பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

அன்தக் காலம், அன்தக் காலம்,.... இதையே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்? வேதனை கலன்த சிரிப்புதான் வருகிறது! அன்தக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் நூறு வயது வரை வாழ்ன்தார்களாம்! இந்தக்காலத்தைப்பற்றி பாருங்கள்! அவங்களே சொல்லிட்டாங்க 40, 50 வயதைத் தாண்டுவதே அதிகம் என்று!
இன்று ஒரு வெளி நாட்டு வாசியின் சராசரி வயது என்ன என்று தெரியுமா? குறைன்தது 65 என்றால் நம்ப முடிகிறதா? இது குறைந்த பட்சம் தான்! இங்கெல்லாம் எங்கு நோக்கினும் பரவலாக 80, 90 வயது பாட்டி தாத்தாக்கள் யாருடைய துணையுமின்றி, கடுன்குளிரில் தன்னந்தனியாக, காரிலேயோ அல்லது நடன்த்தோ தான் தன்னம்பிக்கையுடன் , நல்ல பார்வையுடன், நல்ல ஆரோக்கியத்துடன், டாண் டாண் என்று போவதைப் பார்க்கிறோம்! அதுமட்டுமல்லாமல் பேருந்திலேயோ, அல்லது வேறு இடங்களிலேயோ நாம் பரிதாபப் படுவதை அவர்கள் துளியும் விரும்ப மாட்டார்கள், இடம் கொடுத்தாலும் அன்புப் புன்னகையுடன் மறுத்து நன்றி கூறுவர்!
நம் நாட்டில் இந்த வயதில் தடியூன்றி, தள்ளாடி, 3 அடியாக சுருங்கி , முடங்கி சுருண்டுக் கிடப்பதைத் தான் பார்க்கிறோம். இதற்கு கல்வியறிவையோ, வெளி நாடுகள் பெற்ற வளர்ச்சியையோ, கலாச்சாரத்தையோ ஒருபோதும் காரணம் காட்ட முடியாது! அவர்கள் உண்ட உணவுதான் அதற்கு ஒரே காரணம்! இங்கெல்லாம் வேளை ஓய்வுக் காலத்தை 65 வயது என நீட்டிப்பதற்கான முடிவுகள் அமலுக்கு வருவதை வயதானவர்கள் ஆர்வமுடன் ஆமோதிக்கிறார்கள்!

உணவே மருன்து என்று நம் நாட்டினர் என்று கூறினர்? அன்று இருன்தவர்கள் அதை உணர்ன்து உண்டனர், ஆனால் இன்று அதே உணவு முறையை இன்று உள்ள தாத்தா பாட்டி கூட உண்ணுவதில்லை. ஏனெனில் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்தான் உள்ளது! வாய்ச் சுவைக்காக உணவுகளின் சத்துக்களைக் கொன்று ருசி என்ற பெயரில் விஷத்தைத் தான் உண்கிற இவர்கள் இனியெனும் சின்திப்பார்களா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!

Awake, arise and stop not till the goal is reached

நம் தோழி சொன்னார்கள் உண்மையை மட்டும் பேசுவதாக, ரொம்ப சந்தோஷம். அங்கு 6 மாதத்திலிருந்துதான் ஆரம்பமே! ஓ.கே. ஆனால் நாங இங்கு 5 மாததிலேயே நங்கு பழுத்த பழம், நங்கு மசிய வேகவைத காய்கறிகள், உருளையை நன்று வேகவைத்து பிசைந்து கொடுக்கிறோம், கூடவே அவர்கள் சொன்னதுடன்... மேலும் கோது இல்லாத குழந்தைகளுக்கு என செரியால் எனும் மாவு. அத்துடன் தாய்ப்பால் அல்லது பால் 1வது, அல்லது 2வது 700எம்.எல்.( 5, 6 மாதங்கள்)

