பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

// நீங்கள் அருந்தும் காபி, டீ உங்கள் நாட்டில் எங்கிருந்து வந்தது? ரோமானியர்களிடமிருந்து.... எடுத்து வரப்பட்டு பயிரிடப்பட்டது.// மனிதன் எங்கிருத்து வந்தான் என்பதற்கே சரியாய் விடை இது வரை தெரியவில்லை.
காபி இங்கிருந்து வந்தது , பட்டை அங்கிருந்து வந்தது என்று சொல்கிறார்கள் . எல்லாமே ஒரு யூகம் தான்.
எது எங்கிருந்து வந்தாலும் நம் இந்தியர்கள் நல்ல விசயம்களை எடுத்து உணவில் அக்கறையோடு சமைக்கிறார்கள் .

என் கணவரின் அலுவலகத்தில் பணி புரியும் வெளி நாட்டு நண்பர்கள் சொல்கிறார்கள் , இந்திய உணவு மிகவும் ருசியானது என்று.
நமது தோசையை அவர்கள் தெரிந்து வைத்திருகிறார்கள் . நாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்வதை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்கள் . நமக்கு தான் தாழ்வு மனபான்மை நமது உணவை பற்றி .மாறுவது நமது மனமே அன்றி உணவு இல்லை. நமது உணவு மிக சரியான உணவு.
கடுகு தாளிப்பு இருந்து இறுதியில் கொத்துமல்லி தூவுவது வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை .

நமது அறுசுவை தளத்தின் வலது பக்கத்தில் வரும் "ஆரோக்கிய சமையல்" க்ளிக் செய்து பாருங்கள் எந்த நாட்டு உணவு குறிப்பு அதிகம் இடம் பெற்றிருக்கிறது என்று.

பெரும் மதிபிற்குரிய நடுவர் அவர்களுக்கு வணக்கம். இடையில் ஏற்பட்ட
நேர நெருக்கடியினால் பட்டியில் தொடர்ந்து பங்கு பற்ற முடியவில்லை.
இருந்தாலும் எமது அணியினர் தொய்வு இல்லாமல் பட்டியை சிறப்பாக
வழி நடாத்தி தமது வாதங்களை முன் வைத்துள்ளனர். அவர்களுக்கு எனது
மனம் நிறைந்த பாராட்டுகள்.
எதிர் அணியினர் " விழுந்தும் மீசையில் மண் படவில்லை" என்பது போல
தமது வாதங்களை உப்பு சப்பு இல்லாமல் வைத்துள்ளனர். இதிலிருந்தே
தெரிகிறது வெளி நாட்டு உணவில் ஏதும் இல்லை என்பது. இந்த எதிர்

அணியினருக்கு நம் நாட்டு உணவென்பது ஒரு கௌரவ குறைச்சல்.
அதனால்தான் அவர்கள் வெளி நாட்டு உணவுக்காக இந்தளவு வக்காலத்து
வாங்குகிறார்கள்.
நம்நாட்டு உணவு வெளி நாட்டு உணவை விட சுவையானது ஆரோக்கியமானது
சமச்சீருடையது. என்ன இல்லை நம் நாட்டு உணவில் ஏன் கையை ஏந்த
வேண்டும் வெளி நாட்டு உணவுக்காக? சும்மா சகட்டு மேனிக்காக எதிர்
அணியினர் வைத்த வாதங்களை நிராகரித்து நம் நாட்டு உணவே என்றும்
சிறந்தது என்று தீர்ப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்த்து இப்பட்டியில்
சிறியேனும் கலந்து வாதிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை
பெறுகிறேன். வணக்கம். வாழ்த்துகள்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் நம் அணி தோற்கின் எவ்
அணி வெல்லும்?

