பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?

தோழிகளே,
தோழி ஹர்ஷா அவர்களின் தலைப்பை இந்த பட்டியில் எடுத்துள்ளேன்......
கடந்தபல காலங்களாக அயல்நாட்டு மோகம் நிறைய துறைகளில் கலந்துவிட்டது......அது நமது கலாச்சார சமையலையும் விடவில்லை.......ஆகவேதான் இந்த தலைப்பு......

"" பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?""

அறுசுவைக்கு ஏற்ற தலைப்புள்ள......:)சரிசரி வாங்க வந்து உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.......சுவை,ஆரோக்யம்,சமச்சீரான உணவு இப்படி பிரித்து இத்தலைப்பை அலசப்போறோம்......தலைப்பைக் கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு மிக்க நன்றிகள்...........
வாங்க...

வெளிநாடுகளில் இருக்கும் தோழிகளுக்கு குழப்பம் வரலாம்.நாம் நம்நாடு என்று(இந்தியா)வாதாடுவதா?அல்லது இங்கே வெளிநாட்டில் இருப்பதால் நம்நாடு என்பது(அமெரிக்கா,கனடா,இலங்கை,துபாய்) இவற்றை குறிக்கிறதா?என்று குழப்பம் இருக்கும்........
எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்,இந்திய உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள்தாம்.மற்றபடி உங்கள் வாதம் இந்திய உணவுக்கா?இல்லை மற்ற உணவுகளுக்கா என்பதில் தெளிவாய் இருந்தால் சரி......குழப்பமிருப்பின் (பிரக்கட்டில் இந்தியா,வேறுநாடு)என குறிப்பிட்டு பதிவிடுங்கள்....நான் தெளிவாகிடுவேன்....:)

வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்...

“துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
கராஅரை வேவைப் பருகு எனத் தண்டி
காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ” (103-108)
இரும்பு சட்டத்தில் கோர்த்த மாமிசத்தை தீயிலே சுட்டெடுத்து அதில் நல்ல கொழுத்த ஊனாக இருக்கிற நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம்... சூடு பொறுக்காமல் அதை இந்த கடவாய்க்கும் அந்த கடைவாய்க்கும் தள்ளி தள்ளி தின்போம். அதுவும் போரடித்து விட்டால் வேறு பலகாரங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று பொருநராற்றுப் படை சொல்கிறது.
கிராமங்களில் மக்கள் பெரும்பாலும் புலால் உணவே உண்டு வந்தனர். தினையரிசியை சோறாக்கி மாமிசத்தை நெய்யில் வேக வைத்தும் பொரித்தும் உண்டு வந்தனர்.
நல்ல அரிசி சோறாக்கி அதை பால் வீட்டு சமைத்த பொரியல்களும் புளிக் குழம்புகளும் உண்டு வந்தனர்.
மீனவர்கள் மீன் மாமிசம் கருவாடு முதலிய உணவு வகைகளை உண்டு வந்தனர்.
வேடர்கள் வேட்டையாடி கொண்டு வரும் மிருகங்களின் புலாலோடு அரிசி சோறும் [கைக் குத்தல் அரிசி என்பதை கவனத்தில் கொள்ளவும்] புல்லரிசி சோறும் உண்டு வந்தனர்.
உழவர்கள் பெரும்பாலும் அரிசி சோறு உண்டு வந்தனர். அத்துடன் அவர்கள் வயலில் விளைந்த காய்கறிகளையும் நண்டுகளையும் சமைத்து உண்டனர். புன் செய் நிலங்களில் இருப்பவர்கள் சிறு தானிய பயிர்களான வரகு சோளம் முதலிய உணவு வகைகளை பருப்பு குழம்புடன் சேர்த்து உண்டு வந்தனர்.
அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்து சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த உழவர்கள் உண்டு வந்தனர்.
மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தவர்கள் பால் அதிகம் சேர்த்து உணவை உண்டு வந்தனர்.
செல்வந்தர்கள் வெள்ளை அரிசி நெய் சோறாக்கி பெட்டை கோழிகளின் கறி சமைத்து சுவையாக உண்டு வந்தனர்.
அந்தணர் உணவு முறை
பார்ப்பாரின் உணவு இனிமையான அறுசுவை உணவாக இருந்த்து. அவர்கள் புலால் புசிக்க மாட்டார்கள்காய்கறி உணவுகளையே உண்டனர். இப்பார்பார்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள். தமிழர் குடியில் தோன்றியவர்கள். தமிழர்களிலே கல்வியும அறிவும் தனக்கென வாழாத் தகைமையும் மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களை அந்தணர்கள் என்றும் பார்ப்பார்கள் என்றும் பண்டைக் காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுவது இவர்களையே ஆகும். இத்தகைய பாரபனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன என்பர்.
இப்பார்பனர்கள் பாற்சோறும், பருப்புச் சோற்றையும் உண்பர். மேலும் அவர்கள் இராஜான்னம் என்று பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினையும் உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தயிர்ச்சாதம், மாங்காய்ச்சாதம், புளியஞ்சாதம், போன்ற சித்திரான்னங்களையும் உண்பர். தம்மை நாடிவந்தோர்க்கும் கொடுத்து உபசரிப்பர்.
வேளாளர் உணவு
சொந்த நிலமுள்ள உழவர்களை வேளாளர்கள் என்றனர். இவர்கள் உழுவித்து உண்ணும் வேளாளர்கள் ஆவர். அவர்கள் இனிய பலாப்பழத்தையும், இளநீர், வாழைக் கனிகள், பனைநுங்கு, இன்னும் பல இனிய பண்டங்கள் ஆகியனவற்றையும் உண்பர். மேலும் சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்குகளையும் அவர்கள் உண்டனர். வேளாளர்கள் சைவ உணவினையே உண்டனர்.
இது முனைவர் சேதுராமன் அவர்களின் படைப்பில் சொல்லப்பட்டுள்ள தமிழர் தம் பண்டைய உணவு முறைகள்.
இப்போ இந்தகால சமையலுக்கு வருவோம்.
மருந்தடித்த அரிசி, மருந்தடித்த காய்கறிகள். இயற்கை உரமிலாமல் கெமிக்கல்கள் போட்டு வளர்க்கப்படும் உணவுகள். எங்கே இருக்கிறது ஆரோக்கியம் சத்துகள் வைட்டமின்கள்...
வெளிநாடுகள் பயோ தொழில் நுட்பத்துக்கு மாறிக் கொண்டு வருகையில் இங்கே நாம் உரங்களையும் பூச்சி மருந்துகளையும் நம்பிக்கொண்டு விவசாயம் செய்கிறோம். நம் நாட்டில் விளையும் மஞ்சளை விட சீன மஞ்சளில் விஷத்தன்மை குறைவாகவும் தரமானதாகவும் இருப்பதால் மஞ்சள் மார்கெட்டை சீனா நம்மிடம் இருந்து பறித்து தக்க வைத்துக் கொண்டது.
மசால் பொடிகளும் குழம்பு பொடிகளும் இல்லாமல் இந்திய பெண்களுக்கு உணவு சமைக்க தெரியுமா?.
பழைய அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் எங்கே போனது?.
குழம்பு வைக்க என்னென்ன பொருள்கள் போட வேண்டும் என்பதும் மறந்து போய் எல்லாவற்றிற்க்கும் இன்ஸ்டண்ட் பொடிகளே கதி என்று கிடக்கின்றனர். சத்து, வைட்டமின் என்பதெல்லாம் ஒப்புக்கு மட்டுமே பேசுகின்றனர்.
எனவே இந்தியாவின் இந்தகால உணவு முறைக்கு வெளி நாட்டு உணவு முறை எவ்வளவோ சிறந்தது... சிறந்தது.