பால் 500எம்.எல். ஒரு நாளைக்கு, வெள்ளை பாலேடு(மஞலும் உள்ள்து-கொழுப்புயுடையது), நசுக்கிய பச்சை காய், பழங்கள், வேகவைதது க்ட்டத்ட எல்லா பழங்கள் காய்கள் துண்டஙளாக, கோது உள்ள மாவு மற்றும் செரியால், ரவை, அரிசி நங்கு வெந்த மக்ரோனி, பிர்ட் துன்டங்கள்(பிரட் கூடாது என்று தோழி கூறுவது எந்த அறிவியல் அடிப்படையிலான உண்மை என்று தெரியவில்லை, மன்னிக்கவும், விளக்குங்கள் தயவு செய்து)
எல்லா வகை க்றிக்ளும் தனியாகவோ அல்லது சேர்ந்து அரைத்தோ 2 டீச்புன்(10கிராம்/னாள் ஒன்ற்க்கு), 1/4 பகுதி முட்டை மசித்து, ஆலிவ், நெய் 1டீச்பூன் அளவு ஒரு வேளைக்கு, தண்ணீர், உப்பு, சர்க்கரை தவிற்க கூடியது. இதுடன் நாங்களும் நம் உண்வான இட்லி, எக்செட்றா எல்லாம் த்ருகிரோம்!- (7 மாதம் முதல் அப்படியே கூட்டிக்கொள்ள வேண்டியது தான் எல்லா மாதத்திற்கும்) ஓ.கெவா?

உங உணவில் மாவுச் சத்தைதவிற வேறு ஒன்றுமெ இல்லையே?

ஏல்லாறும் ஊட்டித்தான் விட முடியும்? ஆனா எப்ப்டி, தூக்கி இடுப்பில் வைதுக்கொண்டு வீதிவீத்யாய் அலைந்து, அயோ பாவம், அப்படியும் பிள்ளை சாப்பிடவில்லையென்று கவலை வேறு? இங்கெல்லாம் குழந்தை சாப்பிடவில்லை என்ற புகாருக்கே இடம் இல்லை. ஏன்னா முதலில் பசி நன்கு எடுக்கும்.. 2வது ஒரே இடம்! குழந்தை சாப்பிட என்று ஓர் உயரமான நாற்காலி பெல்ட் உடனானது. அதில் அமர வைத்துமே குழந்தை நாம் சாப்பிடப் போகிறோம் என உணர்ந்து கொண்டு சாப்பிடும்(உளவியளில் மணியடித்ததும் நாய்க்கு உமிழ் நீர் வந்தது என்றதை ஏற்றுக்கொண்டீர்கள்)

குழந்தைக்கான சமச்சீர் உணவிற்கு வருகிறேன். நான் முந்தைய பத்தியில் கூறியதுதான் இதற்கு பதில்.(பால்,பழம்,கறி,செரியால்,- இதில் நான் ஏற்கனவே கூறிய 7 சத்துக்களும் உள்ளது)

நம் ஊரில் பெரியவங்களுக்கே சிற்றுண்டி என்பது சற்று தேவையில்லை என்ற பொதுவான கருத்து உள்ளது) கல்லையும் உண்டால் செரிமானம் ஆகும் சீதோஷ்ண்ம் உடைய ஊர் நம் ஊர்)
இங்கு குழந்தையின் சிற்றுண்டி எது தெரியுமா?, பழக்கூழ், அல்ல்து பழச்சாறு, தயிர்.( நம் ஊரில் தயிர் தர அஞ்சும் பெற்றோர் தான் உள்ளனர்)

இங்குதான் பிரச்சினயே! எத்தனை வேளை என்றெல்லாம் இல்லை, பசிக்கும்போது கொடுக்கிறோம் என்கிறீர்கள்
அங்குதான் தவறு. சரியாக 4 வேளை அத்துடன் பசிக்கு தக்கவாறு பால் என்ற பழக்கமே நம் ஊருக்கு புதியதாக தெரியும் என்றுதான் நினைக்கிறேன். இங்கெல்லாம் மருத்துவர்கள் குழந்தையை உணவிற்காக வற்புறுத்துவதையோ, விட்டுவிட்டு கொடுப்பதையோ கண்டிப்பர். குழந்தை முதலில் நாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, வளற வளற தான் சுவை உணரும்.

