நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

வனி இங்க தான் இருக்கீங்களா?? பின்னூட்டம் நீங்க பாக்க முடியுதோ இல்லயோன்னு நினைச்சிட்டே டைப்பன்னேன். ரொம்ப நல்லா இருந்தது வனி பிரியாணி friend வீட்டுக்கும் கொடுத்துவிட்டேன் அவங்களும் நல்லா இருக்குன்னு சொன்னாங்கபா
பொன்னி

மீனு... ஹாய்... நான் நலம். நீங்க? பேசி ரொம்ப நாள் ஆகுது உங்க எல்லாரோடையும் :)

நாகா... ஹஹஹா... நான் அவன் பிறந்து 3 மாசம் கழித்து தான் பெயர் வெச்சேன்... ஏன்னா எங்க மகள் பிறக்கும் முன்பே பெண் என்று தெரியும், ஆனால் மகன் பிறக்கும் போது இந்தியாவில் இருந்ததால் முன்பே தெரியாமல் பிறந்த பின் பெயரை தேடினேன். ;)

பொன்னி... ரொம்ப நன்றி. இப்ப தான் பார்த்தேன். 8வது மாதம் மாகேஸ்வரி கொடுத்த பின்னூட்டம் மிஸ் பண்ணிட்டேன், உங்க புன்னியத்தில் அதையும் பார்த்துட்டேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு facebook account இருக்கா? குமரன் போட்டோ அனுப்பறீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

அந்த புக்கெல்லாம் நான் வெச்சுக்குறதே இல்லை ;) ஏன்னா அவை நம் சொந்த டைரி போல் இல்லையே... திறந்த பொதுவான புத்தகம் போல!!! நமக்கு கொஞ்சம் பயம்!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்
உங்களின் பக்கத்தில்(பேஜ்) கீழே கடைசியில் "தமிழ் எழுத்துதவி"ன்னு இருக்கும் பாருங்க அதை பயன்படுத்தி நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்...பின் அதை காபி,பேஸ்ட் பண்னி இங்கு அனுப்பலாம்.....
புதுவரவான உங்களை அறுசுவை சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்......

என்ன வனி புது புது ஐட்டமா செய்து அசத்துரீங்க, நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?
ரேணுராஜ் உடம்பு பரவாயில்லையா பட்டில பயங்கர பிசி போல ஆனா சூப்பரா போகுது இது எத்தனாவது மாதம்?
மத்தவங்க எல்லாம் எங்க போனாங்க ரேணுதேவ், மீனு, நாகா (இன்னிக்கு பிசி), யாழி, இளையா, மெர், நஸிம், முக்கியமா தலை, வர்த்தினி, ராதாம்மா, பசரியாக்கா, பல்கிஸ்..........

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ஹாய் ஹாய் அரட்டைல யார் இருக்கறது ரேணுராஜ் மொபைல்ல டைப் பண்ணி அனுப்ப முடில பா அதான் பட்டில பதிவிட முடில ஏற்கனவே அஸ் நடத்தின பட்டில பதிவு போட்டு பாதிக்கும் முன்னவே வெளிய வந்துட்டேன் பதிவு போட முடில பா அதான் பட்டி பார்வையாளரா மாறிட்டேன் உடல்நிலை நலமா ஹாஸ்பிட்டல் போனீங்களா குட்டி எப்டி இருக்காரு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நா ஏன் பா பிஸி அத்தை வீட்டுக்கு வந்துட்டேன் காலைலயே வேலை முடிந்தது நா எதும் செய்யல கிச்சன பாக்கும் போதே கடுப்பாகிட்டேன் இப்ப தா கிளீன் பண்ணிட்டு வந்தேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி உடல்நலம் தேவலை,கொஞ்சம் தொண்டை கரகரப்பு,வலி,சளி மட்டும் உள்ளது.....ஹாஸ்பிடல் போகலைப்பா....நம் உடலிலேயே உருவாகும் எதிர்புசக்தி குழந்தைக்கும் வரும். ஆகவே மாத்திரை எடுக்கவிரும்பலை.....
இன்றோடு 6மாதங்கள் முடிகின்றதுப்பா.....:)
ராணி என்ன சொன்னீங்க பட்டி நல்லாபோகுதா....... நேற்றே தீர்ப்பு கொடுத்தாச்சு.........இன்னும் படிக்கலையா............?

ரேணு நலம்,குட்டி அம்மாவீட்டில் இருக்கான்.இங்கே ஒரே மழை வந்தாலும் பள்ளி கூட்டிசெல்ல இயலாது.அவனுக்கும் கிளைமெட் மாறி தொல்லைவரும்.....ஆகவே அம்மாவீட்டில் இருக்கான்.....அங்கு படிப்பும் வீணாகாமல் பள்ளி செல்கிரான்.....நான் படித்த பள்ளி ,அம்மாவீட்டின் பின்புறம்தான் பள்ளி.....ஆக கவலையில்லை.......
நானும் முதல் பட்டியில் "ராதா ஹரி " நடுவராக "நகைச்சுவை எக்காலத்தில் சிறந்து இருந்தது?" என்றதில் பங்கெடுக்கும்போது மொபைலில்தான் பதிவிட்டேன்.....கொஞ்சம் கடினம்தான்.......

ரொம்ப நாள்க்கு பின்னாடி வந்து இருக்கேன். யார் யார் இருக்கீங்க? கொஞ்சம் வெளிய வாங்க பாக்கலாம்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்