வாருங்கள் சுபத்ரா,
அம்மாவின் சமையல் அதை யாராலும் ஈடுகட்ட முடியாதுன்னு சொல்லியிருக்காங்க....உங்கள் வாதங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்....:)

///நம் நாட்டு உணவு அம்மாவின் சமையலை போன்றது . அது மற்ற நாட்டு சமையலுடன் ஒப்பிடவே முடியாது .///
///எது எங்கிருந்து வந்தாலும் நம் இந்தியர்கள் நல்ல விசயம்களை எடுத்து உணவில் அக்கறையோடு சமைக்கிறார்கள் .

என் கணவரின் அலுவலகத்தில் பணி புரியும் வெளி நாட்டு நண்பர்கள் சொல்கிறார்கள் , இந்திய உணவு மிகவும் ருசியானது என்று.
நமது தோசையை அவர்கள் தெரிந்து வைத்திருகிறார்கள் . நாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்வதை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்கள் . நமக்கு தான் தாழ்வு மனபான்மை நமது உணவை பற்றி .மாறுவது நமது மனமே அன்றி உணவு இல்லை. நமது உணவு மிக சரியான உணவு.
கடுகு தாளிப்பு இருந்து இறுதியில் கொத்துமல்லி தூவுவது வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை .///

என்னப்பா அயல்நாட்டு உணவே அணி,உங்க அயல்நாட்டு நண்பர்கள்கூட நம்நாட்டவரின் தோசையை பார்த்து பொறாமைப்படுகின்றனராம்........நாம் லன்ச் பேக் எடுத்து செல்வதைகண்டு ஆசைப்படுகின்றனராம்......நீங்க என்ன சொல்றீங்க??

வனியின் வாதம்,

/////நம் உணவு முறையில் மட்டுமே அன்பும் கலந்து இருக்கிறது. உணவு உணவாக மட்டுமில்லாமல் அன்பின் வெளிப்பாடாக இருப்பது நம் நாட்டில் தான். தாய் கையால் உண்ணும் உணவு ருசியே தனி!!! காரணம் அந்த உணவில் அறுசுவையோடு பாசமும் கலந்து இருக்கும். /////////

வெறும் உணவு வேஸ்ட்,பாசம்கலந்த ஊனவுதான் பெஸ்ட்டுன்னு .....சொல்லியிருக்கார்.......
அயல்நாட்டு உணவில் இது கிடைக்குதாப்பா.........??

////வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். :)//////

எல்லாம் சரி அதென்ன வாதத்தை முடிப்பதுபோல சொல்லியுள்ளீர்.....தீர்ப்பு மாலைதானே........!!உங்களின் வாதங்கள் இன்னும் வருமென நான் நினைத்திருந்தேனே........வருமில்லையா.......???

////எதிர் அணியினர் " விழுந்தும் மீசையில் மண் படவில்லை" என்பது போல
தமது வாதங்களை உப்பு சப்பு இல்லாமல் வைத்துள்ளனர். இதிலிருந்தே
தெரிகிறது வெளி நாட்டு உணவில் ஏதும் இல்லை என்பது. இந்த எதிர்
அணியினருக்கு நம் நாட்டு உணவென்பது ஒரு கௌரவ குறைச்சல்.
அதனால்தான் அவர்கள் வெளி நாட்டு உணவுக்காக இந்தளவு வக்காலத்து
வாங்குகிறார்கள்.
நம்நாட்டு உணவு வெளி நாட்டு உணவை விட சுவையானது ஆரோக்கியமானது
சமச்சீருடையது. ////////

மீசையில் மண் ஒட்டவில்லைன்னு மார்தட்டும் எதிரணி.....இதை நான் சொல்லவில்லைப்பா,உங்கள் எதிரணி சொல்லியிருக்கு..... நீங்கள் என்ன பதில் சொல்ல வருகிறீர்கள்???