நம் மக்க்ளுக்கு பொதுவாக நம்மைப்பற்றிய உயர்வு மனப்பான்மை, பிறரைப் பார்க்கும்போது சற்று குறைவுதான். ஆனால் உண்மை என்று வரும்போது நாம் இவற்றையெல்லாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நானும் நம் ஊரில் பிறந்தவள்தான்.

Awake, arise and stop not till the goal is reached

இரு அணிகளும் வலுவான வாதங்களை கொடுத்து வாதாடுகின்றனர்......மிக்க சந்தோஷமே...
சின்ன குழந்தைகளில் ஆரம்பித்துவிட்டீர்கள் இரு உணவுகளுக்கும் உள்ள வித்யாசம் என்னன்னு....
என்ன நம்நாட்டு அணி, அவங்க நாம கொடுக்கும் அனைத்தும் மாவுசத்துகள்தான் அதிகம் கொடுக்குறோம்னு சொல்றாங்க??அப்படியா?
நாம கால அளவுமுறை இல்லாம உணவு கொடுப்பதாவேற சொல்றாங்க.....அதுதப்புன்னும் சொல்றாங்கப்பா.......(குழந்தைக்கு பசிக்கும்போது சாதம் கொடுப்பது தவறா...என்ன கொடுமடா...??:()

அயல்நாட்டு உணவே அணி,இங்க சூடா இருக்கும் குழந்தை பருவத்திலேயே உடல் வலுப்பெற நாங்க கோதுமை,ராகி கூழ் கொடுக்கிறோம்........அவர்கள் வலுவுடனும்,உடல் குளிர்ச்சியுடன் நீர்சத்து கிடைக்கவும் இப்படி பெரியவர்கள் சொல்லி கொடுத்திருக்காங்க......அப்படிதானே நம்நாட்டு உணவே அணி.......

சரிசரி வாங்க வந்து தொடருங்கள் உங்கள் வாதங்களை......இன்னும் கொஞ்சம் குழம்பிப்போறேன் நான்.....:((
புது விஷயங்களாக இருந்தால் நல்லது......இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் நான் உங்களிடமிருந்து.......ம்...வாங்க வாங்க சீக்கிரம் வந்து தொடங்குங்கள்...........

இரு அணிகளையும் காணவில்லை.....!!!
என்னப்பா ஆச்சு பட்டி தீர்ப்புக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கு. இப்படி குழப்பிவிட்டு போனால் எப்படி?யாராவது வந்து தெளிவுபடுத்தினால்தானே தீர்ப்பு தரமுடியும்.......
வரீங்களா இல்லை எல்லாருக்கும் நண்டு அனுப்பவா???

