பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

சுபத்ராவின் வாதம்:
வாருங்கள் சுபத்ரா,பட்டிக்கு புதுவரவான உங்களை வரவேற்கிறோம்....
உங்களின் வாதங்கள் நம்நாட்டு உணவே அணிக்கா பலே பலே.......உங்கள் எதிரணியின் வாதங்களுக்கு சரியான பதில் வாதங்களை இன்னும் எதிர் பார்க்கிறேன் உங்களிடம்.தொடர்ந்து வாருங்கள் தீர்ப்பு வரை......:))

////நம் நாட்டில் எந்த பெண்களும் மது அருந்துவது இல்லை..

வெளி நாடுகளில் பால் மற்றும் மாமிச அழற்சியால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு போக வேண்டிய நிலை.அவைகள் பல மாத ஸ்டாக். இந்நிலை நம் நாட்டில் இல்லை.//////

என்னப்பா அயல்நாட்டணி இப்படியெல்லாம் நடக்குதாமே அங்கே.....??என்ன சொல்றீங்க???

நம்நாட்டு உணவே அணியினர் வாதம்...!!!
வாங்க வனி,சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்......நம் நாட்டு உணவில் உபயோகிக்கும் பொருட்களொவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணங்களோடு எவ்வளவு காலமானாலும் அப்படியே கிடைக்கிறது........
இப்படி உங்கள் அயல்நாட்டு உணவில் குறிப்பிட்டு சொல்ல எதாவது இருக்கான்னு கேக்கராங்க நம்நாட்டு உணவே அணி.....
அவங்க சொல்றதும் உண்மைதானுங்களே......!

////நடுவரே... வாழை இலையில் உணவு எடுக்கும் பழக்கம் நம்ம ஊருக்கே உரியது. அதனால் ருசி அதிகம், உடலுக்கு வலிமை, பசியை தூண்டும், அவ்வளவு ஏன்... குழந்தை இல்லாத தம்பதிகள் வாழை இலையில் உணவு எடுத்தால் குறைகள் நீங்கும்னு கூட சொல்றாங்க.

இவங்க சொல்றாங்களே மசாலா... அதில் உள்ள பட்டை... பெண்களின் ஹார்மோன்களை சமன் செய்யுதாம். அதோட சர்க்கரை வியாதிக்கு ஏற்ற மருந்தாம்.////////

வனி நீங்க சொன்னத படிக்கறச்சையே எச்சில் ஊறுது நாவில்,

" வாழையில் நீர் தெளித்து,இனிப்பு,உப்பு,பொறியல்,கூட்டு,அப்பளம்,வடை,சாதம்,முருங்கைக்காய் சாம்பார்,பின் மிளகு புளி ரசம்,தயிர்......கடைசியா இலையில் பாயாசம் ஊற்றி உறிஞ்சி சாப்பிடனுமே........"" அட அட அடா.......என்ன சுவை என்ன சுவை....சாப்பிட்ட திருப்தி, (அட நடுவர் சாயரார் அந்தப்பக்கம் யாராவது வந்து பிடிச்சு நிறுத்துங்க நடுநிலையில்...யாரும்வேணாம்,நான் ரொம்ப ஸ்டெ...டியாக்கும்..நானே சரியாகிட்டேன்......)
இவ்வளவு திருப்தி தரும் நம்நாட்டு உணவைவிட அயல்நாட்டு உணவு பெருசான்னு கேக்கறாங்க உங்க எதிரணி......பதில் என்ன அயல்நாட்டு அணி...??

///இஞ்சி பூண்டு வெங்காயம் என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை... இவ்வளவுக்கும் சொன்னா பக்கம் போதாது நடுவரே. இவ்வளவு இருக்க நம்ம உணவை கேலி செய்யும் தகுதி எந்த நாட்டு உணவுக்கு இருக்கு???///

தனித்தனியா சாப்பிட்டா மருந்து....சேர்த்து அரைத்து காய்ச்சினால் சுண்டக்குழம்பின் சுவையோ சுவைன்னு சொல்றாங்கப்பா........உங்க பதில் என்ன???

ஹர்ஷாவின் வாதம்:
வாங்க ஹர்ஷா, உங்கள் வாதங்களிலும் உண்மை இருக்கிறதேன்னு நடுவரை யோசிக்க வைத்துட்டீங்க.

