நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

என் கூட இருப்பது ஒரு பேத்திதான்...பாம்பேல என் பொண்ணுக்கு..ஒரு பெண், ஒரு பிள்ளை...என் பெரிய பையனுக்கு (ஜெர்மனி) 2 பெண்கள்...ஒரு விசேஷம் என்றால் வீடு களைகட்டி விடும்...ஜாலியாக இருக்கும்...

ராதா ஆன்ட்டி அடுத்த வாரம் பாப்பாக்கு கர்ணபூஷணம். சின்ன சைஸ் பருப்புதேங்காய் பிடிக்க எவ்வளவு கடலை வேணும். உப்பு இல்லாத கடலைதானே வாங்கனும்.

KEEP SMILING ALWAYS :-)

பருப்புத் தேங்காய், பட்சணம், சிர் எல்லாம் உன் பிறந்த வீட்டில் இருந்துதானே வரணும்? நீ செய்யப் போகிறாயா? பேசாமல் ஆர்டர் கொடுத்து வாங்கி விடுவதுதானே? இங்கு க்ராண்ட் ஸ்னேக்ஸ்ல ரெடியாவே கிடைக்குமாமே?

எனக்கு செஞ்சு கொண்டுவந்தா பாட்டி அம்மாவ திட்டுவா :-) எனக்கு இன்டர்கேஸ்ட் மேரேஜ். அதுனால நானே செய்யலாம்னு நெனச்சேன்.
///க்ராண்ட் ஸ்னேக்ஸ்ல ரெடியாவே கிடைக்குமாமே?/// அப்படியா? எனக்கு தெரியாது அதான் கேட்டேன். அப்போ அங்கயே வாங்கறேன். thanx aunty

KEEP SMILING ALWAYS :-)

http://www.grandsweets.com/sweetsnsnacks.html ல போய் பாரு...அடையார் நம்பர் இருக்கு பாரு...ஃபோன் பண்ணிக் கேளு....நீ ப்ராமிணா?

ரொம்ப நன்றி ஆன்ட்டி... நம்பர் எடுத்துட்டேன்.
///நீ ப்ராமிணா?/// ஆமா ஆன்ட்டி

KEEP SMILING ALWAYS :-)

உன் ஹஸ்பண்ட்? நானும் உன் காஸ்ட்தான்...என் மாட்டுப்பெண் ரஷ்யன்....இந்த காலத்தில் கூட உன் பெற்றோர் இப்படியா?

அவர் தேவர் மகன் :-) அம்மா இப்போ 1 வருஷமாதா வரா

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் தோழிகளே நானும் வந்துட்டேன் அரட்டைக்கு. வாங்க சேர்ந்து அரட்டை அடிப்போம்.

அப்பா இன்னும் மனசு மாறலியா? ஹ்ம்ம்...ஜாதி மதம்னு பார்த்து என்னத்தைக் கட்டிண்டு போகப் போறோமோ? உன் கணவர் வீட்டார் வருவார்களா?

மேலும் சில பதிவுகள்