நம் நாட்டில் பெண்கள்தான் சமைக்க வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் இருக்கிறது.சில வீடுகளில் ஆண்கள் எப்போதாவது சமையலில் புகுந்து விளையாடுவதும் உண்டு.ஆனால் பெரும்பாலும் கூட்டு குடும்பங்களில் எல்லாம் பெண்கள் கிச்சனிலேயே பெரும் பொழுதை கழிக்கின்றனர்.சில வீடுகளில் வேலைப் பகிர்தல் இருக்குமே தவிர சமையல் செய்வது பெண்கள்தான்.சமையலுக்காகவே பல மணி நேரம் செலவிடுகிறோம்.

வெளி நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பெண்கள்தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.ஆண்களும் சமையல் செய்கிறார்கள்.அதில் எந்த கவுரவக் குறைவும் அவர்கள் பார்ப்பதில்லை.வெகு சுலபமாக தயாரிக்க கூடிய எளிய சமையல் முறை.சமைக்கும் நேர அளவும் குறைவுதான்.

விடுமுறைகள் என்றாலும் சரி,வெளி இடங்களுக்கு பிக்னிக் செல்வதானாலும் சரி சமைப்பதற்கு பார்பிக்யூ அடுப்புதான்.திறந்த வெளியில் அனைவருடனும் பேசிக்கொண்டே சமைக்கிறார்கள்.சமைப்பதையும் ஒரு ஃபன்னாக தான் செய்கிறார்கள்.விரைவில் சமைத்து முடித்து மற்ற நேரங்களை குடும்பத்துடனும்,குழந்தைகளுடனும் செலவழிக்கிறார்கள்.

வேலைப்பளு இல்லாத,சில நிமிடங்களில் தயாராகும்,எளிய,சத்தான உணவுகள் கொண்ட வெளிநாட்டு உணவுமுறைதான் சிறந்தது என்று கூறி என்னுடைய வாதத்தை நிறைவு செய்கிறேன்.வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

////வேலைப்பளு இல்லாத,சில நிமிடங்களில் தயாராகும்,எளிய,சத்தான உணவுகள் கொண்ட வெளிநாட்டு உணவுமுறைதான் சிறந்தது////
///வெளி நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பெண்கள்தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.ஆண்களும் சமையல் செய்கிறார்கள்.///
அட என்னப்பா இது சமைக்க ஈசியா இருக்காம்,அதிக நேரம் எடுப்பதில்லையாம்....முக்கியமா பெண்கள்தான் சமைக்கனும்னு கட்டாயம் இல்லையாம்....இதனால் அயல்நாட்டு உணவு சிறந்ததுன்னு இவங்க சொல்றாங்க......
என்ன நம்நாட்டு உணவே அணி....இவங்க சொல்றது சரிதானா???

பட்டி அறிவிப்பு,
என்னப்பா பட்டி தீர்ப்பு வரும்வரை அனைவரும் மெளன விரதமா?இல்லை ரொம்ப சாப்பிட்டு டைப்பண்ன முடியலையா.....:)
கடைசிகட்ட வாதங்களை கேட்க நடுவர் ஆவலாக உள்ளார்.....