////வாழையிலையில் சாப்பிடுவது நல்லது தான்.நம் நாட்டில் இப்போது யார் வாழையிலையில் சாப்பிடுகிறார்கள்?ஒரு விருந்து என்றால் கூட பேப்பர்/ப்ளாஸ்டிக் தட்டும்,டம்ப்ளரும் தானே?/////

இப்ப எங்கப்பா வாழையிலை போட்டு உக்காந்து சாப்பிட நேரமிருக்கு?எல்லாம் பஃபே சிஸ்டமாயிடுச்சு....செல்ஃப் சர்வீஸ் வேற திருப்தியா சாப்டயான்னு கேக்க உறவு வரதில்லை....."அண்ணி இதுகொடுக்கவா?தாத்தா இந்தாங கூட்டு நல்லாயிருக்கு,டேய் மாமா பொண்ணுக்க்கு இன்னும் ரண்டு லட்டு வையிடா........இங்கபாருடா இன்ன மச்சான் அவருக்கு மீன் பிடிக்கும் இன்னொரு பீஸ் போடு இப்படி உபசரிப்புகள் இல்லை......."
"உனக்கு என்ன வேணுமோ நீயே போய் உன் தட்டில்(பேப்பர்தாங்க) எடுத்துக்கொண்டு நின்றே சாப்பிடு என்றமாதிரில்ல போகுது......நின்னு சாப்பிடுரவ சாம்பாரோட ருசியா சாப்பிட்டு,புளிக்குழம்பை ஜிப்பால ஊத்திட்டு ரசத்த பேப்பர் கிளாசில் வாங்கி குடிக்க வேண்டியதுதா போங்க........"
"இப்படில்லாம் சாப்பிட ஏதுவா எங்க பிரைடு ரைஸும்,சில்லி பக்கோடாவும்,நூடில்ஸும் ஈஸியா இருக்குன்னு அயல்நாட்டு உணவே அணி சொல்றாங்க ....."

வாங்கப்பா நம்நாட்டு உணவே அணி இவங்க சொல்றது சரியா........நீங்கதான் சொல்லனும்???

//நம் நாட்டில் எந்த பெண்களும் மது அருந்துவது இல்லை..//

யார் சொன்னது?இன்றைய காலத்தில் நம் நாட்டில் பெண்களும் புகை பிடிப்பதும்,மது அருந்துவதும் இல்லையென எப்படி அவ்வளவு உறுதியா சொல்றாங்க?மேற்கத்திய கலாச்சாரம் அதிகரித்துவரும் நம் நாட்டிலும் பெண்கள் மது அருந்துகிறார்கள் நடுவரே.

//வெளி நாடுகளில் பால் மற்றும் மாமிச அழற்சியால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு போக வேண்டிய நிலை.அவைகள் பல மாத ஸ்டாக். இந்நிலை நம் நாட்டில் இல்லை.//

நம் நாட்டில்தான் காலாவதியான மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களால் உயிரிழப்பு,உடல் கோளாறுகள் என்று ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டன என்பது எல்லாரும் அறிந்த செய்தி.வெளி நாடுகளில் இப்படி நடப்பது மிகவும் குறைவு.அப்படியே நடந்தாலும் நிலைமையை துரிதமாக சரி செய்துவிடுவார்கள்.

பட்டி அறிவிப்பு....
தோழிகளுக்கும் வாதி,பிரதிவாதிகளுக்கும்,பார்வையாளர்களுக்கும்........நாளை மாலை பட்டியின் தீர்ப்பு வெளியாகும்.அதுவரை தங்கள் வாதங்களை கொடுக்கவிரும்புவோர் தவறாமல் பதிவு செய்யவும்.....
அப்போதுதான் நடுவர் எந்த குழப்பமும் இல்லாமல் நல்ல தீர்ப்பை எழுதமுடியும்.......
சீக்கிரம் வாதங்களுடன் வாருங்கள்.......

//ஏன் நம் நாட்டிலும் கூட மது அருந்தும் வழக்கம் மன்னராட்சிக்காலத்திலிருந்து இன்று வரை நம் குடிமக்களிடம் உள்ளதே!//