அன்புடன்
THAVAM

-

அன்புடன்
THAVAM

தினமணியில் பிரசிரமான ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்கு... அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே தருகிறேன்.

மாறிவிட்ட உணவு முறை! தேடி வரும் நோய்கள்!

First Published : 08 Nov 2010 01:36:00 AM IST

முன் காலத்தில் ஆயத்த ஆடைகள் மட்டும்தான் இருந்தன! அடுத்ததாக ஆயத்த உணவு தயாரிக்கப் பொடி வகைகள் வந்தன! மசாலாக்கள் - பஜ்ஜி மிக்ஸ் - வடை மிக்ஸ் என்று வந்தன. பின் வெந்நீர் விட்டால் சாப்பிடத் தயாராகும் உணவு வந்தன. தற்போது சமைத்த உணவுகளே பொட்டலங்களில் அடைக்கப்பட்டுத் தயாராக இருக்கின்றன!
வீட்டில் பெண்களும் வேலைக்குச் செல்வதால் சமையல் என்பதையும் - சாப்பாடு என்பதையும் கடைசிபட்சமாகவும் - கடமையே என்றும் செய்வதுமாக ஆகிவிட்டது. காசைக் கொடுத்தால் கிடைக்கிறது என்று 90 சதவீதம் துரித உணவகங்களில் சாப்பிட்டு விடுகிறார்கள். இந்த உணவகங்களில் சுத்தமாக செய்கிறார்களா - இது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானதுதானா என்றும் யோசிப்பதில்லை. வாய்க்கு ருசியாக இருந்தால் சரி என்று கலர் கலராக - கருக வறுத்த உணவுகளை ஒரு கை பார்க்கிறார்கள் இன்றைய மக்கள். சிறுவர், சிறுமிகளுக்கும் துரித உணவு சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திவிடுகிறார்கள்.
நம் நாட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் இரத்த சோகை, தொற்றுநோய்கள் போன்ற பல நோய்களால் பாதிக்கப்படும் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்! செயற்கையான பல ஹார்மோன்களும் - அதிகமான சத்துகளும் சேர்க்கப்பட்ட "ஹெல்த் டிரிங்க்ஸ்'களைக் குடித்துவிட்டும் - அதிகமான ஊட்டச்சத்து உணவுகளை உண்டு கொழுத்து, பல நோய்களுக்கு சிறு வயதிலேயே உள்ளாகும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
மற்ற நாடுகளை நம் நாட்டு உணவுமுறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நாட்டு உணவுமுறை ரொம்பவும் அருமையானது. வெளிநாட்டினர் உணவில் ரொட்டியும் அசைவமும்தான் நிறைய இருக்கும். ஆனால் தற்போது மேலை நாட்டினரெல்லாம் நம் உணவு முறைகளையும் - நம் பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொண்டு ஆரோக்கியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டினரோ அவர்கள் தீயவை என தூக்கியெறிந்த பழக்கங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் நம் முன்னோர்கள் சமைக்கும் வாழைத்தண்டு, வாழைப்பூ - பாகற்காய் - அகத்திக்கீரை - மணத்தக்காளிக் கீரை போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகளை சிரமம் பார்க்காமல் வீட்டில் உள்ள பெண்கள் சமைத்துக் கொடுத்து வெளியில் நிறையச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிறுவயது முதலே பிள்ளைகளையும் இயற்கை உணவுகளை சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும்.
பிரபல வெளிநாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சில கோதுமைத் தவிட்டை சுத்தம் செய்து ஷஷரஏஉஅப ஆதஅச'' என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு கண்கவரும் பெட்டியில் அடைத்து 400 கிராம் | 40க்கு விற்கிறார்கள். வாங்கி பார்த்தால் கோதுமைத் தவிடுதான் அது! ஊண்க்ஷழ்ங். ஆம்! அதாவது கோதுமை மாவை சலிக்காமல் பயன்படுத்தினாலே அந்த நார்ச்சத்து கிடைத்துவிடும்!
நம் நாட்டில் முக்கிய உணவாக முதலில் அரிசிதான் இருக்கிறது. அடுத்ததாக கோதுமை! இதைவிட்டால் வேறு இல்லை என்று நினைத்து விடுகிறார்கள். புன்செய் நில சிறு தானியங்களான கம்பு, கொள்ளு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை போன்ற குறுந்தானியங்களை ஒரு வேளை உணவாகச் சாப்பிட்டால் எலும்புக்குச் சத்து. ரத்தக் கொதிப்பு, கொழுப்பு வராது. சர்க்கரை வியாதியும் விரைவில் வராமல்செய்யலாம்.
இந்த புன்செய் தானியங்களெல்லாம் அரிசி - கோதுமையை விட கூடுதலான மாதங்களுக்கு சேமித்தும் வைக்கலாம். உணவு உண்ணும் முறையை முறையாகக் கடைபிடித்தாலே பல நோய்களிலிருந்து தப்பிவிடலாம்.
எத்தனை வயது வரை வாழ்ந்தோம் என்பதைவிட எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என நினைத்து வாயைக் கட்டி - நோயைக் குறைத்து - வருமுன் காத்து வளமாக வாழ்வோமே!
ராஜேஸ்வரி ரவிகுமார்,
தஞ்சாவூர் மாவட்டம்