நடுவர் அவர்க்ளே, எனக்கு ஓர் உண்மை தெரிந்தாகனும்! தலைப்பு "சுவை அதிகம் உடையது இந்திய உணவா? அல்லதுவெளி நாட்டு உணவா?" என்பதா? அல்லது, "உணவுமுறையில் சிறந்தது இந்திய உணவுமுறையா, அல்லது வெளி நாட்டு உணவு முறையா என்பதா?" நம் எதிர்ணித் தோழ்ர்களுக்கு உப்பு,சப்பு, புளி, காரம்... ல்லாம் மிகுத்துவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்தான் தலைப்பையெ தன்னிஷ்டத்திற்க்கு மாற்றித் திரித்து, எப்படியாவது தம் பக்கம் ஜெயித்தால் போதும் என்று வாதாடுகிறார்கள். ஆனால்; நான் இதுவரை அவர்க்ளிடம் முன் வைத்த எந்த வினாவிற்க்கும் சரியான விடையை கூறமுடியவில்லை!ஒரே மழுப்பல்... உண்மைக்கு உரைகல் தேவையில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும்! நாங்கள் உப்புசப்பில்லாமல் சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்க்காக உண்கிறோம், எதிர் அணியினர் " விழுந்தும் மீசையில் மண் படவில்லை"*என்றனர். எங்களுக்கு மீசையும் இல்லை( வெளி நாட்டுக்காரனுக்கு ஏது மீசை?) நாங்கள் விழவும் இல்லை! "நம்நாட்டு உணவு வெளி நாட்டு உணவை விட சுவையானது ஆரோக்கியமானது
சமச்சீருடையது. என்ன இல்லை நம் நாட்டு உணவில் ஏன் கையை ஏந்த
வேண்டும் வெளி நாட்டு உணவுக்காக? " எங்கின்றனர். நானும் அதையேதான் கேட்கிறேன்! உங்களிடம் எல்லாம் உள்ளபோது வெளி நாட்டு உணவகங்களை மூடி விடுங்கள்.
சமச்சீர் உடையைது சமச்சீர் உடையைது எங்கிறீர், அதுதான் என்னவென்று கேட்கிறேன், என்ன சமச்சீர்? 7 சத்து உள்ள்தா? ஒரு நாளைக்கு 5 பழம், 5 காய் சாப்பிடறிங்களா? குழந்தைக்குகூட மாவுச்சத்தைதவிற வேறு ஒன்றுமே கொடுக்க முடிவதில்லையே! 80 வயது தாத்தாபாட்டிகள் எங்கேயாவது நோயின்றி நடமாடுகின்றனரா?

"இன்னைக்கு அவன் நாட்டு உணவுகளை கொண்டு வந்துட்டு விட முடியாம உடம்பை கெடுத்துக்குறோம். இது தான் உண்மை". என்று நீங்கள் ஏன் புலம்புகிறீரிகள்? உங்களுக்கு என ஒரு சரியான உணவுமுறை, சமச்சீர் உணவுக்கொள்கை இல்லை. எனவேதான் அங்கு எங்கு என்று பிடித்துக்கொண்டு எதையுமே சரியாய் உணராமல் உடலை உபாதைகளுக்கு உள்ளாக்குகிறீர்கள்!
"வெளி நாடுகளில் பால் மற்றும் மாமிச அழற்சியால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு போக வேண்டிய நிலை.அவைகள் பல மாத ஸ்டாக். இந்நிலை நம் நாட்டில் இல்லை.//////

என்னப்பா அயல்நாட்டணி இப்படியெல்லாம் நடக்குதாமே அங்கே.....??என்ன சொல்றீங்க???" நடுவர் அவர்கலே இத்ற்கு பதில் நீங்க கேட்டீங்க! இதுல் என்ன வேடிக்கை என்றால் எந்த ஆதாரமும் இன்றிய தகவல் இது! வேண்டுமென்றால் இது நம் ஊர் பத்திரிக்கையில் அடிக்கடி வரும் நம் ஊர் செய்தியாக இருக்கும்!
வாழையிலையில்தான் சாப்பிடுகிறோம் எஙிறீர் ... வருடத்திற்கு எத்தனை முறை? மிஞ்சிப் போனால் 10,15 முறை இருக்குமா? மீதியுள்ள 350 நாட்கள் ?
"நம்ம உணவை கேலி செய்யும் தகுதி எந்த நாட்டு உணவுக்கு இருக்கு???///"
அப்ப்டீன்னு கேட்டாங்க! இதுல கேலிக்கே இடமில்லை, நாங்கள் சுட்டி காட்டுகிறோம் அவ்வள்வுதான்!
"அவர்கள் உணவை சமைபதற்கு சோம்பல் பட்டு கொண்டு ரெடி மேட் உணவை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனால் பெண்கள் மார்பக புற்று நோயால் அதிகம் பாதிக்கபடுகிறார்கள். . அங்கு நம் இந்தியர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு.." என்று ஒரு தகவல் கூறினார் நம் தோழி! அங்கெல்லாம் டி.வி. சீரிய்ல்கள் இல்லை....... "சமைப்பதை இருபாலரும் செய்கின்றனர்" என்று நல்ல தகவல் தந்த மற்றொரு தோழிக்கு இங்கு நன்றி கூறுகிறேன்.

