நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

இது எப்படி நாகா பண்ணப்போற? அதான் திருத்தணிலயா? ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டயா? அதுக்கு உன் கணவர் ஒத்துப்பாரா?

ஆமா வினோ அம்மா வீட்ல தா இருக்கேன் இப்ப பைன் பா யாழி இங்க லைட்டா வெயில் வருது அரைமணி நேரத்துல மழை வந்துடுது இதே தா மாறி மாறி நடக்குது பா பத்து நிமிஷம் தா கேப் விடுது திரும்ப மழை வந்துடுது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வினோ...நீ எந்த ஊர்ல இருக்க? படிக்கறியா? வேலையில இருக்கியா?

முகில்...தஞ்சைல எந்த இடம்பா உங்க வீடு?

அவங்க எதுவுமே செய்யமாட்டாங்க. குழந்தைக்கு இன்னும் பேர்கூட வைக்கல. எதுவும் செய்ய மாட்டாங்க. மாமியார் குடும்பத்துல என்னய கவனிக்கவே மாட்டாங்க. வந்து இவர்ட பேசுவாங்க. நீ ஒழுங்காவே என் பையன பாத்துக்கல ரொம்ப எளச்சு போய்ட்டான். 200 பவுன் போட்டு கல்யாணம் பண்ண ஆள் ரெடி. ஆனா இவந்தா முடியாதுனு சொல்லிடானு கத்துவாங்க. இவர் எதாவது சமாளிச்சு அம்மாவ அனுப்பிடுவார்.

பாப்பாக்கு அவங்களும் முன்வந்து செய்யல நம்ம பாப்பாக்கு நாமதா செய்யனும். நாம செய்வோம்னு சொன்னேன். இன்னும் எதுவும் ஏற்பாடு பண்ணல. நேத்துதா சரினு சொன்னார்.

KEEP SMILING ALWAYS :-)

கஷ்டம்தான்....இது மாதிரி கல்யாணங்கள்ள ரொம்பவே விட்டுக்கொடுத்துதான் போகணும்....என்ன பண்ண?அதிலயும் பெரியவர்கள் ஒத்துண்டா லைஃப் ஜோர்தான்...என் பெண்ணும் லவ் மேரேஜ்தான்...இரண்டு குடும்பமும் ஒத்துப் போய் பண்ணினோம்...மாப்பிள்ளையும், அவன் வீட்டு மனிதர்களும் ரொம்ப நல்ல டைப்...

ராதாம்மா இங்க பப்ளிக்கா வேண்டாம்னு தோணுதும்மா சாரிம்மா கோவிக்க வேண்டாம் ப்ளீஸ். ஆமாம் நீங்க எப்படிமா ஒத்துகிட்டீங்க உங்க பையன் காதலுக்கு அதுவும் ரஷியன் பொண்ணு.

ரேணு அப்போ பரவாயில்லை போல நேத்து இன்னக்கி மழை இல்லப்ப. இந்த ட்ரெஸ் காய்வது தான் பெரும்பாடா இருக்கு செம எரிச்சலா இருக்கு.

ஓகே...ரேணு இங்கயும் செம மழை கொட்டற்து....ஆனா க்ளைமேட் சூப்பரா இருக்கில்லயா? பாவம் நீதான் தனியா இருக்க!!!!!

நாகா குட்டி பையனுக்கு முதல் பிறந்தநாள் வருதா சந்தோஷம். பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுறதோட ஹோமம் செய்வது விசேஷம் கேள்விப்பட்டு இருக்கேன். பையனுக்கு என்னைக்கு பிறந்தநாள். ராதாமேடம் படிச்சுட்டு வீட்டுல தான் இருக்கேன். மாயவரம்.

மாமியார் கிராமத்து ஆள் புரிஞ்சுக்காம பேசறாங்க. என் நாத்தனாரும் லவ் மேரேஜ்தான். எனக்கு கல்யாணமான 5வது நாள் அவங்களுக்கு டெலிவரி ஆச்சு. என் வீட்லதா வச்சு பாத்தேன். ஆனா அப்போகூட தினமும் இவர் ஆபிஸ் போனது ரொம்ப பேசுவாங்க. என் பையன் உன்ன கல்யாணம் பண்ணிடானு ரொம்ப சந்தோஷபடாத இன்னும் 1 வருஷத்துல நா என் பையனுக்கு வேற கல்யாணம்பண்ணி காட்றேனு சொன்னாங்க. நான் அப்பா, அம்மா சம்மதம் இல்லாம கல்யாணாம் பண்ணினதால ரொம்பவே பயந்துட்டேன். அவருக்கு போன்பண்ணி நீ வா எனக்கு பயமா இருக்குனு அழுதேன்.

அவர் வந்ததும் மாமியார்க்கு ரொம்ப கோபம் இவ எவ்ளோ பெரிய ஆள் வேலைக்கு போனவன வேலசெய்ய விடாம வரவச்சுட்டானு பயங்கர சண்டை. அதுமட்டும் இல்லாம இவர்ட என்னய கண்டபடி சொல்லிடாங்க. எனக்கும் என் பொண்ணுக்கும் சாப்பாடு போடமாட்டேங்கறா. எனக்கு தரலைனாலும் பரவால இவ கைகொழந்த வச்சிருக்கா இவளுக்காவது தரலாம்லனு சொல்லி பிரச்சனை பண்ணினாங்க. அவர் என்னய திட்டி இனிமே நீ என் முன்னாடியே நிக்காத நீ சமைச்சத சாப்பிட மாட்டேனு சண்டைபோட்டார். ரொம்ப கஷ்டபட்டேன்.... :-( இவர் சொந்தம் எல்லாம் என்னய தப்பாதா நினைக்கறாங்க. நெனச்சா ரொம்ப அழுகயா வருது.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்