை காய்கறிகள் காம்போவாக தான் சாப்பிடுகின்றனர்.அப்படிப்பார்த்தால் நம் உணவைவிட அவை ஆரோக்கியமான,சத்துக்கள் நிறைந்தவைதான்.

சூப் வகைகள் மற்றும் சாலட் வகைகள் சுவையும்,சத்தும் நிறைந்தவை.குறைவான கலோரி கொண்டதால் டயட்டுக்கும் ஏற்ற உணவுகள்.இவையெல்லாம் வெளி நாட்டு உணவால் கிடைத்த நன்மைகளே.

வெளி நாட்டு உணவுகளின் கலோரிகள் கணக்கிடப்பட்டவை.எந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பது தெரிவதால் அளவு அதிகமாகாமல் சாப்பிட முடியும்.ஆனால் நம் உணவில் உள்ள கலோரியின் அளவு நமக்கு தெரியாது. நம் மக்களின் எடை மற்றும் உடல் பருமன் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.

பாட்டி வைத்தியங்கள் கூட இந்த காலத்தில் பயனற்றதாக ஆகிவிட்டது நடுவரே.இந்த காலத்தில் வரும் நோய்கள் கூட ஆங்கில மருத்துவத்துக்கு தான் கட்டுபடுகின்றன.அப்படியிருக்க பாட்டிகால உணவுகள் மற்றும் உணவு முறை எல்லாம் இந்த அவசர காலத்துக்கு ஒத்துவராது.நம் முன்னோர்களின் பல நல்ல உணவுகளை கூட சரியான முறையில் சமைக்காமல்,சமைக்கும் முறை தெரியாமல் மறந்துவிடுகிறோம் என்பதே உண்மை.

பல வெளி நாடுகளில் ப்ரௌன் அரிசி,ப்ரௌன் சுகர் தான் பயன்படுத்துகிறார்கள். நம் உணவில் பாவிப்பது எல்லாம் வெள்ளைதான்.இதை எப்படி ஆரோக்கியம் என்று சொல்ல முடியும்?

குழந்தைகளுக்கு லாக்டோஜன் கொடுப்பதாக எதிரணித்தோழி கூறினார்.நடுவரே, தாய்ப்பால் பற்றாத,கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சத்துக்கள் ஓரளவு நிறைந்திருக்கும் ஃபார்முலா மில்க் ஒரு வரப்பிரசாதம் தானே நடுவரே.சரி...ஃபார்முலா மில்க் வேண்டாம்.அதற்கு இணையான நம் நாட்டு உணவை எதிரணியினரை சொல்ல சொல்லுங்கள்.இனி அதையே குழந்தைகளுக்கு தரலாம்.

கலோரி குறைவான,கொழுப்பு நீக்கப் பட்ட முறையில் செய்யப்படும் வெளி நாட்டு உணவுகளே சிறந்தது... நடுவரே!

வெளி நாட்டு உணவுமுறைக்கு அடிப்படையிலிருன்து ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன்.அதற்கு முன் ஒருசில வினாக்கள் கேட்க விரும்புகிறேன், யாரேனும் இன்திய அணிக்காக வாதிடுவோர் இக்கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் பார்க்கலாம்?
பிறக்கும் குழன்தைக்கு நாம் எப்போது திட உணவு கொடுக்க ஆரம்பிக்கிறோம்?அவை என்னென்ன? எப்படி கொடுக்கிறோம்? குழன்தைக்கான சமச்சீர் உணவு என்றால் என்ன? குழன்தைக்கான சிற்றுண்டி என்றால் என்ன? எத்தனை வேளை கொடுக்கவேண்டும்?
ஒரு குழன்தைக்கு என உங்களின் பதிலைத் தொடர்ன்து பின் ஒரு சராசரி மனிதனின் உணவு முறையை நிரூபிக்க என் வாதங்களைத் தொடரலாம் என கருதுகிறேன். நியாயமானவர்கள்தானா எதிரணியினர் என்று பார்ப்போம்!!!!