சமையல் என்றாலே "திருத்துதல் - பக்குவப்படுத்துதல்" என்று பொருள். உணவைத் திருத்தி பக்குவப்படுத்தி உண்பதற்கு தோதாக செய்வத்தான். உள்ள சத்துக்களையெல்லாம் மணிக்கணக்கில் நேர்மெடுத்தி ஒன்றுமில்லாமல் செய்வதில்லை.

"{பிரென்ச் "முன்னிலை"

முதன்மைக் கட்டுரை: Fரென்ச் பரடொக்ஷ்

பிரான்ஸில் வாழும் மக்கள் நீண்டகாலம் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[வகுஎ] இருப்பினும் அவர்கள் பிறைக் காட்டிலும் அதிகமாக செறிவூட்டப்பெற்ற உணவுகளைச் சாப்பிடுகின்றனர் என்றாலும், இதய நோய் விகிதம் வட மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதற்கு பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன:

பதப்படுத்தப்பட்ட கார்போஹேட்ரேட்டுகள் மற்றும் பிற துரித உணவுகளை நுகர்வது குறைவாக இருக்கிறது.
சிவப்பு ஒயினை தொடர்ந்து குடிப்பது.
தினசரி உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி போன்ற நிறைய சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவது; பிரெஞ்சுக்காரர்கள் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.[25]

இருப்பினும், 1990௨000 இல் இருந்து உலக சுகாதார நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் பிரான்ஸில் இதய நோய் ஏற்படும் நிகழ்வுகள் குறைவாகவே உள்ளது. இது அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுள்ளதாகவே இருக்கிறது.[26]