மதாம் ஹர்ஷா சொல்வது மிகச் சரியான உண்மை. மதுப் பழக்கம் அன்றைய மன்னராட்சிக் காலத்திலேயே இருந்தது. சோமபானம், சுராபானம்..... இவ்வளவு ஏன் நீங்கள் அருந்தும் காபி, டீ உங்கள் நாட்டில் எங்கிருந்து வந்தது? ரோமானியர்களிடமிருந்து.... எடுத்து வரப்பட்டு பயிரிடப்பட்டது. நம் உணவுக் கலாச்சாரத்தின்படி காலை மாலைக்ளில் ஏன் உங்களால் மோர் அருந்த முடிவதில்லை? "காபி குடிக்கலைன்னா எனக்கு தலைவலியே வந்துடும்" நீங்கதானே சொல்றீங்க! உண்ணும் உணவு, அருந்தும் பானம், உடுத்தும் உடை......... எல்லாவற்றிலும் வெளி நாட்டைக் காபி அடிப்பதோடு.....போகட்டும். காபி என்றதும்தான் நினைவுக்கு வருகிற்து! காபி குளிர் பிரதேசங்களில் வாழ்வோர் தம் உடலை சூடாக வைக்க அடிக்கடி கருப்புகாபி குடிப்பர், அதுசரி, நாம் ஏற்கனவே 40 டிகிரி சூட்டில் வெந்து தணிகிறோமே நமக்குமா இன்னும் சூடு?
ஆனா கொஞ்சம் கூட ஏன் என்று யோசிக்காம... உங்களுக்கு என மிக அழகான, ஆரோக்கியமான உணவுகள் இருக்கையிலே, எல்லாவற்றையும் ஏட்டிலேயே வைத்துக் கொண்டு வெளி நாட்டு உணவுகளான் பீட்சா, பர்கர், நான், தந்தூரி, மக்டோ, KFC உணவகங்களுக்கு கால் கடுக்க ஏன் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு ஏதோ சென்ச்சுரி அடித்த பெருமையோடு.... இதெல்லாம் நல்ல்லா இருக்கா?
வாழையிலை போட்டு பந்தி போட்ட காலம் தான் போய்க்கொண்டே இருக்கே! இப்பயெல்லாம்buffet விருந்தாச்சுதே! அத்துடன் அதுதான் கவுரமும் ஆயிடுச்சி.. அவ்விருந்தில்கூட என்ன உடலுக்கு நன்மை தரும் உங்கள் பாரம்பரிய கூழ், களி, கேப்பை, கம்படை வைத்தா பரிமாறுகிறீர்கள். அப்படி எனில் உங்க விருந்துக்கு ஒருத்தரும் வரமாட்டார். மனசாட்சியோடு சொல்லுங்கள்! பிரியாணி, தந்தூரி நான், அய்ஸ் க்ரீம், ரசமலாய், பக்ளோவா, பாதாம் மில்க் ஷேக்....அப்பப்பா..... இந்த ஷேக், பீட்டர் எல்லாம் என்ன நம் மாமனா? மச்சானா?
ஒரு நாட்டு உணவுமுறை என்பது, அன்னாட்டின் பொருளாதாரத்துடனும் தொடர்புடையது. பொருளாதாரம் நலிவுபெற்ற நாடுகளிடம் உணவே ? யாக இருக்கிறபோது நல்ல உணவு என்று பேசவே இடம் இல்லை. ஆனால். என் தாய்த்திரு நாடு எல்லாவற்றிலும் ஏறு நடை போடும்போது, நான் வேண்டுவது எல்லாம் ஒன்றே ஒன்றேதான்... என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?
நம் நாட்டு உணவுமுறைதான் சிறப்பு????தெரிகிறது! நல்லது எந்தப் பக்கத்தில் இருந்தாலும் எடுத்துக் கொள்கிற மனப்பக்குவம் உடையவர் நம் இந்தியர்...அதிலும் குறிப்பாக நம் தமிழர் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை!. இதில் எந்த ஏளனமும் இல்லை!
எதையும் நம் நாட்டிற்கு தக்க, நம் உடலுக்கு தக்க, நம் கலாச்சாரத்திற்க்கு தக்கவாறு எடுத்துக்கொண்டு அதையே இறுதிவரை பின்பற்றினாலே போதும்! வெளி நாட்டுக்காரன் மது இல்லாமல் உண்பதில்லை என்பதற்காக, அவ்வுணவுமுறையைக் குறை கூறிக்கொண்டு இருக்கலாமா? மருத்துவரே அங்கு மதுவை பரிந்துரைக்கிறார், ஆனால் அளவோடு என்று! ஏனெனில், குளிர் தாங்க, உடல் சூட்டை தக்கவைக்கவென்று!
நமக்கென்று உணவுக்களஞ்சியமே உள்ளபோது, அதையே நாம் பின்பற்றவில்லையே என்ற ஏக்கம்தான் உள்ளது. வெரும் வயிறு நிறைக்கும், ருசிதரும் உணவாக மட்டும் நம் உணவை எடுத்துகொள்ளவேண்டாம், வெளி நாடுகள் போன்று சத்தும், அளவான கலோரிகள் கொண்டதாகவும், இயற்கை உணவாகவும், இருந்தால் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போன்று நம் கலாச்சாரப்பின்புலத்தோடு நம் உணவுமுறை மேலும் மெருகேரும் அல்லவா?

இருந்தா......லும், எட்டுத்திக்கும் தேடுவோம், நல்லதையே எடுப்போம், வெளி நாட்டு உணவைப்போன்று நாமும் ருசிக்கென்று முக்கியத்துவம் கொடுக்காது, பசித்துப் புசிப்போம், பாரம்பரிய உணவை ரசிப்போம், என்று கூறி வெளி நாட்டு உணவு முறையே சிறந்தது என்று ஆணித்தரமாக முழங்குகிறேன்

"பொய்ம்மையும் வாய்மையுடைத்து புரைதீர
நன்மை பயக்குமெனின்" -அயன் திருவள்ளுவர்.