இன்றைய தலைமுறையிடம் கேட்டுப்பாருங்கள்..கம்பங்கூழ் என்றால் என்ன? கேப்பங்களி எப்படியிருக்கும்?கஷாயம் குடிச்சிருக்கீங்களா? வேப்பம்பூ லேகியம்? அது எந்த ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும் என்று கேட்கும் நிலைமை! பத்தியக்குழம்பு எதுக்கு என்றுகேளுங்கள்! மோர் அருந்தும் பழக்கம் இன்றும் உள்ளதா? கருப்பட்டி வெல்லம் எவ்வளவு பேர் வீட்டில் உள்ளது? ஊற வைச்ச சோறு?..... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..இவையெல்லாவற்றிற்கும் விடை தெரிந்த தலைமுறை மெல்ல மெல்ல அழிந்துவருகிறது. நிலைமை இப்படியிருக்க.. நாம் இன்னும் பழம்பெருமை பேசுவதில், நம் உணவுமுறை தான் சிறந்தது என்று கூறுவதில் இன்றைய நடைமுறை நெருடவில்லையா?
நம் உணவுமுறையை நான் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக, வெளி நாட்டவரின் உணவுமுறையைப் போற்றாமல் இருக்கமுடியாது. ஏனெனில், அவர்களுடையது சமச்சீர் உணவு, வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடான உணவு,எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் ஒருப்பிடி கூடச்சாப்பிடலாம் என எண்ணமுடியாமை, உணவுமுறை குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கிய நோக்கம், அழகியலில் நாட்டமென ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.
என்னுடைய சக நண்பர்கள்(வெளி நாட்டு நண்பர்கள்) என்னிடம் வேடிக்கையாக கேட்பதுண்டு. " நீங்கள் ரொம்ப்....ப நேரமாக சாப்பாடைத் தயார் செய்கிறீர்கள்...... ரொம்ப சீக்கிரமாக சாப்பிட்டு விடுகிறீர்கள்... ஆனால், நாங்களோ விரைவாக தயார் செய்கிறோம்.. மெதுவாக அரைத்து விழுங்குகிறோம்" என்று! மேலும் இவ்வளவு பெரிய டப்பா முழுவதிலுமா அரிசி உணவே? வேறு எதுவுமே இல்லையா? என்று வேறு! இவ்வளவு மசாலா உடலுக்கு கெடுதி இல்லையா? இதில் என்ன சத்து இருக்கிறது?, இதற்கு எல்லாம் எனக்கு பதில் தெரியவில்லை. எதிரணி தோழிகளுக்கு தெரிந்தால் பதில் கூறுங்கள்.
அறுசுவையயும் அளவோடு அன்றாடம் பயன்படுத்துவர் வெளி நாட்டவர். இனிப்புக்கு பழங்கள், புளிப்புக்கு பச்சை காய்கள்(தக்காளி),துவர்ப்புக்கு கக்கிபழங்கள், கசப்பிற்கு ஆன்திவ் போன்ற காய், மிகக்குறைந்த அளவோடு உப்பு உவப்பிற்கு, காரத்திற்கு குறைந்த அளவு காரத்தன்மை கொண்ட பப்ரிக்காய் எனும் ஒருகாய். இவை எதிலும் செயற்கை உணவூட்டிகள் இல்லை, முற்றிலும் அடுப்பிலேற்றி அழிந்துபோன சத்தின்மையில்லா சக்கை இல்லை. வெளி நாட்டவர் அடுப்பில்லேற்றுவதை ஆதரிப்பது இல்லை. முடிந்தவரை பச்சையாகத்தான் உண்கின்றனர். வேண்டுமெனில் சுட்டோ, அரை வேக்காட்டில் அவித்தோதான் உண்பர்.
ஆகையால் உணவுமுறையில் சிறந்தது இன்றைய காலக்கட்டத்தில் நடைமுறையில் உள்ளதும், பெரும்பாலான மக்களுக்கு உடலியல், உளவியல் முறையில் நன்மையே பயப்பதுமான வெளி நாட்டாரின் உணவுமுறையே சிறந்தது என்ற உண்மையைக்கூறுவதில் உவகையடைகிறேன்.

அரிசி சாப்பாட்டிற்க்கு அடிமையாகி எஙெங்கு காணினும் அரிசி மூட்டைகளாய் எம் மாதர்கள்( நல்ல லெஜிங், ஜீன்ஸ் , டைட்ஸ் போ...ட முடியல்லைப்பா....!)வியாதிதரும் உணவுக்கு விடை கொடுப்போம்! திரைகடலோடியும் தீனி தேடுவோம்!

Awake, arise and stop not till the goal is reached

ஹேமாவின் வாதப் புதுமொழி......
மிக அருமை ஹேமா உங்கள் புதுமொழி,,,,,,,,சரி உங்களுக்கு தெரிந்தவர்கள் சாப்பிடும் முறை (பச்சையாக )சொன்னீர்களா?அல்லது அனைத்து அயல்நாட்டினருமே அப்படிதான் உண்கின்றனரா??
உங்களின் ஒவ்வொரு வாதத்திலும் மெருகு கூடிக்கொண்டே செல்கிறது........தொடர்ந்து கொடுங்கள் உங்கள் கருத்துகளை.....
////// என்னுடைய சக நண்பர்கள்(வெளி நாட்டு நண்பர்கள்) என்னிடம் வேடிக்கையாக கேட்பதுண்டு. " நீங்கள் ரொம்ப்....ப நேரமாக சாப்பாடைத் தயார் செய்கிறீர்கள்...... ரொம்ப சீக்கிரமாக சாப்பிட்டு விடுகிறீர்கள்... ஆனால், நாங்களோ விரைவாக தயார் செய்கிறோம்.. மெதுவாக அரைத்து விழுங்குகிறோம்" என்று! மேலும் இவ்வளவு பெரிய டப்பா முழுவதிலுமா அரிசி உணவே? வேறு எதுவுமே இல்லையா? என்று வேறு! இவ்வளவு மசாலா உடலுக்கு கெடுதி இல்லையா? இதில் என்ன சத்து இருக்கிறது?, இதற்கு எல்லாம் எனக்கு பதில் தெரியவில்லை. எதிரணி தோழிகளுக்கு தெரிந்தால் பதில் கூறுங்கள்.///////////