என்னுடைய ஆதங்கம் எல்லாம் உணவுப் பொருளில் ருசியை மட்டுமே முக்கியமாக கருதி சத்துக்களையும் வைட்டமின்களையும் இழந்து ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொண்டு நோய்களின் நடமாடும் கூடாரங்களாக இருந்து மருத்துவ மனைகளின் ஐ சி யு வார்டுகளின் நிரந்தர உறுப்பினர்களாக வாழ்ந்து மடிகிறோமே என்பதே... இனியுமாவது மாறுமா இந்த நிலைமை???.

அன்புடன்
THAVAM

நடுவர் அவர்க்ளே, எனக்கு ஓர் உண்மை தெரிந்தாகனும்! தலைப்பு "சுவை அதிகம் உடையது இந்திய உணவா? அல்லதுவெளி நாட்டு உணவா?" என்பதா? அல்லது, "உணவுமுறையில் சிறந்தது இந்திய உணவுமுறையா, அல்லது வெளி நாட்டு உணவு முறையா என்பதா?" நம் எதிர்ணித் தோழ்ர்களுக்கு உப்பு,சப்பு, புளி, காரம்... ல்லாம் மிகுத்துவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்தான் தலைப்பையெ தன்னிஷ்டத்திற்க்கு மாற்றித் திரித்து, எப்படியாவது தம் பக்கம் ஜெயித்தால் போதும் என்று வாதாடுகிறார்கள். ஆனால்; நான் இதுவரை அவர்க்ளிடம் முன் வைத்த எந்த வினாவிற்க்கும் சரியான விடையை கூறமுடியவில்லை!ஒரே மழுப்பல்... உண்மைக்கு உரைகல் தேவையில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும்! நாங்கள் உப்புசப்பில்லாமல் சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்க்காக உண்கிறோம், எதிர் அணியினர் " விழுந்தும் மீசையில் மண் படவில்லை"*என்றனர். எங்களுக்கு மீசையும் இல்லை( வெளி நாட்டுக்காரனுக்கு ஏது மீசை?) நாங்கள் விழவும் இல்லை! "நம்நாட்டு உணவு வெளி நாட்டு உணவை விட சுவையானது ஆரோக்கியமானது
சமச்சீருடையது. என்ன இல்லை நம் நாட்டு உணவில் ஏன் கையை ஏந்த
வேண்டும் வெளி நாட்டு உணவுக்காக? " எங்கின்றனர். நானும் அதையேதான் கேட்கிறேன்! உங்களிடம் எல்லாம் உள்ளபோது வெளி நாட்டு உணவகங்களை மூடி விடுங்கள்.
சமச்சீர் உடையைது சமச்சீர் உடையைது எங்கிறீர், அதுதான் என்னவென்று கேட்கிறேன், என்ன சமச்சீர்? 7 சத்து உள்ள்தா? ஒரு நாளைக்கு 5 பழம், 5 காய் சாப்பிடறிங்களா? குழந்தைக்குகூட மாவுச்சத்தைதவிற வேறு ஒன்றுமே கொடுக்க முடிவதில்லையே! 80 வயது தாத்தாபாட்டிகள் எங்கேயாவது நோயின்றி நடமாடுகின்றனரா?

