இரவு உணவாக என்ன கொடுக்கலாம்

வணக்கம் தோழிகளே! எனது மகன் பிறந்து 10 மாதமாகிறது, நாங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை.அவனுக்கு இரவு உணவாக என்ன கொடுக்கலாம்?

இரவில் நீங்க சாப்பிடும் உணவே காரம் இல்லாத மாதிரி கொடுங்க. பால் சாதம், பருப்பு சாதம் போன்றவை நன்றாக குழைய பிசைந்து கொடுக்கலாம். கஞ்சி வகைகள், இட்லி, உப்புமா போன்றவையும் ஊட்டலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோதுமை தோசை கொடுக்கலாம்.Multigrain wheat மாவு 3spoon எடுத்து தோசைமாவு பதத்தில் கலந்து தோசை வார்த்து (நெய் சேர்த்து) பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து ஊறவைத்து கொடுக்கலாம்..குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் பசிதாங்ககுடியதாக இருக்கும்..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

ரொம்ப நன்றி தோழிகளே!

மேலும் சில பதிவுகள்