அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

அதான் மீனு பார்த்து பார்த்து குறிச்சு வச்சிட்டு இருக்கேன். தாராளமா வாங்க. அருசுவை தோழிகள் எல்லாரும் வந்திருங்க. 2, 3 நாளைக்கு வர மாட்டேன். அதான் இப்பவே எல்லாரையும் கூப்பிடுறேன்

ஆன்ட்டி கதை சூப்பர்... வாழ்த்துக்கள்... தொடருங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய்....மீனு...நலமா? மிக்ஸியில் இட்லிக்கு அரைக்க 2 1/2 கப் இட்லி அரிசி + 1/2 கப் பச்சை அரிசி சேர்த்து ஊறவை..... உளுந்து (முழு உளுந்து நன்றாக இருக்கும்) 1 1/2 கப்+ 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கணும்...தனித்தனியாக அரைத்து இரண்டையும் கலந்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, மறுநாள் இட்லி வார்த்தால் சூப்பராக வரும்...ட்ரை பண்ணிப் பாரு...அரிசி, உளுந்தை 1 அல்லது 1 1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.

எல்லார்க்கும் சூடா இஞ்சி டீ உருளை பஜ்ஜி வெங்காய பக்கோடா எடுத்துக்கோங்க வினோ நலமா நசீம் பக்ரீத் வாழ்த்துகள் வர்த்தினி சாரி இப்பதா பாத்தேன் அம்மா வீட்ல எல்லாரும் நலம் பா அரட்டைய தொடருங்கபா மறக்காம ப்ளேட்ட குடுத்திடுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நசீம் நானும் வருவேன் விருந்துக்கு ஓகேவா. நம்ம அறுசுவைல நிறைய டிஷ் இருக்குலப்பா இப்பவே செலக்ட் பண்ணி வச்சுக்கோங்க நல்லப்படியா ப்ளான் செய்து வச்சு நல்லபடியா செய்ங்கப்பா.

ஹாய் ரேணு ஆஹா இந்த குளிர்ல இந்த டீய குடிக்க சூப்பரா இருக்கும் சூப்பர்பா. இன்னக்கு என்ன ஸ்பெஷல் செய்தீங்க அம்மா அப்பா தங்கை நலமா?

எல்லாரும் நலம் பா நேத்து சிக்கன் பிரியாணி இன்னிக்கு வெஜ் பிரியாணி பா உருளை பஜ்ஜி வெங்காய போண்டா வெங்காயம் பக்கோடா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓக்கே ஆன்ட்டி நீங்க சொன்ன மாதிரி அரைக்குறேன். முழு உழுந்துக்கும் உடைத்த உளுந்துக்கும் என்ன வித்தியாசம்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

முழு உளுந்தை அரைச்சா நல்லா திரண்டு வரும்...உடைச்ச உளுந்து அப்படி வராது...அதுதான் வித்யாசம்...க்ரைண்டரில் அரைத்தால் 3 பங்கு அரிசிக்கு, 1 பங்கு உளுந்து போதும்.... மிக்ஸியில் அரிசி அளவுக்கு பாதி அளவு உளுந்து வேண்டும்...

ஹே ரேணு நானும் எடுத்துக்குறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஓஓ அப்டியா ஓக்கே நீங்க சொன்ன மாதிரி இந்த சனிக்கிழமை ட்ரை பண்றேன். தேங்க்ஸ் ஆன்ட்டி..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்