"இன்னைக்கு அவன் நாட்டு உணவுகளை கொண்டு வந்துட்டு விட முடியாம உடம்பை கெடுத்துக்குறோம். இது தான் உண்மை". என்று நீங்கள் ஏன் லம்புகிறீரிகள்? உங்களுக்கு என ஒரு சரியான உணவுமுறை, சமச்சீர் உணவுக்கொள்கை இல்லை. எனவேதான் அங்கு எங்கு என்று பிடித்துக்கொண்டு எதையுமே சரியாய் உணராமல் உடலை உபாதைகளுக்கு உள்ளாக்குகிறீர்கள்!
"வெளி நாடுகளில் பால் மற்றும் மாமிச அழற்சியால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு போக வேண்டிய நிலை.அவைகள் பல மாத ஸ்டாக். இந்நிலை நம் நாட்டில் இல்லை.//////

என்னப்பா அயல்நாட்டணி இப்படியெல்லாம் நடக்குதாமே அங்கே.....??என்ன சொல்றீங்க???" நடுவர் அவர்கலே இத்ற்கு பதில் நீங்க கேட்டீங்க! இதுல் என்ன வேடிக்கை என்றால் எந்த ஆதாரமும் இன்றிய தகவல் இது! வேண்டுமென்றால் இது நம் ஊர் பத்திரிக்கையில் அடிக்கடி வரும் நம் ஊர் செய்தியாக இருக்கும்!
வாழையிலையில்தான் சாப்பிடுகிறோம் எஙிறீர் ... வருடத்திற்கு எத்தனை முறை? மிஞ்சிப் போனால் 10,15 முறை இருக்குமா? மீதியுள்ள 350 நாட்கள் ?
"நம்ம உணவை கேலி செய்யும் தகுதி எந்த நாட்டு உணவுக்கு இருக்கு???///"
அப்ப்டீன்னு கேட்டாங்க! இதுல கேலிக்கே இடமில்லை, நாங்கள் சுட்டி காட்டுகிறோம் அவ்வள்வுதான்!
"அவர்கள் உணவை சமைபதற்கு சோம்பல் பட்டு கொண்டு ரெடி மேட் உணவை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனால் பெண்கள் மார்பக புற்று நோயால் அதிகம் பாதிக்கபடுகிறார்கள். . அங்கு நம் இந்தியர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு.." என்று ஒரு தகவல் கூறினார் நம் தோழி! அங்கெல்லாம் டி.வி. சீரிய்ல்கள் இல்லை....... "சமைப்பதை இருபாலரும் செய்கின்றனர்" என்று நல்ல தகவல் தந்த மற்றொரு தோழிக்கு இங்கு நன்றி கூறுகிறேன்.

சமையல் என்றாலே "திருத்துதல் - பக்குவப்படுத்துதல்" என்று பொருள். உணவைத் திருத்தி பக்குவப்படுத்தி உண்பதற்கு தோதாக செய்வத்தான். உள்ள சத்தையும் அழிந்து போகும் அளவுக்கு அழிப்பதற்கு அல்ல!

பிரான்ஸில் வாழும் மக்கள் நீண்டகாலம் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர்கள் பிறைக் காட்டிலும் அதிகமாக செறிவூட்டப்பெற்ற உணவுகளைச் சாப்பிடுகின்றனர் என்றாலும், இதய நோய் விகிதம் வட மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதற்கு பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன:

பதப்படுத்தப்பட்ட கார்போஹேட்ரேட்டுகள் மற்றும் பிற துரித உணவுகளை நுகர்வது குறைவாக இருக்கிறது.
சிவப்பு ஒயினை தொடர்ந்து குடிப்பது.
தினசரி உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி போன்ற நிறைய சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவது; பிரெஞ்சுக்காரர்கள் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இருப்பினும், 1990௨000 இல் இருந்து உலக சுகாதார நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் பிரான்ஸில் இதய நோய் ஏற்படும் நிகழ்வுகள் குறைவாகவே உள்ளது. இது அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுள்ளதாகவே இருக்கிறது.

முறையற்ற ஊட்டச்சத்து நுகர்வினால் ஏற்படும் குறைபாடுகள் உடல் பருமன்,இதய நோய்,உயர் ரத்த அழுத்தம்,புற்றுனோய், இன்னும் பெயர் தெரியா நோய்கள் வ்றுவதாக ஆய்வுகள் கூறுகின்ற்ன.

சமச்சீர் உணவின்மையின் விளைவுகள் இவை என உலக உணவியல் ஆய்வு கூறுகிறது.