என்னப்பா நம்நாட்டு உணவே அணி இவங்க என்னமோ கேக்கறாங்க வந்து பதில் கொடுக்க யாரப்பா இருக்கீங்க.....சீக்கிரம் வாங்க.....

/அடுப்பிலேற்றி அழிந்துபோன சத்தின்மையில்லா சக்கை இல்லை. வெளி நாட்டவர் அடுப்பில்லேற்றுவதை ஆதரிப்பது இல்லை. முடிந்தவரை பச்சையாகத்தான் உண்கின்றனர். வேண்டுமெனில் சுட்டோ,
அரை வேக்காட்டில் அவித்தோதான் உண்பர்// அதை செரிக்க அவர்கள் மதுவை உணவு சாப்பிடும் போது அருந்துகிறார்கள் .அவர்கள் நம் உணவுமுறையை தவறாக சொல்வது வேடிக்கை தான்

//வெளி நாட்டவரின் உணவுமுறையைப் போற்றாமல் இருக்கமுடியாது. ஏனெனில், அவர்களுடையது சமச்சீர் உணவு, வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடான உணவு,எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும்
ஒருப்பிடி கூடச்சாப்பிடலாம் என எண்ணமுடியாமை, உணவுமுறை குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கிய நோக்கம், அழகியலில் நாட்டமென ஒரு நீண்ட பட்டியலே உள்ளது//.
வைட்டமின் மாத்திரைகளால் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் வெளி நாட்டவர்.. வெளி நாட்டில் உணவு அழற்சியால் பாதிக்கபடுபவர்கள் அதிகம் .

நடுவரே... வாழை இலையில் உணவு எடுக்கும் பழக்கம் நம்ம ஊருக்கே உரியது. அதனால் ருசி அதிகம், உடலுக்கு வலிமை, பசியை தூண்டும், அவ்வளவு ஏன்... குழந்தை இல்லாத தம்பதிகள் வாழை இலையில் உணவு எடுத்தால் குறைகள் நீங்கும்னு கூட சொல்றாங்க.

இவங்க சொல்றாங்களே மசாலா... அதில் உள்ள பட்டை... பெண்களின் ஹார்மோன்களை சமன் செய்யுதாம். அதோட சர்க்கரை வியாதிக்கு ஏற்ற மருந்தாம்.

லவங்கம்... குடி பழக்கத்தை கூட மறக்க உதவும். அஜீரணம், வயிற்று போக்கு, குடல் இறக்கம், ரெஸ்பிரேட்டரி பிரெச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுது.

ஏலக்காய்... உடல் பருமனை குறைக்க, ஜீரணத்தை தூண்ட உதவும்.

பிரிஞ்சு இலை... அல்சர், அதிக ரத்த அழுத்தம், ஒற்றை தலை வலி, பேக்டீரியல் ஃபங்கல் இன்ஃபக்‌ஷன் போன்றவையை குணப்படுத்தும் தன்மை உடையது.

- இத்தனை மசாலா போட்டு சமைச்சா வயிறு என்னாகும்னு கேட்டாங்களே... இதெல்லாம் நன்மை தரும் என்பதால் தான், இத்தனை சேர்க்கிறோம்.

