நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

ஹார் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கிங்க... அரட்டை சூப்பரா போகுது!! நாகா எனக்கும் உங்க நிலைமைதான் அதுனால கவலை படாதிங்க கடவுள்ட விட்டுறுங்க எல்லாத்தையும்... ரேணு டெஸ்ட் பண்ணியா.. ஹாய் ஜெஸி 7 ஆம் அறிவு கூப்டு போலயா ஹே ஹே ஏன் இவ்ளோ சந்தோஷம்னா என்னையும் கூப்டு போ மாட்டேன் சொல்ட்டாங்க:( ராதா ஆன்ட்டி எப்டி இருக்கிங்க நீங்க சூப்பர் அம்மா... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அண்ணி கவலைய விடுங்க நான் கேட்கறேன் அண்ணாகிட்ட. இன்னும் நீங்க ஏழாம் அறிவு பார்க்கலயா? ஏதாவது வேலையா இருந்திருக்கும் அதான் அண்ணா பிஸியா இருக்காங்க போல சீக்கிரம் கூட்டிட்டு போவாங்க.

ஹாய் ரேணு, வந்தாச்சா? ஏன் ரேணு அவசராப்படுறீங்க இன்னும் 2 நாள் இருந்துட்டு போங்கப்பா. அங்க போனா நிச்சயம் நிறைய வேலை செய்ற போல தான் இருக்கும்.

ஹாய் யாழினி எப்டி இருக்கிங்க/// நீங்க பார்த்துட்டிங்களா ஏழாம் அறிவு எப்டி இருக்கு...? ஜெஸி ஆமா இந்த ரேணு எங்க? ஏன்பா இப்பவே வீட்டுக்கு போறிங்க டென்ஷனோட பிறப்பிடம் மாமியார் இருக்கும் போது அதும் பேசாம இங்க இருந்து ரெஸ்ட் எடுங்க.. அண்ணா இங்க வர சொல்லி ஈவினிங் ஏதா கோவில்கு போங்க நடந்து ரிலாக்ஸா...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு ஒரு சின்ன ஐடியா தப்பா இருந்தா சாரி உங்களுக்கு எதனா வாங்கனும்னா உங்க ஹஸ்கிட்ட சொல்லி இங்க வாங்கிட்டு வர சொல்லிடுங்க அதை எடுத்துட்டு மாமியார் வீட்டுக்கு போங்க அங்க போய் வாங்கினீங்கன்ன சண்டை போடுவாங்கஇல்ல இது என் அனுபவம்

இப்படிக்கு ராணிநிக்சன்

ம் ம் நான் பார்த்துட்டே மீனு சூப்பர் படம். நிஜமாவே தமிழன்கிற திமிர் வருது. வசனங்கள்லாம் ரொம்ப நல்லா இருந்தது.

இல்லப்பா அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம் 4, 5 நாளா லஞ்ச் தரலயாம் ஹோட்டல்ல தா சாப்பிடறார் அவர் உடம்புக்கு செட் ஆகாது அப்றம் ஹாஸ்பிட்டல் தா போகணும் அதான் இன்னிக்கு போலான்னு இருக்கேன் என்ன செய்றதுனு தெரில பா மீனு நேத்து டெஸ்ட் பண்ணே நெகடிவ் வந்தது அம்மா கஷ்டபட்டாங்க அதான் இங்க இருந்தா இன்னும் கஷ்டபடுவாங்க பா அதான் அங்க போகலாம்னு இருக்கேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு உனக்கு கம்ஃபோர்ட்டா இருந்தா போ பா அங்க போயும் ரொம்ப வேலை பண்ணாத அவங்க என்ன சொன்னாலும் பிள்ளைக்காக அப்டின்னு இருந்துடு இன்னும் ஒரு 10 நாள் கழிச்சு பாருபா... ஜெஸி என்ன பண்ற...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ரேணுராஜ் எப்டி இருக்கிங்க இப்ப எப்டி இருக்கு தொண்டை வலி?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இப்ப நலம்.கொஞ்சம் வலிமட்டும் இருக்கு,இருமலும்தான்......நீ எப்படி இருக்க ?நன் கொஞ்சம் பிஸி,வேலை,பட்டி இதானால்தான்.....

ம் பட்டி ரொம்ப நல்லா போகுது வாழ்த்துக்கள்.. நான் நல்லா இருக்கேன். உங்க ஊருக்கு தான் வந்தேன். ஒரே மழை..:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்