Awake, arise and stop not till the goal is reached

ஹேமாவின் வாதங்கள்:
அப்பப்பா...என்னவொரு சூடான வாதம்.....இருந்தாலும் எங்கும் விளையும் பொருட்களை யாரும் வாங்கி உபயோகிக்கிறோம்.....ஆகவே பயிர்,அடிப்படை பொருள்களின் மூலாதாரம் எங்கே என்ற வாதங்கலை கொஞ்சம் ஒதுக்கலாம். உணவு என்று வரும்போது,நமது செய்முறை,தனிப்பயன்பாட்டு முறைகள் இவற்றாஇ வைத்து வாதாடுங்கள் தோழிகளேஎ.....இதை முன்னமே கூற நினைத்தேன் இப்போது கூறிவிட்டேன்...சரியா....?

////ஒரு நாட்டு உணவுமுறை என்பது, அன்னாட்டின் பொருளாதாரத்துடனும் தொடர்புடையது. பொருளாதாரம் நலிவுபெற்ற நாடுகளிடம் உணவே ? யாக இருக்கிறபோது நல்ல உணவு என்று பேசவே இடம் இல்லை.///////

அதென்னவோ சரிதான் ஹேமா.....இதைஏன் இப்போ நினைவூட்டுரீங்க எனக்கு அழுகையே வந்திடும்........வேறுநாட்டுக்கு செல்லவேணாம்,நம்நாட்டிலேகூட ஒருபகுதி மக்கள் அப்படிதான் உள்ளனர்......சரிவிடுங்க வாதத்திற்கு வரலாம்....

///இருந்தா......லும், எட்டுத்திக்கும் தேடுவோம், நல்லதையே எடுப்போம், வெளி நாட்டு உணவைப்போன்று நாமும் ருசிக்கென்று முக்கியத்துவம் கொடுக்காது, பசித்துப் புசிப்போம், பாரம்பரிய உணவை ரசிப்போம், என்று கூறி வெளி நாட்டு உணவு முறையே சிறந்தது என்று ஆணித்தரமாக முழங்குகிறேன்/////

இந்த இருந்தாலும் எங்கேயோ இடிக்கிறதே.....
சரிசரி இன்னும் வாதங்கள் பாக்கி இருக்குபோல சீக்கிரம் அனுப்புங்க நடுவர் முடிவெடுக்க வசதியா இருக்கும்......

நடுவருக்கு வணக்கம், பட்டிக்கு நான் புதுசு என்பதால், என்று பட்டி ஆரம்பித்தது என்று எனக்கு தெரியாது, ஆனால் என்றோடு பட்டி முடியப்போகிறது? வாதங்களை இந்திய நேரப்படி எத்தனை மணிக்குள் அனுப்பவேண்டும் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்களது பதிலுக்கு என் நன்றிகளைத் தெரியப்படுத்துகிறேன்.

Awake, arise and stop not till the goal is reached

நம் நாட்டு உணவு அம்மாவின் சமையலை போன்றது . அது மற்ற நாட்டு சமையலுடன் ஒப்பிடவே முடியாது . ஏனெனில் அவர்கள் உணவை சமைபதற்கு சோம்பல் பட்டு கொண்டு ரெடி மேட் உணவை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனால் பெண்கள் மார்பக புற்று நோயால் அதிகம் பாதிக்கபடுகிறார்கள். . அங்கு நம் இந்தியர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு..

//மருத்துவரே அங்கு மதுவை பரிந்துரைக்கிறார், ஆனால் அளவோடு என்று! ஏனெனில், குளிர் தாங்க, உடல் சூட்டை தக்கவைக்கவென்று!'' // அது இல்லாமல் அந்த உணவை அவர்களலியே சாப்பிட முடியாது..

இந்த பட்டியில் கடைசியாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன்...

நம் உணவு முறையில் மட்டுமே அன்பும் கலந்து இருக்கிறது. உணவு உணவாக மட்டுமில்லாமல் அன்பின் வெளிப்பாடாக இருப்பது நம் நாட்டில் தான். தாய் கையால் உண்ணும் உணவு ருசியே தனி!!! காரணம் அந்த உணவில் அறுசுவையோடு பாசமும் கலந்து இருக்கும். இப்படி உணவில் அன்பையும் கலந்து மணி கணக்கில் நேரமெடுத்து அக்கறையோடு சமைக்கும் நம் உணவை காட்டிலும் சிறந்தது உலகில் வேறேதும் இல்லை.

வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்