குங்குமப்பூ... மன அழுத்தம், ஆஸ்த்மா, மாதவிடாய் பிரெச்சனைகள், அவ்வளவு ஏன்... கேன்ஸர்க்கு கூட நல்ல மருந்து. ரத்த ஓட்டத்தை சீர் செய்ய, வயிற்று வலியை போக்க, கிட்னி ஸ்டோன்ஸ் குறைக்க இது உதவும். இரவில் பாலில் எடுத்தால் நல்ல தூக்கத்தை தரும். அதனால் தான் நம்ம பாட்டி காலத்தில் இருந்து கர்ப்பமா இருக்கவங்களை இரவில் குங்குமப்பூ போட்டு பால் குடிக்க சொன்னாங்க.

மிளகு... சளி, இருமலுக்கு நல்ல மருந்து.

சீரகம்... நீரில் கலந்து குடிச்சா நீர் மூலம் பரவும் நோயை தடுக்கும். பசியை தூண்டும், வாயுத்தொல்லை நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும்.

சோம்பு... அதிகம் ஜீரணம் ஆகாத அசைவ உணவை சமைக்கும்போது இதை சேர்க்கிறோம் நாம்... காரணம் அந்த உணவை ஜீரணிக்க இது உதவும்.அதோடு இல்லை... கருப்பை பலம் பெற, ஈரல் பாதிப்பு நீங்க, குடல் புண் ஆற, வயிற்று வலி நீங்க என பல மருத்துவ குணம் கொண்டது சோம்பு.

வெந்தயம்... இரவில் நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் வாரம் ஒருமுறை குடிச்சா போதும்... உடல் சூடு, மலச்சிக்கல் எல்லாம் எட்டியே பார்க்காதாம். சர்க்கரை நோய் உள்லவங்க தினம் வெந்தயம் சாப்பிட்டா சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். பிள்லை பெற்றவர்களுக்கு கஞ்சியில் வெந்தயம் சேர்த்தால் குழந்தைக்கு பால் கிடைக்கும்.

பெருங்காயம்... பித்தம், வாதம் நீங்கும். வயிற்றில் உள்ள புழுக்களை ஒழிக்கும். மீன் சாப்பிடாத சைவ மக்கள் பெருங்காயம் சேர்த்தா புரதச்சத்து கிடைக்கும். நரம்பு பிரெச்சனைகளுக்கு நல்ல மருந்து.

இஞ்சி பூண்டு வெங்காயம் என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை... இவ்வளவுக்கும் சொன்னா பக்கம் போதாது நடுவரே. இவ்வளவு இருக்க நம்ம உணவை கேலி செய்யும் தகுதி எந்த நாட்டு உணவுக்கு இருக்கு???

அது மட்டுமில்லங்க... நம்ம விக்கி சொல்றார்...

//In 2003, there were as many as 10,000 restaurants serving Indian cuisine //

//A survey held in 2007 revealed that more than 1,200 Indian food products have been introduced in the United States since 2000//

//Indian tandoori dishes, such as chicken tikka, enjoy widespread popularity.[35] Historically, Indian spices and herbs were among the most sought-after trade commodities. The spice trade between India and Europe led to the rise and dominance of Arab traders, to such an extent that European explorers such as Vasco da Gama and Christopher Columbus set out to find new trade routes with India//

- விக்கி சொல்றது புரியுதா?? எந்த அளவு நம்ம நாட்டு உணவும், மசாலாக்களும் பிரபலம் என்று??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே!
வாழையிலையில் சாப்பிடுவது நல்லது தான்.நம் நாட்டில் இப்போது யார் வாழையிலையில் சாப்பிடுகிறார்கள்?ஒரு விருந்து என்றால் கூட பேப்பர்/ப்ளாஸ்டிக் தட்டும்,டம்ப்ளரும் தானே?

நம் நாட்டு உணவின் அருமை நமக்கு தெரிவதும் இல்லை.பயன்படுத்திக் கொள்வதுமில்லை.கையிலை அல்லது மந்தாரையிலையிலும் ஒரு காலத்தில் சாப்பிட்டோம்.இப்போது அந்த பெயர் கூட பலருக்கு நினைவில் இல்லை.

எதிரணித்தோழி குறிப்பிட்ட பட்டை-தென்கிழக்கு ஆசியாவில் இருந்துதான் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது.நம் நாட்டை விட அமெரிக்கா மற்றும் ஈரானில் தான் பட்டையின் பயன்பாடு அதிகம்.எல்லா இனிப்பு உணவுகள் மற்றும் கார உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.இந்த தகவலையும் விக்கியார்தான் சொல்கிறார்.