. "முன்னேறிய நாடுகளில் பொதுவாக பாதிக்கப்படும் நோய்களால் சிறு அளவிலேயே பாதிக்கப்படுகின்ற, மற்றும் நீண்டகால ஆரோக்கிய வாழ்வு வாழ்கின்றனர்" என்றும்
"...பீன்ஸ், சோயா பால், உருளைக்கிழங்குகள் மற்றும் பிற பழங்களை உட்கொள்ளும் அவர்களுடைய பழக்கம் குறிப்பிட்ட வகை புற்றுநோய் வளர்வதன் அபாயத்தை அவர்களிடத்தில் குறைக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. அத்துடன் முற்றிலும் தானியத்தினாலான ரொட்டி சாப்பிடுவதும், ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை தண்ணீர் அருந்துவதும் மற்றும் மிகவும் ஆச்சரியப்படும்படியாக வாரத்திற்கு நான்கு பருப்புக்களை சாப்பிடுவது ஆகியவை அவர்களுடைய இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வாதாரங்கள் கூறுகின்றன.

நடுவர் அவர்களே
எதிரணித்தோழர்கள் நாங்கள் ஏதோ ஊகத்தின் அடிப்படையில் சொல்கிறோம் எனக் குற்றம் சாட்டினர், அதை இல்லை என நிருஊபிக்க மேற்கூறிய மேற்கோள்களின் அடிப்படைய்ல்தான் எங்கள் வதங்கள் உள்ளன என உங்களின் மேலான பார்வைக்கு இவற்றை சமர்ப்பிக்கிறேன். (மேற்கோள்கள் ஆஙிலத்திலிருந்து எட்க்கப்பட்டு தமிழ்ப்படுத்தியதால் சற்றே நுண்ண்யமான பதம் இருக்ககூடும்)

நான்கரை மணி கால வித்தியாசத்தால் என்னால் இதற்கு மேல் விவாத்ங்களை உங்களிடம் சமர்ப்பிக்கமுடியவில்லை என்ற வருத்தம்
எனக்கு! ( பிரான்ச் - இந்திய நேரம்)
ஆகையால், என்றும் நீதி தவறா நடுனிலையில் உள்ள நடுவர் அவர்கலே! உண்மையின் பக்கம் தீர்ப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டு இப்பட்டிய்ல் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி வாதங்களை முன் வைக்க துணைபுரிந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வண்க்கம்!!

Awake, arise and stop not till the goal is reached

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நடுவர் அவர்க்ளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பட்டியில் 3 நாட்களுக்கு முந்தான் இணைந்தேன். தலைப்பிற்காக வாதாடும் நோக்கிலேலெயே இருந்ததால் பட்டியின் நிபந்தனைகளைப் படிக்காமல் விட்டுவிட்டேன், என் பிழை அது. மன்னித்துவிடுங்கள். *
நான் கையாண்ட மேற்கோள்களை நீங்கள் வழிகாட்டியபடி என் நடைய்ல் மாற்றி அனுப்பியுள்ளேன். நன்றி, வணக்கம்!

Awake, arise and stop not till the goal is reached

ஹேமா சுட்டிக்காட்டியதை நன்முறையில் எடுத்துக்கொண்டு தவறை திருத்திக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்,நன்றிகள்........
தவண்ணா:
உங்களின் கடைசிகட்ட வாதங்கள் நன்று......உங்கள் அணிக்காக மிக நண்றாக வாதாடியுள்ளீர்கள்........

பட்டி தீர்ப்பு:
என்ன தோழிகளே தயாரா?பட்டியின் தீர்ப்பை வெளியிட்டுவிடலாமா??தீர்ப்பை படித்துவிட்டு என்னை திட்டக்கூடாது..சரியா.......:))

பட்டி தீர்புக்கு முன் சில......
*************************************

தோழிகளே, பட்டி - 52 க்கான தீர்ப்பை கூறுவதற்கு முன்பு சில தகவல்களை கூற விரும்புகிறேன்......இது இந்த பட்டி பொழுதுபோக்கு அல்ல என்பதையும்,விஷயங்கள் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்குமென நம்புகிறேன்......பட்டியின் தீர்ப்பை வழங்கும் முன்பு சிலதை தெரிந்துகொள்வோமா?

உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?
இந்த தலைப்பைப்பற்றி கடந்த ஒருவாரகாலமாக தோழிகள் வாதாட நம் விவரங்கள் சேகரித்தோம்.....தீர்ப்பு எதனடிப்படையில் வழங்கவுள்ளேன்........"சுவை,ஆரோக்யம்,சமச்சீர் உணவு"

1.சுவை:
***********
(அ)அயல்நாட்டு ஊணவில் சுவை:
************************************************
மறுப்பதற்கில்லை.......அவர்களின் ஸ்வீட்ஸ்,கேக்ஸ்,பப்ஸ்,சான்விஞ்,பீஸா போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்களில் உள்ள சுவைதானே நம்மவர்களையும் அவர்கள் உணவை உண்ணச்செய்கிறது?ஆக சுவையில் அயல்நாட்டு உணவுகள் குறைந்துபோகவில்லை....
அங்கே விளையும் பழங்கள் கூட ருசியுடன் திகழ்கின்றன.....வளர்ந்த அயல்நாடுகளில் பொருளாதாரம் பார்க்காமல் நல்ல விலையுயர்ந்த பொருள்களை வைத்து தயாரிக்கபடும் உணவுகள் மிகவும் ருசியாகவே இருக்கின்றன......
சிக்கன் அயிட்டங்கள்,ஸ்டஃப்டு,பிரையிடு அயிட்டங்கள்ஸ்,பிரட்ரோல்,ரசமலாய்,கேப்சிகம் டேன் கிரில் சிக்கன்,சிக்கன் ரோல் இப்படி புது அயிட்டங்கள் நாவில் ருசியை நினைவுகூறுகின்றன.....
நூடில்ஸ்,கிரீன் டீ,விஜிடபில்,சிக்கன் நூடில்ஸ்,நாண்,துருக்கி,ஈரான்,பிரியாணி வகைகள்,பிரான்ஸ்,இங்கிலாந்து,பிரைடு ரைஸ் வகைகள்,காலிபிளவர் போன்றவற்றை கொண்டு செய்யும் பொறித்த டிஸ்கள் அனைத்தும் சுவையே.....
ஆக அயல்நாட்டு உணவில் சுவையில் குறைவில்லை........