முறையற்ற ஊட்டச்சத்து நுகர்வினால் ஏற்படும் குறைபாடுகள்
ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை உபரி
ஆற்றல் பட்டினி, வீணடித்தல் உடல்பருமன், நீரிழிவு மெல்லிடியஸ், கார்டியோவாஸ்குலர் நோய்
எளிய கார்போஹைட்ரேட்டுகள் இல்லை நீரிழிவு மெல்லிடியஸ், உடல்பருமன்
கலப்பு கார்போஹைட்ரேட் இல்லை உடல் பருமன்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு குறைவான பாலுறவு ஹார்மோன் அளவுகள் [32] கார்டியோவாஸ்குலர் நோய் (பெரும்பாலான மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்வது)
மண் கொழுப்பு இல்லை கார்டிவாஸ்குலர் நோய்
செறிவூட்டப்பெறாத கொழுப்பு இல்லை உடல் பருமன்
கொழுப்பு கொழுப்பு-கரையக்கூடிய விட்டமின்களின் குறைந்துபட்ட உறிஞ்சல், முயல் உணவு ஊட்டச்சத்துக் குறைபாடு (புரத உள்ளெடுப்பு அதிகமாக இருந்தால்) கார்டியோவாஸ்குலர் நோய் (சிலரால் ஒப்புக்கொள்ளப்பட்டது)
ஒமேகா 3 கொழுப்பு கார்டியோவாஸ்குலர் நோய் இரத்தப்போக்கு, தீவர இரத்தப்போக்கு
ஒமேகா 6 கொழுப்பு இல்லை கார்டியோவாஸ்குலர் நோய், புற்றுநோய்
கொழுப்பு இல்லை கார்டியோவாஸ்குலர் நோய் (பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது)
புரதம் குவாஷியோர்கர் முயல் உணவு ஊட்டச்சத்து குறைபாடு
சோடியம் இரத்தத்தில் உப்புச்சத்து குறைபாடு உயர்த்தப்பட்ட இரத்த உப்பு, உயர் இரத்த அழுத்தம்
இரும்பு இரத்தசோகை கல்லீரல் நோய், இதய நோய்
அயோடின் தைராய்டு வீக்கம், உயர் தைராய்டு நோய் அயோடின் நச்சு (தைராய்டு வீக்கம், உயர் தைராய்டு நோய்)
விட்டமின் ஏ ஜெரஸ்தால்மியா இரவுக் குருடு, குறைவான ஆண் ஹார்மோன் அளவுகள் உயர் விட்டமின் நுகர்வு ஏ (கல்லீரல் நோய், தலைமயிர் உதிர்தல்)
விட்டமின் பி1 பெரி-பெரி
விட்டமின் B2 தோலில் வெடிப்பு, வெண்படல தெளிவின்மை
நியாஸின் பெலேக்ரா செரிமானமின்மை, சீரான இதயத்துடிப்பின்மை, பிறப்புக் குறைபாடுகள்
விட்டமின் பி12 முதுவயது இரத்தசோகை
விட்டமின் சி சொறிகரப்பான் நோய் வயிற்றுப்போக்கிற்கு காரணமாகும் உடல் வறட்சி
விட்டமின் டி ரிக்கெட்ஸ் உயர் விட்டமின் நுகர்வு டி (உடல் வறட்சி, வாந்தி, மலச்சிக்கல்)
விட்டமின் இ நரம்புக் குறைபாடு உயர்விட்டமின் நுகர்வு இ (ஆண்டிகோகுலண்ட்: மிதமிஞ்சிய இரத்தப்போக்கு)
வைட்டமின் கே உயர் இரத்தப்போக்கு
கால்சியம் எலும்புச் சுருங்கல், நரப்பிசிவு, கார்ப்பாபெடல் ஸ்பாஸ்ம், லேரிங்கோஸ்பாஸ்ம், சீரான இதயத்துடிப்பின்மை வெளிர்தல், மன அழுத்தம், குழப்பம், சாப்பிடுதல் குறைபாடு, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், கணைய அழற்சி, சிறுநீர் அதிகரிப்பு
மக்னீசியம் உயர் இரத்த அழுத்தம் பலீனம், குமட்டல், வாந்தி, தடைபட்ட சுவாசம் மற்றும்

குறைந்த இரத்த அழுத்தம்
பொட்டாசியம் ஹைபோகலீமியா, சீரான இதயத்துடிப்பின்மை ஹைபர்கலீமியா, படபடப்பான இதயத்துடிப்பு)

நன்றி: 48.0 48.1 மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊட்டச்சத்து வரலாறும் ஆய்வும் (பொது ஊட்டச்சத்து கல்விக்கான ராய் பல்கலைக்கழக குறிப்புகள், 2004)
சமச்ச்றி உணவின்மையின் விளைவுகள் இவை என உலக உணவியல் ஆய்வு Kஊறுகிறது.

