நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

மீனு,
எப்போ வந்தீங்க?சொல்லவே இல்லையே....இன்றுதான் கொஞ்சம் வெயில் இருக்கு.அதுவும் அப்பப்போ பக்கத்தில் இருக்கும் வீடு தெரியாத அளவிற்கு மிஸ்ட் சூழ்ந்து வருகின்றது....

இந்த லிங்க் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/14254

http://www.arusuvai.com/tamil/node/20198?page=1

KEEP SMILING ALWAYS :-)

நான் 2 திரும்பிட்டேன். ஊட்டி ல இருந்து இல்ல நான் உங்க கிட்ட சொன்னேனு நினைக்குறேன். ஆமாபா ஒரே மிஸ்ட் பயங்கரமா வழுக்குது துண்டு கூட காயல எண்ணெய் எல்லாம் சீஸ் மாதிரி கட்டியா இருந்தது அங்க இருந்த வர எண்ணெய உருக்கவே 1/2 மணி நேரம் ஆச்சு... மூச்சு முட்டுற அளவு குளிர் எப்பவும் மழை நீங்கள்லாம் க்ரேட் தான் ரேணு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாகா என்ன பண்றிங்க பாப்பா க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்ன பண்றாங்க?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நன்றி மீனு. பாப்பா தூங்கறா

KEEP SMILING ALWAYS :-)

மீனு,
தே.எண்ணை உறையாம இருக்க குறைந்தது 16 டிகிரி வேணும்....இங்க எப்பவும் அப்படிதான் இருக்கும்.....அப்ப இங்கத்த சீதோஷ்ணம் எப்படின்னு பாருங்க.....என்ன சொன்னாலும் ஆனாலும் இங்கே என்னவோ இருக்குப்பா....:) எனக்கு ஊருக்கு வந்தால் வெயில்தான் ஒத்துக்க மாட்டேங்குது இப்ப... ஒருவாரம் இருக்கனும்னா ஒருநாளைக்கு 3,4 தரம் குளிக்கனும்போல இருக்கு.......

ம் க்ளைமேட் ஒத்துக்குச்சுன்னா அங்க சூப்பர் தான் எனக்கு எப்பவும் சளி பிடிக்கும் .. நைட் ரொம்ப மூச்சு விட கஷ்டப்பட்டேன். உங்களுக்கு செட் ஆயிட்டுனா நோ ப்ராபளம்...:)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு ஊட்டி ட்ரிப் பத்தி சொல்லிட்டு இருக்கீங்களா?ரேணுகிட்ட. நாம சும்மா ஊர்சுத்திட்டு வரதுக்கே தாங்க முடியல அந்த குளிர். எப்படி தான் அங்கேயே இருக்காங்களோ அவங்களுக்கு பழகி இருக்கும்பா.

நாகா ரொம்ப பிஸியா இருக்கீங்களா நாளைக்கு பங்ஷனுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கீங்களா?

நசீம், பூங்காற்று, மெர்சானா, சிம்ரா அப்பறம் நம்ம இஸ்லாமிய தோழிகள் எல்லாரும் செம பிஸியா இருப்பாங்க. என்ன தோழிகளே விருந்துலாம் முடிந்ததா?

எல்லாரும் எப்படி இருக்கீங்க ,நாகா உங்க பொன்னுக்கு என் வாழ்த்துக்கள்

ஆமா யாழி கொஞ்சம் வேலை இருக்கு. மிக்க நன்றி வர்தினி :-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்