அமெரிக்கர்களின் ஆப்பிள் பை,சின்னமன் பன்,டீ மற்றும் கேண்டீஸ்களில் பட்டை அதிகம் சேர்க்கின்றனர்.

ஈரானியர்களின் சமையல்களான பிரியாணி மற்றும் குர்மா வகைகளில்தான் இந்த மசாலா குறிப்பாக பட்டை அதிகமாக பயன்படுகின்றது.அவர்கள் உணவுமுறையை நாம் பின்பற்றுகிறோம்.மசாலா பயன்படுத்துவது நம் நாட்டின் சமையலில் கிடையாது.அயல் நாட்டு சமையலை செய்துகொண்டு நம்நாட்டு சமையல் என்று உரிமை கொண்டாடுவது சரியா? சொல்லுங்க நடுவரே...

இரும்புச்சத்துக்காக சாப்பிடும் பேரீச்சை பழம் வளைகுடா நாடுகள் மூலம் தான் உலகெங்கும் பரவியது.இன்று உலகம் எங்கும் கிடைக்கும் ஸ்பினாச் எனும் பசலைக் கீரையையும் ஈரானியர்கள்தான் முதலில் கண்டுபிடித்து பயன்படுத்தினர்.அதனை அரேபியர்கள்தான் இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர்.

// அதை செரிக்க அவர்கள் மதுவை உணவு சாப்பிடும் போது அருந்துகிறார்கள்.அவர்கள் நம் உணவுமுறையை தவறாக சொல்வது வேடிக்கை தான்//

நடுவரே!
விருந்துகளில் வைன்(திராட்சை ரசம்)குடிப்பது வெளி நாட்டவர்களின்(ஐரோப்பியர்களின்)வழக்கத்தில் உள்ளதுதான்.ஏன் நம் நாட்டிலும் கூட மது அருந்தும் வழக்கம் மன்னராட்சிக்காலத்திலிருந்து இன்று வரை நம் குடிமக்களிடம் உள்ளதே!

சாப்பிடும் முறை :

எதிரணித் தோழி கூறியபடி வாழையிலையில் உணவு பரிமாறி தரையில் அமர்ந்து சாப்பிடுவதுதான் நம் பழக்கம்.அதுவே இப்போ மாறிவிட்டது.வெளி நாட்டவர்களை போல் நாமும் டைனிங் டேபிளில் தானே சாப்பிடுகிறோம்?ஏன் அது வசதியாக தானே இருப்பதால்தானே?

நம் நாட்டில் வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இன்று எத்தனை வீடுகளில் உள்ளது?தொலைக்காட்சி வருவதற்கு முன் வரை எல்லாம் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடி சாப்பிடுவோம்.ஆனால் இன்று அந்த பழக்கமும் மறைந்து போய்விட்டது.இப்போதெல்லாம் டீவி டின்னர்தான்.டீவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுறோம்,எவ்வளவு சாப்பிடுறோம்னு கூட கவனிக்காமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோம்.

ஆனால் வெளி நாடுகளில் லிவிங் ரூமில் மட்டும்தான் டீவி இருக்கும்.சாப்பிடும் போது,சிறு குழந்தை முதல் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுகிறார்கள்(டீவி பார்க்காமல்).அவர்களின் உணவுமுறையில் இந்த பழக்கத்தை நாமும் திரும்பவும் பின்பற்றினால் நலம்.

//ஏன் நம் நாட்டிலும் கூட மது அருந்தும் வழக்கம் மன்னராட்சிக்காலத்திலிருந்து இன்று வரை நம் குடிமக்களிடம் உள்ளதே!//

நம் நாட்டில் எந்த பெண்களும் மது அருந்துவது இல்லை..

வெளி நாடுகளில் பால் மற்றும் மாமிச அழற்சியால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு போக வேண்டிய நிலை.அவைகள் பல மாத ஸ்டாக். இந்நிலை நம் நாட்டில் இல்லை.

மேலும் சில பதிவுகள்