[ "2005 ஆம் ஆண்டு நவம்பர் தேதியிட்ட, தி சீக்ரெட்ஸ் ஆஃப் லிவிங் லாங்கர் என்று தலைப்பிட்ட ஒரு நேஷனல் ஜியாகிரபி அட்டைப்பட கட்டுரையும் முற்றிலும் தாவர உணவுமுறையே பரிந்துரைக்கிறது. இந்தக் கட்டுரையானது, நீண்டகாலம் வாழ்கின்ற, "முன்னேறிய நாடுகளில் பொதுவாக பாதிக்கப்படும் நோய்களால் சிறு அளவிலேயே பாதிக்கப்படுகின்ற, மற்றும் நீண்டகால ஆரோக்கிய வாழ்வு வாழ்கின்றனர்"
இந்த நேஷனல் ஜியாகிரபிக் கட்டுரை, 1976 மற்றும் 1988க்கு இடைப்பட்ட 34,000 செவன்த்-டே அட்வெண்டிஸ்ட்கள் குறித்த என்ஐஹெச் நிதியுதவி ஆய்வு "...பீன்ஸ், சோயா பால், உருளைக்கிழங்குகள் மற்றும் பிற பழங்களை உட்கொள்ளும் அவர்களுடைய பழக்கம் குறிப்பிட்ட வகை புற்றுநோய் வளர்வதன் அபாயத்தை அவர்களிடத்தில் குறைக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. அத்துடன் முற்றிலும் தானியத்தினாலான ரொட்டி சாப்பிடுவதும், ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை தண்ணீர் அருந்துவதும் மற்றும் மிகவும் ஆச்சரியப்படும்படியாக வாரத்திற்கு நான்கு பருப்புக்களை சாப்பிடுவது ஆகியவை அவர்களுடைய இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்பதையும் இது கண்டுபிடித்துள்ளது" என்பதைக் குறி்ப்பிட்டுள்ளது.]

நடுவர் அவர்கலே எதிரணித்தோழர்கள் நாங்கள் ஏதோ ஊகத்தின் அடிப்படையில் சொல்கிறோம் எனக் குற்றம் சாட்டினர், அதை இல்லை என நிருஊபிக்க மேற்கூறிய மேற்கோள்களின் அடிப்படைய்ல்தான் எங்கள் வதங்கள் உள்ளன என உங்களின் மேலான பார்வைக்கு இவற்றை சமர்ப்பிக்கிறேன். (மேற்கோள்கள் ஆஙிலத்திலிருந்து எட்க்கப்பட்டு தமிழ்ப்படுத்தியதால் சற்றே நுண்ண்யமான பதம் இருக்ககூடும்)

நான்கரை மணி கால வித்தியாசத்தால் என்னால் இதற்கு மேல் விவாத்ங்களை உங்களிடம் சமர்ப்பிக்கமுடியவில்லை என்ற வருத்தம்
எனக்கு! ( பிரான்ச் - இந்திய நேரம்)

ஆகையால், என்றும் நீதி தவறா நடுனிலையில் உள்ள நடுவர் அவர்கலே! உண்மையின் பக்கம் தீர்ப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டு இப்பட்டிய்ல் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி வாதங்களை முன்வைக்க துணைபுரிந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வண்க்கம்!!

Awake, arise and stop not till the goal is reached

உங்களின் கடைசிகட்ட வாதங்களை சமர்ப்பித்தமைக்கு நன்றீகள்......

இருப்பினும் இணையத்தில் வேறுபக்கத்தில்(விக்கிலீப்)உள்ள தகவல்களை நம் இழையில் எங்கும் அப்படியே பதிவிடுதல் கூடாதென்பது நிபந்தனை.......நீங்கள் பட்டியில் பதிவிட்டது கண்டிக்கத்தக்கது.மன்னிக்கவும் நடுவர் என்ற முறையில் உங்களின் கடைசிகட்ட வாதம் வேறு இணையத்துடயதாக இருப்பதால் ஏற்றுக்கொள்ள இயலாது........அதையே நீங்கள் உங்கல் நடையில் சொல்லலாம்.......சரியா......?
அவற்றை நீக்கிவிட்டு உங்களின் வாதங்களை மேற்கோள்காட்டி உங்கள் நடையில் வாதிடுங்கள்......நடுவர் இந்திய நேரப்படி 5மணிக்கு மேல்தன் தீர்ப்பு கொடுப்பார்.......காத்திருக்கேன் உங்களின் திருத்திய வாதப்பதிவிற்காக........

மேலும் சில பதிவுகள்