(b)நம்நாட்டு உணவில் சுவை:
******************************************
நம்நாட்டில் விலை அதிகமோ,குறைவோ, எப்படி இருந்தாலும் அதை அக்கரையுடன் சமைக்கும் விதத்திலேயே சுவை கூடிவிடும்.....
சும்மா இல்லீங்க,நாம் என்னதான் புளி சாதத்திற்கு பெருங்காயம், வெந்தையம்,பூண்டு,கடலை சேர்த்தாலும் ருசி கிடைக்காது.அதுவே அம்மா கடலை,வெந்தையம் இல்லாமல் செய்தாலும் மனமும் வயிறும் நிறையும்.அப்படிப்பட்ட மேஜிக்சுவை நம்நாட்டு உணவிற்கு உண்டு...
அடுத்து இயற்கைதரும் பழங்கள்,காய்களின் சுவை, கொய்யாவை எடுத்துக்கொள்ளுங்கள் அரும்பழுப்பில் உண்டால் ஒருசுவை,நன்கு பழுத்து உண்டால் ஒருசுவை.....ஒவ்வொரு காய்,கனிகளிலும் இப்படிதன்.........

நம்நாட்டில் செய்யும் வெறும் சாம்பார்,ரசம்,புளிகுழம்பு,மோர்,அப்பளம்,ஏதோ ஒரு பொறியல் போதுமே மேற்கத்திய அத்தனை உணவுகளின் சுவையையும் அடித்துக்கொள்ள.....
பின் இன்னும் வேண்டுமா,இட்லி,பூரி,சப்பாத்தி,கறிகுழம்பு,நேற்றைய மீன்குழம்பு,உப்புகண்டம் போட்டு செய்யும் குழம்பு,புளிக்குழம்பிலே எவ்வளவு வகைகள்....அப்பப்பா .....எல்லாம் எடுத்து வைத்தால் அனைத்து நாடுகள் வந்தாலும் ஈடாகாதுபோலிருக்கே......!!!

ஸ்வீட்ஸ், லட்டு,ஜாங்கிரி,மைசூர்பாகு,அல்வா,பாசந்தி,பாதுஷா,பால்கோவா, இன்னும் போயிட்டே இருக்கும்......
காரம்கூட சுவையாக இருக்கனுப்பா இல்லைனா நா வெந்திடும்....அப்படி பார்த்தால் காரா பூந்தி,புறுக்கில் எத்தனை வகை,தட்டுவடை,வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா.....இப்படி பல நாங்களும் சுவையுடன் செய்வோம்ல.......
ஆக நம்நாடும் உணவின் சுவையில் குறைந்தது இல்லை......
சரி அடுத்ததுக்கு போவோம்.......

பட்டி தீர்புக்கு முன் சில......
************************************
2. ஆரோக்யம்:
********************
(அ) அயல்நாட்டு உணவிவும் ஆரோக்யமும்:
****************************************************************
மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது, ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச்சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் காணலாம்.காலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின், மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.

அவர்கள் மட்டுமல்ல மற்ற நாடுகளும்கூட தாளிக்கும் பழக்கத்தை நம்மைப்பார்த்துதான் பழகினர்.....அவர்கள் செய்யும் சமையல்களில் வைன் போன்ற நமக்கு ஆகாத பொருட்கள் வெறும் சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுகின்றன....இது உடலுக்கு சிறிதேனும் தீமைதரக்கூடியதே......

இவர்களின் இன்றியமையாத,தடுக்கமுடியத,அவசியமான பழக்கம் பதப்படுத்தல்....இது சூடாக்கி பதப்படுத்துதல், வேகவைத்து பதப்படுத்துதல், உலரவைத்தல், உப்பிலிடுதல் மற்றும் பல்வேறு பாகங்களாகப் பிரித்தல் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது,

இவை அனைத்தும் உணவின் அசல் ஊட்டச்சத்து பொருட்களை மாற்றுவதாக காணப்படுகின்றன.சில புதிய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் சந்தேகமேயில்லாமல் நாசம் செய்பவைதான்.