Awake, arise and stop not till the goal is reached

நாங்க உண்மையை மட்டுமே பேச விரும்பறோம்.. அதனால் என் குழந்தைக்களுக்கு நான் கொடுத்த உணவை பற்றியே சொல்கிறேன்...

பிறக்கும் குழன்தைக்கு நாம் எப்போது திட உணவு கொடுக்க ஆரம்பிக்கிறோம்// - 6 மாதத்தில் இருந்து

அவை என்னென்ன // - முதலில் துவங்கியது கோதுமை கஞ்சியில் இருந்து. கொஞ்சம் கொஞ்சமாக ராகி கஞ்சி, சத்து மாவு கஞ்சி, இட்லி, பொங்கல், உப்மா என இப்போது எல்லா உணவும் கொடுக்க ஆரம்பித்தாயிற்று.

எப்படி கொடுக்கிறோம் // - வழக்கம் போல ஊட்டி தான் விடுறோம்... எப்படின்னா என்ன சொல்ல?? சமைச்ச உணவு தான்.

குழன்தைக்கான சமச்சீர் உணவு என்றால் என்ன?// - பால், பழம், காய்கள், கீரை வகைகள் என நன்றாக சுத்தமாக சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு.

குழன்தைக்கான சிற்றுண்டி என்றால் என்ன // - முதல்ல சொன்னதே தான்... கஞ்சி வகைகள், இட்லி, பொங்கல், தோசை இது தான். நிச்சயம் ப்ரெட் இல்லை, ஜாம் இல்லை.

எத்தனை வேளை கொடுக்கவேண்டும் // - இதுக்கு கணக்கு ஏது??? குழந்தைக்கு பசிக்கும்போது கொடுக்க வேண்டியது தான்... காலை ஒழுங்கா சாப்பிடலன்னா கொஞ்ச நேரம் விட்டு வேறு மாதிரி எதாவது கொடுக்க வேண்டும்.

//பல வெளி நாடுகளில் ப்ரௌன் அரிசி,ப்ரௌன் சுகர் தான் பயன்படுத்துகிறார்கள். நம் உணவில் பாவிப்பது எல்லாம் வெள்ளைதான்.இதை எப்படி ஆரோக்கியம் என்று சொல்ல முடியும்?// - இதை ஒத்துக்கவே முடியாது நடுவரே... ஏதோ ஒரு நாட்டில் பயன்படுத்துவதை பலர் பயன்படுத்துவதுன்னு சொன்னா, உண்மையில் இந்தியாவில் தான் இவை அதிகம். நம்ம ஊரில் தான் ப்ரவுன் அரிசி, வெல்லம், கருப்பட்டி பயன்பாடு அதிகம். நம்ம ஊரில் கருப்பட்டி காப்பி கேட்டதே இல்லையா இவங்க???

//கலோரி குறைவான,கொழுப்பு நீக்கப் பட்ட முறையில் செய்யப்படும் வெளி நாட்டு உணவுகளே சிறந்தது// - வெளிநாட்டு உணவுன்னாலே சாலட், சூப் தான் நினைவுக்கு வருமா?? எங்களுக்கு பீட்ஸா நினைவுக்கு வந்தா மட்டும் தப்பா??!!! நடுவரே... போர்க், பீஃப், பெரிய வகை கடல் மீன்கள் எங்க அதிகமா சமைக்கறாங்க??? நம்ம நாட்டிலா?? வெளினாட்டிலா??? சந்தேகம் ஏன்... வெளிநாடுகளில் தான் இவை அதிகம்!! இது கொழுப்பு இல்லையா???

//மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து,அதன் சத்துக்களை வீணடிக்கிறோம்.நமக்கு கிடைக்கும் பொருட்களை வீணடித்து விட்டு ஃப்ரோசன் காய்கறிகளை உபயோகிக்கும் வெளிநாட்டு உணவை குறை சொல்வது சரியல்ல// - இரண்டும் ஒன்று தான்... பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் அழிந்து போகும், பதப்படுத்தி வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் அழிந்து போகும். பின்ன... ப்ரோஜன் ஃபுட்... ஃப்ரிட்ஜில் இல்லாம எங்க இருக்கு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்