வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

தம்பி எப்படி இருக்கான்? சாரிம்மா இனிமே பீல் பண்ண மாட்டேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு டிசைனர் சாரி தான் ரொம்ப பிடிக்கும் ஆனா இது வரை ஒன்னு கூட எடுத்தது இல்ல... விலை அப்டி நம்ம ரேஞ்சுலாம் 1000 அன்டு 2000 குள்ள தான் இதுக்கு மீறுனா அதுக்கு நீ பட்டே எடுத்துக்கலாம்னு தடா வந்துடும்...:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னவர் தீபாவளிக்கு அதான் வாங்கி கொடுத்தார் அவங்க அம்மாக்கு நான் தா பர்ஸ்ட் கட்டினேன் சூப்பரா இருக்கும் அம்மா வீட்ல கல்யாணி காட்டன் ரெண்டு சாரி இருக்கு அதும் பிடிக்கும் எனக்கு அந்த டைப் சாரி ரொம்ப பிடிக்கும் எனக்கு கரெக்ட்டா இருக்கும்பா பெஸ்ட்டும் அதான் எனக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பட்டு எல்லா இடத்துக்கும் கட்ட முடியாது இப்போ டிசைனர் சாரி தான் நல்லா இருக்கும் என்னோட நாத்தனார் ஊர்ல எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் பண்ரதையே வேலையா வச்சிருக்காங்க அவ ரெண்டு மூணு சாரி கொண்டு வந்து கொடுத்திருக்கா

இப்படிக்கு ராணிநிக்சன்

என்னவர் எனக்கு டிசைனர் சாரீ எடுத்து தந்தார் அதும் சூப்பர் தா விலை தா நல்லாயில்லை 1800 பா அதுக்கு இன்னும் கொஞ்சம் பைசா போட்டு பட்டு சாரியே எடுத்திருக்கலாம்னு அம்மா சொன்னாங்க பா (திட்டினாங்க பா) ஆனா எனக்கேத்த சாரீதா ரெண்டுமே சூப்பரா இருந்தது ராணி சொல்றமாறி டிசைனர் தா எங்க வேணாலும் கட்டிடு போகலாம் நமக்கேத்த மாறியும் இருக்கும் பட்டுலாம் கட்டினா நா எதும் செய்யாம பொம்மை போல தா இருப்பேன் அது நமக்கு ஏத்த மாறி இருக்காது நா குண்டா இருக்கறமாறி தெரியும் ஏற்கனவே குண்டு தா இன்னும் குண்டா தெரியும் நமக்கெல்லாம் டிசைனர் தா பெஸ்ட்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எனக்கும் அதே கவலைதான் டிசைனர் சாரி கொஞ்சம் மீடியமா இருக்கும் ஆனா பட்டு சாரி ரொம்ப குண்டா தெரியும் எந்த வேலையும் செய்யவும் முடியாது

இப்படிக்கு ராணிநிக்சன்

சேம் பின்ச் பா பர்ஸ்ட் பட்டுபுடவை கட்டுறது கஷ்டம் எனக்கு அப்றம் கட்டிட்டு ஏசில தா உட்காரணும் அப்டி வேர்த்து போகும் அதனால லைட் வெயிட்டா ஸாப்டா இருக்கணும் அதனால டிசைனர் தா பெஸ்ட் சில்க் காட்டனும் செட் ஆகும் நல்லாயிருக்கும் எனக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு விட்டுக்கு கிளம்பியாச்சுன்னு நினைக்கரேன். மத்தவங்களும் பிசியாயிட்டங்க, ரேணு உங்க ஹஸ் எப்போ வருவாங்க செல் யூஸ் பண்ணிட்டிருந்தா அத்தை எதுவும் சொல்ல மாட்டங்களா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஆஹா கொஞ்சம் வேலை வந்துட்டு. போயிட்டு வந்தா அதுக்குள்ள தோழிஸ் புடவையை பத்தி ஒரு அலசு அலசுறாங்க. எனக்கு புடிச்சது டிசைனர் சாரிப்பா.ஆனா இருக்குறது எல்லாம் பட்டுப்புடவையும் கம்பி புடவையும். ராணி உங்களுக்கு எத்தனை மணிக்கு ஆபிஸ் முடியும்பா? .

இப்போ கிளம்ப வேண்டியதுதான் (6.00) ஒகே பை (கம்பி புடவைன்னா என்ன) சொல்லுங்க நாளைக்கு வந்து பார்க்கரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்