அரைத்தல், பிரித்தெடுத்தல் மற்றும் அழுத்துதல் மற்றும் நவீன பிரித்தல் உத்திகள் உணவு, மாவு, எண்ணெய்கள், சாறுகள் ஆகியவற்றின் குறிப்பிட்ட பாகங்களை செறிவூட்டச் செய்வதோடு, கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பிரிக்கவும் செய்கிறது. தவிர்க்க இயலாதபடி இதுபோன்ற பெரிய அளவிலான செறிவூட்ட மாற்றங்கள் உணவின் ஊட்டச்சத்துப் பொருட்களை மாற்றுகிறது.
இருந்தபோதிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் , புதிய உணவுகளோடு ஒப்பிடுகையில் குறைவான அளவிற்கு ஊட்டச்சத்துகளையே கொண்டிருப்பதாக இருக்கின்றன.
மேலும் இங்கு சுவை மற்றும் கெடாமல் இருக்க சில செயர்கையான பொருள்கள் அஜினோமோட்டோ போல சேர்க்கப்படுகின்றன.....மேலும் உணவு கலருக்கும் சில பவுடர்கள் கலக்கப்படுகின்றன..இவை கண்டிப்பாக உடலுக்கு கெடுதியே.......உணவுப்பாதை அலர்ஜி உண்டாகும்,ஜீரண கோளாறு வரும்.....
இங்கு சமையலுக்கு உபயோகிக்கும் மூலப் பொருள்களை மருந்தாக உபயோகிப்பது குறைவே.....சீரான சீதோஷணம் இல்லாத காரணத்தால் இங்குமூல உனவுப்பொருள்களும் கூட பதப்படுத்தப்படுகின்றன.இந்நிலையில் மூல உணவுப்பொருள்களை மருந்துகளாக ஆரோக்யத்திற்கு உபயோகிப்பதும் குறைவே......
ஆனாலும் இங்கே தயாரிக்கப்படும் சில உணவுகள், வெஜ் பீஸா,சாலட்,சூப்ஸ்,புரூட் சாலட் போன்றவை ஆரோக்யம் கொடுப்பவையே.....(ரெடிமேட் பவுடர்கள் கலாக்காத சமையங்களில்)..

பாலிஷ் செய்யப்பட்ட உணவு அளிக்கப்பட்ட மக்களிடத்தில் பரவிய பெரி-பெரி நோய் விவரம் கொண்ட மக்களிடத்திலான ஆரோக்கியத்தில் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்படுத்திய விளைவே சமீபத்திய உடனடி உதாரணமாகும்.
பாலிஷ் செய்வதன் மூலம் அரிசியின் மேலுள்ள வெளிப்புற அடுக்கை நீக்குவதால் அத்தியாவசிய விட்டமினான தயாமின் நீக்கப்பட்டு பெரி-பெரிக்கு காரணமாக அமைகிறது. அமெரிக்காவில் 1800களின் பிற்பகுதியில் பிறந்த குழந்தைகளிடத்தில் ஏற்பட்ட இரத்தசோகையின் பரவல் மற்றொரு உதாரணமாகும்.

(b)நம்நாட்டு உணவிவும் ஆரோக்யமும்:
**********************************************************
எந்த நாடாக இருப்பினும் சமைக்கும் முறையே ஆரோக்யத்தை நிர்ணயிக்கும்....வெளிநாட்டு மோகத்தால் நம்பக்கமும் அவசர உணவுகள் செய்யப்படுகின்றன.....:(
சரி நம் உணவு முறைக்கு வருவோம்.....கம்பு,கேழ்வரகு,மக்காசோளம்,ராகி..... இப்படி பண்டைய பயிறுவகைகளில் புதுவித சமையல்கள் வளர்ந்துவிட்டன..அதே கஞ்சி,கூழ் செய்தால்தான் சத்து கிடைக்கும்னு இல்லை,கம்பு இட்லி,சோள உப்புமா இப்படி பண்டைய பொருளில் புது சமையல் அதே ஆரோக்யத்துடன் சாப்பிடலாம்.....தற்போது அப்படிதான் நம்நாடு வளர்ந்துள்ளது...பழையதை ஒதுக்கவில்லை ஆனால் அவற்றை மேலும் புதுப்பித்துள்ளது மெருகு குறையாமல்......:))
சீராண சீதோஷணம் நமக்கு ஒரு வரபிரசாதம்.....ஆம்,மாதம் மும்மாறி இல்லாவிட்டாலும்......கொட்டும் பனியும்,கொடூரமாக வரட்டு வெயிலும் இல்லை..ஆக நம் சீதோஷணத்திற்கு அனைத்து பயிற்களும்,பழங்கள்,காய்களும் நன்கு வளர்கின்றன......
நெல்லி,கொய்யா,ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை,பேரி,விக்கிப்பழம்,பேரிச்சை, குங்குமப்பூ,முந்திரி,மிளகு,காஃபிகொட்டை,தேயிலை,மா,பலா,வாழை,தக்காளி,...... இப்படி இன்னும் பல காய்,கனி வகைகள் அப்படியே உண்ணவும் சமைத்து உண்ணவும் ஏற்றதாக சுவையுடன் ஆரோக்யம் கலந்தே உள்ளது.......:)
அயல்நாட்டவருக்கு கொய்யாவின் வலுவலுப்பும்,பூண்டின் வாசனையும் பிடிக்காது.ஆகவே சாலட்,சூப் போல மாடுலேட் பண்ணி உண்கின்றனர்.
ஆனால் நாம் அப்படி இல்லை....இயற்கையை அப்படியே அனுபவிப்போர்....

எலுமிசச்சையுடன் சர்க்கரை சேர்த்தால் சுவையான குளிர்ச்சியான தாகம்தணிக்கும் பானம் தயார்.....இது அனைவருக்கும் தெரியும்...
அதே எலுமிச்சையுடன் சிட்டிகை உப்பு கலந்து அந்த பானம் குடித்தால் நெஜ்ஜு எரிச்சல் குணமடையும்.இது எத்தனை வெளிநாட்டவருக்கு தெரியும்??பாவம் அவர்கள் விக்கலுக்கு பயந்து ஆஸ்பத்திரி ஓடுபவர்கள்தானே.....
இது ஏளனமில்லை,நம் பண்டைய ஆரோக்ய உணவை காப்பாற்றூம் துடிப்பே.....

பழங்கள்,சமைத்த உணவுகள்,உணவுப்பொருள்கள்,சிறிய இலைகள்,பூவரை மருத்துவ குணம் கொண்டது நம்நாட்டு உணவு.....வேப்பம்பூரசம் வயிற்றை சுத்தம் பண்ணும்,ரத்த விருத்தி,ரத்த சுத்தம் செய்யும்......
கற்பூரவல்லி இலை,சளி இருமள் சரியாகும்.தேன் சளியை முறிக்கும்......

இவ்வளவு ஏன் காலைக்குத்தும் நெருஞ்ஜி முள்ளின் விதை இதய நோய்க்கான மருந்துன்னு தெரியுமா??அதன் இலையை சமைத்து உண்டால் முடக்குவாதத்திற்கு மருந்துன்னு தெரியுமா???
வாழையில் உண்பதால் ஜீரணசக்தி கூடும்,மனம் வயிறு திருப்திப்படும்,பஃபே சிஸ்டங்கள் வந்த போதும் வாழையிலை விருந்து இன்னும் பலபல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றதை மறுப்பதற்கில்லை......
கோழி,ஆடு வெட்டுமிடம் கொஞ்சநேரம் ஈ மொய்க்க இருக்கலாம்.ஆனால் அதை வாங்கி வந்ததும் அம்மா மஞ்சள் போட்டு கழுவாங்களே...... நினைவிருக்கா?? கிருமிநாசினியாக மஞ்சள் இருக்கிறது.....

மசாலா அரைத்து குழம்பு வைப்பது நம்நாட்டிற்கே உண்டான சிறப்பு..... அயல்நாட்டவர் சாப்பாட்டிலோ,அல்லது உண்டபின்னோ வாயுக்களில்கூட வாசனை வருவதை விரும்பாதவர்கள்.......நாம் சேர்க்கும் மசாலாவில் சோம்பு,பட்டை,கிராம்பு,இன்னும் பல பொருள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித மருந்துப்பயன் கொண்டவை,.........
உண்ணும் அசைவம் சீக்கிரம் ஜீரணமாகவும்,வயிற்றுக்கு அலர்ஜி ஆகாமல் இருக்கவும்,ருசிக்காகவும் இவை சேர்க்கப்படுகின்றன.......
இஞ்சிபூண்டு,பெருங்காயம் உணவுப்பொருள்களில் உள்ள வாயுக்களை நீக்கக்கூடியது.......
சமையலில் முதலில் சேர்க்கும் கடுகு,வெங்காயம்,வரமிளகாய்,கருவேப்பிலை முதல் கடைசியில் தூவி இறாக்கும் கொத்தம்ல்லி,பெருங்காயம் வரை மருந்துப்பொருட்களே.....

இப்படி சமையலில் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும்,உபயோகப்படும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணமுடையது நம்நாட்டு உணவில் மட்டுமே என நம்புகிறேன்...
இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில் குர்குமின் செயல்பாடு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இணைப்புகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை வெகுவாக குறைகின்றது. இதனால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன.
ஆக ஆரோக்யமான உணவுமுறையில் நம்நாட்டு உணவுகள் அயல்நாட்டிவிட குறைந்துபோகவில்லை.......

//தலைப்பு "சுவை அதிகம் உடையது இந்திய உணவா? அல்லதுவெளி நாட்டு உணவா?" என்பதா? அல்லது, "உணவுமுறையில் சிறந்தது இந்திய உணவுமுறையா, அல்லது வெளி நாட்டு உணவு முறையா என்பதா?" // சுவை இல்லாத உணவு மிக சிறந்த உணவாக இருக்க முடியாது ..

வெளி நாட்டு உணவுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்யும் இவர்கள் ,அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து (கணவன், மனைவி இருவரும் ) நாம் உணவின் இடையில் தண்ணீர் குடிப்பதை போல் மது அருந்தி கொண்டு உணவு அருந்துவதை ஏற்றுகொள்வர்களா?

//! இதுல் என்ன வேடிக்கை என்றால் எந்த ஆதாரமும் இன்றிய தகவல் இது! வேண்டுமென்றால் இது நம் ஊர் பத்திரிக்கையில் அடிக்கடி வரும் நம் ஊர் செய்தியாக இருக்கும்!''// இது நம் ஊர் பத்திரிக்கையில் அடிக்கடி வரும் நம் ஊர்
செய்தி அல்ல.. எனக்கு தெரிந்த எகிப்து நாட்டு தோழி எப்பொதும் இன்ஜெக்சன் (ஊசி மருந்து உடன் குழந்தை பின்னால் பார்க் ல் சென்று கொண்டிருபார். அக்குழந்தைக்கு இங்குள்ள பால் அழற்சி.

மேலும் சில பதிவுகள்